Sunday, March 9, 2014

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-1


பொதுவாக சிவலிங்கங்கள் மனிதர்களால் அல்லது தேவர்களால் உருவாக்கப்படும். சில சிவலிங்கங்கள் தானே தோன்றும், இதற்கு சுயம்புலிங்கம் என்று பெயர். இது தவிர காலத்தால் உருவாகும் ஒரு லிங்கம் உள்ளது. அது அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கம். மலையின் மேல் குளிர்ந்த நீர் காற்றால் உறைந்து கட்டிக் கொண்டு லிங்கம் உருவாகுகிறது. அதன் பின் வெப்பம் அதிகரிக்கும்போது, அந்த லிங்கம் அப்படியே உருகி, இல்லாமல் போய்விடுகிறது. இதனால் தான், அந்த லிங்கத்திற்கு காலம் செய்யும் லிங்கம்என்று பெயர் வந்தது. காலத்தால் வரும் துன்பங்களுக்கு, இந்த லிங்கத்தை வணங்குவது ஒரு சிறந்த பரிகாரமாகும். இஸ்லாமியர்களுக்கு எப்படி ஹஜ் யாத்திரை ஒரு புனித யாத்திரையோ, அதுப் போல் இந்துக்களுக்கு அமர்நாத் யாத்திரை ஒரு புனித யாத்திரையாகும். அமர்நாத் யாத்திரையைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- புத்தகத்தில் படித்தது.



காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களுள் ஒருவராவர். இவர் காரைக்காலில் பிறந்தபடியாலும், ஈஸ்வரனே, இவரை அம்மையேஎன்று அழைத்தாலும், இவருக்கு, காரைக்கால் அம்மையார் என்று பெயர் வந்தது. தமிழகத்தின் இருண்ட காலமான கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கும் 5-ஆம் நூற்றாண்டுக்கும் இடையே ஒரு பங்குனி மாதத்தின், ஸ்வாதி நட்சத்திர நாளன்று, சோழ நாட்டிலுள்ள காரைக்காலில் தன் வீட்டில் தனதத்தன் குட்டிப் போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒரு பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே உள்ளறையிலிருந்து பிரசவம் பார்த்த தாதி வெளியே வந்து அவரிடம், “அய்யா உங்களுக்கு திருமகளைப் போல ஒரு பெண் பிறந்திருக்கிறாள்என்று கூறினாள். அப்பனே! சிவனே எனக்கு குழந்தை இல்லாத குறையைப் போக்கி விட்டாய்”, என்று அந்த சிவனைப் பிராத்தித்து, தன் கழுத்தில் இருந்த ஒரு மணி மாலையை அந்த தாதிக்கு பரிசாக கொடுத்தார். உள்ளறைக்குச் சென்று குழந்தையைப் பார்த்த தனதத்தனை, அவர் மனைவி தர்மவதி, “நம் குழந்தையைப் பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டார்?” அவரும், “புனிதவதி என்றுப் பெயரிட்டு அழைப்போம்என்று கூறினார்.

நாட்கள் மெதுவாக நகர்ந்தன. புனிதவதி வளர ஆரம்பித்தாள். அவள் வளர வளர, தனதத்தனின் வியாபாரமும் நன்றாக வளர்ந்தது. ஏற்கானவே பெரும் செல்வந்தராக இருந்தவருக்கு மேலும் செல்வம் பெருகியது. புனிதவதி தன் வயது ஒத்த குழந்தைகளோடு விளையாடாமல், எப்பவும் சிவப் பக்தியோடு வளைய வந்தாள். அந்த சின்னஞ்சிறு வயதிலேயே, சிவன் கோவில்களுக்குச் சென்று சிவனுக்கு தொண்டுப் புரிந்து வந்தாள். எப்பொழுதும் சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டும், சிவனடியார்களைக் கண்டால், அந்த சிவனையேப் பார்த்த மாதிரி பரவசப்பட்டாள். இப்படியாக வளர்ந்து திருமணப் பருவம் எய்தினாள். அப்பொழுது அவளைப் பார்ப்பவர்கள் எல்லாம்,” இப்படி ஒரு அழகான பெண் உலகத்தில் இருக்க முடியுமா?” என்று வியந்தார்கள். அப்படி ஒரு தெய்வீக அழகோடு அவள் விளங்கினாள். தர்மவதி ஒரு நாள் தன் கணவனிடம், “என்னங்க புனிதவதிக்கு கலியானம் செய்து வைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்என்றார். நானும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நம் மகளுக்கு இருக்கிற அழகுக்கும், அறிவுக்கும், பக்திக்கும் சரியான துணை அமையவில்லையே!!! என்ன பண்ணுவது. நம் மகள் வணங்குகிற சிவன் தான் அவளுக்கு ஒரு நல்ல கணவனை கொடுக்க வேண்டும்என்றார் தனதத்தன். அவருடைய பிராத்தனை, இறைவனின் காதில் விழுந்தது விட்டது போலும், நாகப்பட்டினத்தில் வசித்து வந்த வணிகர் நந்திபதி, புனிதவதியின் குணத்தையும், அழகையும் கேள்விப்படு, தன் மகன் பரமதத்தனுக்கு மணம் முடிக்க எண்ணினார். இரு குடும்பமும் பேசி புனிதவதிக்கு, பரமதத்தனை கலியாணம் செய்து வைத்தார்கள். புனிதவதியின் தந்தைக்கு தன் ஒரே மகளை விட்டுப் பிரிய மனமில்லாததால், மருமகனை நாகப்பட்டினத்திற்குப் போகாமல், காரைக்காலிலே வசிக்குமாறு வேண்டிக்கொண்டார். அதனால் பரமதத்தனும் புனிதவதியும் காரைக்காலில் வசித்து வந்தனர். பரமதத்தனும் காரைக்காலில் நேர்மையாக வணிகத் தொழிலை நடத்தி வந்தான். புனிதவதியாருக்கும் இறைவனிடத்தில் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருந்தது. எந்நேரமும் சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டும், சிவனடியார்களை உபசரித்துக்கொண்டும் இருந்தார். ஒரு நாள் பரமதத்தன் தன் கடையில் இருக்கும் பொழுது, அவருடைய வடிக்கையாளர்களில் ஒருவர், இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கொடுத்தார். அதை பரமதத்தனும் தன் வீட்டிற்கு, கடையில் வேலை பார்ப்பவரிடம் கொடுத்து அனுப்பினான். புனிதவதியாரும் அதை வாங்கி வைத்து விட்டு மதிய உணவிற்கான ஏற்பாட்டை செய்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது, வீட்டு வாசலிலுருந்து, “சிவாய நமஎன்று குரல் கேட்டது. உடனே, புனிதவதியாரும் வாசலுக்கு வந்து பார்த்தார். அங்கே ஒரு சிவனடியார்ர் நின்றுக் கொண்டு இருந்தார். அவரை இன்முகத்துடன் உள்ளே அழைத்தவருக்கு, பசியால் வாடும் அடியவரின் முகத்தைக் கண்டவுடன் அதிர்ச்சியாகிவிட்டது, உடனே வெகு சீக்கிரமாக சமையலை முடித்து, அவருக்கு உணவு பரிமாறினார். அந்த அடியாரும், இருந்த பசிக்கு வயிறார உண்டார்.



பிறகு தன் கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அந்த அடியாருக்கு கொடுத்தார். அவருக்கோ மகிழ்ச்சி தாங்க வில்லை, அந்த மாங்கனியையும் உண்டு, புனிதவதியாரை மனமார வாழ்த்திவிட்டு சென்றார். சற்று நேரத்திற்குப் பிறகு, வழக்கம் போல் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு, புனிதவதியார் உணவு பரிமாறிவிட்டு, மீதி இருக்கிற ஒரு மங்கணியைக் கொடுத்தார். பரமதத்தனும் அதைச் சாப்பிட்டுவிட்டு, இன்னும் ஒன்று இருக்குமே அதையும் இலையில் இடுக என்று பணித்தான். கணவனின் கட்டளையை கேட்ட, புனிதவதியாருக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. இன்னொரு கனி இல்லையென்று சொல்லிவிடலாமா என்று ஒரு நொடி எண்ணினார். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கனியை எடுத்து வருபவர் போல் உள்ளே சென்றார். சிவனை நினைத்து கணை மூடிக்கொண்டு, “ஈஸ்வரா, இதற்கு நீ தான் ஒரு வழி செய்ய வேண்டும் என்று பிரத்தித்தார்” . அந்த ஈஸ்வரனும், இவருடைய வேண்டுதளுக்கு செவி சாய்த்து, புனிதவதியாரின் கைகளில் ஒரு மாங்கனியை வைக்கச் செய்தார். 


கைகளில் ஒரு மாங்கனியைப் பார்த்தவுடன், புனிதவதியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இறைவனுக்கு நன்றியை மனதில் தெரிவித்துக்கொண்டு, அந்த மாங்கனியை, பரமதத்தனின் இலையில் பரிமாறினார். பரமதத்தனும் அந்தக் கனியை உண்டவுடன், ஆஹா! ஆஹா! என்ன ஒரு சுவை, இப்படிப்பட்ட ஒரு மாங்கனியை என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதே இல்லையே! முதலில் சாப்பிட்ட கணியின் சுவைக்கும், இந்தக் கனியின் சுவைக்கும் சம்பந்தமே இல்லையே! எப்படி இந்தக் கனி மட்டும் இவ்வளவு சுவையாக இருக்க முடியும்? இந்தக் கனி கண்டிப்பாக நான் கொடுத்த கனியாக இருக்க முடியாது, சொல்!!! இது எப்படி உனக்கு கிடைத்தது? என்று புனிதவதியைப் பார்த்து கேள்வி கேட்டான். இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று நினைக்காத புனிதவதியாரோ, எப்படி கணவனிடம் உண்மையை சொல்லிப் புரியவைப்பது என்று தடுமாறினார். இருப்பினும் கணவனிடம் உண்மையை மறைப்பது ஒரு நல்ல மனைவிக்கு அழகல்ல என்று எண்ணி, கணவனிடம் நடந்த எல்லா விசயங்களையும் கூறினார். ஆனால் பரமதத்தனோ இதை சிறிதும் நம்பவில்லை. நம்பாமல், அவரைப் பார்த்து, உலகத்தில் எங்காவது இது மாதிரி நடக்குமா? இறைவனே! உன் கையில் கனியை வைத்தாரா, இதை நான் நம்ப வேண்டுமா என்று பரிகாசம் செய்தான். நீ சொல்வதை நான் நம்ப வேண்டும் என்றால், மீண்டும் இதே மாதிரி ஒரு சுவையான கனியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறினான். இப்படி பரமதத்தன் சொன்னதைக் கேட்டவுடன், புனிதவதியாரின் நிலமை மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது. இருப்பினும், கணவனின் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக, அவர் மீண்டும் உள்ளே சென்று, இறைவனை பிராத்திக்க ஆரம்பித்தார்.

புனிதவதியாரின் பிராத்தனை பலித்ததா? அவர் பரமதத்தனுடைய சந்தேகத்தை தீர்த்து வைத்தாரா? அவர் எவ்வாறு வள்ளுவம் வழியில் வாழ்ந்தார் என்பதையெல்லாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம் . 

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-2 

18 comments:

  1. முதல் படம் அற்புதம்... காரைக்கால் அம்மையார் சிறப்பு அறிந்தாலும் தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.
      அவரின் வரலாறு அறிந்திருந்தபோதும் தாங்கள் தொடர்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

      Delete
  2. சிவலிங்கம் பற்றிய படம் அருமை இந்த கோவிலைப்பற்றி கேள்விபட்டு இருந்தாலும் முதலில் அழகான படத்தின் மூலம் உங்கள் பதிவும் முலம் பார்த்து சந்தோஷம் அடைந்தேன்..


