Saturday, June 1, 2013

தலைவா படத்தின் பட்ஜெட் அதிகமாயிடுச்சாம் – அப்படியா!!!

இரண்டு நாள் முன்பு தலைவா பட செய்தி ஒன்றை படிக்க நேர்ந்தது. முன்பெல்லாம் இந்த மாதிரி சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை. ஆனால் தலைவா படம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஏன்னா நானும் தலைவா படத்துல நடிச்சிருக்கேனே, அதனால அந்த படம் சம்பந்தமா என்ன செய்தி வந்தாலும், உடனே படிச்சிடுவேன். அப்படிதான் இந்த செய்தியை படிச்சேன். அதாவது, ஆஸ்திரேலியாவில் பாடல் காட்சிகளை படமாக்கியதிற்காக இந்த நாட்டு மாடல் அழகிகளுக்கு நாள் ஒன்றுக்கு பல நூறு டாலர்கள் சம்பளமாக பத்து நாட்களுக்கு மேல் கொடுத்ததுனால அந்த படத்தோட பட்ஜெட் அதிகமாயிடுச்சாம் இத்தனைக்கும் இந்த படத்துல நான்கைந்து நாட்கள் நடித்த பதினைந்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களுக்கு பணம் கொடுக்கவேயில்லை. ஒரு சிலர் கிட்டதட்ட பத்து நாட்களுக்கு மேல் நடித்திருக்கிறார்கள். அதிலும் ஒரு நாள், சுமார் 300 தமிழர்கள் ஒரு அரங்கத்தில் தோன்றிய காட்சியும் படமாக்கப்பட்டது. இவ்வளவு பேருக்கும் சம்பளம் கொடுக்கவேயில்லை. அவர்களுக்கான சம்பளம், அவர்கள் திரையில் தோன்றுவது தான். இதுல ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். என்னுடன் நடித்த நண்பரின் நெருங்கிய உறவினர் ஒருவர் பத்து நாட்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதில் ஒரு நான்கு நாட்கள் சிடியில் (cbd area) படமாக்கியபோது அவர் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். அதற்கு பார்க்கிங் கட்டணம் ஒரு நாளைக்கு $68. கடைசி நாளன்று காலைல அவர் படக் குழுவினரிடம்,எனக்கு பார்க்கிங் கட்டணம் மட்டுமாவது கொடுங்கன்னு கேட்டிருக்கார். அவுங்களும் பில்லை கொடுங்கன்னு சொல்ல, இவரும் கொடுக்க, மாலை வெறும் அவரிடம் $50 கொடுத்து சில்லறை இல்லை(!), அப்புறம் பார்க்கலாம்னு சொல்லியிருக்காங்க. சரி, சம்பளம் தான் இந்த லட்சணத்துல இருக்குதுன்னு பார்த்தா, எங்களுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இன்னும் கொடுமை.


முதல் நாள் படபிடிப்பில் வேகாத வெயிலில் இரண்டு மணி நேரம் நின்று படமாக்கிய பிறகு, கொஞ்ச நேரம் பிரேக், மறுபடியும் இன்னொரு காட்சி எடுக்கணும்னு டைரக்டர் சொன்னாரு. நாங்களும் இங்கு ஆஸ்திரேலியாவில்,உள்ளூர் வெள்ளைக்கார கலைஞர்களை ஏற்பாடு செய்பவரிடம் சென்று, ஜூஸ் கேட்டோம். படப்பிடிப்பு நடந்ததோ ஒரு உணவகத்தில். அதனால அவரு போய் ஜூஸ் எடுத்துக்கிட்டு வருவாருன்னு நினைச்சோம். இரண்டு நிமிஷம் கழிச்சு கையை நல்லா வீசிக்கிட்டு வந்து, ஜூஸ் இல்லை, தண்ணி தான் இருக்காம். தண்ணியை குடிக்கிறீங்களான்னு கேட்டாரு. அப்பவே எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு, இந்த படக்குழு, எச்சில் கையால காக்காயை கூட ஓட்டமாட்டாங்கன்னு. சரி, நமக்கு ஒரு புது அனுபவமாக இருக்குமேன்னு தான் இந்த படத்துல நடித்துக் கொடுத்தோம். ஆனா, இப்ப என்னடான்னா, ஆஸ்திரேலியாவில படப்பிடிப்பு நடந்ததுனால தான் பட்ஜெட் அதிகமாயிடுச்சுன்னு ஒரு பேச்சு. என்னத்தை சொல்றதுக்கு இருக்கு!!!!!!!!!!!!!!!!!!

என்னுடைய முதல் திரைப்பட அனுபவங்களை படம் வெளிவந்த பிறகு தான் சொல்லணும்னு நினைச்சா, அதுக்குள்ள அந்த அனுபவத்தின் ஒரு துளியை எழுத வேண்டியதா போச்சு. இப்போதைக்கு ஜூலை 5ஆம் தேதி இந்த படம் வெளி வரும் என்று சொல்கிறார்கள். அதற்கு பிறகு, என்னுடைய முழு அனுபவங்களையும் சொல்கிறேன்.




3 comments:

  1. Sam Sir,
    Padam vantha apuram than therium, ethanai seene cut panni irukannanu..I don't know how to write in tamil font.

    ReplyDelete
  2. சரியா சொன்னீங்க ஹரிதா,
    நாங்கள் நடித்த எந்த காட்சியையும் வெட்ட மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம் அந்த நம்பிக்கையை(!!!).

    நான் அடுத்த பதிவுல தமிழில் தட்டச்சு அடிப்பது எப்படி என்று பதிய போகிறேன். கண்டிப்பாக அது உங்களுக்கும்,உங்களை போன்ற மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

    நன்றியுடன்,
    சொக்கன்

    ReplyDelete
  3. கதாநாயகிக்கு பக்கத்துல மிக நெருக்கமா நின்னு போட்டோ எடுத்திருக்கீங்க நியாயமா பாத்தா நீங்கதான் சாரே அவங்களுக்கு காசு கொடுக்கோணும் .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete