இந்த செய்தியை பத்திரிக்கையில் படிச்சவுடனே, முதலில் என் நினைவுக்கு
வந்தது, பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் காலம் முதற்கொண்டு முயற்சி செய்து தோல்வி அடைந்ததும், அதிலும் ஓரிரு வருடங்கள் முன்பு, இயக்குனர் மணிரத்னம்
அந்த கதையில் வரும் கதா பாத்திரங்களுக்கு நடிகர்களையெல்லாம் தேர்வு செய்துவிட்டார், விரைவில் படப்பிடிப்பை தொடங்க போகிறார் என்று வந்த செய்தியும். கடைசியில்
அந்த முயற்சியும் வெற்றி அடையாமல் போனதும் தான். எத்தனையோ முறை, அந்த கதையை
படிச்சிருந்தாலும், அதை ஒரு திரைப்படமாக பார்க்க முடியவில்லையே
என்று ஒரு ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அமெரிக்க வாழ் மக்களுக்கு, அந்த ஏக்கத்தை ஓரளவுக்காவது பூர்த்தி செய்கின்ற வகையில், சிகாகோவில் மே மாதம் 4ஆம் தேதி பொன்னியின் செல்வன்
நாடகம், சிகாகோ தமிழ் சங்கத்தின் சார்பில் அரங்கேற உள்ளது.
முதலில் சிகாகோ தமிழ் சங்கத்துக்கு என்னுடைய பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். காலத்தால் அழியாத ஒரு மாபெரும் படைப்பை
உள்ளூர் கலைஞர்களை வைத்து நாடகமாக்குவதென்பது சாதாரண விஷயமில்லை. எட்டு பேர், பத்து பேரை வைத்து இங்கு
நான் இயக்கிய சில குருநாடகங்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒத்திகை
பார்ப்பதே எனக்கு மிக பெரிய சவாலாக இருக்கும். அப்படியிருக்கும்போது, கிட்டதட்ட நாற்பது கலைஞர்களை ஒன்று திரட்டி, ஒவ்வொரு
வாரமும் ஒத்திகை பார்பதென்பது மிக மிக பெரிய செயலாகும். கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு
நடிக நடிகையரை தேர்வு செய்து, உடை அலங்காரத்தோடு, அந்த கலைஞர்களை
படமெடுத்து யு ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அதனை பார்தபோது, ஓவியர் மணியம் அவர்கள் வரைந்த பல சித்திரங்கள் அப்படியே உயிர் பெற்று எழுந்து
நம் கண்முன்னே நிற்கின்ற மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது. “ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்” என்பது போல, அந்த கலைஞர்களை பார்த்த போதே தெரிந்து
விட்டது, கண்டிப்பாக இந்த நாடகம் மிகவும் பெரியதோர் வெற்றி பெற
போகிறதென்று.
http://www.chicagotamilsangam.org/psdocuments/
பார்த்தபோது, நாடகப்பிரியனான நான், இந்த நேரத்தில் சிகாகோ நகரத்தில்
இல்லையே என்ற உணர்வு ஏற்பட்டது.
பார்த்தபோது, நாடகப்பிரியனான நான், இந்த நேரத்தில் சிகாகோ நகரத்தில்
இல்லையே என்ற உணர்வு ஏற்பட்டது.
No comments:
Post a Comment