தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. நம் தமிழர்கள்
எந்த நாட்டில் இருந்தாலும், அவர்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த பதிவும் அதற்கு
ஒரு சான்று தான். பிரிட்டனில், சேனல்-4ம் மற்றும் மென்சா அமைப்பும் இணைந்து பிரிட்டனின் புத்திசாலி குழந்தையை
தேர்வு செய்ய போட்டி நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த போட்டியில், இந்த ஆண்டு 2000 குழந்தைகள் கலந்துகொண்டு, நான்கு சுற்றுகளாக
நடந்த இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 21 குழந்தைகள் தகுதி பெற்றனர். இறுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயதான தமிழ்
குழந்தை ஸ்ரீநிதி வெற்றிபெற்றிருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தை ஒன்று
இப்போட்டியில் வெல்வது இதுவே முதல் முறையாம்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இந்த
திருக்குறள் எத்தனை தாய்மார்களுக்கு பொருந்தும் என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக அந்த குழந்தையின்
தாய்க்கு பொருந்தும்.
No comments:
Post a Comment