Friday, February 22, 2019

கருப்பு பணம் - ஆஸ்திரேலியாவில் இருந்து சீனா மீட்குமா?



உலகத்தில் பல  நாடுகளில் கருப்பு பணப்புழக்கம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்கிறது. அதற்கு  சீனாவும் விலக்கல்ல.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு புள்ளிவிவரத்தின் படி, கருப்பு பணம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் சீனா தான் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தியா நான்காவது இடம் தான்.

கோடிக்கணக்கான பணம் சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா   போன்ற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறது. அவ்வாறு வெளியேறிய பணத்தை உள்ளே கொண்டு வருவதற்கான வேலையை சீன அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது .

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் தான் பெரும்பாலான அந்த கறுப்புப் பணம்  ரியல் எஸ்டேட்  தொழிலில் முடக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தவுடன் , சீன அரசாங்கம்  கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் உள்ள இரண்டு முன்னாள் காவல் துறை அதிகாரிகளை ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் மூலமாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. அந்த அதிகாரிகளின் வேலையானது கறுப்புப் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து, அந்த சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை திரும்பி சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்த திட்டத்திற்கு பெயர் தான் "ப்ராஜெக்ட் டிராகன் (Project Dragon )"

இதுவரைக்கும் $80 மில்லியனுக்கான சொத்துக்களை கண்டறிந்திருக்கிறோம். எங்களின் உத்தியானது மிகவும் எளிமையானது மற்றும் சட்டத்துக்கு உட்பட்டதாகும் என்று அந்த இரண்டு அதிகாரிகள் கூறுகிறார்கள். 


பார்ப்போம் இவர்கள் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, அந்த பணத்தை சீனாவிற்கே திருப்பி அனுப்புகிறார்களா இல்ல நம்ம மோடிஜியின் கறுப்புப் பண மீட்பு திட்டத்ததைப் போல் வெறும் புஸ்வானமாகி விடுமா என்று!!








16 comments:

  1. அது சரி நீங்க எங்க உங்க பணத்தை பதுக்கி வைச்சிருக்கீங்க அதை சொல்லவே இல்லையே

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ அதுக்குள்ள மறந்துட்டீங்களா? என்னோட பணத்துக்கு நீங்க தானே பினாமி..

      Delete
    2. ஹா ஹா அஹ சொக்கன் மதுரைக்கு நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்க!!! ஹா ஹா

      கீதா

      Delete
  2. Replies
    1. உலகம் முழுவதும் இருக்குதே

      Delete
  3. கருப்பு பணத்தை மீட்க முடியுமா?! அது நடவாத காரியமாச்சுதே!

    ReplyDelete
    Replies
    1. சரியா சொல்லியிருக்கீங்க

      Delete
  4. எனக்கு ஒரு தகவல் வந்தது உண்மையா ?
    ஆஸ்திரேலியாவின் கருப்பு பணம் காரைக்குடி ஏரியாவில் புலங்குகிறதாமே...

    ReplyDelete
    Replies
    1. அதே மாதிரி அபுதாபியிலிருந்து தேவகோட்டையிலும் ..............

      Delete
  5. எல்லா நாடுகளிலும் இப்படி சிலர்....

    ReplyDelete
    Replies
    1. சிலர் இல்லை பலர் இருக்கிறார்கள்

      Delete
  6. வரி கொள்கையில் மாற்றம் இருந்தாலொழிய யாராலும் கறுப்புப் பணத்தை ஒழிக்க இயலாது.

    (நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றுதான் எழுதவேண்டுமாம். கருப்பு என்றால் பஞ்சம், வறுமையான கால கட்டம் என்று பொருளாம். விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. சரியான வாங்கியம் ஐயா

      இதற்கு கருத்து தெரிவிக்கும் அளவிற்கு எனக்கு தமிழ் புலமை பத்தாது ஐயா

      Delete
  7. ஸ்விஸ்ல தானே நிறைய பதுக்கறாங்க இல்லையோ?! நம்ப நாட்டுலருந்து உள்ளது பலதும் அங்குதான் இருப்பதாகத்தானே சொல்லிக்கறாங்க...

    ஆஸ்திரேலியாவுலும் பதுக்கறாங்களா அட! சீனா மீட்குமோ? பார்ப்போம்...அது சரி இந்தியா எப்ப கறுப்பு பணத்தை மீட்க போகுது சொல்லிக்கிட்டே இருந்தாங்களே!

    கீதா

    ReplyDelete
  8. நீண்ட நாட்களக்குப் பிறகு தங்களின் பதிவினைக் காண்கிறேன்
    மகிழ்ச்சி நண்பரே

    ReplyDelete
  9. கடுகு டப்பாவிலிருக்கும் கறுப்புப் பணத்தையே கண்டு பிடிக்கிறது கஷ்டம்

    ReplyDelete