நான் இந்த பதிவில் சொன்னமாதிரி
- வந்துட்டான்யா... வந்துட்டான்!!!
வடிவேலு மூன்றாண்டு வனவாசத்தை முடித்து தெனாலிராமன் என்ற திரைப்படம்
மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். இம்முறை நகைச்சுவை நடிகனாக
இல்லாமல், கதாநாயகனாக
வந்திருக்கிறார்.
கதை என்னன்னு பார்த்தால், விகட நகரத்தை ஆண்டு வரும் மன்னனுக்கு 36 மனைவிகள்
மற்றும் 52 குழந்தைகள். எப்பொழுதும் தன் குடும்பத்தையே பற்றியே சிந்திப்பதால், தன் நவரத்தின அமைச்சர்கள் (அதாவது 9 அமைச்சர்கள்) சொல்லுவதையே வேதவாக்காக
எடுத்துக்கொண்டு நாட்டை ஆண்டு வருகிறார். இந்த 9 அமைச்சர்களில் ஒரு அமைச்சரைத் தவிர
மற்ற 8 அமைச்சர்களும் ஊழலுக்கு பெயர் போனவர்கள். பணத்துக்காக தங்கள் நாட்டை சீன தேசத்திடம்
அடகு வைக்க முயல்கிறார்கள். அதற்கு நேர்மையான அமைச்சர் முட்டுக்கட்டையாக இருப்பதால், சினிமா தர்மப்படி அவரை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். இந்த இடத்திற்கு இன்னொரு
வடிவேலான தெனாலி ராமன் சில பல போராட்டங்களுக்கிடையில் அமைச்சராக உள்ளே நுழைகிறார்.
இதில் ஒரு முக்கிய ட்விஸ்ட் என்னவென்றால், தெனாலிராமான் புரட்சிப்படையை
சேர்ந்தவன். மன்னனைப் பிடிக்காமல், அவனை கொல்ல வேண்டும் என்று
வாழ்பவன். இதற்கிடையில் சீன தேசத்தோடு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு, அந்த நாட்டின் வர்த்தக ஸ்தலமே, சீன தேசத்து வர்த்தக
ஸ்தலம் போல் காட்சியளிக்கிறது. இதையெல்லாம் பார்த்து ஆத்திரப்பட்டு மன்னனை கொல்வதற்காக
சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கையில், மன்னன்
ஒரு அப்பிராணி, இதற்கு முழுப்பொறுப்பும் அந்த 8 அமைச்சர்கள் தான்
என்று கண்டுப்பிடிக்கிறான் தெனாலிராமன். இப்படி ஒரு நல்லவன் இருக்கும்போது, கெட்டவர்கள் அவன் மீது பழியை சுமத்தவேண்டும் என்பதும் சினிமா நியதி, அந்த நியதிப்படியே தெனாலிராமன் மீது மன்னனுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்து
அவனை மன்னனிடம் இருந்து பிரிக்கிறார்கள் அந்த அமைச்சர்கள்.
இதற்கு நடுவில், தெனாலிராமனுக்கும், மன்னனின் மகளான மீனாட்சி தீக்ஷித்க்கும்
காதல் மலறுகிறது. மகளும் தந்தையிடம், தெனாலிராமன் நல்லவன் என்று
கூறி அவன் மனதை மாற்றி, தெனாலிராமனை மீண்டும் அரண்மனைக்குள் வருவதற்கு
ஏற்பாடு செய்கிறாள். மறுப்பிரவேசம் செய்த தெனாலிராமன் எவ்வாறு மன்னனுக்கு நாட்டுநடப்பை
புரியவைக்கிறான் என்பது தான் மீதிக்கதை.
இந்த படம் கிட்டதட்ட 23ஆம் புலிக்சேயின் சாயலை ஒட்டியே எடுத்த
மாதிரி இருக்கிறது. அதில் அவர் இரட்டை வேடம் பூண்டிருப்பார். இதிலும் இரட்டை வேடம்.
அந்த படத்தில் மன்னராக ஒரு கதாப்பாத்திரத்திலும், மன்னனை திருத்தும் இன்னொரு கதாப்பத்திரத்திலும்
தோன்றுவார். இந்த படத்திலும் மன்னராகவும், மன்னருக்கு நாட்டு
நடப்பை புரிய வைக்கும் மந்திரியாகவும் நடித்திருப்பார். இரண்டு படங்களிலும் மீசை மேலே
தூக்கிக்கொண்டிருக்கும். அந்த படத்தில் ஒரு காட்சியில் மன்னன் மந்திரியோடு வேட்டைக்கு
செல்லுவான், அப்போது ஒரு கரடி அவன் மீது எச்சிலை துப்பிவிட்டு
செல்லும். இந்த படத்திலும் மன்னன் தன் அமைச்சர் பரிவாரங்களோடு வேட்டைக்கு செல்லுவார்.
ஆனால் கரடியிடம் மாட்டிக்கொள்ளாமல், ஆதிவாசி மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளுவார்.
(மன்னார் வேட்டைக்கு போகிற காட்சியில், ஓவியா உடனே இப்ப கரடி வரப்போகுது
பாருங்கள் என்று கூறினார்!!!).
இந்த படத்தில், அவருக்கு கதாநாயாகியாக நடித்தவரை எந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டமுடியுமோ
அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்ட வைத்திருக்கிறார்கள். இவரைப் பற்றி பெரிதாக வேறு ஒன்றும்
கூற இல்லை.
8 அமைச்சர்களில், மனோபாலாவின் நடிப்பு அருமை.
படத்தின் முக்கிய பலமே வடிவேல் தான். நகைச்சுவை காட்சிகள் அதிகம்
இல்லையென்றாலும், தன்னுடைய உடமொழியை வைத்தே படத்தை நகர்த்துகிறார். படம் முழுக்க வசனங்கள் தான்
அதிகமாக வருகின்றன. அதனால் இது வடிவேலுவின் படம் என்று சொல்லுவதற்கு கொஞ்சம் கடினம்
தான். மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம்.
எப்படியோ வந்துட்டார்... விரைவில் அவரது பாணியில் வரும் படத்தை ரசிப்போம்... சிரிப்போம்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி
Deleteரீ-எண்ட்ரி... என்பதற்காக பார்க்க நினைத்திருக்கும் படம்....
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்
Deleteஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் நெருடல் தான்..
ReplyDeleteகதாநாயகி அதிகமாக கவர்ச்சி காட்டியிருக்கிறாரோ?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை.
Deleteகதாநாயகிகளின் நிலைமை இப்படித்தானே இருக்கிறது.
ஒரு வழியா வனவாசம் நல்லபடியா முடித்து வந்து விட்டார் என்கிறீர்கள். பிரமோசன்னோடு தான் வந்திருக்கிறார் கதாநாயகனாக அப்போ பறவாய் இல்லை. நல்ல விடயம் நன்றி வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteவந்துட்டாருய்யா வந்துட்டார்
ReplyDeleteபடத்தினைப் பார்த்து ரசிப்போம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Delete