Monday, November 10, 2014

காதல் - யார் ஜெயித்தது?






யார் முதலில் காதலை
 சொல்வது என்ற போட்டியில்
தோற்றது நாமாக இருந்தாலும்
ஜெயித்தது என்னவோ நம் காதல்


 


நான் கொடுத்த முத்தத்தை
திருப்பிக்கொடு என்று கேட்டேன்
அதனாலென்ன திருப்பிக் கொடுக்கிறேன்
என்று கூறி என் நிழலை முத்தமிட்டு
அதற்கு விமோசனத்தை அளித்து விட்டாய்!



பின் குறிப்பு - உனக்கு எதுக்குடா  கவிதை எழுதுகிற வேலை எல்லாம் என்று கேட்பது காதில் விழுகிறது நண்பர்களே, ஆனால் ஆசை யாரை விட்டது.
 

40 comments:

  1. படமும், கவிதையும் அருமை.
    யார் ஜெயித்தது....? தாங்கள் தான் சகோ.

    ReplyDelete
    Replies
    1. சுடச் சுட கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ.

      நான் எங்கே ஜெயித்தேன், கவிதை உலகில், நான் இப்போது கடைசி மாணவனாக வந்துக்கொண்டிருக்கிறேன். பார்ப்போம் கடைசி மாணவனாகவே இருந்து விடுவேனா, இல்லை முன்னேறுவேனா என்று.

      Delete
  2. எனக்கு அப்படி எதுவும் கேட்கவில்லையே சகோ ஓகோ உங்களுக்கு மட்டும் கேட்பதாக இருந்தால் மைன்ட் வாய்ஸ் ஆகத் தான் இருக்கும். ஹா ஹா ,,,கவிதை என்னமோ நல்லாத் தான் இருக்கு சகோ. கவிதைக்கு மட்டும் நல்லா இருக்கு. சரி பிள்ளையார் சுழி போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள் மேலும் சிறக்க ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ. பிள்ளையார் சுழியை போட்டுவிட்டேன். ஆனால் எழுதுவதில் தானே இருக்கிறது பிரச்சனையே...

      Delete
  3. ஆமாமாம்! முத்தக் கடனை எல்லாம் உடனே உடனே திருப்பிக் கொடுத்துடணும்! :))))

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சரியா சொன்னீங்க நண்பரே. இந்த கடனை எல்லாம் வச்சுக்க கூடாது.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. ஆசைப்படுவதில் தவறில்லை. பேராசைதான் கூடாது. கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. பேராசை பேரு நஷ்டம் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
    2. //ஆசைப்படுவதில் தவறில்லை. பேராசைதான் கூடாது. கவிதை அருமை. வாழ்த்துக்கள்!//

      அதாவது நாங்க என்ன சொல்லுறோம் என்றால் சின்ன கவிதை ஒகே ஆனால் பெரிய கவிதை எல்லாம் கூடாது.ஒகே வா

      Delete
    3. உங்களுக்காக மட்டும் ஒரு பெரிய்யயய(?) கவிதையை எழுதி அனுப்புகிறேன். நீங்கள் படித்து அதற்கு பொருள் கூறிவிட்டு தான் மறுவேலை பார்க்க வேண்டும்.

      Delete
  5. கவிதை அருமை . வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  6. வணக்கம் !

    வாழ்த்துக்கள் சகோதரா என்ன தான் சோவென்று மழை கொட்டினாலும்
    மழைத் துளி என்று தான் அழைக்கப் படும் இன்றைய இந்தக் கவிதைத்
    (இனிக்கும் ) துளியானது மழை போல் மெத்தப் பெய்ய வாழ்த்துக்கள் :))
    சிறப்பான வரிகள் இதற்கு என் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களை எல்லாம் பார்க்கும்போது , கண்டிப்பாக இந்த மழைத்துளி மெத்தப் பெய்யும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  7. கவிதை நல்லாத்தான் இருக்கு சரி இந்தக் கவிதையை வெளியிட்டது வூட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா ?

    ReplyDelete
    Replies
    1. வூட்டுக்கார அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சு இந்த மாதிரி கவிதையை எல்லாம் வெளியிட முடியுமா?

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  8. e-MAIL பார்ப்பது கிடையாதா ?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பியிருக்கிறேன். நீங்கள் பார்த்தீர்களா?

      Delete
  9. #ஜெயித்தது என்னவோ நம் காதல்#
    நோயாளி செத்து அறுவைச் சிகிச்சை வெற்றியா?நல்ல காதல் தத்துவம்தான் :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டும் நோயாளி செத்து அறுவைச் சிகிச்சை வெற்றின்னு எழுதலாம், நான் எழுதினா தத்துவமா?நல்லா இருக்கே நியாயம்....

      Delete
  10. சரி சரி சொக்கன் அய்யா,
    நாங்கள் எல்லாம் இனி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போல!
    இந்தப் பின்னு பின்னுகிறீர்களே!
    அருமை அயயா!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, நீங்கள் எல்லாம் இப்படி கிண்டல் செய்ய கூடாது. ஏதோ தோனிச்சு எழுதினேன். அவ்வளவு தான்.
      அப்புறம் உங்களை மாதிரி நண்பர்கள் எல்லாம் ஓய்வு எடுத்துக்கிட்டா என்னை மாதிரி ஆட்களுக்கு யாப்பிலக்கணம் எல்லாம் யார் சொல்லித்தருவார்களாம்?

      தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  11. அய்யா. அந்த நிழலுக்கு முத்தம் வித்தியாசமான விஷயமுங்க..!
    இப்படியே சிந்திச்சீங்கன்னா பெரிய கவிஞரா மிளிர்வீங்க..!
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. "//பெரிய கவிஞரா மிளிர்வீங்க..!//" - அந்த அளவிற்கு எல்லாம் ஆசை இல்லைங்க. ஏதோ தோன்றுவதை இந்த மாதிரி எழுதத் தெரிந்தால் போதும்.

      தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  12. முதல் கவிதை ஜோர்! எழுதுங்கள்! கவிதையும் உங்களுக்கு வசப்படுகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  13. அருமை நண்பரே
    தங்களில் ஒரு கவிஞனும் ஒளிந்திருப்பதை இன்றுதான் உணர்ந்து கொண்டேன்
    தொடருங்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  14. ஆஹா!!!! வாங்க....வாங்க...வந்து நம்ம சோதியில ஐக்கியமாகுங்க:)))
    முதலில் வேறு யார் படைப்பையோ reshare செய்திருகிறீர்கள் னு நினைச்சேன்!!! கலக்குங்க சகோ:)

    ReplyDelete
    Replies
    1. ஏதோ இப்பொழுது தான் ஒன்றிரண்டு எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

      தங்களுடைய வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  15. சைவம் சித்தாந்தம் அது இதுன்னு எழுதுனபுள்ளையா இப்ப காதல் முத்தம் என்று எழுதுவது....... ஆமாம் வூட்டுகாரம்மா ஊருக்கு போயிருக்கிறார்களா அல்லது நீங்க டூர் போயிருக்கிங்களா..

    ReplyDelete
    Replies
    1. சைவம் சித்தாந்தம்னு மட்டும் எழுதிக்கொண்டிருந்தா, நீங்கள் எல்லாம் வரமாட்டீங்களே, அதனால தான் கொஞ்சம் உங்களையும் இந்த பக்கம் இழுக்கணும்னு இதை எழுதினேன்.

      வீட்டுக்காரம்மாவிற்கு தெரியாமத்தான் இதை எழுதினேன். அவர்கள் படித்துவிட்டு, நான் அடி வங்கப்போவது பூரிக்கட்டையாலையா இல்ல தொடப்பக்கட்டையாலையான்னு அப்புறம் தான் தெரியும்.

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  16. அட.! .அட!.
    தோற்றும் வென்ற காதலும்
    மோட்சம் பெற்ற நிழலுமெனக்
    காட்டிவிட்டீர்கள் உங்கள் கவிதைத் திறனை!..

    நன்றாக இருக்கின்றது சகோதரரே! வாழ்த்துக்கள்!
    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  17. ஒரு கவிஞர் உருவாகிறார்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் உருவாகிக்கொண்டே இருக்கிறார்.

      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை

      Delete
  18. அட,,,நிழலும்,நிஜமுமாய்/

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  19. கலக்கல் போங்க! அருமையாகத்தான் இருக்கு நண்பரே!

    ஆசை யாரை விட்டது// ஹஹாஹ இப்படித்தான் நாங்களும் உங்களைப் போன்று நம் வலையில் பலரும் வெளுத்து வாங்கும் கவிதைக் குவியலைக் கண்டு ஆசைப் பட்டு கவிதைகள் போட்டு நிறைவேற்றிக் கொண்டோம்...அஹ்ஹாஹ்

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

      Delete