இன்று
ஆண்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் பெண்கள் செய்கிறார்கள். ஆனால் பெண்களால் செய்ய
முடிந்த ஒரு வேலையை ஆண்களால் செய்ய முடியவில்லை, அது தான் பிரசவம். அந்த மகத்தான பரிசை இறைவன்
பெண்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறான். வலி வந்தால், உயிர்
போகிறதே என்று சொல்லுவோம். ஆனால் பிரசவ வலியில் மட்டும் புதிய உயிர் வருகிறது. பெண்கள் பெற்றோர்களுக்கு
நல்ல பிள்ளையாக இருந்தாலும் சரி, கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தாலும்
சரி, அவர்கள் முழுமை அடைவதே, இந்த தாய்மையின்
மூலமாகத்தான். ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து ஆணை பிறக்க வைத்து, உலகத்தின் மிகப் பெரிய சக்தி தாய் தான் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறான்
இறைவன்.
இந்த நல்ல
நாளில் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த நம் தாயையும் மற்ற தாய்மார்களையும் போற்றி
வணங்குவோம்.
நான் எழுதிய
இந்த தாய்மை சிறுகதையை படிக்காதவர்கள் இங்கே வாசிக்கவும்.
தாய்மை -1
தாய்மை - 2
தாய்மை - 3
தாய்மை - 4
தாய்மை -1
தாய்மை - 2
தாய்மை - 3
தாய்மை - 4
//வலி வந்தால், உயிர் போகிறதே என்று சொல்லுவோம். ஆனால் பிரசவ வலியில் மட்டும் புதிய உயிர் வருகிறது.//
ReplyDeleteஅருமையான கூற்று.
//இந்த நல்ல நாளில் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த நம் தாயையும் மற்ற தாய்மார்களையும் போற்றி வணங்குவோம்.//
ஆம்..... வணங்குவோம். பகிர்வுக்கு நன்றிகள்.
அழகான படமும் இணைத்துள்ளீர்கள் நன்றி!
ReplyDeleteதாய்மையை போற்றும் படி எழுதும் சிறு கதைக்கு முதற்கண் நன்றி சகோ. குருவி தலையில் பனங்காயை வைக்க முடியுமா என்ன! என்ன தான் ஆண்கள் பலசாலிகள், வீரம் நிறைந்தவர்கள், தைரிய சாலிகள் என்றாலும் பொறுமையும் சகிப்பு தன்மையும் குறைவு என்றே சொல்லலாம் அதனாலும்,பெண்கள் அதையே பாக்கியமாக கருதுவதனாலும் பெண்களுக்கே கொடுத்துள்ளார் போலும். ஹா ஹா .... இதை பெண்களை பெருமை படுத்த கூறினேனே தவிர ஆண்களை சிறுமை படுத்தவோ புண் படுத்தவோ இல்லை சரி தானே நண்பர்களை. எனக்கு தெரியும் கோபம் வருகிறது என்று இந்த நல்ல நாளில் பெருந்தன்மையாய் மன்னிச்சுடுங்க சரியா நண்பர்களே ) ஜோக்குக்கு தான் சொன்னேன் அனால் உண்மை தான் என்றே தோன்றுகிறது.
ReplyDeleteசொற்கள் அமைதியாகவும் நிதானமாகவும் ஒன்றும் பிசிறு இல்லாமல் அமைந்துள்ளன அழகாக. முடிவை ஆவலோடு எதிர்பார்க்க தொடரும் என்று வேறு சொல்லிவிட்டீர்களா இன்னும் ஆவலாக உள்ளது . நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ....!
அந்த சிறுகதையை நான் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன் சகோ.
Delete4 பாகங்களின் இணைப்பையும் இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.
நீங்கள் சொல்வதும் உண்மை தான்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
ஆமாம் சகோ. தாயின் அரவணனைப்பில் தான் அந்த குழந்தை எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் ஜெயக்குமார் சார்
Deleteஅன்னையர் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் டிடி.
Deleteஅன்னையர்தின வாழ்த்துக்கள். தாய்மையைப் போற்றுவது ஆண்மையே. தாயாக வழி தந்தும் ஆண்மையே
ReplyDeleteமுதன் முறையாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி.
Deleteதங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். மிக மிக சரியாகச் சொன்னீர்கள்.
அன்னையர் தின நல்வாழ்த்துகள்....
ReplyDeleteதங்களுடைய கருத்துக்கு நன்றி வெங்கட் சார்
Deleteஉண்மையானவர்களால்தான், தாய்மையின் மகிமையை அறியமுடியும் உண்மையானவ(ன்)ர் சொல்னது உண்மையே வாழ்த்துக்கள் நண்பா,,,, From Abu Dhabi to Australia
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com