பகுதி-9
நானும்
மேப்பையும் ரோடையும் பார்த்துக்கிட்டே அந்த பஸ்ல வந்தேன். எனக்கு பின்னாடி
உக்கார்ந்த வெள்ளைக்காரரும், என்னையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்திருக்காரு. அது எனக்கு தெரியலை.
அடுத்த பஸ்ஸை எடுக்கிறதுக்கான ஸ்டாப்பும் வந்துச்சு. எதிர் சைட்ல “KMART” கடை ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்குள்ள இருந்துச்சு. எதுக்கு இன்னொரு
பஸ் எடுத்து போகணும், பேசாம இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கே
போனா என்னன்னு யோசிச்சு, அந்த ஸ்டாப்லேயே இறங்கி எதிர்
பக்கம் போறதுக்காக, சிக்னல்ல நின்னேன். எனக்கு பின்னாடி
உட்கார்ந்திருந்தவரும் பின்னாடியே இறங்கி நடந்து அந்த சிக்னல்ல எனக்கு பக்கத்துல
வந்து நின்னாரு. என் கிட்ட வந்து, நீங்க எங்க போகணும்னு
கேட்டாரு. நான் உடனே அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு போகணும்னு சொன்னேன். உடனே, அவருக்கு சிரிப்பு வந்துடுச்சு. அட கடவுளே! இந்த
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு போறதுக்குதானா, நீங்க மேப்பையும்
ரோடையும் பார்த்துக்கிட்டு வந்தீங்க. நான் கூட, நீங்க போக
வேண்டிய பாதையை விட்டுட்டீங்க, எங்க இறங்குறதுன்னு தெரியாம
கஷ்டப்படுறீங்கன்னு நினைச்சேன், ஆமா, நீங்க
அமெரிக்காவுக்கு புதுசா, இல்ல இந்த இடத்துக்கு புதுசான்னு
கேட்டாரு. நான் சிட்னிலேருந்து வறேன்னு சொன்னேன். அவர், உடனே
பரவாயில்லையே, நீங்களே தனியா பஸ் எடுத்து சுத்திப்
பார்க்கிறீங்களான்னு ஆச்சிரியப்பட்டு, சரி, உங்களுக்கு இந்த மாலைப் பொழுது, நல்ல சந்தோஷத்தை
கொடுக்கட்டும்னு சொல்லி, ரோட்டைக் கடந்து, அந்தப் பக்கம் போனாரு. ஊர் பேர் தெரியாத இடத்துல, நம்மளையும்
மதிச்சு, ஏதாவது உதவி வேணுமான்னு கேக்குறதுக்கு கூட ஒருத்தர்
இருக்கறேன்னு நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சிரியமா போச்சு. அப்புறம் நானும் ரோட்டைக்
கடந்து அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்குள்ள போயி, “KMART” கடைக்கு போனேன். சிட்னில இருக்கிற “KMART” கடைக்குள்ள
போனா எப்படி இருக்குமோ, அதே மாதிரி,
கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாம, அப்படியே இருந்துச்சு.
