நான் 40 வயது வரைக்கும் உடம்பைப் பற்றி யோசிக்காமல் இருந்து
விட்டேன் (உடற்பயிற்சி என்றால் என்ன, என்று கேட்கும் அளவில் தான் இருந்தேன்). 40 வயதுக்கு பிறகு தான் உடம்பைப்
பற்றிய பயம் வந்தது. அதனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மருத்துவரிடம் சென்று முழு உடல்
பரிசோதனையை செய்தேன். அப்போது இந்த சக்கரை, கொலஸ்ட்ரால் இதெல்லாம்
எதுவிமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். இரண்டு
வாரத்திற்கு முன்பு மீண்டும் முழு உடல் பரிசோதனையை செய்யும்போது, கொலஸ்ட்ரால் 6.2 இருக்கிறது. 5.2க்குள் தான் இருக்க வேண்டும். அதனால் நீங்கள்
உணவியலரை (Dietician) சந்தித்து, அவரின்
அறிவுரைப்படி, உங்களின் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்
என்று என்னுடைய மருத்துவர் எடுத்துரைத்தார்.
அதன்படி, நேற்று அந்த உணவியலரை சந்தித்தேன். அவர் உங்களுடைய உடம்பில் கெட்ட கொழுப்பு
அதிகமாக உள்ளது, நீங்கள் மது அருந்துவது இல்லாததால், உங்களுடைய தினசரி உணவு முறைகளை சொல்லுங்கள் என்றார். நானும் என்னுடைய உணவு
முறைகளை சொன்னேன். அவர் எல்லாத்தையும் கணினியில் பதிவேற்றிக்கொண்டு, என்னிடம் இரண்டு தாள்களை கொடுத்தார். அதில் கொழுப்புச் சத்து சம்பந்தமான உணவுத்திட்டம்
இருந்தது. எதெல்லாம் உடம்பில் கெட்ட கொழுப்பை (LDL கொலஸ்ட்ரால்)
உருவாக்கக்கூடியது, எதெல்லாம் நல்ல கொழுப்பை(HDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது என்று
குறிப்பிட்டு இருந்தது.
நான் சைவம் என்பதால், அந்த உணவியாலர் அசைவ உணவு வகைகளை அடித்து விட்டார்.
இதனை பார்த்து, நீங்களும் அதன்படி உங்களின் உணவு பழக்கங்களை மாற்றிக்கொண்டு, இந்த கெட்ட கொழுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.
இப்போதெல்லாம் நான் மதியம் அலுவலகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, கோவிலில் வெளிப் பிரகாரம்
வருவது மாதிரி 20 நிமிடங்களுக்கு அலுவலகம் உள்ள சாலையை 3 முறை பிரகாரமாக வருகிறேன்.
பிறகு இரவு உணவு சாப்பிட்டு விட்டு. வீட்டிற்கு பின்னால் இருக்கும் இடத்தில் 108 சுற்று
சுற்றி வருகிறேன். தினமும் இதையெல்லாம் கோவிலில் செய்துக்கொண்டிருந்தால் புண்ணியமாவது கிடைக்கும்!!
அடுத்த மாதம் மீண்டும் நான் அந்த உணவியலரை சந்திப்பேன். அப்போது
அவர் கூறும் விஷயங்களை இந்த பதிவின் தொடர்ச்சியாக பதிகிறேன்.
கொலஸ்ட்ரால் வரும் முன் காப்போம்!!!!!
நல்ல குறிப்புகள்..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
Deleteதினமும் இதையெல்லாம் கோவிலில் செய்துக்கொண்டிருந்தால் புண்ணியமாவது கிடைக்கும்!!
ReplyDeleteபயனுள்ள குறிப்புகள்..பாராட்டுக்கள்..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி
Deleteபயனுள்ள குறிப்புகள் ... தொடருங்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
Deleteஎன் உடம்பு வெயிட்டை குறைக்கனும்ங்குற நேரத்துல பயனுள்ள பகிர்வு.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. கண்டிப்பாக வெயிட்டை குறையுங்கள். அது மிகவும் நல்லது.
Deleteநல்ல விஷயம், வருமுன் காப்போம்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. எந்த ஒரு நோயையுமே வருமுன் காத்துவிட்டால், பிறகு பிரச்சனை இல்லை.
ReplyDelete