Friday, November 28, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஏழாம் அதிகாரம் – சகவாசம்




சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை


சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஐந்தாம் அதிகாரம் – பிரசங்கம்

 
ஏழாம்  அதிகாரம் – சகவாசம்


ஐயா அவர்கள் இலௌகிக கௌரவத்திற் சிறிதும் பற்றில்லாதவர்களாதலின், ஆஸ்திக சிவசம்பந்தமில்லாத வேறிடங்களுக்கு எக்காலத்துஞ் செல்லமாட்டார்கள். ஆதி சைவர்களிடத்திலும், குருலிங்க சங்கமச்சார்புடைய பக்திமான்களிடத்திலும் மிக்க விசுவாச முடையவர்களகாவே யிருப்பார்கள்.

ஐயா அவர்கள் கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஸ்ரீலஸ்ரீ சிவாக்கிர யோகிகள் ஆதினத்தில் சித்தாந்த ஞான பானுவாக வெழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீமகா சன்னிதானமாகிய முத்துக்குமார தேசிக சுவாமிகளவர்கள் சைவசித்தாந்த ஞான குரு பீடமாய் மிகச் சிறந்த சைவ ஞானக் கல்வி கேள்விகளிலும், சிவானுபவத்திலும், ஒழுக்கத்திலும் ஒப்புயர்வின்றி விளங்கியிருந்தது கண்டு, அக்குருமூர்த்திகளிடத்து அத்தியந்த அன்பு வைத்து அடிக்கடி சென்று அவர்களை தரிசித்து சித்தாந்தஞான சாத்திர விஷயங்களை அளவளாவிக் கலந்து தெளிந்து ஆனந்தமுறுவார்கள். அந்த குரு மூர்த்திகளும் ஐயா அவர்களுடைய சைவஞான சீலமும் சமயப்பற்று முதலியனவும் நோக்கி, அவர்களிடத்து மிகுந்த கருணையோடும் அளவளாவி மகிழ்வார்கள். ஐயா அவர்கள் திருநல்லூர்ப் பெருமண மிருந்து மேற்படி குருமூர்த்திகட்கு எழுதும் விண்ணப்பங்களெல்லாம் செய்யுளாகவே எழுதுவார்கள். குருமூர்த்திகளும் இவர்களுக்கு எழுதும் திருமுகங்களில் பல செய்யுட்களால் ஆசீர்வதித்து எழுதுவார்கள்.

 

செந்தமிழ்ச் செல்வத்திருமொழியும், சிவசமயத்திருவருட் செல்வத் திருநெறியும் அபிவிருத்தியாகும் பொருட்டு, விநாயக சதுர்த்தி தினத்தில் கணேச மாநகரின் கண்ணே திருவருள் பொழியும் கற்பக விநாயக பெருமான் சன்னிதானத்தில் ஸ்தாபனம் செய்யப் பெற்று, வெளிவந்துலாவும் சிவநேசர் திருக்கூட்டமானது செந்தமிழ்ச் செல்வமும், திருவருட் செல்வமும் விளக்கி விருத்திசெய்து வருதலையும், திருக்கூட்டத்தாரும் சிவநேசச் செல்வரும் விபூதி உருத்திராஷ தாரணராய்  நித்திய நியம ஸ்ரீ பஞ்சாஷர ஜபதப சிவதரிசன பாராயன ஆசார சீலமுடையவர்களாயிருத்தலையும், சைவ சமய பரமாசாரிய சுவாமிகள் நால்வரையும் எழுந்தருளச் செய்துகொண்டு, நகர தனவைசியர்கள் வாழ்கின்ற ஊர்கடோறும் அகர வரிசையாக ஒவ்வொரு மாதமும் பூர்வபக்ஷப் பிரதோஷ காலத்திற் சென்று சிவாலய வழிபாடு செய்துகொண்டு நியதியாய்ச் சைவப் பிரசங்கம் புரிந்து வருதலையும்; வருடப் பூர்த்திக் கொண்டாட்டத்தை ஒன்பது நகரச் சிவாலயங்களிலும் அகர வரிசையாக வருடம் ஒரு கோயிலுக்கு விநாயக சதுர்த்தி தினத்தில் சென்று சிவதரிசனஞ் செய்துகொண்டு, சைவப்பிரசங்கங்கள் செய்து சிறப்பித்து வருதலையும்; வருடந்தோறும் ஆவுடையார் கோயிலுக்கு ஆனித்தரிசன காலத்திற் சென்று சுவாமி தெரிசனம் உபன்யாசம் முதலியன செய்து வருதலையும்; மற்ற சிவஷேத்திர உற்சவ தரிசனஞ் செய்து வருதலையும்; கூடும்பொழுதெல்லாம் பரசமய கோளரிகள் போற்றேன்றிச் சிவமகிமைகளைப் பாராட்டி பேசியள வளாவி வரும் ஆனந்தக் காட்சியையும்; இத்திருக்கூட்டமானது ஸ்ரீ சிதம்பரத்தில் ஸ்ரீமெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை ஸ்தாபனஞ்ச் செய்யப்பெற்ற வருட மாதந் தேதியிலேயே இயல்பானே தீர்மானிக்கப் பெற்ற ஒற்றுமையையும் நோக்கி ஐயா அவர்கள் மீக் கூர்ந்து அத்திருக்கூட்டம் மாதந்தோறும் செல்லுகின்ற ஊர்களுக்கும் வருடப்பூர்த்திக் கொண்டாட்டத்தின் பொருட்டுச் செல்லுகின்ற நகரச் சிவாலயங்களுக்கும் உடன்சென்று உபன்நியாசகராகவும், தலைவராகவுமிருந்து இனிது பிரசாங்கஞ் செய்து வந்தார்கள்.

 

அன்றியும், இத்தகு மேன்மைபடைத்த சிவநேசர் திருக்கூட்டத்தை சிதம்பர ஷேத்திரத்துக்கு ஸ்ரீ நடராஜப்பெருமானுடைய ஆருத்திரா தரிசன காலத்தில் அழைத்துப்போய் ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையிலேயே உறைவிடங் கொடுத்து ஆங்காங்குள்ள பல வித்வ சிரோமணிகளையும் வருவித்து இத்திருக்கூட்டத்திற் கலந்து சைவப் பிரசங்கஞ் செய்யும்படி செய்தார்கள்.

 

மேலும் சிவநேசர் திருக்கூட்டத்தார் வருடந்தோறும் மார்கழித் திருவிழாக்காலத்தில் மேற்படி மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலையில் வந்து தங்கித் திருவமுது செய்து ஸ்ரீ நடராஜப்பெருமானுடைய தரிசனானந்தப் பெருவாழ்வு பெற்றுச் சிவசம்பந்தமான பிரசங்கங்கள் செய்து வரவேண்டுமென்று அவர்கள் பாற் கேட்டுக்கொண்டு அதற்குரிய ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள்.

 

சூரியனார் கோயில் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ இலக்கண சுவாமியென்கிற முத்துக்குமார சுவாமிகள் சைவ இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்து மேற்படி ஆதீன சன்னிதானத்தினிடத்தில் சித்தாந்த சாஸ்திர பாடங் கேட்டு அதிற்றெளிந்த ஆராய்ச்சியும், சமஸ்கிருத பாஷையிலும், தகுந்த பதிப்பு ஆராய்ச்சியும் அதற்குத் தகுந்தபடி அறிவு ஒழுக்கங்களில் மேதாவியானவர்களும், சிவபூஜா துரந்தரருமானபடியால் அவர்களிடத்தில் ஐயா அவர்கள் அத்தியந்த அபிமானமுள்ளவர்களாக விருப்பார்கள்.

 

ஸ்ரீலஸ்ரீ பாற்சாமி யென்கிற கனகசுந்தரயோகி நாதசுவாமிகளிடத்தில் மிகுந்த அன்பு பாராட்டி அந்தச் சுவாமிகள் சுத்தாத்துவித சைவசித்தாந்த முடிவு நிலை கண்டு அதில் உறைத்து நிற்கின்ற மேதாவித் தன்மையையும் புகழ்ந்து பாராட்டி அத்தியந்த உண்மை விசுவாசத்துடனிருப்பார்கள்.

 

இன்னும் தனவைசியமரபில் இளையாற்றக்குடிக் கோயில் கிண்கிணிக்கூருடையார் கோத்திரத்தில் அவதரித்துப் பிரமசரியம் கிருகஸ்தம் வானப்பிரஸ்தம் என்னும் ஆச்சிரமங்கள் முற்றிச் சந்நியாச ஆச்சிரமத்திலிருந்து வருவோரும், இலக்கண இலக்கிய சித்தாந்த சாஸ்திரங்களில் வல்லுநரும், அநேக மாணாக்கர்களுக்குப் பாடம் போதித்து வருவோரும், சிவபூஜா துரந்தரருமாகிய உலகன்பட்டி ஸ்ரீலஸ்ரீ இலக்குமண சுவாமிகளிடத்தில் அவர்கள் உண்மை நிலை கண்டு அன்புடையவர்களாக விருப்பார்கள்.   

 

இன்னும் சுத்தாத்துவைத சைவ சித்தாந்தக் கொள்கை உடையவரிடத்தும் தென்மொழி  வடமொழி ஆராய்ச்சியுள்ள வித்துவ சிரோமணிகளிடத்தும், விபூதி ருத்ராஷ தாரணர்களாய் பஞ்சாஷர ஜெப நியம முதலியவையுடைய சிவனடியார்களிடத்தும் அன்பு பூண்டு அளவளாவிப் பேசிக் கொண்டிருப்பதில் மிகுந்த விருப்பமுள்ளவர்களாக விருப்பார்கள்.

 
ஏழாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

22 comments:

  1. சொக்கலிங்க ஐயா அவர்களின் சரித்திரம் ஏழாவது அதிகாரம் அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. உடனே வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  2. Replies
    1. தொடர் பகுதி தான். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தை அடியேன் ஒவ்வொரு அதிகாரமாக தட்டச்சு செய்து கொண்டு வருகிறேன் (இணையப்பத்திப்பாக்குவதற்காக!!!)

      Delete
  3. அடேங்க்ப்பா! எவ்வளவு தகவல்கள்....ப்ரமிப்பாக இருக்கின்றது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சகோஸ்.

      Delete
  4. நன்றி நண்பரே
    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  5. இந்த நடை இருக்கிறதே..!
    என்னிடம் இருக்கும் சில பழைய புத்தகங்களின் வாசனை எழுத்திலும் வீசுகிறது.
    தங்கள் பணி தொடரட்டும் அய்யா!
    ஒரு சந்தேகம்..
    கணேச மாநகர் என்பது எந்த ஊரைக் குறிக்கும் அய்யா?
    அறியத்தாருங்கள்!
    தங்கள் தொண்டு வாழட்டும்!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் எண்ணியது தவறாக இல்லையென்றால் "கணேச மாநகர்" - பிள்ளையார்பட்டியைக் குறிக்கும் என்று நினைக்கிறேன்.

      தங்களிடம் இருக்கும் பழைய புத்தகங்களையும் கணினி மயமாக்கலாமே. நம்முடைய பொக்கிஷங்கள் என்றும் நிலைப்பதற்கு கணினி ஒரு வரப்பிரசாதம் ஆயிற்றே.
      நான் சாதாரணமாக சொல்லி விட்டேன். அந்த புத்தகங்கள் எவ்வளவு பெரிய புத்தகங்கள்,அதனை கணினிப் படுத்த முடியுமா என்று எல்லாம் எனக்கு தெரியாது.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
    2. ஆம் நண்பரே.. பிள்ளையார்பட்டிக்கு கணேசாபுரம் என்ற பெயரும் உண்டு.

      Delete
    3. என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்து வைத்த நண்பரே. தங்களுக்கு நன்றி.

      Delete
  6. நல்லதொரு பணி! அக்கால தமிழ் நடை தட்டச்சு செய்ய கொஞ்சம் சிரமம் தரும் என்று தோன்றுகிறது! சிரமம் பார்க்காமல் பழைய சரித்திரம் அறிய வாய்ப்பு தருவதற்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  7. இன்னும் காணவில்லையே என நினைத்தேன். சகோ. பணிச்சுமை காரணமாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பனிச்சுமையை மட்டுமே கரணமாக சொல்லக் கூடாது. இந்த அதிகாரம் 4 பக்கங்களை கொண்டது. அதை பார்த்தவுடன்,மறு நாள் தட்டச்சு செய்யலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணி,எண்ணி நாளை கடத்தி விட்டேன். கடைசியில், தட்டச்சு செய்து விட வேண்டும் என்று முனைப்புடன் செய்தேன். அது தான் கொஞ்சம் தாமதமாகி விட்டது.

      Delete
  8. ஏழாம் அதிகாரம் படித்தேன். இவ்வாறாக தேடி எடுத்து அரியனவற்றைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. வணக்கம்..19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கிலிருந்த தமிழை,தங்களின் இந்தப் பதிவின் மூலம் (சு)வாசிக்க முடிந்தது.தொடருங்கள்...தொடர்கிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தொடர்வதை கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  10. நல்லதோர் பதிவு கற்பூர வாசனை கவிஞர்களை இழுப்பது அருமை..
    விஜூ மற்றும் சுந்தர் அய்யா கருத்துக்கள் அருமை ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது சார்.

      Delete