Tuesday, October 23, 2012

மதுரை ஆதீன மடம் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டது

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மதுரை ஆதீன மடம் இன்று -???

மேல சொன்ன பதிவுக்கு, பாலோஅப் தான் இந்த பதிவு. 
மதுரை ஆதீன மடம் கடந்த  சில மாதங்களாக கேவலமான மனிதர் ஒருவரின் பிடியினால் இருட்டறையில் தவித்து வந்தது. தற்போது அவர் பிடியிலிருந்து விடுபட்டு, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் கொடுத்து தான் இளைய ஆதீனப் பதவியை பெற்றிருக்கிறார் என்று நான் முன்பு சொன்னது தவறு. ஒரு கோடி ரூபாய் என்ற சிறு மீனைப் போட்டு,ஆயிரம் கோடி ரூபாய் என்ற பெரிய திமிங்கலத்தை பிடிக்கப்பார்க்கிறாரோ என்ற ஒரு சந்தேகம் அப்போது இருந்தது. ஆனால் அந்த மனிதர் லேசுப்பட்டவரா என்ன! தூண்டிலைக் கூட போடாமல், பெரிய திமிங்கலத்தையே பிடிக்கப் பார்த்திருக்கிறார் என்பது, மூத்த ஆதீனம் அவர்கள் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, "அந்த மனிதர், ஆதீன மடத்துக்கு நூறு கோடி ரூபாய் தருவதாகவும், அதில் ஐந்து கோடி ரூபாய் உடனே தருவதாகவும் கூறினார், ஆனால் ஒரு பைசா கூட இது நாள் வரை அவர் தரவில்லை. அவர் ஒரு மிகப் பெரிய பொய்யர்" என்று அந்த பேட்டியில் மூத்த ஆதீனம் சொல்லியிருக்கிறார். இப்படி சொன்ன சொல்லை கூட காப்பாற்றாமல் இருந்திருக்கிறார் அந்த கேவலமான மனிதர். மேலும், புதிதாக ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து, அந்த அறக்கட்டளை தான் இனி மடத்துச் சொத்தான ரூபாய் ஆயிரம் கோடியை பராமரிக்கும் என்று அறிவித்திருந்தார். நல்ல வேளை, அந்த கேடுகெட்ட மனிதரை இளைய ஆதீன பொறுப்பிலிருந்து தூக்கியவுடன், அந்த அரக்கட்டளையையும் மூத்த ஆதீனம் கலைத்து விட்டார்.

இந்த பதிவை பதிப்பதற்கு முன், நான் ஒரு பத்திரிக்கையில் படித்த ஒரு கட்டுரை , மீண்டும் மனதை நெருடச் செய்துள்ளது. அதாவது, இளைய மடாதிபதி பொறுப்பிலிருந்து அந்த ஒழுக்கங்கெட்ட மனிதரை நீக்கியதே ஒரு நாடகமாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது அந்த கட்டுரை. இதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இனியும் அந்த பழமையான மடத்தின் பெருமை குன்றாமல் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பம்.

பின்குறிப்பு:

நான் அந்த கேவலமான மனிதரின் பெயரை சொல்லாததற்கு காரணம், அவருடைய பேரை எழுதி, என் கையை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதால் தான். மேலும் அந்த மனிதருக்கு மரியாதை கொடுப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் தான்.

1 comment:

  1. கேவலமான மனிதர் என்று தெரிந்தும் அவர் கொடுக்கும் காசுக்கு ஆசைபட்டு ஒருவர் பழமை வாய்ந்த மடத்தின் பெருமையை காவு கொடுக்க துணிகிறார் என்றால் அந்த மூத்த ஆதீனம் இளையவரை விட எவ்வளவு பெரிய பொறுக்கியாக இத்தனை காலம் வாழ்ந்திருப்பார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? .. மதுரை அதீனமடம் இதுநாள் வரை புனிதம் கெடாமல் இருக்குமானால் இப்படிப்பட்ட அசிங்கியம் பிடித்த ஒருவரை பதவியல் அமர்த்தி அதன் புனிதத்தை கெடுக்க ஒருவர் முன்வருவாரா? இளையவர் கேமராவில் கையும்களவுமாக ஆதாரத்தோடு மாட்டிக்கொண்டர் அவ்வாறு கேமராவில் படம்பிடிக்கவில்லை என்றால் இன்னமும் அவர் புனிதராகவே மதிக்கப்படுவார். மூத்த ஆதீனத்தை இன்னும் கேமராவில் படம்பிடிக்க யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை... அவ்வளவுதான் வித்தியாசம் ... மற்றபடி இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய பொறுக்கி மட்டைகள்தான்... மதுரை ஆதீன மடத்தின் புனிதம் கெட்டு வருடங்கள் பல ஓடிவிட்டன புரிந்துகொள்ளவும்.. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<`

    ReplyDelete