தமிழ் நாட்டில இருக்கிற நிறைய குழந்தைகள் தமிழ் எனக்கு எழுத
படிக்க தெரியாதுன்னு சொல்றததை தான் விரும்புகிறார்களோன்னு சந்தேகமா இருக்கு. ஏன்னா, போன தடவை நான் சென்னைக்கு
போயிருந்தபோது, அக்கம் பக்கத்தில இருக்கிற பள்ளிக் குழந்தைகள்
கிட்ட பேச்சு கொடுத்த போது, அவுங்க சர்வ சாதாரணமா, எனக்கு தமிழ் படிக்க தெரியாது,எழுத தெரியாதுன்னு சொன்னாங்க.
சரி, குழந்தைகள் தான் அப்படி சொல்றாங்கன்னு பார்த்தா, அவுங்க பெற்றோர்கள், என் குழந்தைக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு
சொல்லும்போது, அவுங்க கண்ல அப்படி ஒரு சந்தோஷம் தெரியுது. அதற்கு
ஏத்த மாதிரி சில பள்ளிகளில், பள்ளிக்கூட வளாகத்துக்குள், தமிழிலே பேச கூடாதுன்னு ஒரு எழுதப்படாத சட்டமே இருக்காம். ஏன் தான் தமிழ்
மேல் இப்படி ஒரு கொலை வெறின்னு புரியலை. ஆனா இவ்வளவுக்கும் நடுவுல, விஜய் தொலைக்காட்சியில ஞாயிறு தோறும் “ஒரு வார்த்தை
ஒரு லட்சம்” அப்படின்னு பள்ளி மாணவர்களுக்காக தமிழ் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள்.
தொலைக்காட்சி, தொல்லைக்காட்சியாக தான் இருக்கிறது. அதில் திரைப்படங்களும், திரைப்பாடல்களும், அழுகாச்சியான நீண்ட தொடர்களும் தான் வருகிறது. உருப்படியாக
எதுவும் இல்லை என்று சொல்பவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும். அவர்கள்
மட்டும் இல்லை, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைகளோடு சேர்ந்து
இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும். தமிழின் மேல் நல்ல ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சியாகவும், நிறைய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ள தூண்டும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி
உள்ளது.
தமிழ் நாட்டில் பிறந்து எனக்கு தமிழ் தெரியாது ஆங்கிலம் மட்டுமே தெரியும் என பீற்றி கொள்பவர்கள் யாராவது இதுவரையில் நாலு பேருக்கு தெரியும்படி வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்களா என்றால் பூஜ்யம்தான் ... தாயை பழிப்பவனும், தாய்மொழியை பழிப்பவனும் உருப்படவே மாட்டான்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete