Wednesday, June 25, 2014

தமிழும் நானும்

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,

ஆஸ்திரேலியாவில் வெளிவருகின்ற மாதாந்திர பத்திரிக்கையான "தமிழ் அவுஸ்திரேலியன்" பத்திரிக்கையில் "தமிழும் நானும்" என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது.

அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தமிழும் நானும்   (பார்க்க பக்கம் 122)







Sunday, June 22, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - முதலாம் அதிகாரம் - உற்பத்தி





சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்





முதலாம் அதிகாரம்.
உற்பத்தி

இத்துணைச் சிறப்புவாய்ந்த உத்தமர் வாழுங் காரை மாநகரின் கண்ணே, நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று வழங்குகின்ற அரதண மகுடதன வைசியர் குலத்திலே, பெருங்குடியில், குலசேகரபுரமும் இராஜ நாராயணபுரமும் பூர்வ பூம்புகார்க் காணியாகவும், இளையாற்றக்குடியும், மருதங்குடியான பிள்ளையார்பட்டிக் கோவிலும் பாண்டிநாட்டுக் காணியாகவுமுடைய திருவேட்பூருடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே) யாழ்ப்பாணத்தார் வீடு என்று வழங்குங் குடும்பத்திலே ராம.கு.ராம. இராமநாதச் செட்டியாரும் அவர் மனைவியார்  முத்துக்கருப்பியம்மையாரும்  செய்த தவப்பயனாய் வேதசிவாகம புராணேதிகாச முதலாகிய சகலசாஸ்திரசாரமாகிய சுத்தாத்வைத சைவ சித்தாந்த சன்மார்க்கத்தைவிருத்தி செய்து நிலை நாட்டும் பொருட்டு, ஐயா* (* - ஐயா அவர்கள் எனவரும் இடங்களில் எல்லாம் சொக்கலிங்க ஐயா அவர்கள் எனக் கொள்க) அவர்கள் பூர்வ பட்சச் சதுர்த்தி திதியும் அஸ்த நட்சத்திரமும் சித்த யோகமும் அமிர்த கரணமும் கூடிய சுபதினத்தில் துலா லக்கினத்தில் திருவவதாரஞ் செய்தார்கள்.

இந்த அருமைப் புதல்வருக்கு மாதா பிதாக்கள் சாதகன்ம முதலிய சடங்குகளும் மகிழ்ச்சியுடன் செய்து “சொக்கலிங்கம்” என்று யாவரும் புகழும்படி பரிசுத்தமாகிய அழகிய திருநாமஞ் செய்தார்கள்.

இப்பெயர் ஆதியில் சொக்கலிங்கச் செட்டியார் அவர்கள் என்றும், பின்னர், சுத்தாத்துவைத சைவ சித்தாந்தச் செல்வராகிய சொக்கலிங்க ஐயா அவர்கள் என்றும், சிறப்பாக ஐயா அவர்கள் என்றும் வழங்கி வருகின்றது.

ஐயா அவர்களுக்கு முன்பின் சகோதரர்கள் இருவரும் சகோதரிகள் நால்வரும் உளரானார்கள்.

