Monday, April 8, 2019

ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் செய்யும் "ஸ்டண்ட்கள்"

ஓட்டு வாங்குவதற்காக நம்மூர் அரசியல்வாதிகள் மக்கள் முன்பு எப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்கிறார்கள் பாருங்கள். இந்த ஸ்டண்ட்கள் எல்லாம் வெற்றி பெற்ற பிறகும் செய்வார்களா??? 
மக்களுக்கு சேவை செய்வதற்கே எங்களுக்கு நேரம் பற்றவில்லை இதில் எங்கேயிருந்து இப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க முடியும் என்று திருப்பி கேட்பார்கள் . 
 

ஒரு டீக்கடையை கூட விட்டு வைக்கலை. ஒவ்வொரு தேர்தலின் போது தான் இவர்களுக்கு எல்லாம் இந்த டீக்கடைகளே கண்ணில் தெரியும் போல. 


டவுட் கோவாலு - இவர்கள் குடித்த டீக்கு காசு கொடுத்திருப்பார்களா?







டவுட் கோவாலு - இவர் குடிப்பது காப்பியா? டீயா?  இல்ல  இரண்டும்  சேர்த்தா?




டவுட் கோவாலு - நம்மவருக்கு இந்த சின்ன கப் போதுமா?





டவுட் கோவாலு - இந்த கிளாசை என்றைக்காவது கையில் தொட்டிருப்பாரா? 




டவுட் கோவாலு - இது தாமரைப்பூ கலந்த டீயா?




டவுட் கோவாலு - பரிமாறுகிறவர்களுக்கு காவி உடை வாங்கிக்கொடுத்திருப்பாரோ?





டவுட் கோவாலு -  எப்படி இந்த சாப்பாட்டை சாப்பிடுறதுன்னு தெரியலையோ? 



டவுட் கோவாலு - நம்ம வேலைக்கு ஆப்பு வச்சுடுவாங்களோ?
                                                           




டவுட் கோவாலு - காய்கறி வாங்குபவர்களுக்கு தாமரைப்பூவும் இலவசமாக கொடுக்கப்படுமா?




டவுட் கோவாலு - ஓட்டுக் கேட்பதற்காக காலை பிடிக்கிறாரா?




டவுட் கோவாலு - இந்த பாட்டியை கட்டிப்பிடிக்க தோனலையா? 



டவுட் கோவாலு - அரசியலும் சினிமாவும் கை விட்டால்?





டவுட் கோவாலு - எந்த ஊர்ல இந்த ஹோட்டலை நடத்துறீங்க?


டவுட் கோவாலு - இந்த குழந்தையையும் கூட்டிக்கிட்டா பிரச்சாரத்துக்கு போறீங்க?





டவுட் கோவாலு - இந்த குழந்தை பெரியவளாகி தாமரைக்கு ஓட்டு போடுமா?



டவுட் கோவாலு - எம்.ஜி.ஆர் படமா பார்க்குறீங்க?







டவுட் கோவாலு - ஒத்த செருப்புக்கு இவ்வளவு பெரிய செருப்பு ஸ்டாண்ட்டா?



இத்தனை புகைப்படத்தைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இந்த புகைப்படம் தான் . 

என்னடா இவன் அரசியல் பதிவெல்லாம் போடுறானேன்னு பார்க்குறீங்களா? தினம் தினம் இவர்கள் அடிக்கின்ற கூத்தை பார்த்து வெறுத்துப்போய் வந்தது தான் இந்த பதிவு. 

டவுட் கோவாலு -  தமிழ் நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும்  நோட்டா  வெற்றி பெற்றால்???

கொசுறு - இந்த ஸ்டண்ட் விஷயத்தில் தாமரை தான் முன்னுக்கு இருக்குது போல!!!!

23 comments:

  1. கோவாலு பெரிய வாலு மாதிரி கேட்காறாரே....

    கடைசி படம் ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இதிலையாவது கோவாலு கேள்வி கேட்கட்டுமே.

      Delete
  2. இதில் மன்சூர் அலிகான் மட்டுமே மனசை தொடுகிறார். ஓட்டுக்காகன்னாலும் எல்லா வேலைகளையும் தெரிஞ்சு வச்சிருக்கார். பெருசா சீன்லாம் போடுறதில்லை இதை முகநூலிலேயே பகிர்ந்துள்ளேன்.

    தமிழிசை சாப்பிடும் படம் கஜா புயலின்போது எடுத்தது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ. அவருக்கு எல்லா வேலையும் தெரிஞ்சிருக்கு

      Delete
  3. அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா.... :)

    தேர்தல் முடியும் வரை இன்னும் எத்தனை எத்தனை காட்சிகள் காணக் கிடைக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க. கண்ணுக்கு விருந்தாக இன்னும் நிறைய காட்சிகளை காணலாம்.

