நான் என்னுடைய
ஒரு நாடகத்தில் நகைச்சுவைக்காக மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்றும் சங்கம்
என்று ஒரு காட்சியை அமைத்திருப்பேன். மேடையில் நாங்கள் நடித்த அந்த காட்சியை பார்த்துவிட்டு
மக்கள் ரசித்து சிரித்தார்கள். இந்த மாதிரி காட்சியெல்லாம் வெறும் நகைச்சுவைக்காகத்தான்
என்று நினைத்திருந்தேன். உண்மையில் மனைவியிடம் நிறைய கணவன்மார்கள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி அடி வாங்கும் அவர்களை
காப்பாற்ற ஒரு சுயேட்சை வேட்பாளர் கிளம்பியிருக்கிறார் என்று தெரிய வந்தால் உங்களுக்கு
எப்படி இருக்கும். அந்த வேட்பாளரோ, மனைவியிடம் அடி வாங்கி ஏமாளியாக இருக்கும் கணவனை
காப்பாற்ற “கணவன் பாதுகாப்பு சட்டம்” என்று ஒரு சட்டம் கொண்டு வருவேன், கணவர்களே உங்களை
காப்பாற்ற நான் இருக்கிறேன். அதனால் எனக்கு ஓட்டளியுங்கள் என்று தெருத்தெருவாகச் சென்று
ஓட்டு சேகரிக்கிறாராம். அவர் இப்படி பேசுவதை, பெண்கள் அவரை பார்த்து முறைத்து விட்டு
போகிறார்களாம்.
இந்த காட்சியெல்லாம்
நம் தமிழ் நாட்டில் இல்லை, குஜராத்தில் தான். இந்த மாதிரி நம் தமிழ்நாட்டில் யாராவது
வாக்குறுதி கொடுத்தால்.................... ?
பின் குறிப்பு: இந்த சுயேட்சை வேட்பாளர், நம் மதுரைத் தமிழனின் வலைப்பூவை படிப்பவராக இருப்பாரோ????
இந்தியாவில் குஜராத்தில் மட்டும் தான் மது விலக்கு அமுலில் உள்ளது .அதனால்தான் இந்த கொடுமை நடக்குதுன்னு நினைக்கிறேன் !
ReplyDeleteஆஹா. நான் இந்த விளையாட்டுக்கு வரலை சாமி!!!!!.
Deleteமதுவிலக்கு அமுலில் இருந்தாலும் அங்கு கள்ளசாரயம் வீற்பனை நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை என்னுடன் வேலை பார்க்கும் இந்தியாவிற்கு அடிக்கடி செல்லும் எனது இந்திய நண்பண் சொன்னான். அவன் இந்தியாவிற்கு )குஜராத்திற்கு) போகும் போது வாங்கி செல்வது சரக்கு பாட்டில்கள்தான்
Deleteமதுரைத் தமிழன் குஜராத்துக்குப் போக மாட்டார். அவரோட அடிப்பொடில எதாவது ஒண்ணாய் இருக்கும்.
ReplyDeleteஎன்ன உங்களோட நல்ல எண்ணம்(?). அப்ப மதுரைத் தமிழன் தன் மனைவியிடம் அடி வாங்கிக்கொண்டே இருப்பாருன்னு சொல்றீங்களா!!!!!
Deleteமதுரைத்தமிழன் தண்ணியில்லாத (சரக்கு) காட்டுக்கு போகமாட்டான் ஹீ.ஹீ
Deleteமதுரைத்தமிழன் சரக்கு அடிப்பது மனைவி அடியினால் கிடைக்கும் வலியை சமாளிக்கவே சரக்கு ஒரு வலி நிவாரணி
Deleteநீங்கள் தானே சொல்லியிருக்கிறீர்கள் - குஜராத்தில் கள்ளச் சாராயம் விற்பனையாகிறது என்று, தாராளமாக அந்த காட்டுக்கு நீங்க போகலாம் இல்ல!!!!
Deleteதண்ணி அடிப்பதற்கு, இது ஒரு காரணமா?????
Deleteஇதென்ன புதுக் கதையா இருக்கே! ஹாஹா!
ReplyDeleteஆமாம், இது புது கதை தான். ஆனால் அந்த சுயேட்சை வேட்பாளருக்கு கொஞ்சம் நட்டு கழண்டுடுச்சுன்னு நினைக்கிறேன்.
Deleteஒரு நல்ல கொள்கைக்காக போட்டியிடுபவரை நட்டு கழண்டவர் என்ரு நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் மீது மான நஷ்ட வழக்க்கு தொடக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறேன். பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுக்கப்படும்
Deleteஅந்த வேட்பாளரை மட்டும் நம் தமிழ் நாட்டில் நின்று, இந்த மாதிரி வாக்குறுதிகளை கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் அந்த மாதிரி செய்தால், நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். (அவர் தமிழ் நாட்டில் நின்று இந்த மாதிரி வாக்குறுதி தராததால் தான் அவருக்கு நட்டு கழண்டுடுச்சுன்னு சொன்னேன்)
Deleteபின் குறிப்பு: இந்த சுயேட்சை வேட்பாளர், நம் மதுரைத் தமிழனின் வலைப்பூவை படிப்பவராக இருப்பாரோ????
ReplyDeleteஇந்த செய்திய முதல்ல மதுரைத் தமிழனுக்கு அறிவியுங்கள் சகோதரா குறைந்த பட்சமேனும் மன நின்மதி அடைவார் :))))))))))))) .
இதைப் படிச்சாவுடன், அவர் அமெரிக்காவில இந்த மாதிரி ஒருத்தர் இல்லையென்னு ரொம்ப ஏங்குவாரு.
Deleteஅம்படியாள் என் மனைவி அடிக்கும் போது உங்கள் கவிதையைதான் படிப்பேன் அது எனக்கு மிக ஆறுதலாக இருக்கும் காரணம் இந்த வலிக்கு முன்னால் என் மனைவி அடிப்பதால் உண்டாகும் வலி ஒன்றுமே இல்லாமல் போய்விடும் ஹீ.ஹீ
Deleteஆமாம் எல்லோரும் என்னைய் கலாய்த்து பதிவு போடுகிறார்கள் நீங்க எப்ப போடப் போறீங்க
அவர் சும்மா ஜாலிக்காக சொல்கிறார்... [எழுதுகிறார்...]
ReplyDeleteநானும் சும்மா ஜாலிக்காகத்தான் அவரை கலாய்க்கிறேன்(!!!).
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி
அடிவாங்கிய உண்மை சம்பவத்தை உண்மையாக எழுதினால் அதை ஜாலியாக எழுதுவதாக எடுத்து கொள்கிறீர்களே. இந்த மதுரைத்தமிழன் அடி வாங்குவது உங்களுக்கு எல்லாம் ஜாலியாகவா இருக்கிறது அடிப்பாவி மக்களா
Deleteஎன்ன நீங்களும் ஜாலியாகவா கலாய்க்கிறீர்கள். நான் என்னவோ நீங்கள் என் மீது உண்மையாக பரிதாபபட்டுதான் எழுதுறீங்க என்று நினைத்தேன்.ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Deleteஉங்கள் மீது உண்மையாக பரிதாப்பட்டால், அப்புறம் என் நிலமை உங்களை விட மோசமாகி விடும் (ஏற்கனவே என் மனைவி உங்களின் வலைப்பூ பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாதுன்னு கட்டளை போட்டிருக்கிறார்)
Deleteஅந்த வேட்பாளர் எனக்கு ஒரு தகவலை சொல்லி இருந்தால் அவருக்காக மீடியாவை பயன்படுத்தி நரந்திரமோடிக்கு ஈடாக அவரை பாப்புலராக்கி அவரை ஜெயிக்க வைத்து இருப்பேன்
ReplyDeleteஅவர் தகவலை சொல்வதற்கு பெரும் முயற்சி செய்தார். ஆனால் அந்த சமயத்தில் தான் நீங்கள் உங்கள் மனைவியிடம் எக்குத்தப்பாக அடி வாங்கி ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தீங்களே. அதனால் அவரால் உங்களிடம் சொல்ல முடியாமல் போய் விட்டது.
Deleteஆகா புதுக் கதையாக அல்லவா இருக்கிறது
ReplyDeleteஎனக்கும் இந்த செய்தியை படித்தவுடன் அப்படித்தான் தோன்றியது.
Deleteஎன்ன சகோ இது ஏன் பாவம் மதுரை தமிழன் எதற்காக அவர் தலையை உருட்டுகிறீர்கள் எல்லோரும் சேர்ந்து. .. ம். ம் .. ம் அவர் வலி உங்களுக்கு ஜாலியா நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு. ஹா ஹா
ReplyDeleteநான் ஒண்ணும் அவர் தலையை உருட்டலை சகோ - கடைசியாக ஒரு கேள்வியைத்தான் கேட்டிருந்தேன். அதற்கான பதிலை நம் நண்பர்கள் எல்லோரும் அழகாக சொல்லிவிட்டார்கள்.
Deleteகுஜராத்தை முன்னேறி இருக்குதுன்னு மோடி சொல்லுறாரே இதை தானோ?!
ReplyDeleteதேர்தல் அறிக்கை படிக்கிறதே செம காமெடியா இருக்கே?!
எனக்கும் இந்த செய்தியை படித்தபோது சிரிப்புத்தான் வந்தது.
Deleteஅவர் சின்னம் பூரிக்கட்டையா?
ReplyDeleteஆஹா, அது தெரியலையே எனக்கு. ஒரு வேளை நீங்கள் சொல்கிறபடி இருந்தாலும் இருக்கும்.
Deleteஹா ஹா ஹா
ReplyDeleteரசித்து சிரித்ததுக்கு மிக்க நன்றி
Deleteநல்ல வாக்குறுதி! :)))
ReplyDeleteதில்லியில் பல இடங்களில் ஒரு விளம்பரம் பார்த்ததுண்டு - மனைவியிடம் அடி வாங்கி கஷ்டப்படுபவர்களுக்காக சங்கம் இருக்கிறது - அதில் சேர வாருங்கள் என விளம்பரம்!
நீங்கள் எப்பொழுது அதில் சேரப் போகிறீர்கள்????
Deleteநல்ல வாக்குறுதி! :)))
ReplyDeleteதில்லியில் பல இடங்களில் ஒரு விளம்பரம் பார்த்ததுண்டு - மனைவியிடம் அடி வாங்கி கஷ்டப்படுபவர்களுக்காக சங்கம் இருக்கிறது - அதில் சேர வாருங்கள் என விளம்பரம்!