நானும் அந்த கடைக்குள்ளேயும், அங்க இருந்த மற்ற
கடைக்குள்ளேயும் கொஞ்சம் நேரம் சுற்றிப் பார்த்துட்டு,
திரும்பவும் ரெண்டு பஸ் எடுத்து, நான் தங்கியிருந்த
ஹோட்டலுக்கு வந்தேன். அப்பவே மணி ஏழரை ஆயிருந்துச்சு. அந்த இடத்துலேயே, ஒரு ரெஸ்டாரண்ட் இருந்துச்சு. அதுக்குள்ள போய், “pasta”வை ஒரு கட்டு கட்டிட்டுட்டு, நண்பரோட அறைக்கு
வந்தேன். அறைக்குள்ள, நண்பரும்,மனைவியும், அவரோட நண்பரும், அவர் மனைவியும் இருந்தாங்க. அந்த
நண்பரும் அங்கேயே இன்னொரு அறையை எடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சுது. நான் உள்ள
போனவுடனே, “எங்க தனியா போய் சுத்திட்டு வரிங்கன்னு” ஒரு
பெரிய கேள்விக்கனையை எல்லோரும் தொடுத்தாங்க. நானும்,
அமெரிக்கா வந்ததே, ஊரை சுத்திப்பாக்குறதுக்கு தானேன்னு
சொன்னேன். உடனே, இன்னொரு நண்பரோட மனைவி, அது எப்படிங்க நீங்க மட்டும் தனியா அமெரிக்கா வரலாம். மனைவியையும்
கூட்டிக்கிட்டு இல்ல வந்திருக்கணும்னு சொன்னாங்க. ஆஹா,
வீட்டு அம்மணிக்கு இப்படியெல்லாம் சப்போர்ட் கிடைக்குதான்னு நினைச்சேன். என்னோட
ரெண்டு மகாராணிகளும் ரொம்ப சின்னவங்களாக இருக்காங்க. அவுங்களை கூட்டிக்கிட்டு
நாங்க வந்திருந்தோம்னா, நாங்க அமெரிக்காவை சுற்றிப் பார்க்க
வேண்டாம், அமெரிக்காவே எங்களை சுத்தி சுத்திப் பார்த்திருக்கும்னு
சொல்லி, ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். நான்
அமெரிக்கா வருவதற்கு முன்னாடியே, “UNIVERSAL STUDIOS HOLLYWOOD” போறதுக்கு இணையதளம் வழியா முன்பதிவு
செஞ்சு வச்சிருந்தேன். நண்பர்கள் எல்லாம் மறுநாள் என்ன பண்ணப்போறிங்கன்னு
கேட்டாங்க. “HOLLYWOOD STUDIOS” போகப்போறேன்ன்னு சொன்னேன்.
உடனே, அவுங்க எல்லோரும் நாங்களும் வரோம், எல்லோரும் ஒண்ணா போகலாம்னு சொன்னாங்க. மறுநாள்,
எல்லோரும் அந்த நண்பரோட கார்ல “UNIVERSAL STUDIOS HOLLYWOOD”க்கு போனோம். நான் ஏற்கனவே எட்டு வருஷத்துக்கு முன்னாடி, ஜப்பான்ல “UNIVERSAL STUDIOS”க்கு
போயிருக்கிறேன். என்ன இருந்தாலும் அங்க இருந்தது “நகல்”, இது
தானே “அசல்” அதனாலே அசலுக்கும், நகலுக்கும் என்ன
வித்தியாசம்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்தேன்.
சும்மா
சொல்லக்கூடாது, அசல், அசல்தான். நகல், நகல்தான். உண்மையிலே ரொம்ப பிரம்மாண்டமாகவும்,
ஆச்சிரியமாவாகவும் இருந்துச்சு.
உள்ள
போகும்போதே,
அங்க, அங்க நின்னு புகைப்படம் எடுத்துக்கிட்டோம்.
அந்த
அமெரிக்காவிலே இருக்கிற நண்பர் வந்து, இங்க நில்லுங்க, நான் உங்களை புகப்படம்
எடுக்கிறேன்னு, ஒரு இடத்துல நிக்கச் சொல்லிட்டு, என் எதிர்ல, நின்னு ஃபோகஸ் பண்ணிப் பார்த்தாரு, அப்புறம் அப்படி, இப்படின்னு ஃபோகஸ் பண்ணிப்
பார்த்தாரு, கடைசில, குத்த
வச்சுக்கிட்டு ஒரு வழியா என்னைய புகைப்படம் எடுத்தாரு. நான் கூட, இவரு, இந்த இடத்துக்குள்ள வந்தவுடனே, தன்னை ஒரு ஹாலிவுட் காமிரா மேன்னு நினைச்சுக்கிட்டாரு போலன்னு
நினைச்சுக்கிட்டேன். அந்த புகைப்படத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் இவர், உண்மைலேயே, அப்படி நினைச்சிருந்தாலும் தப்பில்லைன்னு தோணுச்சு. இது
தான் அந்த புகைப்படம்.
“SPECIAL
EFFECTS STAGE” அப்படிங்கிற ஒரு இடத்துல,
ஹாலிவுட் படங்கள்ல சில காட்சிகளை எப்படியெல்லாம் எடுத்திருக்காங்கன்னு
காமிச்சாங்க. படத்துல நாம பார்த்து ஆச்சிரியப்பட்டு பார்த்த சில காட்சிகள், இங்க அதை எப்படி எடுத்தாங்கன்னு காமிக்கும்போது,
ச்சை!! இப்படிதான் எடுத்தாங்களான்னு தோணும். அந்த அளவுக்கு தொழில் நுட்பம்
முன்னேறியிருக்கு.