ஐயா அவர்கள் இளமைப் பருவத்திலேயே கல்வி கற்றுக்கொள்ளுதலில் மிக்க ஊக்கமுடையவர்களாய் உபாத்தியாரிடத்தில் தமிழ் ஆரம்பக் கல்வி கற்றுவரலானார்கள். நகர தன வைசியர்களின் கிரமப்படி ஐயா அவர்கள் உரிய பருவத்திலே “கார்த்திகைப் பதுமை” என்கின்ற சடங்கு செய்யப்பெற்று அஸ்வாரூடராய் விநாயகராலயஞ் சென்று விநாயகப்பெருமானைத் தரிசனஞ் செய்விக்கப் பெற்றார்கள். பள்ளிக்கூட உபாத்தியாயரிடத்திற் படிக்கவேண்டிய ஆரம்பக் கல்விகற்று முற்றிய பின்பு, தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் கற்று வருங்காலத்தில் மாதாபிதாக்கள் கட்டளைப்படி குடும்பக்காரியங்களைப் பார்த்துக்கொண்டு ஒழிவு நேரங்களில் அறுபத்து மூவர் மடத்துக்கு போக்குவரவு வைத்துக்கொண்டிருந்தார்கள். இதனைப் பிதா அறிந்து வரவரக் கல்வி விருத்தியடைந்து வருதலையும் சிவபக்தி மிகுந்து வருதலையும் நோக்கி இனிக் குடும்பத்தைக் கவனியாமல் அதீத நிலையிற் சென்றாலுஞ்ச் செல்லக்கூடும் என்று நினைத்து ஐயா அவர்கள் மடத்துக்கு போய் வருதலைத் தடை செய்ய நினைத்தார்கள். ஐயா அவர்கள் அதையறிந்த பின்பு வீட்டுக் காரிய சம்பந்தமாக வெளியிற்போகுஞ் சமயத்தில் பிதாவுக்கு தெரியாதபடி மடத்துக்கு போய் வந்துகொண்டிருந்தார்கள். சிறிது காலஞ் சென்றபின் அதுவும் பிதாவுக்குத் தெரிந்து சிறிது கோபமுண்டாகி, ஐயா அவர்கள் இரகசியமாக மடத்துக்குப் போகுஞ் சமயம் பார்த்து, அங்கே போய் செய்கிறதை பார்த்து வருவோமென்று கருதி பிதாவானவர் மறைவாய்ப் போய் பார்க்குஞ் சமயங்களில் ஐயா அவர்கள் சில சமயங்களில், அனுகூல விநாயகர் தரிசனஞ் செய்து கொண்டு பூசை செய்வதையும், சில சமயம் கந்த புராண முதலிய சிவபுராணப் பிரசங்கஞ் செய்து வருதலையும் பார்த்து மிகுந்த சந்தோஷமடைந்து  தாம் வந்தது ஐயா அவர்களுக்கு தெரியாமல் வீட்டுக்குத் திரும்பி விடுவார். பிதாமானவர் இப்படி இரகசியமாகப் போய்ப் பார்த்து வந்தபின் மிக்க உவகையுடையவராய் இவ்வுத்தமமாகிய காரியத்திற்குத் தடை செய்யக்கூடாதென்று கருதி ஐயா அவர்கள் நோக்கம்போல் விடுத்து மகிழ்ச்சியடைந்திருந்தார்.

உடுமலைப்பேட்டை என்னும் ஊரில் வியாபார முறையில் பிதா முதலினோரிருந்து நடத்திவந்த காலத்தில் ஐயா அவர்கள் சிறு பிரயத்திலே அவ்வூருக்குப் போய் அவர்களோடு கடையிற் சிலகாலமிருந்து பின்பு ஊருக்கு வந்தார்கள். பின்பு யாழ்பாணத்துக்கும் சொந்தக் கடைக்கு வியாபார முறையை உத்தேசித்து பதினேழாவது வயசு முதல் பல தடவைகளில் போய் வந்தார்கள். அக்காலத்திற்றான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலவர்களை யடுத்துச் சிஷ்யராக இருந்தார்கள். அவ்விஷயம் மூன்றாம் அதிகாரத்தில் விளக்கப்படும்.
முதலாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

இரண்டாம் அதிகாரம்
இல்வாழ்க்கை

--------------------------

Thursday, June 19, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?


நண்பர் திரு. மதுரைத் தமிழன் அவர்கள் சும்மா இருக்காம, சக வலைப்பதிவர் சகோதரி ராஜி கனவுல வந்து பத்து கேள்வி கேட்டாங்க, அதுக்கு நான் இப்படியெல்லாம் பதில் சொன்னேன்ன்னு  சொல்லி, கூட ஒரு பத்து பேர் கிட்டேயும் இந்த கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்டாரு. இதுல கொடுமை என்னன்னா, அந்த பத்து பேர்ல நானும் ஒருத்தனாப் போயிட்டேன். இதுல வேற ஒழுங்கான பதிலாக இருக்கணுமா, நக்கலாக எல்லாம் இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன்.

