(நேற்று இரவு(31ஆம் தேதி) சிட்னியில் நடந்த வண்ணமயமான வாண வேடிக்கை)
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வருடமும் நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதிக்க அந்த இறைவன் உங்களுக்கு அருள்
புரியட்டும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓவியா திடீரென்று ஒரு நாள், அப்பா நீங்கள் மீசை இல்லாமல் இருந்தால் எப்படி
இருப்பீர்கள்? நாங்கள் உங்களை மீசை இல்லாமல் பார்க்க வேண்டும்
என்று ஒரு போடு போட்டார். என்னடாயிது, வம்பா போச்சு, நமக்கு இருப்பதோ அருகம்புல்லு மாதிரியான ஒரு மீசை,அதையும்
எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறாரேன்னு கவலை. எப்படியும் அவரை தாஜா செய்து விடலாம்
என்று எண்ணி, ஓவியாவிடம், இல்லடா, அப்பாவுக்கு மீசை இல்லாமல் இருந்தால் பார்க்கவே நல்லா இருக்காதுன்னு ஒரு பிட்டை
போட்டேன். அதெல்லாம் முடியாது, நீங்கள் மீசையை எடுத்து தான் ஆகணும்
என்று ஒரே பிடிவாதம். கூட இனியாவும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் பத்தாதுன்னு, வீட்டு அம்மணியும், ஏங்க பிள்ளைங்க ஆசைப்படுறாங்க, பேசாம மீசையை ஒரு தடவை மட்டும் எடுத்துடுங்க என்று அவர்கள் பங்குக்கும் எடுத்து
விட. ஆஹா, நம்மளை சரியாக கார்னர் பண்ணிவிட்டார்களே,இவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்து, நமக்கு கை
வந்த கலையை உபயோகித்து விட வேண்டியது தான் என்று அந்த கலையை பிரியோகப்படுத்தினேன்.
(அது வேற ஒண்ணும் இல்லைங்க, வீட்டு அம்மணி ஏதாவது கேட்டால், முடியாக்டு என்று சொன்னால் தானே பிரச்சனை, சரி செய்யுறேன், செய்யுறேன் என்று சொல்லி மழுப்புவது தான்). அந்த
மாதிரி ஓவியாவிடம், நம்முடைய தமிழ் பள்ளி முடியட்டும், பிறகு நான் மீசையை எடுக்கிறேன் என்று சொல்லி அப்போதைக்கு அந்த மீசை பிரச்சனைக்கு
முற்றுப்புள்ளி வைத்தேன்.
இருபது நாட்களுக்கு முன்பு தமிழ் பள்ளி முடிவடைந்தது, இனி ஜனவரி மாதம் கடைசி சனிக்கிழமை தான் திறக்கும்.
அதற்கு பிறகு ஓவியாவும் மறந்து விட்டார். நானும் பரவாயில்லை அம்மணி மாதிரி ஓவியாவும்
மறந்து விட்டார். நம்முடைய மீசை தப்பித்தது என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷத்திலும்
இன்று காலை மண் விழுந்தது. ஜனவரி ஒன்றாம் தேதி காலையில் ஓவியா எழுந்தவுடன், அப்பா நீங்கள் தமிழ் பள்ளி முடிந்தவுடன் மீசை எடுக்கிறேன்னு சொன்னீங்க,இன்னும் எடுக்கவேயில்லை. அதனால கண்டிப்பா இன்றைக்கு நீங்கள் மீசையை எடுக்கணும்
என்று கூறிவிட்டார். நானும் அடுத்த வாரம் எடுக்கிறேனே என்று கேட்டுப்பார்த்தேன். என்னுடைய
போக்கு புரிந்து, நீங்க இப்படியே மீசையை எடுக்காம நாளை ஓட்டிடுவீங்க,அதனால இன்னைக்கு கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கூறினார். அம்மணியும் ஏங்க
வருடப்பிறப்பு அதுவுமா குழந்தையை ஏமாத்தாதீங்க, இன்னைக்கு மீசையை
நீங்க எடுக்கிறீங்க என்று சொல்லிவிட்டார்.
சரி, ஓவியாவிடம் நம்ம பருப்பு வேகலை, இன்றைய தினம் இந்த அழகான மீசைக்கு வேட்டுத்தினமாகிவிட்டதே என்று எண்ணிக்கொண்டு
தில்லுமுல்லு படத்தில் ரஜினி அழுதுக்கொண்டே மீசையை எடுப்பாரே, அது மாதிரி நானும் மீசையை எடுத்துவிட்டு குளியலையறையிலிருந்து வெளியே வந்தேன்.
குளியலைறைக்கு வெளியிலேயே ஓவியா அம்மணியின் அலைபேசியில் காமிராவை ஆன் செய்துகொண்டு
காத்திருந்தார். நான் வெளியே வந்தவுடன் என்னை ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம்
எதுக்கு என்று கேட்டதற்கு, தம்பி பெரியவனானவுடன் அவனிடம் காட்டுவதற்கு
என்று கூறினார். பிறகு என்னை பார்த்து,பார்த்து ஓவியாவும் இனியாவும்
சிரி,சிரி என்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர். சிறிது நேரம் கழித்து, இனியா அப்பா, “put back your மீசை”
என்று ஒரு போடு போட்டார். ஐயையோ, இது வம்பாயிடுச்சுன்னு, ஏன் உங்களுக்கு
நான் மீசை இல்லாமல் இருப்பது பிடிக்கலையான்னு கேட்டேன். அதற்கு இனியாவும்,ஓவியாவும் ஆமாம் எங்களுக்கு பிடிக்கலை என்று கூறினார்கள். உடனே எல்லாம் மீசை
வராது. இன்னும் கொஞ்ச நாள் ஆகணும் அப்பத்தான் மீசை வரும் என்று சொன்னேன். நான் சொன்ன
பதிலை கேட்டுக்கொண்டிருந்த அம்மணி, ஏங்க எனக்கு நீங்க மீசை இல்லாமல்
இருப்பது தாங்க பிடிச்சிருக்கு என்று ஒரு இடியை இறக்கினார்கள்.
இந்த நல்ல நாள் அதுவுமாக மீசை விஷயத்தில் நான் இப்படி மாட்டிக்கொண்டனே, ஆண்டவா இதென்ன சோதனை,பிள்ளைகளுக்கு
நான் மீசையோடு இருப்பது தான் பிடிக்கிறது. மனைவிக்கு நான் மீசை இல்லாமல் இருப்பது தான்
பிடிக்கிறது. இப்போது நான் யார் பக்கம் சாய்வது?
புது வருடப்பிறப்பிற்கும் மேலும் உங்கள் பிரச்சினை தீர்வதற்கும் இனிய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteமீசை மேல் ஆசை! இதுவும் ஒரு ஸ்டைல்தான் விடுங்க!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஎல்லாம் சரிதான் எங்கே அந்த புகைப்படம் ?
மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும் பொழுது சிறு வயதில் தேவகோட்டையில் புத்தாண்டு கொண்டாடியதைப்போலவே இருந்தது.
வணக்கம்
ReplyDeleteசகோ..
மீசை ஆசை நிச்சயம் நிறைவேறும்... இந்த ஆண்டில்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete///அம்மணி, ஏங்க எனக்கு நீங்க மீசை இல்லாமல் இருப்பது தாங்க பிடிச்சிருக்கு என்று///
ReplyDeleteஇதை உண்மை என்று நம்பிவிட வேண்டாம் நீங்க மீசையோட இருந்தா பல பெண்களுக்கு உங்களை பிடிக்கும் என்பதை அறிந்த கொண்ட அம்மணியார் இப்படி சொல்லி இருக்கிறார்கள் ஜாக்கிரதை
ஹஹஹஹ்ஹ் "அது"!!! இதுக்குத்தான் மதுரைத் தமிழன் கமென்டே கமென்ட்தான்...ஹஹ
Deleteமீசை இல்லாத உங்க போட்டோவை போடுவீங்கன்னு பார்த்தா...ஹ்ம்ம்ம். அப்போதானே நாங்க ஒரு கருது சொல்லமுடியும். சரிவிடுங்க இந்த மாதிரி விசயத்தில் மதுரை தமிழன் சரியாதான் சொல்லுவாரு. கவனிச்சு கொங்க :) .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! குழந்தை இனியாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டீர்கள். தங்களின் மீசை இல்லாத புகைப்படத்தை அடுத்த பதிவில் பதிவேற்றி பதிவர்களின் ஆசையையும் நிறைவேற்றிவிடுங்களேன்!
ReplyDeleteஅதுசரி! மீசை இல்லா படத்தை போடவே இல்லையே? இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.
ReplyDelete- சாமானியன்
saamaaniyan.blogspot.ftr
எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி
ஹா ஹா..... நல்ல மாட்டிக் கிட்டீங்களா? புத்தாண்டில் ம்..ம் பரவாய் இல்லை அவர்கள் விருப்பம் தானே முதலில் பிரதானம்.
ReplyDeleteதங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!
ஆஹா என்ன முடிவு சகோ? நல்லா மாட்டினீங்களா,
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
ReplyDeleteமணி கண்டன் பிறந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இருவ்ருக்கும் வாழ்த்துகள்
ஓவியா சுட்ட படத்தை போடாம....விட்டுட்டீங்களே....ஹிஹிஹி....
மீசை இல்லா உங்கள் புகைப்படம் பார்க்க ஓவியாவைப் போலவே எங்களுக்கும் ஆசை.
ReplyDeleteதொடர்கிறேன்.
அன்பினும் இனிய நண்பரே
ReplyDeleteதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
இணையில்லாத இன்பத் திருநாளாம்
"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
ஹஹஹ்ஹஹ் புட் பேக் யுவர் மீசை!!!!!!!! அஹஹஹ் செம வாண்டுகள் இனியாவும் ஓவியாவும்!!! அவர்களுடன் பேசி ரசிக்க வேண்டும் போல் உள்ளது!! அது சரி மீசை இல்லாத ஃபோட்டோவைப் போடாமல் விட்டுவிட்டீர்களே!!இப்படி எங்களை ஏமாற்றிவிட்டீர்களே! நண்பரே!
ReplyDeleteநீங்கள் மீண்டும் வருவீர்கள் என்னும் எங்கள் ஆசை எப்போது நிறைவேறும் ஆசிரியரே?!
ReplyDeleteநண்பரே நலமா? குடும்பத்தினர் அனைவரும் நலமா? குழந்தை பிறந்த பின் வேலை மாறிய பின் உங்களை இணையத்தில் எங்கேயும் பார்க்கவே முடியவில்லையே? இதை பார்த்த பின் நேரம் இருந்தால் பதில் எழுதவும்....avargal_unmaigal@yahoo.com
ReplyDelete