அப்புறம்
ஒரு மணிநேரம் train மாதிரி உள்ள வண்டில போயி உள்ளுக்குள்ள சுத்திப்பார்த்தோம். நிறைய
தெருக்கள்,வீடுகள்ன்னு எல்லா செட்டிங்ஸ்சையும் பார்த்தோம்.
அதற்கப்புறம், “SHREK” திரைப்படத்தை “4D”யில் பார்த்தோம். அந்த அனுபவமும்
ரொம்ப நல்லா இருந்துச்சு. அமெரிக்காவை சுற்றிப் பார்க்க போறவுங்க, கண்டிப்பா இந்த இடத்துக்கு போயே ஆகணும். அந்த அளவுக்கு ரொம்ப நல்லா
இருந்துச்சு.
என்னால ரொம்ப நேரம் அங்க இருக்க முடியலை, ஏன்னா
அன்றைக்கு இரவு தான் நான், அமெரிக்காவிலிருந்து திரும்பி
சிட்னி வந்தாகனும். நான் தங்கியிருந்த ஹோட்டல்லுக்கு ஏர்போர்ட் ஷட்டில் வேன்
6.30க்கு வரும். அதற்குள்ளே, நான் திரும்பி ஹோட்டல்லுக்கு
போகணும். அதனால 4.30 மணிக்கு, நான் “HOLLYWOOD”லேருந்து கிளம்பி, ஒரு டாக்ஸி பிடித்து, “Union Station”க்கு வந்து, அங்கேருந்து ஒரு train எடுத்து
நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு 6.15க்கு வந்து சேர்ந்தேன். சொல்லி வச்ச மாதிரி, சரியா 6.30க்கு அந்த ஏர்போர்ட் ஷட்டில் வேன் வந்தது. நானும் அதில ஏறி, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலயத்துக்கு வந்து,
அங்கேருந்து சிட்னி போற விமானத்துல ஏறி, ஜூன் 15ஆம் தேதி
காலை சிட்னி வந்து சேர்ந்தேன். அன்று தான், எங்கள் இரண்டாவது
மகாராணி இந்த பூவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் ஆன திருநாள். அதனால தான் நானும், இன்னும் ஓரிரெண்டு நாள் அமெரிக்காவில் இருக்காமல் திரும்பி வந்தேன்.
முற்றும்
இனிமையான பயணங்கள்..வாழ்த்துகள்..!
ReplyDeleteமிக்க நன்றி தோழமையே
Deleteஉங்கள் அமெரிக்கப் பயணக்கட்டுரையின் பத்து பாகங்களையும் படித்துவிட்டேன். (1) அடுத்தமுறை பயணக்கட்டுரை எழுதும்போது தயவு செய்வது பத்தி பிரித்து எழதினால் நலமாக இருக்கும்.(படிப்பவர்களின் கண்களுக்கு!) (2) நியூயார்க் பக்கம் எப்போது போவீர்கள்? அப்போது நானும் ஒருவேளை அங்கே இருக்கக்கூடும்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete(1) - மன்னிக்கவும். இனி வரும் பதிவுகளில், பத்தி பிரித்து எழுதுகிறேன்.
(2) - மீண்டும் அமெரிக்காவில் ஏதாவது ஒரு தமிழ் மாநாடு நடந்தால், கண்டிப்பாக செல்வேன். அப்போது தங்களையும் சந்தித்தால் மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் சிட்னி வர நேர்ந்தால், இன்னும் கூடுதல் மகிழ்ச்சியே.
அந்த கிங்கொங்ம் நீங்களும் நல்ல மாட்சிங்... ஹீஹீஹீ...நான் ட்ரெஸ்ஐ சொன்னேன்.....
ReplyDeleteஅட! நீங்க சரியா கவனிக்கலை. என்னோட தொப்பையும் அந்த கிங்காங்கோட தொப்பையும் இல்ல மாட்சிங்கா இருக்குது.
Deleteமனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பதற்கு சரியான உதாரணமா தெரியுதா???
சும்மா சொல்லக்கூடாது .. மனுஷன் குத்தவச்சிக்கிட்டு எடுத்தாலும் குத்துவிளக்கு மாதிரி நல்லாதான்யா ஃபோகஸ் செஞ்சிருக்காரு!!! ரியலி சூப்பர் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete