10.45 மணியை போல கிருஷ்ணா வந்து என்கிட்ட உங்க காட்சியை
எடுக்கப்போறோம், அதனால மேல வாங்கன்னு கூப்பிட்டாரு. அவரு வந்து கூப்பிடறதுக்கு ஐந்து நிமிடம்
முன்னாடி, சொல்லிவச்ச மாதிரி என்னோட மற்ற நண்பர்கள் எல்லாரும்
வரிசையா வர ஆரம்பிச்சாங்க. இவுங்க எல்லாம் லேட்டா வருவாங்கன்னு நினைச்சா, எல்லோரும் சீக்கிரமாகவே வந்துட்டாங்களே, நாம நினைச்சது
நடக்கலையேன்னு எனக்கு வருத்தமாப்போச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது, கிருஷ்ணா என்னைய நம்பாம, எல்லோருக்கும் போன் போட்டு
கொஞ்சம் சீக்கிரமாக வர சொல்லியிருக்காருன்னு. அப்புறம் நாங்க எல்லோரும் மேல போனோம்.
அப்பத்தான் நான் போன பதிவுல சொன்ன காட்சியை எடுத்து முடிச்சிருந்ததுனால, இயக்குனர் கொஞ்சம் பிரேக் விட்டிருந்தாரு. எங்களையெல்லாம் பார்த்த இயக்குனர், நடிகர் விஜய் கிட்ட, சார் இவுங்க தான் நம்ம படத்துல
நடிக்கிற அந்த “batchelor team” அப்படின்னாரு. உடனே, விஜய்யும் எங்களைப் பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. ஒரு ரெண்டு நிமிஷம் தான் எங்களோடு பேசியிருப்பாரு, அதுக்குள்ள அவரோட மேக்கப் மேன் வந்து அவரை கூட்டிக்கிட்டு போயிட்டாரு. அப்பத்தான்
ஒருத்தரை நான் பார்த்தேன். அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு, ஆனா சரியா அடையாளம் தெரியலை. பக்கத்துல இருந்த இன்னொரு நண்பரிடம், அவரை காமிச்சு, “ஏங்க இவரு யாருங்க, இவரை எங்கேயோ நான் பார்த்திருக்கேன்னு சொன்னேன்”. உடனே அந்த நண்பரும், “அட! இவரை தெரியலையா, இவரு தான் யூடியூப் புகழ் சாம்
ஆண்டர்சன் அப்படின்னாரு. உடனே எனக்கு நல்லா நியாபகம் வந்துடுச்சு. கொஞ்ச மாசத்துக்கு
முன்னாடி தான், “அது இது எது” ன்னு ஒரு டிவி நிகழ்ச்சியை யூடியூப்ல
பார்த்தேன்.
அதுக்கு பிறகு தான் இவர் நடிச்ச அந்த யூடியூப் மெகா ஹிட் திரைப்படமான “ராசாத்தி”யை
பார்த்தேன். அதிலிருந்து இவரோட பரம விசிறியாயிட்டேன். எப்பவெல்லாம் எனக்கு மனசு ரொம்ப
கஷ்டமா இருக்குதோ, அப்பவெல்லாம் இவர் அந்த படத்துல நடிச்ச நடனத்தையும், பவர் ஸ்டாரோட பேட்டியையும் யூடியூப்ல பார்ப்பேன்.
நண்பர்களே, நீங்கள் மற்ற காணொளியை பார்க்கலைன்னாலும் பாராவாயில்லை, மேலே உள்ள இந்த காணொளியை மட்டுமாவது பாருங்க. "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்".
நானும் என் நண்பரும் இவரைப்பற்றி
பேசிக்கொண்டிருக்கும்போது தான், இயக்குனர், சாம் ஆண்டர்சனை கூட்டிக்கிட்டு வந்து, எங்களிடம் "சார் யாருன்னு தெரியுமான்னு" கேட்டாரு. என்னோட நண்பரும்
சாம் ஆண்டர்சன் சாரை தெரியாம இருக்குமா அப்படின்னாரு. இவரை எத்தனை தடவை நாங்க யூடியூப்ல
பார்த்திருக்கோம், அப்படின்னேன். என் நண்பரும், "என்ன சார் நீங்க, அன்னைக்கு அந்த அது இது எது
நிகழ்ச்சியில, கடைசி வரைக்கும் நீங்க நடிச்ச படத்துல இடம்பெற்ற
வசனத்தை சொல்லவேயில்லையே" அப்படின்னாரு. அவரும், எனக்கு
மறந்துபோச்சுங்க, அதனால தான் அன்னைக்கு சொல்ல முடியாம போச்சுன்னு
சொன்னாரு. நான் இவரை கொஞ்சம் ஓட்டலாம்னு முடிவு பண்ணி,
"சார், அன்னைக்கு தான் உங்களுக்கு மறந்து போயிருக்கும், இன்னைக்கு உங்களோட பரம ரசிகர்களின் விருப்பத்திற்காக அந்த வசனத்தை கொஞ்சம்
சொல்லுங்களேன்னு" சொன்னேன். உடனே, அவர் ரொம்ப சீரியஸா, "ஏங்க, உண்மையிலேயே எனக்கு நியாபகம் இல்லைங்க.
ரொம்ப சாரிங்க" அப்படின்னாரு. இதையெல்லாம் பக்கத்துல நின்னு பார்த்துக்கிட்டு இருந்த இயக்குனருக்கு ஒரே ஆச்சிரியம்.
அவர் கிட்ட, "பாருங்க உங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள்
இருக்காங்க" அப்படின்னு சொன்னாரு. ஆனா, எங்களுக்கு இல்ல
தெரியும் நாங்க அவருக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள்னு.
அந்த புகழ் பெற்ற வசனம் இது தான்,
எனக்கு சாம் ஆண்டர்சன் எப்படி இங்க
வந்தாரு, அவருக்கு
என்ன ரோல்ன்னு ஒரே குழப்பம். உடனே கிருஷ்ணாவிடம் போய், இவர் என்னவாக
நடிக்கிறாருன்னு கேட்டேன். அவர் வந்து அமலாபாலுக்கு கணவராக நடிக்கிறாருன்னு சொன்னாரு.
அவர் இன்னைக்கு தான் வந்தாரான்னு கேட்டேன். அவர் ஏற்கனவே வேற ஒரு நிகழ்ச்சிக்காக மெல்போர்ன்
வந்திருந்தாரு, இந்த படத்துல நடிக்கிறதுக்காக இன்னைக்கு சிட்னி
வந்திருக்காருன்னு சொன்னாரு. நீங்க படத்துல பார்த்தீங்கன்னா,
விஜய், அவரிடம் தேங்க்யு சாம், எங்களுக்காக
ஆஸ்திரேலியா வரைக்கும் வந்ததுக்குன்னு சொல்லுவாரு, அதுக்கு அவர்
ஆஸ்திரேலியாவில சூட்டிங் நடந்ததுனால ஓகே, இந்தியாவ இருந்தா கஷ்டமா
இருக்கும் அப்படின்னு சொல்லுவாரு. அந்த வசனத்தோட உண்மையான அர்த்தம், நான் மேல சொன்னது தான். அவர் மெல்பர்ன்ல இருந்ததுனால, அவரை சிட்னிக்கு வரவழைத்து அந்த காட்சியை எடுத்திருக்காங்க.
அதற்கு பிறகு, இயக்குனர் எங்களையெல்லாம்
கூப்பிட்டு அந்த நடன வகுப்பு காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. அந்த காட்சியை எப்படியெல்லாம்
நகைச்சுவையா எடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன். என்ன, அந்த
காட்சிக்கு கத்திரி போட்டு, ரொம்பவும் சுருக்கிட்டாங்க. இந்த
காட்சி மட்டுமில்ல, அந்த உணவகக் காட்சி, கடைசில அமலாபால் எனக்கு திருமணம் ஆயிடுச்சுன்னு சொல்ற காட்சி இப்படி மூணு
காட்சியையும் சுருக்கிட்டாங்க. அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.
- இன்னும் சொல்கிறேன்
sam anderson - கலக்கறாரே டான்ஸ்ல! :))))
ReplyDeleteநடனம் என்றால் பாக்கியராஜை தான் சொல்லுவார்கள். ஆனால் அவரெல்லாம் இவரிடம் தோற்றுப்போய் விடுவார்.
Deleteசுவையான பகிர்வு! இவருதான் அந்த சாம் ஆன்டர்சன்! கலக்குறாருங்கோ!?!
ReplyDeleteஇவர் நடித்து இன்னும் சில படங்கள் வெளி வர இருக்கின்றன. கண்டிப்பாக பாருங்கள்
Deleteஅட, சாம் ஆண்டர்சனைக் கூட விட்டு வைக்கலையா.... ஹா ஹா... ஏற்கனவே அவர் நடிச்ச பாட்டு படம் எல்லாம் பாத்துட்டதால இப்போ பாக்கலை... (அப்பாடா - தப்பிச்சேன்)
ReplyDeleteஎனக்கு படம் பார்த்தபோதே ஒரு சந்தேகம்... சாம் ஆண்டர்சனை படக்குழுவினர் செலவு செய்து ஆஸ்திரேலியா அழைத்துச் சென்றிருப்பார்களா என்று... இப்போது தெளிவாகிவிட்டது...
ReplyDeleteஅந்த சந்தேகம், சாம் ஆண்டர்சன் பற்றி தெரிந்த என் நண்பர்களுக்கும் இருந்தது. இவரையெல்லாம் செலவு செய்து ஆஸ்திரேலியா வரைக்கும் கூட்டிக்கொண்டு வந்தால் என்னாவது!!!
Deleteஅனுபவங்களை சொல்லிச் செல்லும் முறை சுவையாக இருக்கிறது தொடருங்கள் நானும் தொடர்கிறேன்
ReplyDeleteதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
Deleteஅடடா! தப்பித்து விட்டீர்களே!!! பரவாயில்லை, இவர் நடித்து இன்னும் சில படங்கள் வெளி வார இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்காமலா போய்விடுவீர்கள்!!!
ReplyDelete