ரொம்ப
நாளைக்கு முன்னாடி, பத்திரிக்கையில இந்த பெயரை படிச்சபோது, பவர் ஸ்டார்
யாருன்னு யோசிச்சதுண்டு. அப்புறம் தான் தெரிஞ்சுது,இந்த அழகான முகத்தை(!!!) உடையவர் தான் பவர் ஸ்டார்ன்னு .
இவரோட
உண்மையான பேர் டாக்டர் சீனிவாசன். அப்படி சொன்னா, நிறைய பேருக்கு தெரியாது. அந்த அளவுக்கு தனக்கு
தானே வச்சுக்கிட்ட பட்ட பேர் ரொம்ப பிரபலமாயிடுச்சு. ஐம்பது வயதுக்கு மேலாகி, தலையில் முடியெல்லாம் கொட்டி, ஒரு வில்லனை போல தோற்றமளித்த
இவரை, சில இயக்குனர்கள் சிறு,சிறு வேடங்களுக்கு
நடிக்க அழைக்க, ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் பெருமையாக
எண்ணி அந்த சிறு வேடங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் தானே கதாநாயகனாக நடித்தால் என்ன
என்று எண்ணி, ஒரு உதவி இயக்குனரோட உதவியோடு கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் மற்றும்
கதாநாயகன்னு இவர் முதல் முதல்ல தயாரித்து நடித்த படம் தான் லத்திகா. இந்த படம் சென்னையில்
மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. (ஓட வைத்த கதையையே தனி பதிவாக பதியலாம். அந்த
படம் பல நாட்கள் யாரும் பார்க்காமலே ஓடிக் கொண்டிருக்கும். அப்படியும் யாராவது துணிந்து
அந்த படம் ஓடும் திரையரங்குக்கு போனால், படத்தை இலவசமாக பார்த்து, பிரியாணியையும் சாப்பிட்டு வருவார்கள். திரையரங்கில் அந்த படத்தை ஓட்டுவதற்கு, வடகையையும் கொடுத்து விடுவார், நம்ம தாராள பிரபு).
ஒரு வலைப்பூவுல
இவரைப் பத்தி ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. ஒரு அசோசியட் இயக்குனர் ஒருவர் இவரிடம், தந்தை,மகன் சம்பந்தப்பட்ட கதையை சொல்லியிருக்கிறார். அந்த கதையை கேட்ட பவர் ஸ்டார், தம்பி, கதை ரொம்ப நல்லா இருக்கு, கட்டாயம் இந்த படம் பண்ணலாம். எனக்கு அப்பாவா, யார்
நடிக்க போறாங்கன்னு ஒரு கேள்வியை கேட்டு, அந்த உதவி இயக்குனரை
தர்மசங்கடத்துல தள்ளியிருக்கிறார். பின்ன, அந்த உதவி இயக்குனரோ, இவரை அப்பாவா நடிக்க வைக்கலாம்னு நினைச்சு தான், அந்த
கதையை சொல்லியிருக்கிராரு.
இப்படி
ஆரம்பமான அண்ணாருடைய திரைப்பயணம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, என்ற ஒரு படத்தின் மூலம் புகழின்
உச்சிக்கே சென்றது. இந்த புகழால் அவர் அடைந்த நன்மைகள் பற்றியும், அவரை எந்த அளவுக்கு ஊடகங்கள் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு அவருக்கான
பப்ளிசிட்டியை உருவாக்கியது பற்றியும் அடுத்த பதிவுல பார்க்கலாம்.
-தொடரும்
கண்ணா லட்டு தின்ன ஆசையா ... தொடர்ந்து அறிந்து கொள்ள ஆசை !!>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete