Friday, November 22, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – அமலாபால் “அண்ணா” என்று சொன்னது


நானும், குடும்பத்தை கூட்டிக்கிட்டு வந்த இன்னொரு நண்பரும், கிளம்பலாம்னு நினைச்சு, வீட்டு அம்மணியை கூப்பிட போனா, அவுங்க எங்களை விட ரொம்ப பிசியா இருந்தாங்க. அவுங்க வந்திருந்த அத்தனை பேர் கூடவும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. டான்ஸ் பாய்ஸ், எடுபிடிங்கன்னு ஒருத்தர் பாக்கி இல்லாம போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. இவுங்க இப்போதைக்கு வர மாட்டாங்க. அதனால, இயக்குனர் பேக்அப் சொன்ன பிறகே போகலாம்னு முடிவு பண்ணி விஜய் அமலாபால் நடனக்காட்சியை படமாக்கிறதை பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் முன்பு சொல்லியிருந்த மாதிரி முன்னாள் கதாநாயகி காயத்ரி ரகுராம்” இந்த படத்துக்கு இணை இயக்குனராகவும் இரண்டு பாட்டுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியிருக்காங்க. அவுங்க நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்தவுடனே, விஜய் எந்த வித தப்புமில்லாம ஆடிடுறாரு, ஆனா அவர் கூட ஆடுற அந்த டான்ஸ் பாய்ஸும் சரி, அமலாபாலும் சரி, ஒழுங்கா ஆடமா, நிறைய டேக் வாங்கினாங்க. மணி கிட்டதட்ட 7.30 மணியாயிடுச்சு, அப்பத்தான் இயக்குனர் பேக்அப் சொன்னாரு. இந்த நடன காட்சியை, அவுங்க கீழே நின்னு எடுத்துக்கிட்டு இருந்தாங்க, நாங்க எல்லாம் மேலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தோம். ஐந்தரை,ஆறு மணிக்கு எல்லாம் கூட்டம் சேர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம மக்களுக்கு எப்படி தான் தெரியுமோ, தெரியலை, பொட்டானிக்கல் கார்டன் உள்ளுக்குள்ள நடக்கிற சூட்டிங்கை பார்க்க வந்துட்டாங்க. இதுல கொடுமை என்னன்னா, நாங்க மதியம் 2.30 மணிக்கு நடிக்கிறதுக்காக சூட்டிங் ஸ்பாட்டை தேடிக்கிட்டு அந்த பொட்டானிக்கல் கார்டன்ல போயிக்கிட்டு இருக்கோம். அப்ப எங்க கூட 5 கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு எங்களோட நடந்து வந்தாங்க. இப்படி நிறைய பேர் இங்க சூட்டிங் நடக்கிறதை தெரிஞ்சுக்கிட்டு வந்துட்டாங்க. இயக்குனர் பேக்அப்ன்னு சொன்னவுடனே, நடிகர் விஜய் கீழேருந்து மேல வர ஆரம்பிச்சாரு. உடனே அவருக்கு பாதுகாவலாக அவருக்கு பக்கத்துல ரெண்டு பேர் வர ஆரம்பிச்சாங்க. மேல வந்தவரு எங்களை பார்த்ததும் சிரிச்சாரு. நாங்க அவர் கிட்ட போட்டோ எடுக்கணும்னு சொன்னவுடனே, எடுத்துக்கலாமேன்னு சொல்லி, பக்கத்துல இருந்தவங்களை பார்த்தாரு. உடனே அந்த ரெண்டு பெரும் கொஞ்சம் தள்ளி போய் நின்னுக்கிட்டாங்க. நான் உடனே என்னோட செல் போனை நண்பரிடம் கொடுத்துட்டு, குடும்பத்தோட அவர் பக்கத்துல போய் நின்னு போடோ எடுத்துக்கிட்டோம். அப்ப பெரிய மகாராணி கீழே நின்னாங்க. சின்ன மகாரணியை நான் தூக்கி வசுக்கிட்டு இருந்தேன். விஜய் கீழே குனிஞ்சு, பெரிய மகாரணியை தூக்கிக்கிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தாரு. 



அப்புறம் நண்பரும் அவரோட குடும்பமும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. நாங்க போட்டோ எடுக்கிறதை பார்த்து உடனே மக்கள் எல்லாரும் வரிசையா நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விஜய்யும் அப்புறம் கொஞ்ச பேருக்கு போட்டோவிற்கு போஸ் கொடுத்துட்டு போயிட்டாரு. நாங்க அப்புறம் இயக்குனர், உதவி இயக்குனர் கிருஷ்ணா, காயத்ரி ரகுராம் இவுங்க கூட எல்லாம் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம். 




