Tuesday, December 29, 2015

தாயின் தற்கொலையால் – குழந்தையின் நிலைமை என்னவாகும்?




பொதுவாக நான் தற்கொலை செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. என்னை பொறுத்தவரையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. அந்த தீர்வை கண்டுபிடிக்க முடியாமல் அல்லது கண்டுபிடிக்க தெரியாமல், வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்பவர்களை வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத கோழைகள் என்று தான் சொல்லுவேன். தற்கொலையில் ஈடுபட்டு மற்றவர்களால் காப்பாற்றப்படுபவர்களை கேட்டால், தற்கொலை செய்து கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்று சொல்லுவார்கள்.



  
அவர்களைப் பொறுத்த வரையில் தற்கொலை தான் எல்லா பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கான  சிறந்த வழி என்று எண்ணுபவர்கள்.


(இந்திய பெண் தன் குழந்தையோடு இரயிலின் முன் பாய்ந்த பிறகு,அவர்களை இரயிலின் அடியிலிருந்து காப்பாற்ற போராடுகிறார்கள்)


என்னடா, தற்கொலையைப் பற்றி முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றியே ஒரு பதிவை எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா? என்ன செய்வது பத்து நாட்களுக்கு முன்பு இங்கு சிட்னியில் நடந்த ஒரு தற்கொலை மனதை பாதித்து விட்டது.



இந்த படம் சொல்வது போல், ஒருவர் தற்கொலை செய்து கொண்டால்,அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குத்தான் அந்த வலியும் வேதனையும் என்பது எவ்வளவு சரியான கருத்து. இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கு செய்தித் தாள்களில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. டாடா நிறுவனத்தில் (TCS) வேலைப்பார்த்த முப்பது வயது இந்திய பெண்மணி கையில் மூன்று வயது குழந்தையோடு இரயிலில் முன் பாய்ந்து விட்டார். பலத்த காயங்களோடு குழந்தை காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாயை உயிரற்ற சடலமாகத்தான் மீட்க முடிந்தது என்று செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் செய்தியாக வந்தது. அவர் என்ன கரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதில் மிக பெரிய கொடுமை  என்னவென்றால்,நான்கு நாட்களுக்கு முன்பு தான் அந்த பெண்மணி ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார் . அந்த புகைப்படங்களை அவரின் கணவர் முகநூலில் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.(அவரும் அதே நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறார்). 



 (குழந்தையோடு இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட      பெண் இவர் தான்).

இந்த குழந்தையை பார்க்கும்போது, என்ன பாவம் செய்திருக்கிறதோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது. தான் இல்லாமல் தன் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று எண்ணித்தான் குழந்தையோடு இரயிலில் முன் பாய்ந்திருப்பார் அந்த பெண். ஆனால் நடந்ததோ வேறு.  குழந்தை பிழைத்து எழும்போது பக்கத்தில் அம்மா இருக்க மாட்டார்கள். இனி அதனுடைய எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இரயிலில் முன் தன் தாயுடன் பாய்ந்தது மனதில் பதிந்திருந்தால் அந்த கொடிய நிகழ்வை எவ்வாறு அது மறக்கும்?












13 comments:

  1. மிகக் கொடுமையான செய்தி சகோ, அந்த குழந்தை தான் பாவம் தாயை இழந்து, வேதனைகளோடு, அவர் தன் குழந்தைக் கஷ்டப் படக்கூடாது என்று தான் இருவரும் சேர்ந்து,,,, ஆனால் முடிவு வேறு மாதிரியாக, மனம் கனக்கும் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ, அனைவருக்கும், குட்டி மணி க்கும்.

      Delete
  2. வேதனையான விடயம் பல இடங்களில் பெண்களை குழந்தைகளோடுதான் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் அவர்கள் நினைப்பது ஒன்று நிகழ்வது வேறொன்றாகிறதே... அழகான குழந்தை தாயும் கூட.

    ReplyDelete
  3. வேதனையாக இருக்கிறது நண்பரே
    மனம் கனக்கிறது

    ReplyDelete
  4. கேட்கவே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. தாயின் அரவணைப்பு இல்லாத அந்த குழந்தையின் எதிர்காலம் பற்றி எண்ணும் போது வருத்தமாக இருக்கிறது. பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் அந்த குழந்தைக்கு நன்மையைத் தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. மிக கொடுமையான செய்தி

    ReplyDelete
  6. வருத்தமான வேதனை தரும் விஷயம் :( அந்த தாய்க்கு மிஞ்சி போனா 30 இற்குள் தான் வயது இருக்கும் ..அந்த குழந்தை முகம் நெஞ்சை பிசைகிறது ..
    என்னதான் பிரச்சினையானாலும் உயிரை மாய்ப்பது தீர்வாகுமா ? .நம் நாட்டிலாவது குடும்ப பிரச்சினையால் சிங்கிள் மதர்ஸ் வாழ வழியில்லை பொருளாதாராம் எனா பல பிரச்சினை இருக்கும் வெளி நாடுகளில் அப்படியில்லையே ,,சோஷியல் சர்விஸ் அத்தனை உதவியையும் செய்வார்களே .இப்படிப்பட்ட பெண்கள் சொந்தகாலில் நிற்க .
    இங்கும் ஒரு குடும்பம் கேரளாவை சேர்ந்தவங்க தற்கொலை செய்தாங்க காரணம் ,,,அந்த குடும்ப தலைவனுக்கு தனது பிள்ளைங்க ஐரோப்பிய வழியில் செல்கிறார்கள் என கவலையாம் ..
    இவர்களுக்கு பிரச்சினைகள் என்கிருன்தும் முளைக்கவில்லை .இப்படிப்பட்ட கோழைகளுக்கு இவர்களேதான் பிரச்சினை .
    அந்த சின்ன பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமைய பிரார்த்திப்போம்

    ReplyDelete
  7. மிகக் கொடுமையான செய்தி. கோழைத்தனமான முடிவு. ஆனால் இந்தத் தற்கொலை எண்ணம் எல்லாம் ஷணப்பொழுதில் முடிந்துவிடுகின்றது. பாவம் குழந்தை. பெண்ணைப்பார்த்தால் தற்கொலை செய்துகொள்ளும் பெண் போலவும் தெரியவில்லை...சே கொடுமை..அந்தக் குழந்தைக்கு நல்ல சூழல் அமைந்து நல்ல வாழ்வு அமைய வேண்டும்

    ReplyDelete
  8. அன்பு நண்பரே,
    வணக்கம்.

    "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  9. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ! அனைவரும் நலம் தானே ...!

    ReplyDelete
  10. மிகக் கொடுமை...



    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. வேதனையான விஷயம் ... எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது ... மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலைக்கு முயல்வதில்லை ....மிருகங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை மனிதனுக்கு இல்லாமல்போனது....வேதனை.

    ReplyDelete