Friday, December 20, 2013

காலை கழுவும் போலீஸ்!!!–காலில் விழும் மந்திரிகள்!!!!!


நேற்று வழக்கம் போல அலுவலகத்துக்கு trainல போகும்போது  படிக்கிறதுக்கு கதை புத்தகம் எதுவும் இல்லாததுனால, போன்ல தினமலர் படிச்சுக்கிட்டு வந்தேன். (பொதுவா இந்த தினமலர், விகடன் அப்புறம் நண்பர்களோட வலைப்பூவெல்லாம் அலுவலகத்தில தான் படிக்கிறது). அப்படி படிக்கும்போது தான், இந்த செய்தி கண்ல தென்பட்டுச்சு.  

“காலை கழுவிய போலீஸ் அதிகாரி”

                                           (புகைப்படம் நன்றி - தினமலர்)

மாட்டுத் தீவண ஊழல் வழக்குல, மாட்டி சிறைக்குச் சென்ற லாலு பிரசாத் யாதவ் ஜாமீன்ல வெளியே வந்தபோது தான் இந்த கூத்து நடந்திருக்கு. ஜாமீன்ல வெளியே வந்த அவர், நேரா வீட்டுக்கு போகாம கோவிலுக்கு போயிருக்கார்.  அப்ப, டி.எஸ்.பி ரேங்கில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி, லாலுவின் காலை தண்ணீர் விட்டு பாதாபிஷேகம் பண்ணியிருக்கார். நான் இந்த வரியை படிச்சவுடனே, சரி அந்த போலீஸ் அதிகாரியின் கண்களுக்கு, லாலு ஒரு பெரிய ஆன்மீகவாதியாக தெரிஞ்சிருக்கார் போலயிருக்குன்னு நினைச்சுக்கிட்டு (ஏன்னா அரசியல்வாதிகளை விட இப்ப போலி சாமியார்கள் தானே சிறைக்குப் போறது அதிகமாயிருக்கு) தொடர்ந்து அந்த செய்தியை படிச்சேன். உடனே அடுத்த வரில, பக்கத்தில் இருந்த போலீஸ் கான்ஸ்டபுள், லாலுவோட செருப்பை பத்திரமா கைல தூக்கிக்கிட்டு நடந்தார்ன்னு போட்டிருந்துச்சு. அட கடவுளே, எங்க லாலு செருப்பை யாராவது திருடிக்கிட்டு போயிட்டா(?) என்ன பண்றதுன்னு பயந்துக்கிட்டு, அந்த கான்ஸ்டபுள் கையிலேயே தூக்கி வச்சுக்கிட்டு இருந்திருக்காரு. இந்த அவலத்தை கேள்விப்பட்ட அந்த ஊர் காவல்துறை, அந்த இரண்டு பேர் மேலையும் துறை ரீதியா விசாரானைப் பண்ண போறோம்னு சொல்லியிருக்காங்க!. இதை கேள்விப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி, “லாலுவை எனக்கு சின்ன வயசிலிருந்து தெரியும், அவர் மீதுள்ள மதிப்பின் காரணமாகத்தான் , அவருக்கு நான் பாத பூஜை செய்தேன்னு சொல்லியிருக்காரு.

இந்த செய்தியைப் படிச்சு முடிச்சவுடனே, எனக்கு சட்டுன்னு நம்ம தமிழ்நாட்டு மந்திரிங்க தான் நியாபகத்துக்கு வந்துச்சு. அவுங்க தானே, அம்மாவைப் (அவுங்க அம்மாவை இல்லைங்க!!) பார்த்துட்டாலே, படக்குன்னு கால்ல விழுவாங்க. இந்த படத்தைப் பாருங்க, எப்படி, அந்த மந்திரி ஸாஷ்டாங்கம்மா, அம்மாவின் காலில் விழுந்து கும்பிடுவதை.... 

 

                                      (புகைப்படம் நன்றி - கூகிள் ஆண்டவர்)
 
 
 
 
 
(புகைப்படம் நன்றி - கூகிள் ஆண்டவர்)
 


 
வக்கீல் ஒருவரும் அம்மாவின் காலில் விழுவதைப் பாருங்கள்  
 
 
(புகைப்படம் நன்றி - கூகிள் ஆண்டவர்) 


இந்த மாதிரியான, அதிகாரிகளும், மந்திரிகளும் இருக்கும்போது நம்ம நாடு எப்படி முன்னேறும்???

14 comments:

 1. சீட்ல உக்காந்திருக்குறவங்க கூட அம்மா முன் எம்புட்டு பவ்யமா உக்காந்துக்கிட்டு இருக்காங்கன்னு பாருங்க

  ReplyDelete
  Replies
  1. அம்மா முன்பு பவ்யமா உட்காரலைன்னா எப்படி?

   Delete
 2. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருப்பின் தொடருங்கள் சகோ! http://rajiyinkanavugal.blogspot.in/2013/12/blog-post_19.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி. கண்டிப்பாக இந்த வருட இறுதிக்குள் பதிகிறேன்.

   Delete

 3. போலீசாருக்கு அரசியல் தலைவர்கள்தான் கடவுள் அதனால் அது தப்பு இல்லைங்க...

  ReplyDelete
  Replies
  1. சரியாகத் தான் சொன்னீர்கள்

   Delete
 4. அட அம்மாவை லாலுவோட ஒப்பிட்டு இருக்கீங்க....அது நல்லது இல்லை ரத்தத்தின் ரத்தங்கள் இதை கண்டது கொதித்து போய் இருக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏங்க அம்மாவை ஒபாமா கூடவா ஒப்பிடமுடியும். லாலுவிற்கு மாட்டுத்தீவன ஊழல், அம்மாவுக்கோ, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு. கூட்டி கழிச்சுப்பாருங்க, கணக்கு சரியா வரும்

   Delete
 5. எனக்கு போட்டியாக அரசியல் பதிவுகளை போட ஆரம்பிச்சிட்டீங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஐயையோ, அபச்சாரம்!! அபச்சாரம்!!ம, உங்களுக்கு போட்டியா நான் அரசியல் பதிவு போடுறதாவது!!! நீங்க யாரு, தமிழ்நாட்டில ஒரு நிருபர் படையே வச்சுக்கிட்டு, ஒரு பெரிய அரசியல் பத்திரிக்கையே நடத்திக்கிட்டு இருக்கீங்க. நான் ஏதோ என் மன்சுக்கு பட்டதை சொன்னேன் அவ்வளவுதான்.

   Delete
 6. நான் இந்தியாவுக்கே போகமாட்டேன் என்று ஒரு முடிவோடதான் எழுதுகிறேன்...நீங்க எப்படி? தமிழக பக்கம் போகிற ஐடியா இருக்காங்க?

  ReplyDelete
  Replies
  1. இப்பத்தான் புரியுது. எப்படி இவ்வளவு தைரியமா நீங்க இந்த அரசியல் பத்திரிக்கையை நடத்திக்கிட்டு இருக்கீங்கன்னு.

   Delete
 7. இந்த கலாச்சாரம் இப்போது தெறிகிலிருந்து வடக்கு வரை வந்து விட்டது! :(

  ReplyDelete
  Replies
  1. நல்ல விஷயங்கள் தெற்கிலிருந்து வடக்குக்கு போயிருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். போயும், போயும் இந்த மாதிரியான விஷயங்களையா, அவர்கள் நம்மிடிமிருந்து கத்துக்கொண்டிருக்கிறார்கள்??

   Delete