இவுங்களோட இருந்ததுனால அமலாபலை பார்க்காம விட்டுட்டோம். சரி பரவாயில்லை இன்னொரு நாள் அவுங்களோட போட்டோ எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பி நடக்க ஆரம்பிச்சோம். பார்த்தா அங்க ஒரு கூட்டம் அமலாபால் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கு. ஆஹா, இங்க தான் இருக்காங்களா, இன்னைக்கே இவுங்களோடையும் போட்டோ எடுத்துடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அவுங்க பக்கத்துல போனோம். நானும் போட்டோ எடுக்கிறதுக்காக வந்து நின்னதை பார்த்த அமலாபால், உடனே என்கிட்ட, “அண்ணா, நம்க்கு இன்னும் சூட்டிங் முடியலை, நாளைக்கும் நாம பார்த்துப்போம் அண்ணா” அப்படின்னாங்க. என்னது!! அண்ணனான்னு எனக்கு ஒரு நொடி இதயமே நின்னுடுச்சு. இப்பத்தான் இவுங்களை ரூட் விட்டுக்கிட்டு இருக்கோம், அதுக்குள்ள அண்ணான்னு சொல்றாங்களேன்னு ஒரு மாதிரியாயிடுச்சு. இதுல எங்க வீட்டு அம்மணி என்னைய பார்த்து ஒரு நக்கலா சிரிச்சாங்க பாருங்க, அது இன்னும் ரொம்பவும் கொடுமையாயிடுச்சு. சரி, பரவாயில்லை இவுங்களோட ரெண்டு மடங்கு வயசாகுது நமக்கு, அங்கிள்ன்னு சொல்லாம, அண்ணான்னு சொன்னாங்களேன்னு மனசை தேத்திக்கிட்டு, “எனக்கு பரவாயில்லை, என்னோட மனைவிக்காக தான் இப்ப போட்டோ எடுத்துகிறேன்ன்னு சொல்லி, வீட்டு அம்மணியையும், ரெண்டு மாகாராணிகளையும் அவுங்க பக்கத்துல நிக்க சொல்லி போட்டோ எடுத்தேன். 


இதுல பெரிய மாகாராணி ஒரே அழுகை, நான் தான் அந்த அக்காவை போட்டோ எடுக்கணும்னு. நான் அது எல்லாம் எடுக்க முடியாதுன்னு சொன்னேன். உடனே இன்னமும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் அமலாபால், “எதுக்கண்ணே அவுங்களை அழ வைக்கிறீங்க, அவுங்க எடுக்கட்டும்னு சொல்லி, அவுங்களுக்காக குனிஞ்சு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாங்க. 


அப்புறம் தான் பெரிய மகாரணிக்கு சிரிப்பே வந்துச்சு. கடைசில நாங்க ஸ்டேஷன் வந்து train எடுத்து ஒரு வழியா வீட்டுக்கு வந்தோம். மறு நாள் வெள்ளிக்கிழமை ஆஃபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா பிறகு மறுபடியும் 10 மணிக்கு sms, அதாவது மறு நாள் காலையில 10மணிக்கு பழைய இடத்துக்கு (அதாவது எங்க நடன வகுப்பு காட்சியை எடுக்கிறேன்னு சொல்லி, நாங்க லீவு போட்டு காத்திருந்த இடத்துக்கு) வந்துடுங்க. அது வந்து நடனம் கத்துக்கிற மாதிரி காட்சி, அதனால அதுக்கேத்த மாதிரி, tshirt, phant எடுத்துக்கிட்டு வாங்கன்னு மெசேஜ்.  

அந்த நடன வகுப்பு காட்சியை எப்படி எடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கே சிக்கன் சாப்பாடு கிடையாது !!!!

- இன்னும் சொல்கிறேன்


16 comments:

  1. பக்கத்தில உங்க அம்மணி இருக்கும்போதே அடுத்த பொண்ணுக்கு ரூட் விடறீங்களே சரியான ஆளுய்யா நீங்க! அதான் உங்க வயச உணர்த்திட்டுப் போயிடுச்சி அந்த பொண்ணு! வேணுமய்யா உங்களுக்கு!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, என்னது இன்னமும் உங்க கிட்டேயிருந்து ஏடா கூடாமான கருத்து வரலையேன்னு யோசிச்சேன். தப்பாம எழுதிட்டீங்க. என் வயசை உணர்த்தியிருந்தா, அவுங்க "அங்கிள்ன்னு" தான் சொல்லியிருக்கணும். அவுங்க கண்ணுக்கு நான் இளமையா(!!!) தெரிஞ்சதுனால தான் "அண்ணான்னு" சொல்லியிருக்காங்க.
      நீங்க ஒருத்தர் போதும், என் வீட்டு அம்மணியை ஏத்திவிடுறதுக்கு.

