Thursday, March 28, 2013

காதல் – பிறந்த நாள் வாழ்த்து


“நீங்கள் மட்டுமா
ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
புலம் பெயர்வீர்கள்
நானும் கூட தான்
புலம்பெயர்வேன் என்று கூறி
என் இதயம் உன்னிடமல்லவா
புலம்பெயர்ந்து விட்டது”
    

நாம் காதலிக்க ஆரம்பித்து கிட்டதட்ட ஒரு வருடம் முடியும் தருவாயில், என் பிறந்த நாள் வந்தது. உன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், அதனால் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று நீ கேட்டாய். நானோ, உன் கைகளை கொண்டு எனக்கு எந்த பரிசையும் தர வேண்டாம். உன் செவ்விதழ்களைக் கொண்டு, என் கருத்த இதழ்களை செவ்விதழ்களாக மாற்று என்று கூறினேன். அதற்கு நீயோ, “ஆ, அஸ்கு, புஸ்கு,அப்பள வடை” என்று பழிப்பு காட்டினாய். நானோ, மிட்டாய் கிடைக்காத குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருந்தேன். அதை பார்த்த நீ, சரி போனா போகுது என்று என் கன்னத்தில் உன் இதழ்களால் ஒத்தடம் கொடுத்தாய். பிறகு, இருவரும் கோவிலுக்கு சென்றோம், அங்கு இருந்த குருக்களிடம் என் பெயருக்கு அர்ச்சனை செய்யுமாறு கூறினாய். உடனே நான், என் பெயருக்கு வேண்டாம், அவள் பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு நீ, ஏண்டா, உனக்கு தானே இன்னைக்கு பிறந்த நாள், அப்புறம் எதுக்கு என் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்டாய். நானோ, என் இதயமே உன்னிடத்தில் தான் இருக்கிறது, நீ நன்றாக வாழ்ந்தால் தானே, நான் உயிர் வாழ முடியும், அதுக்காக தான் என்று கூறினேன். அந்த குருக்களும், இப்போது இருக்கிற இதே அன்பு, நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகும் மாறாமல் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் நூறாயுசு வாழ்வதற்கு , இந்த இறைவன் உங்களுக்கு துணையிருப்பான் என்று கூறி, இருவர் பேருக்கும் அர்ச்சனை செய்து நம்மை வாழ்த்தி, அந்த பிறந்த நாளை ஒரு மறக்க முடியாத பிறந்த நாளாக்கி விட்டார். 

3 comments:

  1. ஆரம்பித்துள்ள குருங்கவிதை அழகு அண்ணா... நன்றாக உள்ளது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    இப்போ கல்யாணம் ஆனபிறகும் அப்படியே இருக்கீங்களா?

    ReplyDelete
  2. பாராட்டுக்கு நன்றி சகோதரா.
    இப்பவும் அப்படி இருக்கத்தான் ஆசை. ஆனால் பொறுப்புகள் வந்தவுடன், சிலசமயங்களில் அவ்வாறு இருக்க முடியவில்லை.

    ReplyDelete