Wednesday, December 5, 2012

வெள்ளிக்கிழமை மஜா

வெள்ளிக்கிழமை மஜான்னவுடனே,நீங்க என்னையப்பத்தி தப்பா நினைக்க வேண்டாம்(நான் ரொம்ப நல்ல பையனாக்கும்!!!). வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில், எங்கள் அலுவலகத்தில் நடக்கும் கூத்தைப் பற்றி தான் இந்த பதிவு. நம்ம நாட்டில் தண்ணி அடிக்கிறது தப்பு, உடம்புக்கு கெடுதல்ன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க தண்ணி அடிக்காம இருந்தா, அது உலக மகா தப்புன்னு நினைக்கிறாங்க. எங்கள் அலுவலக பேன்ட்ரில (சின்ன சமையலறை) குளிர்சாதன பெட்டி இருக்கும். அதுல சாப்பிடுகிற பொருள் இருக்கோ இல்லையோ, பீர் பாட்டில்,வைன் பாட்டில் மட்டும் நிறைய இருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி ஆனா போதும், சமையலறைக்கு போய் ஆளாளுக்கு பீர் எடுத்து குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு சில பேர், அப்பத்தான் ரொம்ப மும்முரமா வேலை பார்க்கிற மாதிரி, பீர் பாட்டிலை எடுத்துக்கிட்டு, அவுங்க இடத்துக்கு வந்து ஒரு கையில பாட்டிலை பிடிச்சு குடிச்சுக்கிட்டே, வேலை பார்ப்பாங்க. ஆஹா, அவுங்க குடிச்சுக்கிட்டே வேலை பார்க்கிற அழகை என்னன்னு சொல்றது. 

இதுல, குடிக்காம இருக்கிற என்னைய பார்த்து, நீ குடிக்க மாட்டியான்னு இளக்காரமா ஒரு கேள்வி வேற கேட்டுத் தொலைப்பாங்க. சரி, இவுங்க முன்னாடி நாம சும்மா இருக்காம, கோக்கையாவது குடிக்கலாம்னு பார்த்தா, படு பாவிங்க, ஒரு கோக் கூட வாங்கி வச்சிருக்க மாட்டானுங்க. கோக்கையும் கொஞ்சம் வாங்கி வையுங்கன்னு சொன்னா, பீருக்கு மிக்ஸிங் தேவையில்லை, அதனால கோக் எல்லாம் வாங்கி வைக்கிறதில்லைன்னு சொல்லிட்டாணுங்க. சரி, நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டேன். இவனுங்க மட்டும் ஓசியில வயிறு முட்ட தண்ணி அடிக்கலாமாம், ஆனா தண்ணி அடிக்காம இருக்கிற என்னைய மாதிரி ஆளுங்களுக்கு, கோக் கூட கிடையாதாம். இது எந்த ஊர் நியாயம்னு தெரியலை. போன வெள்ளிக்கிழமை நடந்தது தான் பெரிய கொடுமை. எல்லோரும் வேலை பார்க்கிற மும்முரத்துல, தண்ணி அடிக்கிறதை மறந்துட்டாங்க(எப்படி இவனுங்க ஓசியில கிடைக்கிற தண்ணியை மறந்துட்டாணுங்கன்னு எனக்கு பெரிய சந்தேகம்). ஆனா, ஒரே ஒரு பிரகஸ்பதி மட்டும் சரியா நியாபகம் வச்சுக்கிட்டு, சமையலறைக்கு போய் பீரை எடுத்தாரு. தான் மட்டும் குடிச்சா தப்புன்னு நினைச்சாரோ என்னவோ, ஒரு சின்ன தள்ளு வண்டில நிறைய பீர் பாட்டிலை எடுத்து வச்சுக்கிட்டு, ஒவ்வொருத்தரிடமும் போய் டோர் சர்வீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு. என் டேபிள் கிட்ட வந்தவுடனே, இன்னைக்கும் உனக்கு கோக் கிடையாதுன்னு நக்கலா சொல்லிட்டு போனாரு. ஒரு நல்லவனைப் பார்த்து, இப்படியெல்லாம் நக்கல் பண்ணக்கூடாதுன்னு ஒரு பொது அறிவு கூட இல்லாம போச்சே! இது தான் கலி காலமோ!!!!

பீருக்கு பேர் போன ஊரு ஆஸ்திரேலியான்னு சொல்லுவாங்க. ஆனா அதுக்காக அலுவலகத்திலேயே குடிக்கிற அளவுக்கான்னு நினைக்கத் தோணுது.

4 comments:

  1. பின்ன! மத்தவங்க ஓசியில தண்ணியே அடிக்கும்போது, நான் ஜூஸ் இல்ல கோக் குடிக்கலாமேன்னு நினைச்சா, பொறாமையா!!!!

    ReplyDelete
  2. Dress illatha urula, dress potutu iruka kodathu sir.

    ReplyDelete
  3. கவலைபடாதீங்க பிரதர் ... தமிழ்நாடும் இன்னும் கொஞ்ச வருடத்தில் இப்படி ஆகிடும்.... அப்புறம் குடிகாதவன்தான் தமிழ்நாட்டுல கேணப்பய ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete