என்னடா, இது தலைப்பே ஒரு மாதிரியாக இருக்குதுன்னு நீங்க நினைக்கலாம். "நான்
அவனில்லை" திரைப்படத்திற்கு போட்டியா இந்த தலைப்பில் ஒரு திரைப்படம்
வந்தாலும் வரலாம். ஏன்னா விஷயம் அந்த மாதிரி. அந்த படத்துல கதாநாயகன், பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, அவர்களிடமிருந்து
பணத்தையும், நகையையும் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுவான்.
இந்தப் படத்தை நியாபகப் படுத்துற மாதிரி அடிக்கடி தமிழக செய்தித் தாள்களில்
செய்திகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால், செய்தித்
தாள்களில் இந்த விஷயத்திற்கு நேர் மாறாக ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அதாவது ஒரு பெண்
50 அப்பாவி ஆண்களை மணந்து, அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்துக் கொண்டு
மறைந்து விட்டாள். அந்த பெண்ணை போலீஸும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று.
ஒவ்வொருவரிடமும் நான் வக்கீலுக்கு படிக்கிறேன், ஐ. ஏ.
எஸ்சுக்கு படிக்கிறேன் என்று கூறி பணத்தைப் பறித்திருக்கிறார் அந்த பலே பெண்மணி. இந்த அப்பாவி கணவர்களில் சிலர் கொடுத்த பேட்டியை
படித்தபோது, இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களே என்று நினைத்து வேதனைப் பட வேண்டி
இருக்கிறது. இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு
பின்னர், எப்படியோ பெற்றோரை சம்மதிக்க வைத்து மீண்டும்
அந்தப் பெண்ணிற்கு தாலியை கட்டியுள்ளனர். இப்படி திருமணத்தை கேலிக்
கூத்தாக்கியவர்களை என்னவென்று சொல்லுவது. இவர்களை உட்கார வைத்து "திருமணம்
ஒரு ஆயிரங்காலத்து பயிர்" என்று பாடம் எடுத்தால் கூட இவர்கள் திருந்தவா
போகிறார்கள். ஆக மொத்தத்தில் ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருந்து
கொண்டே தான் இருப்பார்கள்.
அன்பு சொக்கன் அவர்களே,
ReplyDeleteஇது ஏதோ அனுபவப் பகிர்வுபோல் தோன்றுகிறது என்று ஒரு ஆசரீரி கூறுகிறது!!! எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று யாருக்குத் தெரியும். சிவ சிவா.
அன்பு
அன்பு ஜெயா ஐய்யா அவர்களே!
ReplyDeleteஎங்கடா! இன்னமும் உங்க கிட்டேயிருந்து ஒரு விமர்சனமும் வரலையேன்னு நினைச்சேன். அட! இது 3 நாளைக்கு முன்னாடி பத்திரிக்கையில் வந்த செய்தி தாங்க. நம்புங்க!!.
ஒரு வேளை, உங்களுக்கு எதாவது இந்த மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்குமோ!! அதான் அடுத்த இலைக்கு பாயாசம் வேணும்னு கேக்கிறீங்களோ!!!
சொக்கன்
நம்புகிறோம்! நம்புகிறோம்!! அப்படி அனுபவம் ஏற்பட்டிருந்தால் இப்படி இருப்போமா......
ReplyDeleteஐயோ! சொக்கன் சார் அதே மையக் கருத்து! ஒரு வேளை அதே பெண்ணோ? நீங்க 2012 லயே எழுதிட்டீங்க! ஆச்சரியமாக இருக்கு சார்! ஒரே தலைப்பு! கருத்து! ....நல்ல காலம் சார் இங்க சினிமாவுக்கு சினிமா பேர் பதியும் போது....ஏற்கனவே இந்த பெயர் நாங்க பதிஞ்சது அப்படின்னு சினி வட்டாரத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரும்....ஹப்பா நீங்க வரல ஹாஹாஅஹாஅஹாஆ.....தப்பா எடுத்துக்கல இல்லையா சார்?!!! முதல்ல நாங்க வேற தலைப்புதான் கொடுத்தோம்...ஏன்ன ஆண்கள் இப்படி ஏமாததறது பத்தி ஒரு பதிவு கல்யாண வீரர்கள் அப்படினு கொடுத்திருந்தோம்...ஸோ இதுக்கு கல்யாண வீராங்கனை அப்படினுதான் வைச்சுருந்தோம்....கடைசிலதான் இப்படி மாத்தினோம் சார்! இனிமே நாம தலைப்பு கொடுக்கும் போது கூட வேற யாராவது இப்படிக் கொடுத்திருக்காங்களானு பாக்கணுமோ சார்?!!!!!! ஏன்னு கேட்டீங்கன்னா வலைத்தளத்துல காப்பி அடிக்கறது ரொம்பவே நடக்குது....அப்புறம் யாராவது நாங்க உங்கள காப்பி அடிச்சுட்டோம்னு சொல்லிடுவாங்களோனு பயம்தான் சார்.....
ReplyDeleteதங்களைத் தொடர்கின்றோம் சார்....பல கலை மன்னன் போல நீங்க...நாடகக் கலைஞர், ஆய்வுக் கட்டுரைகள் எழுதறீங்க....நடிகர்,வானொலி நிகழ்சி செய்பவர், ஆசிரியர்....ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார் உங்கள் அறிமுகம் கிடைத்தற்கு......தங்கள் தமிழ் கட்டுரை வாசித்தோம்....அவுஸ்திரேலியாவில் வெளியாகும் தமிழ் பத்திரிகையில் தாங்கள் எழுதிய கட்டுரை....
மிக்க நன்றி!
அடாடா, இதுக்கு போய், நீங்கள் இவ்வளவு தூரம் பயப்பட்டிருக்க வேண்டாம். பார்த்தீர்களா, நாட்டில் பெண்களும் ஆண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று. அடிக்கடி இந்த கூத்து நடப்பதால், ஒரே தலைப்பில் ஒரே கருத்துள்ள பதிவை எழுதுவது மாதிரி அமைந்து விடுகிறது.
Deleteஇப்படி பல பேர் எழுதினாலாவது, ஆண்கள் சுதாரிப்பாக இருக்கிறார்களா என்று பார்ப்போம்.
உண்மையில் தங்களின் அந்த பதிவைப் படித்தவுடன், நம் இருவருடைய சிந்தனைகளும் எப்படி இவ்வாறு ஒன்றுபட்டிருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சி தான் அடைந்தேன் ஐயா.
தாங்கள் என்னை தொடர்வது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. நீங்கள் சொல்வது போல், பல கலை மன்னன் எல்லாம் இல்லை ஐயா, ஏதோ என்னால் முடிந்த, எனக்குத் தெரிந்த விஷயங்களில் பங்கெடுத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.
தங்களின் நீண்ட கருத்தைக்கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா.
This comment has been removed by the author.
ReplyDeleteஐம்பதிலும் ஆசை வரும்
ReplyDeleteஆசையுடன் பாசம் (பணமும்) வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல
சுகந்தானம்மா !!!.... இந்த பாடலை தவறாக புரிந்துகொண்டிருப்பாரோ? ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<