அந்த பத்து கேள்விகளும், என்னோட பதில்களும்: 

1.
உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறு வயது வரை இருந்து என்னுடைய புலம்பல்களையெல்லாம் என் வலைப்பூவில் எழுதி உங்களை படிக்கச் சொல்லி தொந்தரவு பண்ணமாட்டேன் என்று நம்புகிறேன். 


2.
என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

சோம்பேறித்தனத்தை எவ்வாறு விட்டொழிப்பது என்பதை

3.
கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

வலைப்பதிவு நண்பர் சுரேஷ் எழுதிய இந்தியரின் மாஜிக் படித்து நல்லா வாய் விட்டு சிரித்தேன் 


4. 24
மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகலில் என் குழந்தைகளோடு வீட்டுத் தோட்டத்தில் விளையாடுவேன், மாலையில் மெழுகு வர்த்தியை ஏற்றி, நான் படிக்காமல் விட்டுப்போன புத்தகங்களை படிப்பேன் 


5. 
உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

வாழ்கையில் எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் மனம் கலங்காமல் அதை எதிர்த்து போராடு. உன் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல தோழியாக உன்னை மாற்றிக்கொள். இறுதியாக குடும்பத்தலைவி தான் கண்ணாடி என்பதை மறவாதே என்று சொல்லுவேன்.  

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

ஆதரவற்றவர்கள் (குழந்தைகளாக இருந்தாலும் சரி,பெரியவர்களாக இருந்தாலும் சரி) என்ற அந்த நிலை ஒருவருக்கும் உருவாகாமல் இருக்க முயற்சிப்பேன், 


 
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

மூன்றாண்டுகள் முன்பு வரை என் அன்னையிடம் கேட்டு வந்தேன். அவர்கள் என்னை விட்டு நீங்கியதால், இப்பொழுதெல்லாம், என்னை நன்றாக புரிந்த உற்ற நண்பரிடம் கேட்கிறேன்



8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

நாய் சூரியனைப் பார்த்து குலைக்கிறது என்று எண்ணி ஒன்றும் பேசாமல் அம்மாதிரியான துஷ்டர்களிடமிருந்து இருந்து ஒதுங்கி விடுவேன் (இந்த பதில் வெறும் கேள்விக்காக எழுதப்பட்ட பதில் இல்லை, எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் நான் சொல்லியிருக்கிறேன்)


9.
உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

இனிமேல் உன் குழந்தைகளுக்கு நீ தான் தாயுமானவனாக இருந்து அவர்களை வழி நடத்த வேண்டும் என்று சொல்லுவேன்


10.
உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

இருக்கவே இருக்கு புத்தகங்களும், புலம்பல்களை எழுதுவதற்கு என்னுடைய வலைப்பூவும் - உண்மையானவன்



இந்த தொடர் பதிவில் நான் மாட்டிவிடும் நண்பர்களான , நீங்களும் உங்களால் முடிந்தால் இந்த தொடர் பதிவை உங்கள் வலைப்பூவில் எழுதி உங்களுக்கு வேண்டிய (?) நண்பர்களையும் இதில் இழுத்து விடுங்கள்.  

ஸ்கூல் பையன் http://www.schoolpaiyan.com/
சுரேஷ் http://thalirssb.blogspot.com/
பக்கிரிசாமி http://packirisamy.blogspot.com.au/
உமையாள் காயத்ரி http://umayalgayathri.blogspot.com.au/
பிரியசகி http://piriyasaki.blogspot.com.au/
மலர்தரு http://www.malartharu.org/
கீதமஞ்சுரி http://geethamanjari.blogspot.com.au/
கரந்தை ஜெயக்குமார்  http://karanthaijayakumar.blogspot.com/



Sunday, June 15, 2014

இனியாவிற்கு இன்று நான்கு வயது ஆரம்பம் ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு????





எங்களின் இரண்டாவது மகாரணி இனியாவிற்கு இன்று தான் மூன்று வயது முடிவடைந்து நான்கு வயது ஆரம்பமாகிறது. ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. மேலும் வாசிக்க....

Tuesday, June 10, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)




இந்த பதிவுல ஓவியாவிற்கு, பள்ளியில் கிடைத்த வெகுமதிகளைப் பற்றி சொல்கிறேன். மேலும் வாசிக்க.. 

Sunday, June 8, 2014

இறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்-வலைச்சரத்தின் இறுதி நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,

இன்று என்னுடைய வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு கடைசித் தினம். இறைவனின் அருளாலும், தமிழ் அன்னையின் ஆசியாலும் தான், என்னால் இந்த பொறுப்பை  நல்லவிதமாக முடிக்க முடிந்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைக்கு ஆன்மிக பதிவர்களில் சிலரையும், நமக்கு கோவில்களை அறிமுகப்படுத்தியவர்களையும், தமிழை சொல்லிக்கொடுப்பவர்களையும் இன்றைக்கு பார்க்கலாம்.


முதலில் ஆன்மிக பதிவர்களை பார்க்கலாம்.மேலும்..... 

Saturday, June 7, 2014

பொன்னியின் செல்வனை திரும்பிப் பார்ப்போம் - வலைச்சரத்தின் ஐந்தாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,



இன்றைக்கு யாரை அறிமுகப்படுத்தலாம்னு யோசித்த பொழுது, பொன்னியின் செல்வன் தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஞாபகத்துக்கு வருவதற்கு காரணம், கடந்த இரண்டு வாரங்களாக நான், பொன்னியின் செல்வனைத்தான் மூன்றாவது முறையாக மிகவும் நிதானமாக புகைவண்டியில் படித்துக்கொண்டு அலுவலகத்துக்கு சென்று வருகிறேன்.


ஏற்கனவே ஒரு குழு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் யாஹூ குழுமத்தில் (yahoo groups) இயங்கி வருகிறது. அதனால் நிச்சயமாக வலைப்பூவிலும் இந்த புதினத்தைப் பற்றி பேசியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கூகிள் ஆண்டவரை நாடினேன். அவரும்  என்னை கைவிடாமல், அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதோ, நானும் அவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். மேலும்.... 

வெளிநாட்டிற்கு சுற்றுலா போலாமா - வலைச்சரத்தின் ஐந்தாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,


இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சுற்றுலா போவது என்பது மிகவும் பெரிய விஷயம். அதிலும் வெளிநாட்டிற்கு போவது என்பது ரொம்பவே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இந்தியாவிற்குள்ளேயோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா போவது என்பது ஒரு கஷ்டமான காரியமே இல்லை.


வெளிநாட்டைப் பற்றி எழுதிய பதிவர்களைத்தான் இன்றைக்கு நாம சந்திக்கப் போகிறோம்.  மேலும் வாசிக்க....

Thursday, June 5, 2014

ஆண்களின் பார்வையில் பெண் சுதந்திரம்/பெண்ணியம் - வலைச்சரத்தின் நான்காம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,


இன்றைக்கு யாரையெல்லாம் அறிமுகப்படுத்தலாம்னு ஒரே யோசனையாக இருந்தது. ஏற்கனவே என்னுடைய புகுந்த வீட்டின் உறவினர்களையும், வலைப்பூவிற்கு புதியவர்களையும், குழந்தை எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியாச்சு. அடுத்து யாருன்னு பார்த்தா பெண்களை அறிமுகப்படுத்தலாம்னு தோணுச்சு. ஆனா பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தாமல், பெண்ணியம்,பெண் சுதந்திரம் போன்ற பதிவுகளை எழுதியவர்களை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன். அதிலும் பெண்ணியத்தை பற்றி பெண்களே சொல்லாமல், ஆண்கள் சொன்னால் எவ்வாறு இருக்கும் என்று ஒரு எண்ணம். என்னுடைய எண்ணத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக, நிறைய ஆண் எழுத்தாளர்கள் பெண் சுதந்திரத்தைப் பற்றியும்,பெண்ணியத்தைப் பற்றியும் தங்கள் வலைப்பூக்களில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிலிருந்து சிலரை மட்டும் உங்களுக்கு அறிமுகப்படுதுவது தான் இந்த பதிவு. இவர்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கலாம். அதனால் அவர்களுடைய இந்த பதிவை மீண்டும் படிக்கும் வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்கள். மேலும் வாசிக்க...

Wednesday, June 4, 2014

ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம் - வலைச்சரத்தின் மூன்றாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,


இன்றைக்கு நான் வலைப்பூ உலகில் பிறந்து ஒரு வயது கூட நிறைவடையாமல் இருக்கும் குழந்தைகளையும் மேலும் ஒரு வயதே ஆன குழந்தைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். இதில் சில குழந்தைகள் தங்களின் வயதுக்கு மீறிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் (100க்கும் அதிகமான படைப்புகளை படைத்திருக்கிறார்கள்) இருப்பினும் அவர்களை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதனால் அவர்களை மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களின் பார்வை அந்த குழந்தைகளின் மீது பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னையும் இப்படித்தான் ஸ்கூல் பையன் அவர்கள் உங்களிடம் அறிமுகப்படுத்தியதால், என்னாலும் இந்த அளவு வளர முடிந்தது. அதுபோல் அவர்களும் வளர வேண்டும்.

சரி இனி அந்த குழந்தைகளைப் பார்ப்போமா.மேலும் வாசிக்க....

குழந்தை எழுத்தாளர்கள் - வலைச்சரத்தின் மூன்றாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,
 
இந்த பதிவு மற்ற வலைப்பூ எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பதிவு இல்லை. மாறாக குழந்தைகளையும் எழுத்து உலகத்திற்குள் பயணிக்க ஊக்குவிக்கும் பதிவாகும். என்னைப் பொறுத்தவரை எழுதும் பழக்கம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறையினருக்கும் அதை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் நாம் எல்லோரும் நம்முடைய குழந்தைகளை எழுதுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவர்களை ஊக்குவிப்பதற்கு குழந்தை எழுத்தாளர்களைப் பற்றி சொல்லி அவர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கலாம். சரி, முதலில் இரண்டு பிரபலமான குழந்தை எழுத்தாளர்களை பார்க்கலாம். மேலும் வாசிக்க...

Tuesday, June 3, 2014

கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள் - வலைச்சரத்தின் இரண்டாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக, 

இன்றைக்கு தான் என்னுடைய பணியை ஆரம்பிக்கிறேன். முதலில் என்னுடைய புகுந்த வீட்டின் உறவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை, உயர்வாக  சொல்லும்போது தான், அந்த வீட்டின் சிறப்புகளை காண முடியும். அது போல் நான் இங்கு எனக்குத் தெரிந்த வலைப்பூ எழுத்தாளர்களை பற்றி சொல்கிறேன். மேலும் வாசிக்க...

Monday, June 2, 2014

தமிழ் சரியாக படிக்காமலே தமிழாசிரியர் மற்றும் வலைச்சர ஆசிரியர் பதிவிகள்

அன்பார்ந்த நண்பர்களே,

நான் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி தமிழை ஒரு பாடமாகவே கருதியது கிடையாது. கல்லூரியில் இன்னும் மோசம், தமிழ் வகுப்பைத்தான் கட்டடித்து ஊர் சுற்றியிருக்கிறேன்.  அப்படி இருந்தவனுக்கு தமிழின் மீது மோகம் ஏற்பட்டு,இங்கு சிட்னியில் பாலர்மலர் ஹோல்ஸ்வோர்தி பள்ளியில் தமிழ் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது வலைச்சரத்தில் இந்த வாரத்திற்கு (ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை) ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.

இன்றைக்கு முதல் பதிவாக என்னுடைய சுய அறிமுகத்தை வலைச்சரத்தில் பதிவிட்டிருக்கிறேன், நீங்களும் அங்கே சென்று பாருங்களேன்.

 அனைவருக்கும் வணக்கம்


இந்த ஒரு வாரத்திற்கும் நீங்கள் வலைச்சரத்திற்கு சென்று என்னுடைய பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.