Wednesday, September 3, 2014

ஆணின் தோல்விக்கு பின்னால் பெண் இருக்கிறாள்




                (பட உதவி - கூகிள் ஆண்டவர்)

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால், ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லுவார்கள். வாழ்க்கையில் ஒரு ஆண் வெற்றி பெறும்போது, அதில் அவனுடைய மனைவியின் பங்களிப்பானது மிக முக்கியமாக இருக்கும். அது போல் வேலையிலோ அல்லது வியாபாரத்திலோ வெற்றி பெற்ற ஒரு பெண், தன்னுடைய இந்த வெற்றிக்கு தன்னுடைய கணவர் தான் காரணம் என்று கூறுவார். இவ்வாறு, ஒரு ஆணுடைய வெற்றிக்கு பெண்ணும், பெண்ணுடைய வெற்றிக்கு ஒரு ஆணும் காரணக்கர்தாவாக இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் படித்த ஒரு செய்தியோ, பெண்களால் தான் ஆண்கள் தோற்று போகிறார்கள் என்று கூறியது. அந்த ஆண்களின் தோல்வி வாழ்க்கையில் இல்லை, விளையாட்டில். அதுவும் இந்தியாவில், மிக மிக பணக்கார விளையாட்டான கிரிக்கெட்டில் தான். நம் ஆட்கள் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு, அவர்களது மனைவியரும், தோழியரும் தான் காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்லியிருக்கிறது. நம்மவர்கள் விளையாடி தோற்றதற்கு, எப்படி அவர்களது மனைவியர் காரணமாவர்கள் என்று நீங்கள் ரொம்ப யோசிக்க வேண்டாம். காரணம் இது தான், கிரிக்கெட் வாரியம், வீரர்களோடு அவர்களது மனைவியைரையும், தோழியரையும் இங்கிலாந்து செல்ல அனுமதித்திருந்தது. வீரர்களை, பயிற்சிக்கு அனுப்பாமல், அவர்களை தங்களோடு ஊர் சுற்றவும், ஷாப்பிங் செய்யவும் அவர்களுடைய மனைவியர் கூட்டிக்கொண்டு சென்று உள்ளார்கள். மேலும், வீரர்கள் விளையாட நினைத்தாலும், அவர்களை விளையாட முடியாதபடி, குழப்பி, திசை திருப்பி விட்டார்கள் என்று வீரர்களின் தோல்விக்கு அலசி ஆராய்ந்து காரணம் சொல்லியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம்.

இதுவே, இந்தியா இந்த இங்கிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்தால், இந்த முழு வெற்றிக்கும், வீரர்களோடு சென்ற அவர்களது மனைவிய\ரும்,தோழியரும் தான் காரணம் என்று கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக சொல்லியிருக்கும். வாரியம் சொல்ல வில்லையென்றாலும் கூட, நம் வீரர்கள் கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆக மொத்தத்தில், இவர்களின் வெற்றி தோல்வி காரணங்களுக்கு ஒரு பெண் தான் தேவைப்படுகிறாளே ஒழிய விளையாட்டுத்திறன் இல்லை என்று நினைக்கும்போது, இந்த பாழாய்ப்போன கிரிக்கெட்டை நம்பி இன்னும் நம் நாட்டில் பைத்தியங்கள் உலவுகிறதே என்று மனது வேதனையடைகிறது.   

பின்குறிப்பு – அடியேனுடைய கட்டுரை படைப்பும், நாடகமும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. அதனைப்பற்றிய பதிவுகள் விரைவில் ..... 


15 comments:

  1. உண்மைதான் நண்பரே...கிரிக்கெட் கிறுக்கர்கள் நிறைந்து விட்டார்கள் இந்தியாவில்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. //இந்த பாழாய்ப்போன கிரிக்கெட்டை நம்பி இன்னும் நம் நாட்டில் பைத்தியங்கள் உலவுகிறதே என்று மனது வேதனையடைகிறது.//

    அதே ஃபீலிங்! :)

    ReplyDelete
  3. கிரிக்கெட்டை நம்பும் கிறுக்கர்கள் மோகம் என்று தீருமோ ?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான் ஜீ

      Delete
  4. வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருப்பதாக பெருமை கொண்டோமே இப்படி சொல்லி எம்மை கவலைக்குள்ளாக்கி விட்டீர்களே சகோ நியாயமா. கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்க விடமாட்டீர்களே. ஹா ஹா ... தொடர வாழ்த்துக்கள் ,,,!
    உடல் நலம் தேவலையா இப்போ.?சகோ

    ReplyDelete
    Replies
    1. கிரிக்கெட் ஆளுங்க சொல்றதெல்லாம் நினைச்சு கவலப்படக்கூடாது சகோ.

      உடல் நலம் நன்றாக இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  5. இந்த பாழாய்ப்போன கிரிக்கெட்டை நம்பி இன்னும் நம் நாட்டில் பைத்தியங்கள் உலவுகிறதே என்று மனது வேதனையடைகிறது. //

    உண்மை! உண்மை! நாங்களும் அப்படியே! நேரம் விரயம்! அதுவும் அந்த விளையாடு எப்போது ஏமாற்று விளையாட்டாகிவிட்டது! ஊழல் நிறைந்து....

    நல்ல பதிவு!

    தங்கள் நாடகம், கட்டுரைப் படைப்பு நன்றாக நடந்தேறிதற்கு மிக்க மகிழ்ச்சி....எதிர்ப்பர்க்கின்றோம் தங்கள் பதிவை.....திங்கள் கிழமை வரை நாங்கள் இருவருமே சிறிது பிஸி....நேரமின்மை காரணமாக வலைத் தளம் வருவது சிறிது கடினம்...பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பரே! திங்களிலிருந்து மீண்டும் வருவோம்....

    ReplyDelete
    Replies
    1. கிரிக்கெட் ஊழல் விளையாட்டு என்ற தங்களின் எண்ணமே தான் எனக்கும்.

      நீங்கள் உங்கள் வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு வாருங்கள் துளசி சார்.
      எனக்கும் வலைத்தளத்திற்கு தினமும் வருவது என்பது சிறிது சிரமமாகத்தான் இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்.

      Delete
  6. கிரிக்கெட்டை நம்பி இன்னும் நம் நாட்டில் பைத்தியங்கள் உலவுகிறதே என்று மனது வேதனையடைகிறது.
    சிந்திக்கவேண்டியதுதான்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  7. இந்த பாழாய்ப்போன கிரிக்கெட்டை நம்பி இன்னும் நம் நாட்டில் பைத்தியங்கள் உலவுகிறதே என்று மனது வேதனையடைகிறது. //


    ஆமாம்...வேலைவெட்டியை விட்டுட்டு...அதே கதிடா சாமின்னு இருக்கிறார்கள்....
    என்ன.. செய்வது...ம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  8. செம நச்சு போட்டுதாக்கிருக்கிங்க சகோ:) சூப்பர்!!
    உடல் நலம் தேவலையா? take care.

    ReplyDelete
  9. வெற்றி பெற்றால் தூக்கி வைத்து கொண்டாடுவதும் தோல்வி அடைந்தால் தூக்கி எறிவதும் தானே நமது ‘பண்பாடு’. எனவே இது குறித்து வேதனை அடைவதேன்?
    தங்களுடைய கட்டுரை படைப்பும், நாடகமும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது கேட்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்! அதனைப்பற்றிய பதிவுகளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

    ReplyDelete