Pages

பக்கங்கள்

Monday, November 18, 2013

பெண்ணிற்குள் ஆண்

ஆணும் பெண்ணும்
சரிசமம் என்றேன் நான்
ஆனால் நீயோ
இல்லை!! இல்லை!!
ஆண் தான் உசத்தி
"ஜான் பிள்ளையானாலும்
அவன் ஆண் பிள்ளை"
என்று சொல்லியிருக்கிறதை
பார் என்றாய். நானோ,
ஆண் பெண்ணிற்குள் தான்
இருக்கிறாள் என்பதை
ஆங்கிலத்தில் "SHE"க்குள்
தான் "HE" இருக்கிறது
என்பதையும்
"WOMAN"க்குள் தான்
"MAN" இருக்கிறது
என்பதையும் எவ்வளவு
அழகாக உணர்ந்து
சொல்லியிருக்கிறார்கள்,
இதை எப்பொழுது தான்
இந்த ஆண்கள்
புரிந்து கொள்வார்களோ
என்று எண்ணி வருந்தினேன்!!!

2 comments:

  1. மிகவும் அருமையான உதாரணங்கள். பாராட்டுக்கள். பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete