தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கு இயக்குனரின் மேல் உள்ள பாசம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது
எங்களோட அந்த கன்டினிட்டி காட்சியை எடுக்கிறதுக்காக காமிரா எல்லாம் செட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்பத்தான் இயக்குனர் விஜய் கீழே உட்கார்ந்து எங்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. “நான் இந்தியா போனவுடனே, என்னோட மற்ற நண்பர்கள் கிட்டயெல்லாம் ஆஸ்திரேலியால போய் படம் எடுக்காதீங்க, அங்க பர்மிஷன் வாங்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதுக்கும் மேல அங்க செலவு ரொம்ப அதிமாகுதுன்னு சொல்லப்போறேன்ன்னு” சொன்னாரு. எங்க எல்லாருக்கும் என்னடா, இவரு இப்படி சொல்றாருன்னு ஒரு மாதிரியாயிடுச்சு. உடனே, எங்க கூட்டத்தில இருந்த ஒரு நண்பர், நீங்க இப்படி சொல்றீங்க, ஆனா பத்து வருசத்துக்கு முன்னாடி, “நள தமயந்தி” படத்தை முழுக்க ஆஸ்திரேலியாவில் தானே எடுத்தாங்கன்னு ஒரு கொக்கியைப் போட்டாரு. இயக்குனருக்கோ என்ன சொல்றதுன்னு தெரியலை. அதுக்குள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இயக்குனரிடம் சார், ரெடியாயிடுச்சுன்னு சொன்னாரு. இயக்குனரும் எங்களிடம் நாம முன்னாடி எடுத்த அந்த ஜாக்கிங் காட்சியோட கன்டினிட்டி காட்சியைத்தான் எடுக்கப்போறோம்ன்னு சொல்லி, அந்த காட்சியை விவரிச்சாரு. முதல்ல எடுத்த அந்த ஜாகிங் காட்சியில, நடிகர் விஜய், அமலாபால் கிட்ட, திரும்பி பாருங்கன்னு சொல்லுவாரு, அப்ப நாங்களும் ஜாகிங் பண்ணிக்கிட்டு அங்க நிப்போம். உடனே அமலாபால் எங்களிடம் வந்து எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லுவாரு, நாங்களும் முகத்தை தொங்கப்போட்டுக்கிட்டு திரும்பி போய்விடுவோம். அமலாபால் திரும்பி வந்தவுடனே,விஜய் “நீங்க என்ன சொன்னீங்க, எல்லோரும் போயிட்டாங்கன்னு” கேப்பாரு, அதுக்கு அமலாபால் விளக்கமா சொல்ற காட்சியை தான் எடுக்கப்போறோம்ன்னு இயக்குனர் சொன்னாரு. இதுல ஆளாளுக்கு ஒவ்வொரு வசனம், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நீங்க தமிழ் கலாச்சாரம் தெரிஞ்ச பொண்ணு, உங்க அப்பா உங்களை நல்லா வளர்த்திருக்காருன்னு” இப்படியெல்லாம் சொல்லனும்.
எங்களோட அந்த கன்டினிட்டி காட்சியை எடுக்கிறதுக்காக காமிரா எல்லாம் செட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்பத்தான் இயக்குனர் விஜய் கீழே உட்கார்ந்து எங்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. “நான் இந்தியா போனவுடனே, என்னோட மற்ற நண்பர்கள் கிட்டயெல்லாம் ஆஸ்திரேலியால போய் படம் எடுக்காதீங்க, அங்க பர்மிஷன் வாங்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதுக்கும் மேல அங்க செலவு ரொம்ப அதிமாகுதுன்னு சொல்லப்போறேன்ன்னு” சொன்னாரு. எங்க எல்லாருக்கும் என்னடா, இவரு இப்படி சொல்றாருன்னு ஒரு மாதிரியாயிடுச்சு. உடனே, எங்க கூட்டத்தில இருந்த ஒரு நண்பர், நீங்க இப்படி சொல்றீங்க, ஆனா பத்து வருசத்துக்கு முன்னாடி, “நள தமயந்தி” படத்தை முழுக்க ஆஸ்திரேலியாவில் தானே எடுத்தாங்கன்னு ஒரு கொக்கியைப் போட்டாரு. இயக்குனருக்கோ என்ன சொல்றதுன்னு தெரியலை. அதுக்குள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இயக்குனரிடம் சார், ரெடியாயிடுச்சுன்னு சொன்னாரு. இயக்குனரும் எங்களிடம் நாம முன்னாடி எடுத்த அந்த ஜாக்கிங் காட்சியோட கன்டினிட்டி காட்சியைத்தான் எடுக்கப்போறோம்ன்னு சொல்லி, அந்த காட்சியை விவரிச்சாரு. முதல்ல எடுத்த அந்த ஜாகிங் காட்சியில, நடிகர் விஜய், அமலாபால் கிட்ட, திரும்பி பாருங்கன்னு சொல்லுவாரு, அப்ப நாங்களும் ஜாகிங் பண்ணிக்கிட்டு அங்க நிப்போம். உடனே அமலாபால் எங்களிடம் வந்து எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லுவாரு, நாங்களும் முகத்தை தொங்கப்போட்டுக்கிட்டு திரும்பி போய்விடுவோம். அமலாபால் திரும்பி வந்தவுடனே,விஜய் “நீங்க என்ன சொன்னீங்க, எல்லோரும் போயிட்டாங்கன்னு” கேப்பாரு, அதுக்கு அமலாபால் விளக்கமா சொல்ற காட்சியை தான் எடுக்கப்போறோம்ன்னு இயக்குனர் சொன்னாரு. இதுல ஆளாளுக்கு ஒவ்வொரு வசனம், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நீங்க தமிழ் கலாச்சாரம் தெரிஞ்ச பொண்ணு, உங்க அப்பா உங்களை நல்லா வளர்த்திருக்காருன்னு” இப்படியெல்லாம் சொல்லனும்.
அப்ப ஒளிப்பதிவாளர் என்னிடம், சார், நீங்க
அமலாபாலைப் பார்த்து, “நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கீங்கன்னு
சொல்லுங்கன்னு சொன்னாரு (யாரை, யாரோடு ஒப்பிடுறதுன்னு ஒரு வரைமுறை
இல்லாம போச்சு!!!). இயக்குனர் உடனே எங்களிடம், சில்க் ஸ்மிதா
யாருன்னு தெரியுமான்னு கேட்டாரு. நாங்க எல்லோரும் அவுங்களை தெரியாம இருக்க முடியுமான்னு
திருப்பி கேட்டோம். நான் இன்னும் ஒரு படி மேல போய், “சார் ஒரு
காலத்துல அவுங்க என்னோட கனவுக்கன்னி. அவுங்க இறந்த அன்னைக்கு, கருப்பு துணியை சின்னதா வெட்டி, பேட்ச் மாதிரி சட்டையில
குத்திக்கிட்டு, வேலை பார்க்கிற இடத்துல நானும் என்னோட நண்பர்களும்
துக்கம் அனுசரிச்சோம்ன்னு” சொன்னேன். நீரவ் ஷா, இயக்குனர் கிட்ட, இவுங்க கிட்ட போய் சில்க் ஸ்மிதா யாருன்னு கேட்டீங்களேன்னு கேட்டு சிரிச்சாரு.
முதல்ல ஒரு ரெண்டு ஷாட் எடுத்தாங்க. அப்புறம் இயக்குனர் என்ன நினைச்சாரோ, என்னிடம் நீங்க சில்க் ஸ்மிதா வசனத்தை சொல்ல வேண்டாம், அதுக்கு பதில் “நீங்க ரொம்ப உயரமா இருக்கீங்கன்னு” சொல்லுங்கன்னு சொன்னாரு.
(அமலாபால் ரொம்ப உயரமாமா....) நாலைந்து டேக்குக்கு அப்புறம் அந்த ஷாட்டை எடுத்து முடிச்சாங்க.
மணியோ மதியம் ஒரு மணியை தாண்டிடுச்சு. எங்களோட காட்சியெல்லாம் எடுத்து முடிச்சாச்சுன்னு
சொன்னாங்க. அவுங்களுக்கும் அன்றைக்கு தான் கடைசி நாள். மறு நாள் காலையில இந்தியா போறாங்க.
நாங்க இயக்குனர் கிட்ட, எல்லோரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்தாக்கலாம்னு
சொன்னோம். அதுக்கு, நடிகர் விஜய் இப்ப ரெஸ்ட் எடுக்கிறாரு, அதனால அவரை கூப்பிட முடியாதுன்னு இயக்குனர் சொல்லிட்டதுனால, இயக்குனர், அமலாபால் ரெண்டு பேரோட சேர்த்து புகைப்படம்
எடுத்துக்கிட்டோம். என்ன! ஒளிப்பதிவாளரையும்,இணை,துணை இயக்குனர்களையும் புகைப்படம் எடுக்காம விட்டுட்டோம்.
கன்டினிட்டி காட்சின்னு சொல்றாங்களே, இந்த ரெண்டு படத்தையும்
பாருங்க, இதுல ஏதாவது கன்டினிட்டி தெரியுதா உங்களுக்கு.
இது முதல் படம் – ஜாகிங் காட்சி.
இது அடுத்த படம் அந்த கன்டினிட்டி
காட்சி.
முதல் படத்துல கடல் பின்னாடி இருக்கும்.
அடுத்த படத்துல இரும்பு கம்பிகள் போட்ட தடுப்பு தான் இருக்கும். இன்னும் நல்லா பார்த்தீங்கன்னா, இன்னொரு வித்தியாசம் தெரியும்.
அதாவது முதல் படத்துல நாங்க மொத்தம் ஒன்பது பேர் இருப்போம். ரெண்டாவது படத்துல எட்டுப்
பேர் தான் இருப்போம். இதுக்குத்தான் கன்டினிட்டி
காட்சி எடுக்கிறோம், அதனால அன்னைக்கு போட்ட காஸ்ட்யூமோட வாங்கன்னு
சொன்னாங்க போல இருக்கு.
ஆனா, எது எப்படியோ, நான் நடிச்ச 4 காட்சிகளும் வந்துடுச்சு. என்ன!! அந்த
உணவகக் காட்சியிலும்,நடனக் காட்சியிலும் கொஞ்சம் கத்திரி போட்டுட்டாங்க.
அப்புறம் இந்த ஜாகிங் காட்சியில வசனத்துக்கு கத்திரி போட்டுட்டாங்க. ஆனாலும் அந்த ஐந்து
நாளும் ஒரு திரைப்படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். அதுவும் இங்க சிட்னியில
படம் வெளியான மறு நாள் திரையரங்குக்குச் சென்று, அந்த வெள்ளித்
திரையில் நான் தோன்றுவதை பார்த்தது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
இந்த படத்தை ஓவியா பார்த்த பிறகு, என்னுடைய மிகப்பெரிய ரசிகையாகி
விட்டார். அடிக்கடி, “அப்பா நீங்க நடிச்ச படத்தை போடுங்கன்னு”
சொல்லி ஒரே அன்புத்தொல்லை தான். இதுல இன்னும் ஒரு படி மேல போய், விஜய் நடித்த பாட்டு ஏதாவது பார்த்தால், உடனே “நீங்க
நடிச்ச படத்துல தானே, இந்த அங்கிள் நடிச்சிருக்காருன்னு” ஒரு
பிட்டை போடுவார். நான் உடனே, அப்படியில்லம்மா, அவர் நடிச்ச படத்துலத்தான் நான் நடிச்சேன்ன்னு சொல்லுவேன். ஓவியா இப்படியென்றால், இனியா தலைவா படத்தை பார்த்தாலோ, இல்லை நான் வரும் நகைச்சுவை காட்சியை பார்த்தாலோ, ”ஐ அப்பா, அப்பா” என்று குதிக்க ஆரம்பித்துவிடுவார். இன்னொரு
நண்பரின் மகள், நண்பரிடம்”ஏம்பா சாம் அங்கிள், படத்துல கடைசி வரைக்கும் வரலைன்னு கேள்வி கேட்டிருக்காங்க”. எங்கையாவது ஒரு பொது இடத்துக்கு போனால், எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லாத நபர்கள் கூட, என்னைப் பார்த்து நீங்க தலைவா படத்துல நடிச்சவர் தானேன்னு கேட்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது அலுவலகத்துக்கு
விடுமுறை எல்லாம் எடுத்து, சம்பளம் இல்லாமல் நடித்ததது எல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.
-முற்றும்
நீங்கதான் அந்த ஐந்து நாள் நட்சத்திரமா ? பாராட்டுக்கள் !
ReplyDeleteபாராட்டுக்களுக்கு நன்றி பகவான்ஜீ.
Deleteஓவியா விசாரித்ததை... மகிழ்ச்சி துள்ளலை விட வேறென்ன சந்தோசம் இருக்கப் போகிறது...? வாழ்த்துக்கள் பல....
ReplyDeleteகண்டிப்பாக இந்த சந்தோஷத்தை விட வேறு என்ன பெருசாக இருக்க முடியும். வாழ்த்துக்களுக்கு நன்றி.
Deleteஅப்பாவுக்கு மகளே fan இதை விட வேறு என்ன வேண்டும். என்ன கடைசியில் இப்படி ஒரு குண்டு போட்டு வீட்டீர்கள் சம்பளம் இல்லாமலா? அப்போ கதாநாயன் நாயகிக்கு மட்டும் தான் சம்பளம் மற்றவர்கள் எல்லாம் இல்லாமலா. என்ன கொடுமை இது. பறவாய் இல்லை உங்களுக்கு சந்தோஷம் தானே famous ஆக வாறது என்ன சும்மாவா இல்லையா சரி விடுங்க அடுத்த படத்திற்கு டிமான்ட் பண்ணிடுங்க. ஹா ஹா நன்றி வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஎங்களுக்கு சம்பளம் எல்லாம், நாங்கள் வெள்ளித்திரையில் வருவது தான். அது உண்மை தான் famous ஆகுறது எல்லாம் சும்மா இல்லையே. அடுத்த படமா??? இதுவே போதும் சாமி.
Deleteவாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.
மகளின் மகிழ்ச்சிக்கு ஈடு உண்டா?
ReplyDeleteதலைவா படத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கின்றது நண்பரே வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெயக்குமார் சார்
Deleteவாழ்த்துக்கள். நீங்க எல்லாம் தான் வரிசையில் காத்திருக்கும் குருப்பா!!!.. :)
ReplyDeleteநாங்களே தான் அந்த வரிசையில் காத்திருக்கும் குரூப்.
Deleteவாழ்த்துக்களுக்கு நன்றி நாடோடி.
எப்படியோ பெரிய ஆக்ட்ரஸ் கூட நடிச்சி பெரிய நடிகரா ஆயிட்டீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅட நீங்க வேற சுரேஷ், நானெல்லாம் நேத்து பெய்த மழையில் பூத்த காளான். இதெல்லாம் ஒரு நாள் கூத்து தான்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
குழந்தைகள்ளின் மகிழ்ச்சி சந்தோஷம் அளிக்கிறது..
ReplyDeleteதலைவா படத்தில் விஜய்யை விஸ்வா என்று யாராவது அழைத்தால் போதும்
எங்கள் குழந்தை தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி எல்லோரையும்பார்த்து கொள்ளைஅழகாய் வெற்றிச்சிரிப்பு சிரிக்கும் ...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteஅந்த வெற்றிச்சிரிப்பின் கொள்ளை அழகை காண்பதற்காகவே நீங்கள் அந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் அம்மா.
ஐந்து நாட்கள் கஷ்டப்பட்டாலும் மனதிற்கு கொஞ்சம் திருப்தி கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்கள் திரைப்பட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்
Deleteரொம்ப சுவாரஸ்யமா இருந்தது சகோ!
ReplyDeleteஇதுக்கு முன்னாடி இப்படி க்ரூப்ல வரவங்களை நல்ல கலாய்ப்போம். இனி அவர்களுக்கு மரியாதை தரும்படி இருந்தது உங்க பதிவு!
நானும் முன்பெல்லாம், கூட்டமா வருகிறவர்களை கலாய்த்திருக்கிறேன். ஆனால் இப்போ?????
Deleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.
அப்பாடி ஒருவழியாக முற்றும்..
ReplyDeleteசரி திரையில் வருவதின் சக்தியை நீங்கள் உணர்திருந்தால் சரி... நல்ல அனுபவம்..
ஆமாங்க, ஒரு வழியா முற்றும். நானே எதிர்பார்க்கவில்லை இத்தனை பகுதிகள் எழுதுவேன் என்று.
Deleteஉண்மை தான். இரண்டு நிமிடங்கள் வந்தாலும் திரையில் வந்தது மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.
ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிட்டீங்க. படத்தோட ஓட்டத்துல கன்டின்யுட்டி காட்சிகளில் இருக்கிற தவறுகள் தெரியாதுதான். நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கே தெரியுது.
ReplyDeleteஅமலா பால் உயரம் தான் (உங்களை விட ஹிஹி)
இங்க எங்க வீட்டில கூட ரெண்டு வாண்டுகள் உங்க ரசிகர்கள் இருக்காங்க....
"படத்தோட ஓட்டத்துல கன்டின்யுட்டி காட்சிகளில் இருக்கிற தவறுகள் தெரியாதுதான்." - அதனால தான் இயக்குனரும் இதை ரொம்ப பெருசா எடுத்துக்கலை.
Deleteஉண்மை தாங்க, அமலா பால் என்னோட உயரம் தான். அதனால் தான் அந்த வசனத்தை என்னைச் சொல்ல சொன்னார்கள். (படத்துல வரலை அது வேற விஷயம்!!)
எனக்கு ரசிகர்கள் கூடிக்கிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்க. உங்க வாண்டுகளுக்கு என்னோட நன்றியை மறக்காம சொல்லிடுங்க.
கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க.....இது இது இதத்தான் எல்லா நடிகர்களும், சின்ன ஒரு சீன்ல வர்ற நடிகரும் சரி , ஹீரோவும் சரி விரும்புவது! நம்மை மற்றவர்கள் எல்லாம் கேட்கும்போதும், பாராட்டும் போதும், பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்துபோயிடும்! கன்டின்யுட்டி காட்ச்சிகள் பளிச்! பார்த்த உடனே தெரிந்து விட்டது! ஒரு படத்துக்கு கன்டினுயுட்டி என்பது மிகவும் முக்கியம்! பல படங்கள் அதை மிஸ் பண்ணிவிடுகின்றன....அதாவது டைரக்டர்கள்! ஆனால் மக்களுக்கு அது புரியாது ஏனென்றால் மக்கள் திரைப்படத்தில் அடுத்து வரும் காட்சி என்று சுவாரஸ்யமாக அதில் லயித்துப் பார்க்கும் போது இது போன்ற விஷ்யங்கள் கண்ணில் தெரியாது! ..ஆனால் விமர்சனங்கள் எழுதுபவர்கள் கூட இதை எல்லாம் கண்டு எழுதுவத்iல்லை. எவ்வலவு பெரிய டைரக்டராக இருந்தாலும் எழுத வேண்டும்! தாங்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! சுவாரஸ்யமாக இருந்தது!
ReplyDeleteஉண்மை தான். பாராட்டுக்கள் தானே கலைஞனுக்கு மிகப்பெரிய சம்பளம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.