Wednesday, April 30, 2014

மனைவிக்கு மரியாதைஎன்னடா, ஒரு வாரம் முன்னாடி தான், “மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்றும் சட்டம்னு” ஒரு பதிவை போட்டான் படிக்க... , அதுக்குள்ள இப்ப மனைவிக்கு மரியாதைன்னு ஒரு பதிவை போடுறானே, அப்ப இவன் வீட்டுக்குள்ளேயே அடி வாங்கிட்டு,அம்மணியோட கோபத்தை தனிக்கிறதுக்காக இப்படி ஒரு பதிவை போடுறானோன்னு நீங்க சந்தேகப்படுவது புரியுது. அந்த சட்டத்தை கொண்டு வருவோம்னு சொன்னவரு ஒரு வடநாட்டுக்காரு. அதை வட இந்தியாவில சொன்னாரு. ஆனா தமிழ்நாட்டுல இந்த மாதிரி ஒரு சட்டத்தை கொண்டு வரவே வேண்டாம். ஏன்னா நம்ம சகோதரிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்களாச்சே(?). பாருங்க, அதனால தான் சில மாதங்களுக்கு முன், ராஜபாலயத்துல மனவளக்கலை மன்றம் வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல தின வேள்வி நடந்திருக்கு. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டிருந்திருக்காங்க. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்மார்கள், தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வதித்து, மலர்களை கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அது போல மனைவிகளும் கணவன்மார்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் கொடுத்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கும் சகோதரிகள் எல்லோரும், ஆஹா, நமக்கும் நம்மளோட கணவர், இந்த மாதிரி ஆசீர்வதித்தால் நல்லாயிருக்குமேன்னு உள்ளுக்குள்ள ஒரு ஏக்கம் வரலாம். உடனே ரொம்ப ஏங்கிடாதீங்க. மறுபடியும் முதல் பத்தியை நல்லா படிச்சுப் பாருங்க, உங்களுக்கு ஒண்ணு புரியும். அதாவது, கணவன்மார்கள் ஆசீர்வதித்து பூக்களைத் தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மனைவிமார்களோ, தங்கள் கணவனை வாழ்த்தி பரிசு கொடுத்திருக்காங்களாம்(!!!). பார்த்தீங்களா, உங்கக்கிட்டேயிருந்து பரிசு வாங்குறதுக்கு நாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்குது.

பின் குறிப்பு: நான் நகைச்சுவைக்காகத்தான் அந்த கடைசி பத்தியை எழுதினேன். உண்மையிலேயே, அந்த புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள். பார்பதற்கே கண் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு

வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்" என அறிவுரைகள் வழங்கப்பட்டதாம்.


இந்த அறிவுரைகளை நாமும் ஏற்று நல்ல தம்பதிகளாக வாழ்ந்து, நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குவோம். 

14 comments:

 1. உங்கள் படத்தை பார்த்தேன் எல்லோரும் முதியவர்களாகவே இருக்கின்றனர். அதனால்தான் என்னவோ போட்டோவுக்காக அவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் எங்களை போல உள்ள 'யூத்'க்கள் தினசரி எல்லா நேரமும் மரியாதை செலுத்துகிறோம் இல்லையென்றால் யார் அடி வாங்குவது.

  ReplyDelete
  Replies
  1. நான் வேண்டும் என்றே தான் அந்த படத்தில் தோன்றுபவர்களைப் பற்றி சொல்லவில்லை.
   ஆனா, கரெக்ட்டா அதைத்தான் ஒரு பாயிண்டா புடிச்சு சொல்லிட்டீங்க.


   ஐயோடா, நீங்க "யூத்தா"!!!, எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாடி???

   Delete
 2. ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவரிடமிருந்து கிடைக்கும் ஆசீர்வாதம்
  கணவனுக்கும் சேர்த்து செய்துகொள்ளும் ஆசிர்வாதம்தான். அதனால்
  கணவன் மனைவியை தாரளமாக ஆசிர்வாதம் செய்யலாம். தாங்கள்
  பகிர்ந்த படம் உண்மையிலேயே அழகு, நெகிழ்ச்சி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சொக்கன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

   Delete
 3. கண் கொள்ளாக் காட்சிதான் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

   Delete
 4. என்னது கணவருக்கு பரிசு கொடுக்கனுமா? அவங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறதே மனைவிதான் ஞாபகம் வச்சுகோங்க ! ஹா...ஹா...ஹா...:)))

  ReplyDelete
 5. அட கடவுளே! இப்படி எல்லாம் வேற உங்களுக்கு எண்ணம் இருக்கா??? (நினைப்பு தான் புழப்பை கெடுக்கும்னு சொல்லுவாங்க!!!! )

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 6. என்ன சகோ என் தோழி இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறாங்களே. தலை கிர்ங்குது ஆண்கள் தான் வாழ்கை குடுப்பதாக இதுவரை நான் நினைத்துக் கொண்டு அல்லவா இருந்தேன். ஓஹோ இப்ப மாத்திட்டான்களா. சொல்லவே இல்லை.
  ஆசீர்வாதம் செய்வது சந்தோஷம் தான்.
  ஆனால் நான் எந்தத் தப்பும் செய்யமாட்டேன் என்று தலையில் அடித்து சத்தியம் செய்வது போல் அல்லவா தெரிகிறது. ஹா ஹா .... வாழ்த்துக்கள் சகோ...!

  ReplyDelete
 7. இனிமையான படம்....

  சத்தியம் செய்வது போல! - Good one Iniya! :)

  ReplyDelete
 8. எங்க ஊர்லயா? தெரிஞ்சவங்க யாராவது இருப்பாங்கன்னு பாக்கறேன், யாரையுமே காணோமே...

  ReplyDelete
 9. அடடே நல்ல விஷயமா இருக்கே! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 10. நல்ல பதிவு தோழர்..
  நல்ல நிகழ்வும் கூட

  ReplyDelete
 11. மனைவிக்கு மரியாதை கொடுப்பதால் வாழ்வில் சந்தோசமே கிடைக்கும்.

  -Killergee

  ReplyDelete