Wednesday, July 9, 2014

ஓவியாவின் 1$ ஷாப்பிங்எங்கள் தமிழ் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையும். இதில் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தமிழ் வகுப்பும், கால் மணி நேரம் இடைவேளையும், பிறகு 4.15 மணி முதல் 5 மணி வரை தன்னறிவியல் (self science) வகுப்பும் நடக்கும். இதில் தன்னறிவியல் வகுப்பானது சிறிய குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகள் என்று இரண்டு வகுப்புகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தன்னறிவியல் வகுப்புகளை எங்கள் பள்ளிக்கு அறிமுகப்படுத்தியவர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள். அவர் தான் சிறிய குழந்தைகளின் தன்னறிவியல் வகுப்பை எடுப்பவர். சென்ற வகுப்பில் அவர் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதாவது, குழந்தைகளிடம் ஒரு டாலரை ($1) கொடுத்து, அவர்களையே தனியாக ஷாப்பிங் செய்ய சொல்ல வேண்டும் என்பது. குழந்தைகள் அந்த ஒரு டாலரில், மிட்டாய் வகையறாக்களை வாங்கக்கூடாது. மேலும் உபயோகமுள்ளவற்றை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்ற வாரமும், இந்த வாரமும் இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை. இந்த விடுமுறையில் அவர்கள் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தன்னறிவியல் வகுப்பில், அவர்கள் என்ன வாங்கினார்கள், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்று சொல்ல வேண்டும்.

ஓவியாவும், ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்து அதை நான் அண்ணா மாமா வகுப்பில் காட்டி சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் படிக்க....

10 comments:

 1. சிறு வயதிலேயே இப்படி அனுபவம் பெறுவது நல்லது.....

  குழந்தைகளுக்கு எனது பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்

   Delete
 2. சிறந்தபழக்கம் நண்பரே
  ஓவியாவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

   Delete
 3. வணக்கம் சகோதரரே!

  பயனுள்ள பல விடயங்கள் இங்கு காண்கிறேன்!

  அருமை!

  தொடர்கிறேன்...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் என்னுடைய பதிவுகளை படிப்பதைக்கண்டு மிக்க மகிழ்ச்சி சகோதரி.
   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. தங்களுடைய நான் அவளில்லை 2012)ஐயோ! சொக்கன் சார் அதே மையக் கருத்து! ஒரு வேளை அதே பெண்ணோ? நீங்க 2012 லயே எழுதிட்டீங்க! ஆச்சரியமாக இருக்கு சார்! ஒரே தலைப்பு! கருத்து! ....நல்ல காலம் சார் இங்க சினிமாவுக்கு சினிமா பேர் பதியும் போது....ஏற்கனவே இந்த பெயர் நாங்க பதிஞ்சது அப்படின்னு சினி வட்டாரத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரும்....ஹப்பா நீங்க வரல ஹாஹாஅஹாஅஹாஆ.....தப்பா எடுத்துக்கல இல்லையா சார்?!!! முதல்ல நாங்க வேற தலைப்புதான் கொடுத்தோம்...ஏன்ன ஆண்கள் இப்படி ஏமாததறது பத்தி ஒரு பதிவு கல்யாண வீரர்கள் அப்படினு கொடுத்திருந்தோம்...ஸோ இதுக்கு கல்யாண வீராங்கனை அப்படினுதான் வைச்சுருந்தோம்....கடைசிலதான் இப்படி மாத்தினோம் சார்! இனிமே நாம தலைப்பு கொடுக்கும் போது கூட வேற யாராவது இப்படிக் கொடுத்திருக்காங்களானு பாக்கணுமோ சார்?!!!!!! ஏன்னு கேட்டீங்கன்னா வலைத்தளத்துல காப்பி அடிக்கறது ரொம்பவே நடக்குது....அப்புறம் யாராவது நாங்க உங்கள காப்பி அடிச்சுட்டோம்னு சொல்லிடுவாங்களோனு பயம்தான் சார்.....

  தங்களைத் தொடர்கின்றோம் சார்....பல கலை மன்னன் போல நீங்க...நாடகக் கலைஞர், ஆய்வுக் கட்டுரைகள் எழுதறீங்க....நடிகர்,வானொலி நிகழ்சி செய்பவர், ஆசிரியர்....ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார் உங்கள் அறிமுகம் கிடைத்தற்கு......தங்கள் தமிழ் கட்டுரை வாசித்தோம்....அவுஸ்திரேலியாவில் வெளியாகும் தமிழ் பத்திரிகையில் தாங்கள் எழுதிய கட்டுரை....

  மிக்க நன்றி!

  இந்தப் பின்னூட்டத்தை அந்தக் கட்டுரையின் கீழேயே கொடுக்க முயன்று இதுவரை அடு செல்ல வில்லை! அதனால் வேறு எப்படிக் கொடுக்க என்று யோசித்து சரி இங்கேயே கொடுத்துவிடுவோம் என்று முடிவு செய்து இங்கே கொடுத்துள்ளோம் சார்...தாழ்மையுடன் மன்னிக்க வேண்டுகின்றோம்.

  மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அடாடா, இதுக்கு போய், நீங்கள் இவ்வளவு தூரம் பயப்பட்டிருக்க வேண்டாம். பார்த்தீர்களா, நாட்டில் பெண்களும் ஆண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று. அடிக்கடி இந்த கூத்து நடப்பதால், ஒரே தலைப்பில் ஒரே கருத்துள்ள பதிவை எழுதுவது மாதிரி அமைந்து விடுகிறது.
   இப்படி பல பேர் எழுதினாலாவது, ஆண்கள் சுதாரிப்பாக இருக்கிறார்களா என்று பார்ப்போம்.

   உண்மையில் தங்களின் அந்த பதிவைப் படித்தவுடன், நம் இருவருடைய சிந்தனைகளும் எப்படி இவ்வாறு ஒன்றுபட்டிருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சி தான் அடைந்தேன் ஐயா.

   தாங்கள் என்னை தொடர்வது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. நீங்கள் சொல்வது போல், பல கலை மன்னன் எல்லாம் இல்லை ஐயா, ஏதோ என்னால் முடிந்த, எனக்குத் தெரிந்த விஷயங்களில் பங்கெடுத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.

   தங்களின் நீண்ட கருத்தைக்கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. மேலும் நட்பு வட்டத்திற்குள், மன்னிப்பு எல்லாம் மிகப் பெரிய வார்த்தை.
   நீங்கள் அந்த கட்டுரையை படித்ததே பெரிய விஷயம். அதிலும் கருத்திட வேண்டும் என்று எண்ணி, இங்கு கருத்திட்டது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

   Delete
 5. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete