அரசாங்கம் கல்வியை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு முன்பு வரை அரசுப் பள்ளிகளுக்கென்று ஒரு மரியாதை இருந்தது. ஆனால் தனியார் பள்ளிகள் புற்றிசல் போல் முளைத்த பிறகு மக்களிடம் அரசுப்பள்ளியா என்று ஏளனம் இருந்து வருகிறது. சமீப காலங்களில் அந்த ஏளனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்து விட்டது,அதற்கு மிக முக்கிய காரணம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான். இருந்தும் நிறைய பெற்றோர்கள் தனியார் பள்ளி தான் நல்ல பள்ளி என்கிற எண்ணத்தை மாற்றிக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் தான் இலட்சம் இலட்சமாக பணத்தை தனியார் பள்ளிகளிடம் வாரி இறைத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பதிவில் வரும் பெற்றோர்களைப் பார்த்து, அரசுப் பள்ளிகளைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை.ஒரு நல்ல விஷயத்தை செய்தவர்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு.
நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர் வரிசையாக வழங்கினர். கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் இந்த பள்ளியில் தான் கல்வி கற்று பின்னர் ஆசிரியராக பயின்றவராம்.
இந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களாக மடி கணினி,பென்சில், தண்ணீர் தொட்டி , இன்வெர்டர், அலமாரி, மின் விசிறி போன்ற 7 இலட்ச ரூபாய்க்கான பொருட்களை பெற்றோர்களும், ஊர் மக்களும் பட்டாடை உடுத்தி மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து பள்ளிக்கு வழங்கினார்கள். இப்படி ஊர்வலமாக வந்த பெற்றோர்கள் மற்றும் பொது மக்களை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்கள் .
இவ்வளவையும் செய்த அந்த ஊர் மக்கள் கடைசியில் சொன்ன அந்த வாக்கியம் தான் அவர்கள் எந்த அளவிற்கு அரசுப் பள்ளியின் மீது பாசத்தையும், உரிமையையும் வைத்திருக்கிறாரகள் என்று தெரிகிறது.
"அரசு மட்டுமே பள்ளிகளை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அனைவரும் அரசு பள்ளிக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இன்று எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தாயான நாங்கள் தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருட்களை அளித்து இருப்பதாக தெரிவித்தனர்."
நான் முன்பு சொன்ன மாதிரி நிறைய பெற்றோர்கள் பணத்தை கொட்டிக்கொடுத்து, பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி சந்தோசம் அடைகிறார்கள். இந்த பெற்றோர்களும் அரசுப் பள்ளிக்காக பணத்தை செலவழித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அடைந்த சந்தோஷமும் , மனத்திருப்தியும் அந்த பெற்றோர்கள் அடைந்திருப்பார்களா என்றால் கேள்விக்குறி தான்.
இது போல் அனைத்து இடத்திலும் நடக்காதா என்கிற ஏக்கம் வருகிறது...
ReplyDeleteஇந்த ஏக்கம் எனக்கும் இருக்கிறது.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டிடி.
மிகவும் உயர்வான செயலாக்கம் செய்தியை அறிய தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
Deleteதங்கள் மகனின் திருமணம் நன்றாக முடிந்ததா?
முன்னமே அறிந்த செய்திதான்.. ஆனாலும் நாம் உணரும்வரை எத்தனை முறை வேணும்ன்னாலும் படிக்கலாம். தப்பில்லை
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Deleteதனியார் பள்ளிக்கு லட்சக்கணக்கில் அள்ளி கொடுப்பவர்கள் அரசு பள்ளிக்கு ஆயிரக் கணக்கில் கொடுத்தால் போதும் நல்ல கல்வியை அரசு பள்ளிகளிலேயே பெறலாம் ஆனால் இந்த பள்ளி போல மற்ற பள்ளிகளிலும் பெற்றோர்கள் செய்ய முன் வருவார்களா என்பதுதான் கேள்விக்குறிய விஷயம்
ReplyDeleteகண்டிப்பாக கேள்விக்குறிய விஷயம் தான்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே
போற்றதலுக்கு உரிய செயல் நண்பரே
ReplyDeleteதங்களை மீண்டும் வலையில் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே
தங்களின் பதிவுகளை மீண்டும் படிக்கத் தொடங்கியது எனக்கும் மகிழ்ச்சி ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
முன்பே அறிந்த செய்தி என்றாலும் மீண்டும் படித்து மகிழ்ந்த செய்தி. நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteஅருமையான செயல்
ReplyDeleteமுகநூலில் பகிர்கிறேன்
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே
Delete