Friday, January 2, 2015

கணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக


 
இந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி), கடைசியில் நகைச்சுவையோடு தொடங்குவோம்னு முடிவு பண்னினேன். ஆனால் அதில் என்ன பிரச்சனை என்றால், நம்ம பதிவர்கள் - பகவான்ஜி, கிங்ஜி, சுரேஷ்ஜி மாதிரியெல்லாம் எனக்கு சொந்தமாக நகைச்சுவைத் துணுக்கு எழுத வராதது தான். சொந்த சரக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை, நாம ரசித்த துணுக்குகளை பகிர்ந்துக்கலாம்னு இந்த மொக்கை பதிவை எழுதினேன். துணுக்குகளிலேயே பலராலும் விரும்பி ரசிக்கக்கூடிய துணுக்குகள் கணவன் மனைவி துணுக்குகள் தான். அதனால் நான்  தேடித்தேடி படித்து ரசித்த கணவன் மனைவி துணுக்குகளை இங்கே பகிர்கிறேன். சில துணுக்குகள், நான் ஏற்கனவே பகிர்ந்த துணுக்குக்குகள் தான். அது போல நீங்களும் சில துணுக்குகளை படித்திருக்கலாம். இருந்தாலும் அவைகளை மீண்டும் படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இங்கே பதிவிடுகிறேன்.

மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு...

டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?                நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.                                டாக்டர்: ஏன் ?                                            நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர். 
மனைவி: எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?           கணவன்: அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...        

மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''

கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''

மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''

கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?

மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.

கணவன்: (போன் ரிஸீவரை பொத்தியபடி) ''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம்...''

மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''

கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''

மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''

வாணி: என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?

ராணி: அது என் மாமியார்டி.

வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?

ராணி: அது என் நாத்தனார்டி

வாணி: ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?       ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்

போனில்...
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'

குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?

கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.
(இதைப் படித்தவுடன் ஏனோ, மதுரைத் தமிழன் தான் ஞாபகத்துக்கு  வந்தார்)

49 comments:

 1. ஆஹா அனைத்துமே சிரிப்பு வெடிகள்தான் நண்பரே...
  ஆனாலும் மேலே இருக்கின்ற தங்களது புகைப்படம் அதைவிட அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க நண்பரே,
   பார்த்திங்களா, நான் எவ்வளவு பாவமா நிக்கிறதை.

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 2. ஹஹஹஹ்ஹ அருமை அருமை! அது சரி உங்க கண்ணு செக் பண்ணனுமா இல்ல வயசு கரெக்ட்டா சொல்லுவீங்களா....ஹஹ

  எத்தனை ரூபா பேரம் பேசிருக்கீங்க...10 லட்சமா.....அட!...பரவாயில்ல குறைச்சல்தான்.....ஹஹாஹ்ஹ

  சோ உங்க வீட்டுல எப்பவுமே தாமாசுதான்னு சொல்றீங்க அப்ப மதுரைத் தமிழன் வீட்டுல எப்படி இருக்கும்!!!! அதான் அவர் எப்பவுமே நிமிஷத்துக்கு நிமிஷம் நகைச்சுவை பதிவா போட்டுட்டுருக்காருன்னு நினைக்கிறோம்......

  ReplyDelete
  Replies
  1. ஏதோ ஆண்டவன் நமக்கு வயசை சரியா சொல்கிற ஞானத்தை கொடுத்திருக்கான். அதுக்கு போய் பொறாமைப்பட்டா எப்படி?
   10 லட்சம் குறைச்சலா போச்சா உங்களுக்கு?
   உங்க வீட்டுல நடக்கிறது தானே, எங்க வீட்டிலும்
   மதுரைத் தமிழன் வீடு ரொம்ப கலகலன்னு இருக்குமாமே

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

   Delete
 3. ஐயொ சத்தியமா அந்தக் கடைசி ஜோக் மதுரைத் தமிழன் தான் நினைவுக்கு வந்தார். நாங்க எழுதி முடிச்சு பப்ளிஸ் பன்னிட்டு பார்த்தா நீங்களும் அதையே அடைப்பிற்குள் கொடுத்திருக்கீங்க....

  ReplyDelete
  Replies
  1. மனைவி கிட்ட அடி வாங்கிறதுனாலே நமக்கு மதுரைத் தமிழன் தானே ஞாபகத்துக்கு வரார்

   Delete
 4. மதுரைத் தமிழனுக்கு செமையா தும்மல் விழுந்துருக்கும்.....

  ReplyDelete
  Replies
  1. அவர் தும்மிக்கிட்டேத்தான் இருக்கப்போறாரு

   Delete
 5. பாத்திரம் தட்டு பறந்தா மட்டும் மதுரைத்தமிழன் ஞாபகத்துக்கு வருகிறார் இல்லைன்ன வரவில்லையா ? நால்லா இருங்கப்பூ நல்ல இருங்க

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய ஸ்பெஷாலிட்டியே, பூரிக்கட்டை, தட்டு,பாத்திரம் தானே

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 6. நகைச்சுவை அனைத்தையும் இரசித்தேன். அதிலும் அந்த மூன்றாவது நகைச்சுவை சூப்பர்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. குடிப்பதற்கு எதாவது ஒரு காரணம் வேணுமே!
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 7. வாணி ராணி பேசுவதைப் படித்த போது,,,கௌதம் வாசுதேவ் மேனனின் புதிய படமான என்னை அறிந்தால் படத்தின் ட்டிசரில் விவேக்கை ஒருவர் கேட்பார் ஏன் சான் நீங்கள் கல்யாணமே பண்ணிக்கல....விவேக் சொல்வார் "எனக்கு பேய்னா பயம்ங்க அதான்' அப்படிம்பார்....அது நினைவுக்கு வந்தது

  ReplyDelete
  Replies
  1. நான் இன்னும் அந்த டீசரை பார்க்கவில்லை.
   மிண்டும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோஸ்

   Delete
 8. சிரிப்பாக இருந்தாலும் உண்மை தானே புத்தாண்டு வாழ்த்துகள்,

  ReplyDelete
  Replies
  1. முதன்முறையாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
   தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

   Delete
 9. வணக்கம் சகோதரரே!

  நலஞ்சேர்க்கும் ஓர்வழி நன்கு சிரித்தல்!
  உளச்சோர்வு போக்கும் உடன்!

  அருமை!.. சிரித்தேன்!..
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து சிரித்தமைக்கு மிக்க நன்றி சகோ.

   Delete
 10. புதிய வருடத்தில் நல்ல ஆரம்பம் செம சகோ தொடருங்கள் வாழ்த்துக்கள் ...! இனியா ஓவியா அனைவரும் நலம் தானே|? புது வறட வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. அனைவரும் நலம். தங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 11. அய்யய்யோ புது வருட வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. புது வருட வாழ்த்துக்கள்...!

   Delete
 12. ஹா..... ஹா......ஹா....

  இரண்டு மட்டும்தான் நான் முன்னரே படித்தது! ஒன்றை வேறு ரூபத்தில் படித்திருக்கிறேன்.

  ரஸித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 13. அனைத்தும் சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! ரசித்து மகிழ்ந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் ரசித்து சிரித்ததைக்கண்டு மிக்க மகிழ்ச்சி. என்ன, இது என்னோட சொந்த சரக்காக இருந்திருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

   Delete
 14. போன் உரையாடல் உட்பட அனைத்தும் செம கலகல...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

   Delete
 15. எனக்கும் இப்படி சிரிக்கும்படி ஜோக் எழுத வரவில்லையே ,என்ன செய்ய ?

  ReplyDelete
  Replies
  1. பாஸ் எனக்கு ஒரு டௌட்டு??? இதுக்கு பேரு தானே தன்னடக்கம்??

   Delete
  2. ஜி, நிங்களே இப்படி சொன்னால்?

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி

   Delete
 16. பாருங்க எனக்கும் கடைசி ஜோக்கை படிக்கையில் தமிழன் சகா தான் நினைவுக்கு வந்தார்:)))

  ReplyDelete
  Replies
  1. இது தான் மதுரைத் தமிழ னோட சிறப்பே

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 17. வணக்கம்
  அண்ணா

  உரையாடல் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 18. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

  http://blogintamil.blogspot.in/2015/01/hawa-mahal.html

  முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 19. ஹா ஹா... எல்லாமே சிரிப்பு சரவெடிகள்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை

   Delete
 20. சிரித்தோம்...
  சைவ சித்தாந்த வெளியில் இருந்து இன்னொரு தளத்திற்குள் ... அருமை சகோ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 21. தங்களது வலைப் பூ முழுவதும்
  சிரிப்பு வெளிச்சம்
  சிரிப்பு வெளிச்சம்
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 22. அய்யா வணக்கம்!
  புதுவருடத்தைச் சிரிப்போடும் சிறப்போடும் ஆரம்பித்திருக்கிறீர்கள்..!
  யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு நன்சொல் என்ற திருமூலன் வாக்கோடு, உங்கள் தளம் வருபவர்களுக்கு ஒரு புன்னகையையும் பரிசளித்துப் போயிருக்கிறீர்கள்!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.

   Delete
 23. அனைத்துமே ரசித்தேன். நன்றி சொக்கன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார் .

   Delete
 24. ஆஹா...சிரித்து சிரித்து மகிழ்ந்தேன்.புதுவருடத்தை அமோகமாக ஆரம்பித்து விட்டீர்கள்.
  புது வருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete