நான் மக்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகளை செய்கிறேன்னு பேட்டி
தான் கொடுப்பாரு. உண்மையில, இவரோட மருத்துவமனைல வேலை பார்க்கும் 24 ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கியாம்.
அந்த 24 பேரும் காவல் துறையின் உதவியை நாடியிருக்கிறார்கள். இது போறாதுன்னு, நிறைய செக் மோசடி வழக்குகளில் சிக்கி, ஜாமீனில் வெளிவருவது
தான் இவருடைய சிறந்த பொழுதுபோக்காகும். தற்போது ரூ. 20 கோடி கடன் வாங்கித்தருவதற்கு
ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு முதலில் புழல் சிறையில்
அடைக்கப்பட்டார். பிறகு அந்த சிறை என்ன புண்ணியம் பண்ணிச்சோ தெரியலை, அவர் அங்கேயிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பாட்டார். இந்த வழக்கில் இருந்து
வெளியே வருவதற்குள், மீண்டும்,மீண்டும்
அவர் மீது புதிய வழக்குகள் பாய்வதினால், தன்னுடைய “பவரால்” ஒன்றும்
செய்ய இயலாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவரைப்பற்றிய இன்னொரு சுவாரசியமான செய்தியை படிக்க நேர்ந்தது.
சுந்தரபாண்டியன் படத்துல ஒரு காட்சி. இவர் நடித்த லத்திகா படத்தின் போஸ்டர் ஒட்டியிருக்கும். “ஏய், யாரு போட்டோவை, எங்க வந்து ஒட்டியிருக்க”? என்று கூறியபடி பவர் ஸ்டாரின் போஸ்டரை ஒருவர் கிழிப்பாரு. இந்த காட்சியை படத்துல
பார்த்தவங்களுக்கு சாதாரண காட்சியா தான் தெரியும். திரைக்கு பின்னால நடந்ததுன்னு, நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அந்த மாதிரியான ஒரு கதை இந்த காட்சிக்கு
பின்னாடி இருக்கு. இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்துட்டு, “டாக்டர் சீனிவாசன் போஸ்டரை கிழிக்கிற மாதிரி ஒரு காட்சி
இருக்கு, அதனால அவருக்கிட்டேயிருந்து ஒரு நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்
வாங்கிட்டு வாங்கன்னு கூறியிருக்கிறார்கள். அந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும், ஆஹா, சென்சார்ல ஒரு பிரச்சனையும் வராதுன்னு இல்ல நினைச்சோம், இப்ப இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறாங்களேன்னு குழம்பி, தனக்கும், பவர் ஸ்டாருக்கும் பொதுவான ஒரு நண்பரிடம், அந்த நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்குகிற வேலையை கொடுத்திருக்காரு. அந்த
நண்பரும் இந்த விஷயத்தை பத்தி பவர் ஸ்டாரிடம் பேசியிருக்காரு. பவர் ஸ்டாருக்கு வந்ததே
கோபம், “என் போஸ்டரையே கிழிப்பானுங்க, அதுக்கு
நான் நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் தரணுமான்னு, வானத்துக்கும்,பூமிக்கும் எகிறி குதிச்சிருக்காரு. எகிறி குதிக்கிறதோட நிக்காம, அவனுங்க எப்படி படத்தை ரிலீஸ் பண்றாங்கன்னு பாக்கிறேன்னு வேற பேசி, அந்த பொதுவான நண்பரை திருப்பி அனுப்பியிருக்காரு. அந்த நண்பரும், இந்த மாதிரி ஒரு பெருந்தன்மையான(!!) மனுஷனோடவா நாம, சகவாசம்
வச்சிருந்தோம்னு, ரொம்ப நொந்து போயி. சரி, இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம்னு யோசிச்சு, விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவனுக்கு போன் அடிக்க, அவரும், கவலையை விடுங்க, நான்
பார்த்துக்கிறேன்னு, தைரியம் கொடுத்திருக்காரு. இந்த உரையாடல்
நடந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், அந்த நண்பரை, நம்ம பவர் ஸ்டார் போன்ல கூப்பிட்டு, “இந்த சின்ன விஷயத்துக்கு
போயி அண்ணன் வரைக்கும் போயிட்டிங்களே, நேரா ஆபிஸ் போங்க என் பி.எ., என்னோட கையெழுத்து போட்ட லெட்டர் பேட் ஒண்ணு கொடுப்பாரு, என்ன வேணும்னாலும் எழுதிக்குங்க. எனக்கு “நோ-அப்ஜெக்ஷன்” ன்னு சொன்னாராம்.
அன்னைக்கே அவரோட உண்மையான முகத்தை கிழிச்சிருக்காங்க, ஆனா அது தெரியாம, நம்ம தமிழ் திரையுலகமும், ஊடகத்துறையும் அவரை தூக்கி
விட்டு, ஹீரோவாக்கி விட்டுட்டாங்க. இப்ப அவர் வெளியே வருவாரா
மாட்டாரான்னு, அவரை வைத்து படம் எடுக்கும் திரையுலகத்தினர் வழி
மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
-முற்றும்
தொல்.திருமாவளவன் தொண்டரா ... அப்போ உருப்பட்ட மாதிரிதான்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete