Thursday, April 11, 2013

டிஸ்கோ மாலை


நான் இங்குள்ள ஏதோ ஒரு பப்க்கு போயி டிஸ்கோ ஆடியிருப்பதை பற்றி சொல்லியிருப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, சாரி, நீங்க நினைச்சது கிடையாது. குழந்தைங்களோட டிஸ்கோ மாலை எப்படியிருந்துச்சுன்னு சொல்ற பதிவு தான் இது.
எங்க வீட்டு பெரிய மகாராணி அடுத்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு போக போறாங்க. அதனால அவுங்களை ஐந்து நாளும் பக்கத்துல உள்ள ஒரு  டேகேருக்கு அனுப்புறோம். அந்த டேகேரும், புதுசு புதுசா ஏதாவது ஒண்ணு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அடுத்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு போக போற குழந்தைகளுக்கு கண் பார்வையை டெஸ்ட் பண்ணின்னாங்க. அதுக்கப்புறம் இந்த ஈஸ்டர் வாரத்துல ஒரு நாள் “easter hat parade” நடத்துனாங்க, அதுக்கு பெற்றோர்கள் எல்லாம் வரலாம்ன்னு சொல்லியிருந்தாங்க. எங்க மகாராணியோ, அப்பா, நீங்க வாங்க, வாங்கன்னு ஒரே புலம்பல். என்னால வர முடியாது, அம்மா வருவாங்கன்னு ஒரு வழியா சமாதானம் செஞ்சேன். போன வாரம் என்னடான்னா, டிஸ்கோ மாலை” நடத்துறோம், நீங்க உங்க குழந்தையை கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க. எங்க மகாராணி, உடனே அப்பா, நீங்க ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு கண்டிப்பா நாம அங்க போகணும்னு ஒரே அடம். சரி, நம்மளும் போயி தான் பார்ப்போமேன்னு (முன்ன பின்ன, டிஸ்கோவுக்கு போன அனுபவம் இல்லையே!) போன வார வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு போனோம். அந்த ஹாலுக்கு போனா, உள்ள எல்லா விளக்கும் அணைஞ்சு, படத்துல வர மாதிரி வெறும் கலர் விளக்குகள் மட்டும் சுத்தி சுத்தி வெளிச்சத்தை பாய்ச்சுக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு மேல என்னடான்னா ஒரே பாட்டு சத்தம் (எல்லாம் ஆங்கில பாடல்கள், நமக்கு தான் ஒரு மண்ணும் விளங்கலை). ஒரு பத்து பதினைந்து குழந்தைகள் குதிச்சிக்கிட்டு இருந்தாங்க(நடனமாம்!) எங்க மகாராணியும் அந்த ஜோதியில போயி ஐக்கியமாயிட்டாங்க. நானும், எங்க அம்மணியும்,ரெண்டாவது மகாராணியும் பேசாம ஒரு ஓரத்துல போயி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். குழந்தைங்க சாப்பிடுறதுக்காக, சிப்ஸ்,பிஸ்கட் எல்லாம் வச்சிருந்தாங்க. பெரிய மகாரணிக்கிட்ட போயி, சிப்ஸ் எல்லாம் எடுத்துக்கோன்னு சொன்னோம், உடனே அவுங்க, டான்ஸ் ஆடும்போது சாப்பிட கூடாதுன்னு, ரூல்ஸ் எல்லாம் சொன்னாங்க. பிஸ்கட், சிப்ஸ் எல்லாம் வேஸ்டா போக கூடாதுங்கிற, நல்ல எண்ணத்துல(!), என்னால முடிஞ்ச அளவுக்கு அந்த சிப்ஸ்,பிஸ்கட் எல்லாம் காலி பண்னினேன். (வந்த வேலையை ஒழுங்கா பண்ணனும் இல்ல)
எப்படா இது முடியும்னு நினச்சுக்கிட்டு இருந்த நேரத்துல   புண்ணியவானுங்க, எட்டரை மணிக்கு, பாட்டையெல்லாம் அணைச்சு, விளக்கை போட்டு, அவ்வளவுதான்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் தான் எங்க மகாராணி குதிக்கிறதை விட்டுட்டு எங்க கிட்ட வந்தாங்க. ஒரு மணி நேரமா உட்காராம குதிச்சுக்கிட்டே இருந்திருக்காங்க. வீட்டுக்கு வந்து படுத்தா, அப்பா, கால் எல்லாம் வலிக்குது, அமுக்கி விடுங்கன்னு கெஞ்சல் வேற. சரி, ஒரு ஐந்து நிமிஷம் அமுக்கலாம்னு அமுக்கி, கையை எடுத்தா, இன்னும் கொஞ்ச நேரம் அமுக்குங்கன்னு சொல்லி, சொல்லியே, அரை மணி நேரம் அமுக்க வச்சுட்டாங்க.  அதுக்கப்புறம் தான் தூங்குனாங்க. இவுங்க ஒரு மணி நேரம் குதிச்சதுக்கு, நான் அரை மணி நேரம் கால் அமுக்குனது தான் மிச்சம். 

No comments:

Post a Comment