    காரைக்கால் அம்மையார் பற்றிய பதிவை படிக்கும் பொறுமை எனக்கு இல்லாததால் அதை கண்களால் ஸ்கேன் மட்டும் செய்தேன்

    ReplyDelete
    Replies
    1. "//கண்களால் மட்டும் ஸ்கேன் செய்தேன்//" என்று உண்மையை சொல்லியதற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழா.

      Delete
  3. வணக்கம் சகோதரர்
    சிவலிங்கம் பற்றிய தகவல்களும் காரைக்கால் அம்மையாரின் வரலாறும் தங்கள் எழுத்தால் அகிலம் முழுதும் இணையம் வழியாக செல்வது கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் சகோதரர். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாண்டியன்.

      Delete
  4. வணக்கம் சகோ!
    படங்களும் பதிவும் அருமை! 63 நாயன்மார்களுடைய கதைகளையும் திரும்ப வாசிக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லாம் மறந்து விட்டது அல்லவா? இதன் மூலம் திரும்பவும் நினைவு படுத்துவதில் பெரும் திருப்தியும் மகிழ்ச்சியுமே. 2 பகுதிகளாக போடுவது இரட்டிப்பு மகிழ்ச்சியே. உங்களுக்கு தான் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஹா ஹா ஏனெனில் ஒரு பதிவுக்கு இரண்டு கருத்துக்கள் வருமே.
    இவைகளை கார்ட்டூன் மூலம் கதைகளை உருவாக்கி போட்டால் தமிழில் பிள்ளைகள் விரும்பி பார்ப்பார்கள். நாம் சொல்வதை விட இதை விரும்புவர்கள் அல்லவா?

    நன்றி ! தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு இந்த பதிவு திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது என்று நினைக்கும் போது, எனக்கு மிகவும் மகிழியாக இருக்கிறது சகோ.

      தங்களின் யோசனை நல்ல யோசனை.
      எனக்கு நெடுங்காலமாக, ஆங்கிலத்தில் இருக்கும் "BIG BOOK" (ஒரு பக்கத்திற்கு வெறும் நான்கைந்து வரிகளும், பெரிய படமும்) போன்று இக்கதைகளை எல்லாம் அந்த வடிவத்தில் எழுதி அச்சிட்டு, நம் குழந்தைகளுக்கு இரவு நேர கதைகளாக சொல்ல வேண்டும் என்று ஒரு அவா. அந்த ஈசனின் அருள் இருந்தால், கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் அது முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.

      Delete
  5. படம் அருமை
    காரைக்கால் அம்மையாரின் வரலாற்றினை அறியத் தொடர்கின்றேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  6. முதல் படம் அற்புதம்.

    காரைக்கால் அம்மையார் கதை தெரிந்தாலும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. அமர்நாத் பனிலிங்கப் படம் அற்புதம்..

    காரைக்காலம்மையார் வரலாறு பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
      அவரின் வரலாறு அறிந்திருந்தபோதும் தாங்கள் தொடர்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

      Delete
  8. தொடர்க... இப்போது விவாதம் வேண்டாம் என்பதால் வாழ்த்துக்கள் உண்மையானவரே..

    ReplyDelete
    Replies
    1. "//இப்போது விவாதம் வேண்டாம்//" - நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விவாதம் செய்யலாம் நண்பரே.

      Delete
  9. காலம் செய்யும் லிங்கம் தகவல் புதிது! காரைக்கால் அம்மையாரின் சரித்திரம் படித்திருக்கிறேன்! உங்கள் பகிர்வு சுவாரஸ்யமாக உள்ளது தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  10. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
    அவரின் வரலாறு அறிந்திருந்தபோதும் தாங்கள் தொடர்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு. தொடர்கிறேன்....

    ReplyDelete