சித்திரைத் திருவிழா என்றாலே நமக்கெல்லாம் உடனடியாக
நியாபகத்துக்கு வரக்கூடியது மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழா தான்.
சிட்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த
இரண்டு வருடங்களாக சிட்னியில் மிகப் பிரமாண்டமான
சித்திரைத் திருவிழாவை நடத்தி இருக்கிறது இந்த வருடமும்
சிட்னியில் அவர்கள் சித்திரைத் திருவிழாவை வருகிற
ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி ரோஸ்ஹில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்துகிறது. சென்ற ஆண்டுகளைப் போல், இந்த ஆண்டும் காலை
10மணி முதல் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக
நடக்க இருக்கிறது. மேலும் குழந்தைகளின் திறமையையும்
வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளின் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக திரை இசை கிராமிய பின்னணி பாடகி தஞ்சை செல்வி குழுவினரின் சிறப்பு இசை நிகழ்ச்சியோடு தமிழ் பாரம்பரிய கலையான இந்திய புகழ் பூத்த காவடி மற்றும் கரகாட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இடம்பெற இருக்கிறது. சென்ற ஆண்டுகளுக்கும், இந்த ஆண்டுக்கும்
மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், சென்ற ஆண்டுகளில் காசில்ஹில் லோயர் ஷோ கிரௌண்டில் இந்த விழா நடைபெற்றது. ஆனால் இவ்வாண்டில் சிட்னிரோஸ்ஹில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இவ்விழா நடைபெற உள்ளது. இந்த இடம்
அனைவரும் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்கிறது. மேலும் இந்த இடம் முழுவதும்
அதிமேற்கூரையால் மூடப்பட்டிருப்பதால், மழைக்கும் வெய்யிலுக்கும் கவலைப்
படத் தேவையில்லை. அனுமதி கட்டணம் சென்ற ஆண்டுகளைப் போலவே பத்து டாலர்கள் தான்.
2012ல் முதன் முதலாக சித்திரைத் திருவிழாவிற்கு, "கலைமாமணி" டாக்டர். புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருவாட்டி. அனிதா குப்புசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக அடியேன் அவர்கள் இருவரையும் இங்குள்ள தமிழ் முழக்கம் வானொலிக்காக தொலைபேசியில் பேட்டி எடுத்தேன்.
சென்ற ஆண்டு "கலைமாமணி" திருவாட்டி. சின்னபொண்ணு மற்றும் கிராமிய பின்னணி பாடகர். திரு. வேல்முருகன் அவர்களும் வந்து சிறப்பித்தார்கள்.
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தார்கள் நடத்திய இந்த சித்திரைத் திருவிழாவிலும், தீபாவளி நிகழ்ச்சியிலும் முதன் முதலில் என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடைய நாடகங்களை மேடையேற்ற வாய்ப்பு தந்தார்கள். அதற்காக அவர்களுக்கு என்னுடைய நன்றியை இந்த பதிவில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வருடமும் அவர்கள் என்னை ஒரு குறு நாடகம் போடுமாறு கேட்டார்கள், ஆனால் நான் இந்தியா சென்று திரும்புவதால் நாடகம் எழுதி பயிற்சி செய்வதற்கு கால அவகாசம் இருக்காது என்று கூறி மறுத்துவிட்டேன். அடுத்த வருடம் கண்டிப்பாக பெரியவர்கள் நாடகம் ஒன்றும், குழந்தைகள் நாடகம் ஒன்றும் போட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.
எண்ணம் விரைவில் செயலாக வேண்டும் என்று விரும்புகிறேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க் நன்றி டிடி.
Deleteதஞ்சை செல்வி பிறந்தவூர் புதுகை தெரியுமா சகோ!
ReplyDelete//அடுத்த வருடம் கண்டிப்பாக பெரியவர்கள் நாடகம் ஒன்றும், குழந்தைகள் நாடகம் ஒன்றும் போட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்// உங்க எண்ணம் நிறைவேறட்டும் !
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ!!!
அதோடு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடைக் “கலைஇரவு“கள்தான் அவரை ஊர்ஊராக அழைத்தன என்பதும் அவருக்கு நினைவிருக்கிறதோ என்னவோ? எனது “தும்பவிட்டு வாலைப்பிடிக்கலாமா? ஏ மாமா, ஓட்டுப் போட நீயும் மறக்கலாமா?” எனும் தேர்தல்பிரச்சாரப் பாடலை செல்வியைக் கொண்டுதான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சுகந்தி பாடவைத்தார். அது உள்ளுர்த் தொலைக்காட்சிகள் வழியாக மாவட்டம் முழுவதும் பாடப்பட்டது தங்கள் விழாச்சிறக்க வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி கட்டுரைப்போட்டியில் தேர்வுபெற்றதற்கும் வாழ்த்துகள் தொடர்ந்து சிறப்பாக எழுதிட வேண்டுகிறேன்.
Deleteதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
Deleteதஞ்சை செல்வியைப் பற்றிய செய்திகள் எனக்கு புதிது ஐயா . தங்களுடைய இரண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்குவிப்பு, என்னை இன்னும் எழுதச் செய்யும் ஐயா.
Deleteதங்களின் கனிவான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதங்களின் எண்ணம் ஈடேறும்
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெயக்குமார் சார்.
Deleteதங்கள் விருப்பம் நிறைவேற என் வாழ்த்துக்கள் சகோதரா !
ReplyDeleteஇனிய புது வருட வாழ்த்துக்கள் ...!
போட்டியில் வெற்றி பெற்றமைக்கும், மேன்மேலும் வெற்றி பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்களுக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் சகோ.
Deleteதங்களுடைய இரண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.
சிட்னியில் சித்திரைத் திருவிழா.. கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. விழாவில் கலந்து கொண்டு அதன் சிறப்புகளையும் பதிவிடுவீர்கள் தானே....
ReplyDeleteகண்டிப்பாக...
Deleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார்
சிட்னி சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்
Deleteகட்டுரை போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் விழாச்சிறக்க வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..பாராட்டுக்கள்..!
தங்களுடைய வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி அம்மா.
Delete