திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீன மடத்திற்கு பல பெருமைகள் உண்டு. அப்படிபட்ட மடம் இன்று ஒரு கரும் புள்ளியாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் அந்த மடத்திற்கு தற்போதைய ஆதினமாக உள்ளவர், ஒரு மனிதரை இல்லை, இல்லை பாலியல் குற்றம் சாற்றப்பட்டு,சிறைக்கு சென்று வந்த ஒரு கேவலமான மனிதரை 293வது ஆதினமாக முடிசூட்டியது தான். அந்த மனிதன் தன்னை களங்கமாக்கிய அந்த குற்றச்சாட்டிலிருந்து, முழுவதுமாக துடைத்தெறிந்து விட்டு அந்த பதவியை அடைந்திருந்தால், நமக்கு இவ்வளவு கோபம் வராது. ஆனால், வெறுமனே, தான் நிரபராதி, தனக்கும் அந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று ஒப்புக்கு கூறிவிட்டு, ஒரு கோடி ரூபாயை கொடுத்து அந்த பதவியை அடைந்துள்ளார். இவர் உண்மையிலேயே நிரபராதி என்றால் ஏன் ஓடிப் போயி ஒளிந்துக் கொள்ள வேண்டும்.
அந்த ஆதீனப் பதவி ஒரு வியாபார பொருளாகி விட்டதை நினைக்கும்போது,மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சைவ சமயத்தை வளர்க்க பாடுபடும் தொண்டர்கள் யாரும் இந்த செயலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போதுள்ள மதுரை ஆதீனம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததுக்கு, எல்லா ஆதினங்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்ற நிலையில், புதிதாக முடிசூட்டப்பட்ட, அந்த மனிதர், "எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் வழக்குத் தொடருவார்கள் என்று கூறியிருக்கிறார்". அதிலும் பாருங்க அவரு வழக்கு போட மாட்டாராம். பக்தர்கள் தான் வழக்கு போடுவாங்களாம். ஏன்னா, பக்தர்கள் தானே இளிச்சவாயனுங்க. அந்தாளை பற்றி சொல்லிப் பிரியோஜனமில்லை, நம்ம மக்கள், அந்தாளை இன்னமும் ரொம்பவும் நல்லவர்னு(?) நம்பிக்கொண்டு இருக்கிறாங்களே, இந்த கொடுமைய எங்க போயி சொல்றது.
அந்த திருஞானசம்பந்தர் தான், இந்த கன்றாவிக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டி, கரும்புள்ளியாகிவிட்ட, தான் கட்டிக் காத்த அந்த மதுரை ஆதீன மடத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரனுங்கிறது தான் சைவ உலகில் இருக்கிற எல்லோருடைய ஆசை.
No comments:
Post a Comment