      Delete
  2. //இப்பத்தான் இவுங்களை ரூட் விட்டுக்கிட்டு இருக்கோம், அதுக்குள்ள அண்ணான்னு சொல்றாங்களேன்னு ஒரு மாதிரியாயிடுச்சு.//

    ஒரு நடிகையை அதுவும் வீட்டம்மா முன்னாடியே ரூட்டு விடுறீங்களா... ஹா ஹா... அங்கிள்னு சொல்லாம விட்டாங்களே அமலா பால்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி பள்ளி மாணவரே (எனக்கு ஆங்கிலத்தை காட்டிலும் தமிழ் தான் ரொம்ப பிடிக்குமாக்கும்!!!) .
      ஏங்க யாராவது மனைவி முன்னாடியே ரூட் விடமுடியுமா? அதுவும் ஒரு நடிகையை!!!. ஏதோ ஒரு நினைப்புல எழுதிட்டேன். அதை சொல்லியே கருத்து எழுதியிருக்கீங்க. அந்த வரிக்கு முன்னாடி எவ்வளவோ எழுதியிருக்கிறேன். அதெல்லாம் கண்ல தென்படாதே!!!.
      நானே, அமலாபால்,அங்கிள்னு சொல்லாம அண்ணன்னு சொன்னதுனால, நமக்கு இன்னமும் ஏழு கழுதை வயசு ஆகலைன்னு நினைச்சு சந்தோசப்பட விடமாட்டீங்களே.

      Delete
  3. முக்கியமான வேண்டுகோள்;

    In settings -> Post comments -> Show word verification -> No

    என்று மாற்றுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொன்ன திருத்தத்தை செய்து விட்டேன். தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

      Delete
  4. உண்மையானவரே,

    இப்பதான் விஷயம் கேள்விப்பட்டு உங்களுடைய தலைவா அனுபவத்தை முதலில் இருந்து தொடங்கி கோர்வையா படித்து முடித்தேன்...

    ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் அடுத்த பதிவின் லிங்க் போட்டிருந்தது சுலபமாக இருந்தது... (போன பதிவில் மட்டும் இந்த பதிவிற்கான லிங்க் தவறாக இருந்தது... சரி பார்க்கவும்...)

    ரொம்ப ரசிச்சு படிச்சேன்... கொஞ்சம் பேச்சு வழக்குல இல்லாம மானே தேனே போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்... வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. அந்த தவறான லிங்க்கை சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. அடுத்த பதிவிலிருந்து, கொஞ்சம் "மானே,தேனே" எல்லாம் சேர்த்துக்க முயற்சி பண்றேன். நானும் தங்களின் வலைப்பூவை தொடர ஆரம்பித்து விட்டேன்.

      Delete
  5. Follower widget வைக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. google+ என்பதால், follower widget சேர்க்க முடியவில்லை. ஆனால் google+ யில் தொடர்பவர்களை சேர்த்திருக்கிறேன்

      Delete
    2. உண்மையானவரே,

      விஷயம் அப்படியில்லை... நீங்கள் google+ widget வைத்திருக்கிறீர்கள்... ஆனால் நான் google+ பயன்படுத்துவது கிடையாது... follower widget எப்படி வைப்பது என்று தேடிப்பார்த்து வைக்கவும்... அப்போதுதான் உங்களுடைய பதிவுகள் என்னுடைய டேஷ்போர்டில் தெரியும்...

      Delete
    3. மிக்க நன்றி நண்பரே,
      தங்களின் அறிவுரைப்படி, follower widgetடை வைத்துள்ளேன்.
      தங்கள் உதவிக்கு மிக்க நன்றி

      Delete
  6. ஸ்கூல் பையன் தளத்தில் அறிமுகம் செய்துள்ளார்! இது முதல் வருகை! இனி தொடர்வேன்! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழமையே. நானும் தங்களின் வலைப்பூவை தொடர ஆரம்பித்துள்ளேன்.

      Delete
  7. தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete