Sunday, July 20, 2014

ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 2 (விசா வழிமுறைகள்)




முதலில் ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்வது எப்படி என்று பார்ப்போம்.


ஐம்பது வயதுக்கு கீழ் இருப்பவர்களால் எந்த நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவிற்கு யாருடைய உதவியுமின்றி எளிதாக புலம் பெயர முடியும். “Points Based Skilled Migration (Subclasses 189, 190 and 489) visa” மூலம் permanent resident(PR) ஆக ஆஸ்திரேலியாவில் புலம் பெயருவது. PR விசாவின் மூலம் வருபவர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழலாம். படிக்கவும், வேலை பார்க்கவும் முடியும். வேலைகளை மாற்றிக்கொள்ளவும் முடியும். Medicare(ஆஸ்திரேலியாவின் உடல் ஆரோக்கியத்திற்கான திட்டம்) பதிவு செய்து கொள்ள முடியும். ஆஸ்திரேலிய குடிமகனாக மாற முடியும். இன்னும் பல உரிமைகளை இந்த விசா பெற்றுத்தரும். ஆனால் ஒரே ஒரு உரிமையைத் தவிர, அது ஓட்டுப் போடும் உரிமை. அந்நாட்டு குடிமகன்களாக இருந்தால் தான் ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும். அவ்வாறு குடிமகன்களாக இருந்து ஓட்டுப்போடாமல் இருந்தால், அவர்கள் அபராதம் செலுத்தவேண்டும்.

சரி, நம் விஷயத்திற்கு வருவோம். இந்த Points Based Skilled Migration விசாவிற்கு அடிப்படைத் தகுதியானது, points based test இல், குறைந்தது 65 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். (இது தற்சமயம் உள்ள நிலவரம்).  அது என்ன points based test:

இந்த தேர்வில், நம்முடைய வயது, ஆங்கில அறிவு, கல்வித்தகுதி, வேலை போன்றவற்றிலிருந்து குறைந்தது 65 புள்ளிகளை எடுத்தால், தைரியமாக இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு மேல் அதிக விவரங்களை அளிக்கும்.


Factor
Description
Points
Age
18-24
25 points
25-32
30 points
33-39
25 points
40-44
15 points
45-49
0 points
English language
Competent English - IELTS 6
0 points
Proficient English - IELTS 7
10 points
Superior English - IELTS 8
20 points
Australian work experience in nominated occupation or a closely related occupation
One year Australian (of past two years)
5 points
Three years Australian (of past five years)
10 points
Five years Australian (of past seven years)
15 points
Overseas work experience in nominated occupation or a closely related occupation
Three years overseas (of past five years)
5 points
Five years overseas (of past seven years)
10 points
Eight years overseas (of past 10 years)
15 points
Qualifications
(Australian or recognised overseas)

                Offshore recognised apprenticeship
                AQFIII/IV completed in Australia
                Diploma completed in Australia

10 points
Bachelor degree (including a Bachelor degree with Honours or Masters)
15 points
PhD
20 points
Recognition of Australian Study
Minimum two years fulltime (Australian study requirement)
5 points
Designated language
5 points
Partner skills
5 points
Professional Year
5 points
Sponsorship by state or territory government
5 points
Sponsorship by family or state or territory government to regional Australia
10 points
Study in a regional area
5       


இந்த பட்டியலைப் பார்த்தால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, விசாவை விண்ணப்பிதற்கு தான் அனுமதி, மற்றபடி வயதுக்கான புள்ளிகள் ஒன்றும் கிடையாது. 

அது போல், ஆங்கில அறிவிற்கு – IELTS (International English Language Testing System), தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது Reading, Writing, Listening and Speaking என்ற நான்கு திறன்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஒவ்வொரு திறனிலும் 8 புள்ளிகள் (Band 8) எடுத்தால் தான் (அதிகப்பட்சமே 9 புள்ளிகள் தான்), ஆங்கில அறிவுக்கான 20 புள்ளிகளை எடுக்க முடியும். இதில் Band 6க்கு கீழ் இருந்தால், இந்த விசாவிற்கு அனுமதி கிடையாது.

“Australian work experience” என்று போட்டிருக்கிறார்களே, இது எவ்வாறு சாத்தியம் என்று பார்த்தால், வேலை விஷயமாக ஆஸ்திரேலியாவில் வந்து வேலை பார்த்திருந்தாலோ, அல்லது அஸ்திரேலியாவில் வேலை விசாவில் (work visa) வேலை பார்த்துக்கொண்டிருந்து, இந்த PR விசாவை விண்ணப்பித்தால் அதற்கான புள்ளிகள் கிடைக்கும்.

Designated Language” இதற்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தால், அந்த புள்ளிகள் கிடைக்கும். www.naati.com.au (National Accreditation Authority for Translators and Interpreters)  – இதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Subclasses 189 – அதாவது சொந்த முயற்சியில் இந்த விசாவை விண்ணப்பிப்பது. இந்த முறையில் கடைசி மூன்று பட்டியலும் உதவாது.

“Sponsorship by state or territory government” மற்றும் “Sponsorship by family or state or territory government to regional Australia” விசாக்களில், எந்த மாநில அரசாங்கத்தின் உதவியாக இந்த விசாவை விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாநிலத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டும். பிறகு தான் மற்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுட்டியை கிளிக் செய்தால் மேல் விவரங்களை அறிய முடியும் - http://www.immi.gov.au/allforms/pdf/1119.pdf

மேற்கண்ட புள்ளிகளிலிருந்து, 65 புள்ளிகள் கிடைத்து விட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லலாம். முதலில் EOI (Expression of Interest) யை விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான சுட்டி - http://www.immi.gov.au/Work/Pages/SkillSelect/SkillSelect.aspx 

இங்கு (submit an EOI) என்ற சுட்டியை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் உங்களைப் பற்றிய தகவல்கள் (வேலை, படிப்பு போன்றவைகள்) கேட்கப்படும். பிறகு உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்பப்படும். அதில் குறிப்பிட்டுள்ள காலக்கட்டத்திற்குள், விசாவை விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விசாவிற்கான இந்திய ரூபாய் முதன்மை விண்ணப்பத்தாரருக்கு (Primary Applicant) – ரூ207,600.00. மேலும் ஒரு கூடுதல் விண்ணப்பதாரருக்கு (Additional Applicant 18+)  - ரூ. 103,800. மேலும் ஒவ்வொரு கூடுதல் விண்ணப்பதாரருக்கு (Additional Applicant 18வயதிற்கு கீழ்) – ரூ. 51,900.00 ஒரு குடும்பத்திற்கு( 2+2) விசாவிற்கான செலவு  - ரூ. 415,200.

என்னடா, விசா கட்டணமே ரூபாய் நான்கு இலட்சமா என்று யோசிக்க வேண்டாம். கண்டிப்பாக அது ஒரு முதலீடு தான்.

அடுத்த பகுதியில், மற்ற மூன்று விசாக்களைப் பற்றி (“TOURIST”, “WORK VISA” மற்றும் “STUDENT”) பார்க்கலாம்.


-தொடரும்

 


32 comments:

  1. நிறைய விஷயங்கள் இருக்கு சார்.... அடுத்ததும் தெரிஞ்சிக்க ஆவல்....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சொல்கிறேன். வயதில் குறைந்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

      Delete
    2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை

      Delete
  2. எனக்கு விசா செலவுவை பற்றி கவலையில்லை ஏன்னா ? நமக்குதான் நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் இருக்காரே....

    ReplyDelete
    Replies
    1. விசாவிற்கு செலவு செய்வதற்கு நான் தயார், நீங்க தான் வைரத்தால் ஆன நகைகள் எல்லாம் செஞ்சுத் தறேன்னு இல்ல சொல்லியிருக்கீங்க. நீங்கள் அவ்வளவு செய்யும் போது, நான் இது கூட செய்ய மாட்டேனா என்ன?

      Delete
    2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜீ

      Delete
  3. பட்டியல் பலருக்கும் உதவும்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உதவியாக இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  4. தெளிவாக எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தமிழ் பண்டிட் சொக்கன் பேர் சொன்னாலே போதுமாமே ப்ரியா ஏதும் கேள்வி கேட்காமல் வுட்டுருவாங்களாமே அது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. யாருங்க அந்த ப்ரியா?

      Delete
    2. அட, யாருங்க அது ப்ரியா, எனக்கு தெரியாம!!!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழா

      Delete
  6. ஆஸ்திரேலியாவில் ஜீன்ஸ் மிக அதிக விலையாமே? எனது நண்பரின் உறவினர் அமெரிக்கா வரும் போது ப்ட்டி நிறைய ஜீன்ஸாக வாங்கி செல்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்க வேற, இங்கு ஜீன்ஸ் மட்டுமில்ல, எல்லாமே ரொம்ப அதிக விலை தான். நான் அமெரிக்காவிற்கு வந்தபோது, ஆஹா, எல்லாப்பொருளும் இவ்வளவு கம்மியா இருக்கேன்னு ஆச்சிரியமாப்போச்சு. உணவகங்களிலும், ஆஸ்திரேலியாவை விட உணவுகளின் விலை ரொம்ப கம்மி.

      நீங்கள் எல்லாம் ரொம்ப கொடுத்து வைத்த ஆசாமிகள் ஐயா.

      Delete
  7. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே

    ReplyDelete
  8. ஆஸ்திரேலியாவில் குடிபெயர விரும்பும் இளைஞர்களுக்கு உங்களது பதிவு மிகவும் உதவியாய் இருக்கும். தவலுக்கு நன்றி! தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. மிகவும் உபயோகமான தகவல்கள்! மட்டுமல்ல நுணுக்கமாகவும் தந்திருக்கின்றீர்கள்! பயனுள்ள ஒரு பதிவு! நாங்களும் இதற்கு முன் பாத்திருந்தாலும் தங்கள் தகவல்கள் மிக எளிதாகப் புரிகின்றது! மிக்க நன்றி சொக்கன் சார்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முன்பே பார்த்திருக்கிறீர்களா!! வருவதற்கு முயற்சி செய்து பார்த்திருக்கலாமே...

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  10. பலருக்கும் பயனுள்ள பகிர்வு. மிகவும் எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள். முயற்சி தொடர இனிய வாழ்த்துக்கள் சொக்கன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  11. ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளோருக்கு உதவும் முக்கிய குறிப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. பயன்தரும் பதிவு வாழ்த்துக்கள் ..
    www.malartharu.org

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது

      Delete
  13. பலருக்கும் பயன்படும் மிக அருமையான தகவல்கள், மிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ் சார்.

      Delete
  14. ஆஸ்திரேலியா செல்ல விரும்புபவர்களுக்கு பயனுள்ள‌ தகவல்கள் தரும் அருமையான தொடர்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  15. ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 2 (விசா வழிமுறைகள்) = திரு Chokkan Subramanian
    நன்றியுடன் எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் இந்த பதிவை பகிர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

      Delete
  16. மிக மிக பயனுள்ள தகவல்கள்.நன்றி

    ReplyDelete
  17. மிகவும் பயனுல்ல தகவல் அஸ்திரேலியாவில் தஞ்சம் கேட்க வேண்டும் எப்படி தோழர்

    ReplyDelete