Monday, December 2, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கே சிக்கன் சாப்பாடு கிடையாது!!!!


போன பதிவுல நான் ஒண்ணு சொல்லாம விட்டுட்டேன். அதாவது, அன்னைக்கு எடுத்த அந்த ஜாகிங் காட்சி முழுமையா முடியலை. இயக்குனர், எங்ககிட்ட, இந்த காட்சியோட continuityக்காக நீங்க இன்னொரு நாள் வர வேண்டியிருக்கும்ன்னு சொன்னாரு. அப்படின்னா இன்னும் ரெண்டு நாள் வரனுமான்னு கேட்டோம். ஆமா, இந்த காட்சியும், அப்புறம் நடன வகுப்பு காட்சியும் தான் பாக்கியிருக்கு, அதனால இன்னும் ரெண்டு நாள் வந்தா போதும்ன்னு சொன்னாரு. உடனே, நாங்க ஐயா, எப்படியாவது சனி,ஞாயிறாப்பார்த்து சூட்டிங் வைங்கன்னு கெஞ்சாத குறையா அவரிடம் கேட்டோம். (படத்துல தோன்றுகிற இந்த ஊர் ஆங்கில கலைஞர்களுக்கு மட்டும் குறைந்தது ஒரு நாளைக்கு $100 சம்பளம். ஆனா எங்களுக்கோ இந்த படத்துல நடிக்கிறதுக்கு சம்பளம் கிடையாது. போதாக்குறைக்கு  ஆபிஸுக்கு ரெண்டு நாள் லீவு வேற போட்டாச்சு, இதுல இன்னமும் லீவு போடுகிற மாதிரியாச்சுன்னா என்னங்க பண்றது. அதனாலத்தான் இப்படி ஒரு பிட்டை போட்டோம்). இயக்குனரும் முடிந்த வரையில் லீவு நாள்ல படப்பிடிப்பு வைக்கிறோம்னு சொன்னாரு.
மறு நாள் வெள்ளிக்கிழமை ஆஃபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா பிறகு மறுபடியும் 10 மணிக்கு sms, அதாவது மறு நாள் காலையில 10மணிக்கு பழைய இடத்துக்கு (அதாவது எங்க நடன வகுப்பு காட்சியை எடுக்கிறேன்னு சொல்லி, நாங்க லீவு போட்டு காத்திருந்த இடத்துக்கு) வந்துடுங்க. அது வந்து நடனம் கத்துக்கிற மாதிரி காட்சி, அதனால அதுக்கேத்த மாதிரி, tshirt, phant எடுத்துக்கிட்டு வாங்கன்னு மெசேஜ்.  நான் மட்டும் சனிக்கிழமை காலையில அந்த marickville இடத்துக்கு போனேன். வீட்டு அம்மணிக்கு முதநாள் எல்லோரடையும் போட்டோ எடுத்துக்கிட்டதே போதும் போல, அதனால அவுங்க நாங்க வரலைன்னு சொல்லிட்டாங்க. நான் சரியா 10 மணிக்கு போய் சேர்ந்தேன். அந்த இடத்துல மேல வேற ஒரு காட்சி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அந்த காட்சி என்னன்னா, அமலாபால், விஜய் கிட்டேயும், சந்தானத்து கிட்டேயும் மறுநாள் நீங்க ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு வந்துடுங்கன்னு சொல்ற காட்சி. நான் மேல போய் கொஞ்ச நேரம் நின்னு பார்த்துக்கிட்டு இருந்துட்டு, கீழே வந்துட்டேன். அப்பத்தான் மாடிப் படிக்கட்டுல நம்ம கிருஷ்ணா ரொம்ப பரிதாபமா நின்னுக்கிட்டு இருந்தாரு. நான் அவர்கிட்ட, ஏங்க இன்னைக்காவது அந்த நடனவகுப்பு காட்சியை எடுத்துடூவீங்க இல்லன்னு கேட்டேன் (ஏன்னா, இந்த காட்சியை எடுக்கிறேன்னு சொல்லி தான் அன்னைக்கு நாங்க மூணு மணிநேரம் வெட்டியா காத்துக்கிட்டு இருந்து, கடைசில எடுக்காம திரும்பி போனோம்). கண்டிப்பா எடுத்துடலாம் சார். இன்னைக்கு தான் என் வயித்துல பீர் வார்த்த மாதிரி இருக்கு சார். இப்பத்தான் ஒழுங்கா ஷெட்யூல் படி ஒழுங்கா சூட்டிங் போயிக்கிட்டு இருக்கு. அதனால எப்படியும் இன்னைக்கு நடன வகுப்பு காட்சி முடிஞ்சுடும் ஆமா, எங்க மற்றவங்க எல்லாம் காணோம் அப்படின்னு கேட்டாரு. அப்ப என் பக்கத்துல வேற ஒரு நண்பர் மட்டும் தான் நின்னுக்கிட்டு இருந்தாரு. நான் உடனே, ஏங்க, நீங்க என்னைக்கு தான் சொன்ன நேரத்துக்கு சூட்டிங் ஆரம்பிச்சிருக்கீங்க? 10 மணின்னு நீங்க சொன்னதுனால, எல்லோரும் 11 மணிக்கு மேல தான் வருவாங்கன்னு கொஞ்சம் அடிச்சு விட்டேன். ஐய்யையோ, 11 மணிக்கா!! இன்னும் அரை மணி நேரத்துல உங்க காட்சியை எடுக்க ஆரம்பிச்சுடுவோம், அதனால கொஞ்சம் எல்லாரையும் சீக்கிரம் வரச்சொல்லுங்க. இல்லன்னா விஜய் சார், சந்தானம் சார், அமாலாபால் மேடம்ன்னு எல்லோரும் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரியாயிடும்னு புலம்பினாரு. அவர் புலம்பியதை பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷம். எப்பவுமே நாங்க தான் மணிக்கணக்கா காத்துக்கிட்டு இருப்போம். இன்னைக்கு எங்களுக்காக இவுங்க காத்துக்கிட்டு இருக்க போறாங்களேன்னு மனசு பேயாட்டாம் போட்டுச்சு. ஒப்புக்கு, அவரிடம் நான் போன் பண்ணி, சீக்கிரம் வர சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் அவர் அங்கிருந்து நகர்ந்து போனாரு. நானும் அந்த இன்னொரு நண்பரும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப இந்தியாவிலிருந்து வந்திருந்த தயாரிப்பு மேலாளர் (production manager) எங்க கிட்ட வந்து அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அப்புறம் அவர் எங்களை நீங்க எத்தனை வருஷமா இருக்கீங்க? எல்லாருக்கும் சொந்த வீடா? அப்படி, இப்படின்னு கேள்வி மேல கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு. நான் இவரோட பேசி, நம்ம சினிமா அறிவை கொஞ்சம் வளர்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா, மனுஷன் எங்களை தோண்டி துருவிட்டாரு. அடடா! இந்தாள்கிட்ட போய் மாட்டிக்கிட்டோமேன்னு நொந்து போயிட்டேன். அப்பத்தான் ஒரு உதவியாளர் அவரிடம் வந்து, அண்ணே, ஹீரோயினுக்கு சிக்கன் பிரியாணி வாங்கணும், காசு கொடுங்கன்னு” கேட்டாரு. உடனே, அவர், “ஏண்டா அவுங்க சிக்கன் இல்லாம சாப்பிட மாட்டாங்கலாமா?. ஒரு சிக்கன் பிரியாணி பதினெட்டு டாலர் ஆகுது, டெய்லி எல்லாம் வாங்கி கட்டுப்படியாகாது" அப்படின்னாரு. காசு கேட்டவரோ, “இல்லன்னே, வந்து.. .. அப்படின்னு" இழுத்தாரு. அதுக்கு அவரும், “வெளிநாட்டில எல்லாம் வந்து, எனக்கு அது வேணும், இது வேணும்னு கேக்கிறது எல்லாம் ஓவர். அதனால இன்னைக்கு மத்தியானம் என்ன சாப்பாடு வருதோ, அதையே கொடு, அவுங்க இல்ல சிக்கன் பிரியாணி தான் வேணும்னு கேட்டா, அப்ப போய் வாங்கி வான்னு” சொல்லி இருபது டாலரை கொடுத்தாரு. இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கு ஒரே ஷாக் ஆயிடுச்சு. ஆஹா, ஹீரோயினுக்கே இந்த நிலமையா!!  இருபது டாலருக்கு, இப்படி கணக்கு பார்க்கிறங்களேன்னு நினைச்சுக்கிட்டு, என்னோட நண்பரை பார்த்தேன். அவரும் என்னைய பார்த்து நக்கலா சிரிச்சாரு. நான் அந்த தயாரிப்பு மேலாளர் கிட்ட, “ஏன்னே, தினமும் மதியம் அசைவ சாப்பாடு தானே உங்க எல்லாருக்கும்” அப்படின்னு கேட்டேன். அதற்கு அவர், என்னங்க விளையாடுறீங்களா, ஏற்கனவே தினமும் இரவு அசைவ சாப்பாடு, இதுல மதிய சாப்பாடும் அசைவ சாப்பாடுன்னா எப்படிங்க கட்டுப்படியாகும்னு திருப்பி கேட்டாரு. அப்ப நம்ம முத நாள் ஷூட்டிங்ல, ஜூஸ் கேட்டதுக்கு, தண்ணி கிடச்சதே பெருசு தான்னு, அப்புறம் என் மற்ற நண்பர்கள் கிட்ட எல்லாம் சொன்னேன்.

10.45 மணியை போல கிருஷ்ணா வந்து என்கிட்ட உங்க காட்சியை எடுக்கப்போறோம், அதனால மேல வாங்கன்னு கூப்பிட்டாரு. அந்த நேரத்துக்கு என்னோட மற்ற நண்பர்கள் எல்லாம் வந்துட்டாங்களா, அப்புறம் யுடியூப் புகழ் நடிகரை சந்தித்ததை பற்றியெல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் – யூடியூப் புகழ் நடிகர் சாம் ஆண்டர்சன்

- இன்னும் சொல்கிறேன்


5 comments:

  1. //அதனால கொஞ்சம் எல்லாரையும் சீக்கிரம் வரச்சொல்லுங்க. இல்லன்னா விஜய் சார், சந்தானம் சார், அமாலாபால் மேடம்ன்னு எல்லோரும் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரியாயிடும்னு புலம்பினாரு//

    ஹூம், எத்தனை நாள் இவங்களுக்காக நீங்க காத்திருந்தீங்க? ஒரு நாள் இவங்க உங்களுக்காகக் காத்திருந்தா குறைஞ்சா போயிருவாங்க?

    யூ ட்யுப் புகழ் நடிகர் பற்றி அறிய ஆவல்... அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க. ஆனா என்ன நடந்ததுன்னு சீக்கிரம் சொல்றேன்.

      Delete
  2. ஸ்கூல் பைய்ன் தளத்தில் உங்கள் அறிமுகம் பார்த்து வந்தேன்....

    அடுத்தது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்....

    தொடர்ந்து சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி தோழமையே. நானும் தங்களின் வலைப்பூவை தொடர ஆரம்பித்துள்ளேன்.
      என்ன நடந்தது என்று சிக்கிறேம் சொல்கிறேன்.

      Delete
  3. கூடிய சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுகிறேன்

    ReplyDelete