      Delete
  4. உங்கள் ஐயங்கள் - Doubts - நன்றாக இருக்கின்றன. ஆனால் பதிவின் துவக்கத்தில் இருந்த ஐயங்களில் இருந்த காரம் போகப் போக இல்லை. இன்னும் நன்றாக நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படியாக ஐயங்களை எழுப்புங்கள்! இது தாமரையையோ அதில் புதிதாகச் சேர்ந்திருக்கும் மூன்று இலை கூட விடாத கட்சியையோ மட்டும் மனதில் வைத்துச் சொல்லவில்லை. சூரியனையும் அதை மறைக்கும் கையையும் சேர்த்தே சொல்கிறேன். :-D

    ReplyDelete
    Replies
    1. அமாம் இன்னும் நன்றாக கேட்டிருக்கலாம். இவர்களை பற்றிய கோபம் அதீதமாக இருப்பதால் யோசிக்க மூளை இடும் கொடுக்க மாட்டேங்கிறது.

      Delete
  5. வாவ் படம் கலெக்ஷ்ன் அருமை...... அரசியல் பதிவு எழுத ஆரம்பிச்சா நல்லா கலக்குவிங்க போல இருக்கே... சபாஷ் தொடருங்கள் இது போல..

    ReplyDelete
    Replies
    1. இந்த அரசியல் பதிவு எல்லாம் தங்களை பார்த்து தான். இப்பொழுது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்

      Delete
  6. டாஷ் போர்டில் பார்த்து ஒரு செகண்ட் கண்ணை தடவி தேச்சு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன் நீங்கதானான்னு :) உங்க போஸ்ட் தானான்னு
    செம கலெக்ஷன்ஸ் ..ஒரு படமும் இதுவரைக்கும் பார்த்தில்லா நான் :)
    அந்த கடைசீ படத்தில் எதுக்கு அந்த ஒற்றை செருப்புக்கு அம்மாம்பெரிய அரியாசனம் ! அது அங்கெதுக்கு உக்காந்திருக்கு :) கோவாலு கிட்ட கேட்டு சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. அடியேன் தான் , அடியேன் தான் இந்த பதிவை எழுதியது.
      நான் ஆஸ்திரேலிய செய்திகளை படிக்கிறேனோ இல்லையோ, நம்மூர் செய்திகளை தினமும் படித்து விடுவேன். அதில் தென்பட்ட புகைப்படங்கள் தான் இவை.
      அந்த கடைசி புகைப்படம் - முதல்வர் கலந்துக்கொண்ட ஒரு பிரச்சார கூட்டத்தில், யாரோ ஒரு புண்ணியவான் ஒத்த செருப்பை வீசி எறிந்திருக்கிறார். அந்த புகைப்படம் தான் இது.

      Delete
  7. தங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவா
    எதிர்பார்க்கவில்லை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது, உள்ளக்கோபத்தை தான் இவ்வாறு பதிவாக பதிவிட்டிருக்கிறேன்

      Delete
  8. சொக்கன் சகோ நீங்களுமா!! ஹா ஹா ஹா

    கவுண்டமணி வசனம் தான் நினைவுக்கு வருது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

    கடைசில ஒன்னு சொன்னீங்க பாருங்க தமிழ்நாட்டில் நோட்டா ஜெயிச்சால்..வாவ் சூப்பர் நீங்களும் அப்ப என் கருத்தா ஹா ஹா ஹா...நான் தமிழ்நாடுனு மட்டும் சொல்ல மாட்டேன். இந்தியாவிலேயே ஜெயித்தால்? அப்படி ஒரு புரட்சி வராதானுதான் என் நினைப்பு...மக்கள் இவரா அவரா, இவர் இல்லைனா அவர் அவர் இல்லைனா இவர் என்று மாறி மாறி என்று ஒற்றையா ரெட்டையா போடுவதை விட தங்கள் உரிமையான நல்ல தலைவன் வேண்டும் என்ற தங்கள் உரிமையை நிலைநாட்டலாமேனு தோணூம். நான் பேசுவது ஐடியலிசம்னு தெரியுது. அப்ப எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களிடம் பயம் கண்டிப்பா வந்துரும்ல? ஐடியலிஸம்!!! ஹா ஹா ஹா ஹாஅ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதிகள் மீது கோபத்தை இப்படியாவது வெளிப்படுத்தலாமே என்று தான்.

      நாம் நினைக்கிற மாதிரி நடக்காதே !!

      Delete
  9. எத்தனைவிதமான பித்தலாட்டங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. என் கண்ணுக்கு தெரிந்தது இவ்வளவே. இன்னும் எத்தனையோ ...

      Delete
  10. எங்கும் அரசியல் ....ம்ம்


    வாழ்க நலம்

    ReplyDelete
  11. அனைத்தும் அருமை. தேர்தல் முடியும் வரை இது போன்ற சுவாரஸ்யமான காட்சிகள் கிடக்கும் என்பதால் மீம்ஸ் போடுபவர்கள் பாடு கொண்டாட்டம்தான். வெயிலின் வெப்பத்தை மறந்து தங்களின் பதிவை இரசித்தேன். பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. மீம்ஸ் போகிறவர்களுக்கும் வேலை வேண்டுமல்லவா...
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா .

      Delete
  12. என்ன பண்ணுறது வீசுனவன் ஓத்த செருப்பதான் வீசி இருக்கான் ...இன்னொரு செருப்புக்கு I am வெயிட்டிங்....

    ReplyDelete