எங்க அறைக்குள்ள,அதாவது சூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள விஜய் வந்தாரு.
அவர் வந்தவுடனே, மத்த டான்ஸ் பாய்ஸ் எல்லாரும் எந்திரிச்சு நின்னு
வணக்கம் சொன்னாங்க. எங்க குரூப்லேருந்தும் ஒரு சிலர் எந்திரிச்சு நின்னாங்க. விஜய்யும்
எங்களை எல்லாம் பார்த்து சிரிக்கலாமா வேண்டாமான்னு ஒரு பார்வை பார்த்துக்கிட்டு போய்
அவர் உட்கார வேண்டிய இடத்துல போய் உட்கார்ந்தாரு. நானும் விஜய் இப்பத்தான் வராரு போலன்னு
நினைச்சேன். ஆனா அதற்கப்புறம் தான் தெரிஞ்சுது, அவர் ரொம்ப மின்னாடியே
வந்து, அங்க இருந்த கூட்டத்துனால, பக்கத்துல
இருந்த ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கியிருந்திருக்காருன்னு. உடனே இயக்குனர் அவரு கிட்ட
போய் காட்சியை சொல்லிக்கிட்டு இருந்தாரு. விஜய்யும், தலையை மட்டும்
ஆட்டி கேட்டுக்கிட்டு இருந்தாரு. சரி, ஒரு ரிகர்சல் பார்த்துடலாம்னு
இயக்குனர் சொல்ல, ரெடியா இருந்த நாங்க,
மஞ்ச கலரை கொண்டு வாங்க மேடம், சிகப்பு கலரை கொண்டு வாங்க மேடம்ன்னு
கத்த ஆரம்பிச்சோம்.
அந்த சமயத்துல சந்தானம், இயக்குனர் கிட்ட, சார் அந்த குரூப்லேருந்து யாராவது ஒருத்தர், “வெள்ளை
கலர்ல ஏதாச்சும் இருக்கான்னு கேக்கட்டும் அப்படின்னாரு. இயக்குனரும் என்னோட நண்பர்
ஒருவரை அந்த மாதிரி கேக்க சொன்னாரு. அந்த நண்பரும் உட்கார்ந்தபடியே கேட்டாரு. சந்தானம், எந்திரிச்சு நின்னு கேளுங்கன்னு சொன்னாரு. இயக்குனரும் மண்டையை ஆட்டிக்கிட்டு, அந்த நண்பரை எந்திரிச்சு நின்னு கேக்க சொன்னாரு. அந்த நண்பரும் கையை தூக்கிக்கிட்டு,”வெள்ளை கலர்ல ஏதாச்சும் இருக்கான்னு” கேட்டுட்டு உட்கார்ந்தாரு. உடனே சந்தானம், “வெள்ளை கலர்ல, உன் லங்கோடு தான் இருக்கு, வேணுமான்னு திருப்பி அதுக்கு பதில் கொடுத்தாரு. அதற்கு பிறகு அமலாபால் விஜய்
கிட்ட போய் “உங்களுக்கு என்ன வேணும்” அப்படின்னு கேப்பாங்க. அந்த நேரத்துல செஃப்பா
(chef) நடிக்கிறவரு, எங்களுக்கு பரிமாற
வருவாரு, நாங்க உடனே “நீ வேண்டாம்யா, எங்களுக்கு
அவுங்களை (அமலாபாலை) வரச் சொல்லுன்னு” அவரை திருப்பி அனுப்புவோம். அந்த செஃப்பா நடிக்கிறவரு, சந்தனத்தோட மேக்கப் மேன் தான். அவரு தெலுங்கு போல, அதனால
தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் சரியா வரலை. அவர் வசனத்தை தப்பு தப்பா சொன்னதுனாலேயே, ரெண்டு மூணு தடவை டேக் எடுத்தாங்க. நம்ம சந்தானத்துக்கு கொஞ்சம் கோபம் வந்துடுச்சு.
அவரைப்பார்த்து நக்கலா பேசுனாரு. பாவம் அவரும் அதை கேட்டுக்கிட்டு ஒண்ணும் சொல்லாம
நடிச்சாரு. “பக்கத்துல ஆஸ்பத்திரி இருக்கான்னு” அந்த செஃப்பிடம் கேட்கணும். அதை இயக்குனர், அந்த டான்சர் பாய்ஸ்லேருந்து யாராவது கேளுங்கன்னு சொன்னாரு. உடனே, சந்தானம் நானே அதையே கேக்கிறேன்னு, அந்த பசங்களுக்கு
வாய்ப்பையே தர விடலை. அப்பத்தான், நான் நினைச்சுக்கிட்டேன், இந்த சினிமால ஒருத்தன் முன்னேறுவது ரொம்ப கஷ்டம்னு. அதற்கு பிறகு, நாங்க பத்து பேர் உட்கார்ந்து இருந்த டேபிளை சின்னதாக்கி, ஒரு நாலு பேரை எந்திரிக்க சொல்லிட்டாங்க. அதாவது என்னோட வரிசைல, நானும் இன்னும் ரெண்டு பேரும்,அதே மாதிரி எதிர் வரிசைல
மூணு பேரு மட்டும் உட்கார்ந்திருந்தோம். காமிரா மேன், காமிராவோட
வந்து எங்களுக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்து ஷூட் பண்ண ஆரம்பிச்சாரு. மறுபடியும்
நாங்க ஆறு பேரும் மட்டும் கத்த ஆரம்பிச்சோம். திருப்பியும் அமலாபால் விஜய் கிட்ட போறதும், நாங்க அவுங்களை கூப்பிடறதும்னு, ஒரு 5/6 டேக் எடுத்தாங்க.
எங்களுக்கே ரொம்ப போர் அடிச்சிடுச்சு. ஆனாலும் எடுத்துக்கிட்டே தான் இருந்தாங்க. அப்ப
தான், இயக்குனர் ஒரு சின்ன பிரேக் விட்டாரு. ஒரு பத்து நிமிஷம்
பிரேக் எடுத்துக்குங்க, மறுபடியும் நாம இதே ஷாட் எடுக்கணும் அப்படின்னாரு.
நாங்களும் அந்த அறையை விட்டு வெளியில வந்தோம்.
பார்த்தா வெளியில ஒரே கூட்டம். நாங்க உள்ளுக்குள்ள
நடிச்சுட்டு(கத்திட்டு!!) வந்ததுனால, நிறைய பேர் எங்க கிட்ட, விஜய்யை பக்கத்துல இருந்து பார்த்தீங்களா?பேசினிங்களா? அப்படின்னு ஒரே கேள்வி மயம் தான் போங்க!. அதுக்குள்ள விஜய்யும் அந்த அறையை
விட்டு வெளியில வந்தாரு. உடனே கூட்டம் அவருக்கிட்ட போய் ஆட்டோகிராப் வாங்கிறதும், போட்டோ எடுக்கிறதும்னு, அந்த இடமே போர் களம் மாதிரி
ஆயிடுச்சு. இதுல எங்க வீட்டு அம்மணியும், பசங்களை கூட்டிக்கிட்டு
போய் விஜய்யை பார்த்து பேசிட்டாங்க. அதுல அவுங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். இந்த களேபிரத்துல, என்னோட ரெண்டு நண்பர்கள் வெளியில போய் காபி குடிச்சிட்டு வந்திடலாம்னு போயிருக்காங்க.
எனக்கு தெரியாது. கொஞ்ச நேரத்துக்குள்ள, எங்களை எல்லாம்
அந்த கிருஷ்ணா வரச் சொல்லி கூப்பிட்டாரு. நாங்களும் உள்ள போய் உட்கார்ந்தோம். விஜய், சந்தானம், அமலாபால்ன்னு எல்லோரும் வந்தாச்சு, பார்த்தா, அந்த ரெண்டு பேர் மட்டும் வரலை, உதவி இயக்குனர்,துணை இயக்குனர் எல்லாம் வந்து அந்த ரெண்டு
பேர் எங்கன்னு கேட்க, நாங்க அவுங்களுக்கு போன் போட, அவுங்க ரெண்டு பேரும் இதோ வந்துக்கிட்டே இருக்கோம்ன்னு சொன்னாங்க. இயக்குனர்
வந்து டேக்குக்கு போலாமான்னு கேக்க, உதவி இயக்குனர்கள் எல்லாம், சார் இன்னும் ரெண்டு பேர் வரணும்னு தயங்கியபடியே சொன்னாங்க. உடனே, இயக்குனரும், யார் அந்த ரெண்டு பேர், அவுங்க எங்க இருக்காங்கன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு, அவுங்களை சீக்கிரம் வரச் சொல்லுங்கன்னு சொல்லி, ரொம்ப
டென்ஷன் ஆயிட்டாரு. நேரம் தான் போகுதே தவிற, இவுங்க ரெண்டு பேரும்
வந்த பாடில்லை. எல்லோரும் அவுங்க ரெண்டு பேருக்காக காத்துக்கிட்டு இருந்தோம். இயக்குனர்
வேற, விஜய் கிட்ட போய் “சாரி சார், இதோ
சூட்டிங் ஆரம்பிச்சுடலாம்னு” பம்மிக்கிட்டு இருந்தாரு. கிட்டதட்ட 15 நிமிஷம் கழிச்சு, அவுங்க ரெண்டு பேரும் அரக்க பரக்க ஓடியாந்தாங்க. இதுல காரை வேற பார்க்கிங்
பண்ண இடம் கிடைக்காம “NO PARKING”ல நிப்பாட்டிட்டு வந்திருக்காங்க.
உடனே இயக்குனர் அவுங்களை பார்த்து, “ஏன்
சார் எங்க போறீங்கன்னு சொல்லிட்டு போக வேண்டாமா, அப்படியே போனாலும்
சீக்கிரம் வர வேண்டாமான்னு” கோவிச்சுக்கிட்டாரு. அவுங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் எல்லாரையும் பார்த்து
“சாரிங்க,கொஞ்சம் லேட்டாயிடுச்சுன்னு” ஒரு மன்னிப்பை போட்டாரு.
அப்புறம் மறுபடியும் அதே கத்துற கதையை தொடர்ந்தோம். ஒரு வழியா, இயக்குனர் கடைசில “பேக்அப்” அப்படின்னாரு. சரி, நாங்களும்
இந்த காட்சி முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சோம். அப்ப தான், இன்னொரு
உதவி இயக்குனர் வந்து, இந்த காட்சியோட “continuity” காட்சி எடுக்கணும். அது நாளைக்கோ இல்லை நாளை மறு நாளோ இருக்கும். அதனால எல்லோரும்
இதே காஸ்ட்யூம்ல வந்துடுங்க. இன்னைக்கு போட்டிருக்கிற எதையும் மாத்திடதீங்கன்னு சொல்லி, எங்களை எல்லாம் ஜெயில் கைதி மாதிரி (அதாவது ரெண்டு கையையும் X மாதிரி) நிக்க சொல்லி போட்டோ எடுத்துக்கிட்டாரு.
மறுபடியும் இந்த காட்சியை எப்போ எடுத்து முடிச்சாங்கன்னு அடுத்த
பதிவுல சொல்றேன்.
தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – தொடர்ச்சி
தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – தொடர்ச்சி
- இன்னும் சொல்கிறேன்
No comments:
Post a Comment