Saturday, December 28, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – எங்கள் காட்சிகளில் ஏற்பட்ட ஆள் மாறாட்டங்கள்


அந்த நடனம் கத்துக்கிற காட்சி சனிக்கிழமை அன்றைக்கு எடுத்து முடிச்சாங்க. நானும் என்னோட மற்ற மூன்று நண்பர்களும் கடைசியாத்தான் போனோம். அதனால அன்னைக்கு தனியா விஜய் கூட புகைப்படம் எடுக்க முடிஞ்சது.இப்ப நான் ஒண்ணு சொல்லியாகனும், முதல் காட்சியில, நாங்க 10பேர் இருப்போம். அதற்கு பிறகு அடுத்த காட்சியான உணவகக் காட்சியிலும் நாங்க அதே 10பேர் இருப்போம்(இந்த ரெண்டு காட்சியும் ஒரே நாள்ல எடுத்தாங்க). அப்புறம் மூணாவது காட்சியான அந்த ஜாக்கிங் காட்சியில மூன்று பேர் வரலை. ஆனா அதற்கு பதிலா புதுசா ரெண்டு பேர் சேர்ந்தாங்க. மற்ற காட்சிகளிலும் இந்த 9பேருக்கு பதிலா 8 பேர் தான் இருப்போம். எனக்கு ஒரே ஆச்சிரியமா இருந்துச்சு, எப்படி இயக்குனர் இதையெல்லாம் கண்டுக்காம இந்த காட்சிகளையெல்லாம் எடுத்துக்கிட்டு இருக்காருன்னு. எங்களோட மொத்த காட்சியையும் பார்த்தீங்கன்னா, குமுதத்தில வர்ற 6வித்தியாசங்கள் மாதிரி, நீங்க இந்த ஆள் மாறாட்ட வித்தியாசத்தை கண்டுப்பிடிக்கலாம். ஆனா ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் ரொம்ப கஷ்டப்படாம உங்க கண்ணுக்கு புலப்படும்.

உங்களுக்கு அந்த வித்தியாசம் என்னன்னு தெரிஞ்சுதுன்னா, பின்னூட்டத்துல சொல்லுங்க. இயக்குனர் ஏன் இதுல ரொம்ப சிரத்தை எடுக்கலைன்னா, இவனுங்க வெறும் காமெடி பீஸ் தானே, எதுக்கு அவ்வளவு கஷ்டப்படணும்னு நினைச்சிருப்பாரு”. அதனால இந்த வித்தியாசத்தையெல்லாம் அவரு ஒரு வித்தியாசமாகவே நினைக்கலை.

மறு நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு எஸ்‌எம்‌எஸ், நீங்க மறு நாள் சரியா 4மணிக்கெல்லாம் அந்த நடனக் காட்சி எடுத்த இடத்துக்கு வந்துடுங்கன்னு”. எனக்கோ, அரை நாள் லீவு போடலாமா அல்லது 3மணியை போல பர்மிஷன் போட்டு போகலாமான்னு ஒரே யோசனை. பர்மிஷன் போடுறதுல ஒரு சிக்கல் என்னன்னா, நாம கிளம்பலாம்னு நினைக்கும்போது தான், ஏதாவது ஒரு ஏழரை நம்ம தலையில வந்து விழும். அப்புறம் அதை முடிச்சு கொடுக்காம போக முடியாது. இதுக்கு பயந்தே அரை நாள் லீவு போடலாம்னு நினைச்சேன். ஆனா ஏற்கனவே, இந்த படத்துக்காக சம்பளம் வாங்காம வெட்டியா ரெண்டு நாள் லீவு போட்டதே அதிகம்னு, பர்மிஷனே பொட்டுக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்படி ஏதாவது நமக்கு ஏழரை வந்துச்சுன்னா, அதை அப்படியே படபிடிப்புக்குழுவிற்கு தள்ளிவிடுவோம்னு  ஒரு தைரியமான முடிவெடுத்து ஆபிஸுக்கு போனேன். காலையிலிருந்து, என்ன சொல்லி பர்மிஷன் போடலாம்னு வேலையே பார்க்காம(!!), யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இவுங்க முன்னாடியே சொல்லியிருந்தா, அதற்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு பொய்யை ஆபிஸில் சொல்லி பர்மிஷன் வாங்கியிருக்கலாம். 11 மணியை போல வெற்றிக்கரமா ஒரு பொய்யை யோசிச்சு, என்னோட மேனேஜருக்கு, “இந்த மாதிரி இன்னைக்கு எனக்கு 4 மணிக்கு dentist appointment இருக்கு, அதனால நான் 3 மணிக்கெல்லாம் இன்னைக்கு கிளம்பிவிடுகிறேன்னு” ஒரு மெயில் அனுப்பிச்சேன். அந்த மேனேஜருக்கு, தான் தான் இந்த கம்பனியை தாங்கிப்பிடிக்கிறதா ஒரு நினைப்பு. அதனால, என்னோட மெயிலைப் பார்த்த உடனே, “ஏன் இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்லன்னு” திருப்பி ஒரு பதில் மெயில். அட,கிரகம்புடிச்சவனே!, எனக்கே நேத்து ராத்திரி தாண்டா தெரியும், இதுல, நான் எங்கேருந்து முன்னாடி சொல்றதுன்னு மனசுக்குள்ளே திட்டிக்கிட்டு, “நான் சுத்தமா இன்னையோட appointmentடை மறந்துட்டேன், காலையில அந்த கிளினிக்லேருந்து confirmation போன் வந்தப்புறம் தான் எனக்கே நியாபகம் வந்துச்சுன்னு” ஒரு பிட்டைப்போட்டு,

சரியா 3மணிக்கெல்லாம் ஆபிஸை விட்டு கிளம்பி போனேன். 3.45மணிக்கு அந்த இடத்துக்கு போனா, யாரையும் காணோம், படப்பிடிப்பு நடக்கிற மாதிரியான ஒரு அறிகுறியே காணோம். மற்ற நண்பர்களுக்கு போன் போட்டா, அவுங்களும் நாங்க இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவோம்னு சொன்னாங்க. அப்புறம் அந்த உதவி இயக்குனர் கிருஷ்ணாவுக்கு போன் போட்டா,”சார் நீங்க அங்கேயே இருங்க நாங்க இன்னும் ஒரு கால் மணி நேரத்துல வந்துடுவோம்னு சொன்னாரு”. சரின்னு நானும் காத்துக்கிட்டு இருந்தேன். 4.15 மணிக்கு இன்னொரு ஒரு நண்பர் வந்தாரு. 4.30 மணி ஆயிடுச்சு, அந்த நண்பரை தவிர மற்ற நண்பர்களையும் காணோம், படப்பிடிப்பு குழுவையும் காணோம்.

அப்புறம் எத்தனை மணிக்கு, படப்பிடிப்பு குழிவினர்,நண்பர்கள் எல்லாம் வந்தார்கள்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

- இன்னும் சொல்கிறேன்


12 comments:

 1. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரூகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 2. என்னென்னவோ ஆள் மாறாட்டம் பண்றாங்க, ஆடியன்சா பாக்கிற நமக்கு அது தெரிய மாட்டேங்குது....

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆள் மாறாட்டம் தெரிவது கஷ்டம் தான். ஏன்னா, இயக்குனர் 5,6 பேரை மட்டும் தான் போகஸ் பண்ணியிருப்பார். ஆனா நான் சொன்ன இன்னொரு வித்தியாசம் ரொம்ப ஈஸியா நம்ம கண்ணுக்கு தெரியும்.

   Delete
 3. பல சமயங்களில் இப்படி காத்திருப்பது கடுப்பேற்றும் விஷயம்.....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னிங்க. அதுவும் இந்த படப்பிடிப்புக்காக ஒரு நாளா ரெண்டு நாளா காத்திருந்தோம்!!! 6,7 நாட்கள் அல்லவா காத்திருந்தோம்.

   Delete
 4. சும்மாவே சினிமான்னா காத தூரம் ஓடுபவள் நான். அதிலயும் எனக்கு விஜய் படம்னா..., ம்ஹூம் நோ சான்ஸ். உங்களுக்காக ரிஸ்க் எடுத்து தலைவா படம் பார்க்குறேன். என் வீட்டாரிடம் சொல்வேன் என் சகோதர் சொக்கன் நடித்திருக்கிறார்ன்னு!!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி சகோதரி. ஆனா எனக்காக அந்த படத்தை ரிஸ்க் எடுத்து எல்லாம் பார்க்காதீங்க.
   ஏற்கனவே பதிவுலக ஆண்களின் மனைவிகளுக்கு, கணவனை எப்படியெல்லாம் அடிக்கலாம்னு டிப்ஸ் கொடுத்திருக்கீங்க. இந்த படத்தை பார்த்துட்டு, நீங்க ஃப்ளைட் ஏறி இங்க வந்து என்னைய அடிச்சாலும் அடிப்பீங்க (ஏன்னா படம் அந்த அளவிற்கு சூப்பர்,டூப்பராக்கும்), அதனால இந்த விளையாட்டுக்கு நான் வரலை.

   இந்த படத்தில் நான் நடித்த(!!) இல்லையில்லை தோன்றிய காட்சிகள் வெறும் இரண்டு நிமிடம் தான். அந்த காட்சிகளையெல்லாம் நான் திரைப்பட அனுபவத்தொடரை முடித்த பிறகு, மொத்தமாக காணொளியாக பதிகிறேன். அப்பொழுது நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

   Delete
 5. சுவாரசியமா இருக்கே உங்க அனுபவங்கள்.
  விரைவில் மீதியையும் படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
   மீதியும் படிங்கள். ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கும், அதில் நடிப்பதற்கும் உள்ள சிரமங்கள் தெரிய வரும்

   Delete
 6. ஆஹா நண்பரே நீங்கள் தலைவா படத்தில் இருக்கின்றீர்களா! அப்ப அதற்காகவே பார்க்க வேண்டும்! இன்னும் பார்க்கல......நல்ல அனுபவம்! சுவாரஸ்யமாகவும் இருக்குது! ஆனா நீங்க கண்டிப்பாக படப்பிடிப்பில் பொறுமை இழந்திருப்பீர்கள் சரியா? நண்பரே! பல டேக்குகள் எடுத்திருப்பார்களே! அடுத்த பதிவிற்கு செல்கின்றோம்!

  ReplyDelete
  Replies
  1. ஐயையோ, எனக்காக எல்லாம் பார்க்க வேண்டாம். நான் வருவது என்னமோ 2-3 நிமிஷம் தான். என்னோட காட்சிகளை நீங்கள் you-tube லேயே பார்த்துவிடலாம். ("தலைவா நகைச்சுவை காட்சி"ன்னு தேடினால் வரும்)

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete