சமீபத்தில் ஒரு இணையத்தளப் பத்திரிக்கையில் இந்த செய்தியை
படிக்க நேர்ந்தது. இந்த செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். அப்படி படிக்க
முடியாமல் போனவர்களுக்காக இந்த பதிவு.
இன்று பேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துக்கொள்ளாதவர்களை விரல்
விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு நாம் அவைகளின் அடிமையாகி விட்டோம். அதிலும்
குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் இவைகளே கதியென்று இருக்கின்றனர். இவைகள் மூலமாக
நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லது இருந்தால், கெட்டதும் இருக்கத்தானே செய்யும். ஆனால், நாம்
கொஞ்சம் சுதாரிப்போடு இருந்தால், அந்த கெட்டவைகளை
நீக்கிவிட்டு, நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும். அப்படி
சுதாரிப்போடு இல்லாமல் போனதால் ஒரு பெண்ணிற்கு நடந்த அநியாயத்தை அந்த இணையத்தளப்
பத்திரிக்கை ஒரு செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதோ அந்த செய்தி:
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்… எச்சரிக்கைச் செய்தி..
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்.. எனக்குத் தெரிந்த
நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது.. Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
ஒருநாள், அத்தளத்தில் ‘அழகான தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது
பேரதிர்ச்சி… ஆம்…!
அதில் அவரது ‘தங்கையின்’ புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்.. நன்றாக யோசித்துப் பாருங்கள்… ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி
இருந்திருக்குமென்று..! தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று
அறைந்தவர் இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ.. ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம்
எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்.. (அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக்
காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி.. அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture… அப்போதுதான் அவருக்கு உறைத்தது.. #Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..
அதன்பிறகு, உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது.. இதனை இங்கே ஏன்
சொல்கிறேன் என்றால், இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று
எல்லோருக்கும் தெரியும்.. இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல், இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் #இணையஉலகில் நம்மை நாமே காத்துக்
கொள்ளவேண்டும்.. இதற்கு, நமது #பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் ‘நட்பிற்கான விடுகையைத் தரும்போது’ (friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்.. ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும்
வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்.. அப்படியொருவேளை இதில்
விருப்பமில்லையென்றால், #உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..
இதுதான் மிகச்சிறந்தவழி.. இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்.. இது
பெண்களுக்கு மட்டுமல்ல.. எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத்
தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்.. பொழுதுபோக்கிற்காக உலாவ வரும்
பெரும்பாலோனோருக்கு, இங்கே பல புறம்போக்குகளும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை
கைவலிக்க எழுதியுள்ளேன்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
நன்றி – (சொல்வது எங்கள் கடமை – தீர்மானிப்பது உங்கள் கையில்)
நன்றி: கடையநல்லூர் இணையம்
|
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
அது மாதிரி,
பேஸ்புக்கால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை பேஸ்புக் கொண்டே தெரியப்படுத்தி, மற்றவர்களுக்கும் இம்மாதிரியான ஒரு பிரச்சனை ஏற்படாமல் தடுப்போம்.
நல்லது நன்றி... you can visiit :http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஉண்மைதான்! முகநூலில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்! நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஇது இணையத்தில் வலம் வந்த செய்தி இதை படித்துவிட்டு அப்படியே ஒதுக்கிவிட்டு போகாமல் இதை ஒவ்வொருவரும் தன் குடுமபத்தில் உள்ளவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.. இணையம் இதயத்தையும் தொடும் அல்லது இழிவையும் தரும் ..அதனால் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கண்டிப்பாக நாம் ஜாக்கிரைதையாக இருந்தால் இம்மாதிரியான ஒரு சூழ்நிலை ஏற்படாது.
Deleteஎச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.. தெரியாத நபர்களை friend list ல் சேர்ப்பதை தவிர்க்கலாம்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஎச்சரிக்கை பகிர்வுக்கு நன்றிகள்..!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஇங்கே எச்சரிக்கை அவசியம் தேவை .... :(
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கண்டிப்பாக தேவை.
Deleteஎச்சரிக்கைப் பகிர்விற்கு மிக்க நன்றி .தொடர்ந்தும் இது போன்ற சமூக
ReplyDeleteசீர்கேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் அதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு என்
மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி
Delete