Thursday, December 26, 2013

அலுவலகத்தில் - அடுத்தவர் பொருளை பறிக்கும் விளையாட்டு

அனைத்து கிறிஸ்துவ நண்பர்களுக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் வந்துவிட்டாலே, அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டி என்று ஒன்று கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் மூன்று வாரங்களுக்கு முன்பு அந்த சடங்கு நிறைவேறியது. நான் இந்த கம்பெனியில் சேர்ந்து மூன்று கிறிஸ்துமஸ் பார்ட்டிகளை கொண்டாடிவிட்டேன். அந்த மூன்று முறையும் படகு சவாரி செய்து அந்த சடங்கை நிறைவேற்றினேன். இந்த வருடம் ஏதாவது புதிதாக ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று நினைத்திருந்தால், மீண்டும் அந்த படகுச் சவாரியே ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கோ அது போர் அடித்து விட்டது. அதனால் ஒரு பொய்யை சொல்லி, நான் அதிலில் கலந்துக்காமல் இருந்துவிட்டேன். சரி, எல்லோரும் அந்த பார்ட்டிக்கு மதியம் 12மணிக்கு எல்லாம் போய்விடுவார்கள், நாம கொஞ்ச நேரம் பெஞ்ச்சை தேய்த்துவிட்டு, 2மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி போய்விடலாம்னு கணக்கு போட்டு வச்சிருந்தேன். நம்ம போடுற கணக்கு என்னைக்குத்தான் சரியா நடந்திருக்கு. 12மணிக்கு பார்த்தா, 10 பேருக்கு மேல ஆபிஸ்லேயே இருந்தாங்க. என்னன்னு கேட்டா, எங்களுக்கும் படகு சவாரி செஞ்சு போர் அடிச்சுப்போச்சு, அதனால நாங்க போகலைன்னு சொன்னாங்க. எவனும் சீக்கிரமா கிளம்பி போகலை. அப்பத்தான் ரொம்ப மும்முரமா ஆபிஸ் வேலையை பார்த்துக்கிட்டு இருந்தானுங்க. நம்ம மட்டும் சீக்கிரமா கிளம்பி போனா நல்லாயிருக்காதுன்னு எப்பவும் வீட்டுக்கு கிளம்புற மாதிரியே 5.30 மணிக்கு கிளம்பி போனேன்.

இந்த கலாட்டா எப்பவும் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் கலாட்டா. இன்னொரு கலாட்டா என்னன்னா, கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி நடக்கிற “சீக்ரட் சான்டா (secret santa)” கலாட்டா. அது என்னன்னா, எல்லோரையும் ஒரு பரிசை (10$ அல்லது 15$ குட்பட்ட) பேரை எழுதாமல் நன்றாக கிஃப்ட் பேப்பர் சுற்றி கொண்டுவரச் சொல்லுவார்கள். பிறகு எத்தனை பரிசு வந்திருக்கிறதோ, அதற்கேற்ற எண்ணிக்கைகளை சீட்டெழுதி வைத்திருப்பார்கள். பிறகு எல்லோரையும் ஆளுக்கு ஒரு சீட்டை எடுக்கக் வேண்டும். நமக்கு என்ன எண் (நம்பர்) வந்திருக்கிறதோ அந்த வரிசைப்பாடி தான், நமக்கு பிடித்தாமான பரிசை எடுக்கலாம். ஒன்றாம் எண்ணையுடைய நபர், முதலில் ஏதாவது ஒரு பரிசை எடுத்து, அந்த கிஃப்ட் பேப்பரை கிழித்து எல்லோருக்கும் காமிக்க வேண்டும். பிறகு இரண்டாம் எண்ணையுடைவருக்கான வாய்ப்பு. அவருக்கு முதல் எண்ணுடையவர் வைத்திருக்கும் பரிசு பிடித்திருந்தால், அவரிடமிருந்து அதை பறித்து தான் வைத்துக் கொள்ளலாம். இல்லை, புதிதாக ஒரு பரிசை பிரித்து எல்லோரிடமும் காட்டிவிட்டு வைத்துக்கொள்ளலாம். இப்படியாக ஒவ்வொருவரும் மற்றவர்கள் வைத்திருக்கும் பரிசை பறித்துக்கொள்ளலாம். அல்லது புது பரிசை வைத்துக்கொள்ளல்லாம்.

முதல் சுற்றில் எல்லோருடைய வாய்ப்பும் முடிந்த பிறகு, தாங்கள் வைத்திருந்த பரிசை பறிக்கொடுத்தவர்கள், மீண்டும் ஏதாவது ஒரு பிரிக்காத பரிசை எடுத்துக்கொள்ளலாம், அல்லது மற்றவர்களிடமிருந்து அவர்களுடைய பரிசை பறித்துக்கொள்ளலாம். ஒரு பரிசை மூன்று தடவைக்கு மேல் பறிக்க முடியாது என்று ஒரு சட்டம் வேற.

இப்படியாக எல்லோர் கையிலும் ஒரு பரிசு வந்தவுடன், முதலாம் எண்ணுக்குரியவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. அவர் தான் வைத்திருக்கும் பரிசு பிடிக்கவில்லை என்றால், மற்றவர்களிடமிருந்து அவருக்கு பிடித்தாமான பரிசை மாற்றிக்கொள்ளலாம். அவருக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்றால்,அவர் முதலில் எடுப்பதால், அவரால் யாருடைய பரிசையும் பறிக்க முடியாதாம். அதனால் தான், அவருக்கு கடைசியில் அந்த வாய்ப்பைத் தருகிறார்கள்.  

இப்படி ஒரு விளையாட்டு. இதற்கு பெயர் “secret santa”வாம். எப்படியெல்லாம் யோசித்து ஒரு விளையாட்டை கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். நானும் நான்கு வருடமாக இந்த விளையாட்டை விளையாடியதில், இந்த வருடம் தான் என் மாகாரணிகள் விளையாடுவதற்கு ஏற்ற ஒரு பொம்மை கிடைத்தது.




இதுவரை, என்னுடைய அலுவலக அனுபவங்களை கீழேயுள்ள பதிவுகளில் பதித்திருக்கிறேன். 






12 comments:

  1. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  2. //இந்த வருடம் தான் என் மாகாரணிகள் விளையாடுவதற்கு ஏற்ற ஒரு பொம்மை கிடைத்தது.//

    சந்தோஷம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. //நாம கொஞ்ச நேரம் பெஞ்ச்சை தேய்த்துவிட்டு, 2மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி போய்விடலாம்னு கணக்கு போட்டு வச்சிருந்தேன்.///

    உங்க கணக்கு தெரிஞ்சதுனாலதான் நாந்தான் உங்கள் ஆபீஸில் உள்ள ஆட்களிடம் சொல்லி படகு சவாரி செல்லாம உட்காரஸ் சொன்னேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் அந்த கருப்பு ஆடா!!!. ஏதோ ஒரு நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகலாம்னு நினைச்சா, அந்த நினைப்புல மண்ணை அள்ளிப்போட்டுடிங்களே!!!

      Delete
  4. இப்படிதான் இங்கும் பரிசு பொருட்களை மாற்றிக் கொள்வார்கள் ஆனால் பறிக்கும் வழக்கம் இங்கு இல்லை, ஒரு தடவை இப்படிதான் பரிசு பறிமாறிக் கொள்ளும் போது இந்தியாவில் இருந்து புதிதாக வந்தவர்களில் ஒருவர் இங்குள்ள ஆபிஸில் உள்ள ரப்பர் பேண்டு க்ளிப் பின். எல்லாவற்றையும் எடுத்து பரிசாக வைத்துவிட்டார். காரணம் யாரு எந்த பரிசை வைத்தார்கள் என்பது தெரியாததாலும் காசு மிச்சப்படுத்து எண்ணத்தாலும்தான். அந்த பரிசு அமெரிக்கனின் கையில் கிடைத்ததும் மிகவும் கடுப்பாகிவிட்டார். காரணம் அவர் மிக அதிக மதிப்புள்ள பரிசை வைத்து இருந்தாலும் மற்றும் அவர் எடுத்த பரிசு அவர் ஆபிஸில் இருந்து திருடிய பொருட்கள் என்பதாலும்தான் அந்த பொருட்களை வேறு எங்காவது வாங்கி வைத்து இருந்தாலாவது பரவாயில்லை இப்படிதானுங்க நம்ம ஆட்கள் நாடு கடந்து வந்தாலும் அற்ப புத்தியை காண்பித்துவிடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னோட பழைய அலுவலகத்திலும், இந்த மாதிரியான ஒரு அனுபவம் - இங்க எல்லாம் அவுங்க, அவுங்க சொந்தமா காசுப்போட்டு ஜூஸ்,பழம், வாங்கி ஆபிஸ் ஃபிரிஜ்ல வச்சிருப்பாங்க. என்னோட பழைய அலுவலகத்தில, ஆன்-சைட் விசிட்டுக்காக வரும் நம்மவர்கள், அதெல்லாம் ஆபிஸ்லேருந்து தான் வாங்கி வச்சிருக்காங்கன்னு நினைச்சு, ஜூஸ் எல்லாம் குடிக்க ஆரம்பித்தார்கள். கடைசியில் இது ஒரு பெரிய பிரச்சனையாகி, அவர்களுக்கு விளக்க வேண்டியதாகிப்போச்சு.

      Delete
  5. இந்த விளையாட்டு புதிய தகவல்....

    ஹா ஹா... மகாராணிகளுக்கு விளையாடுவதற்கு ஒரு பொம்மை....

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் முதல் வருடம் இது ஒரு புதிய விளையாட்டாக தான் தெரிந்தது. இப்போது பழகி விட்டது.

      Delete
  6. செம விளையாட்டா இருக்கே! :)

    ReplyDelete
    Replies
    1. இந்த விளையாட்டை விளையாடும்போது மிகவும் வேடைக்கையாக இருக்கும்.

      Delete