என்னடா போன வருஷம் 62 பதிவுகளை பதிச்சுட்டேன்னு சொன்னான். இந்த வருஷம் ஆரம்பிச்சு ஒரு
மாசம் முடியுது, ரெண்டே ரெண்டு பதிவுகளை
தான் பதிச்சிருக்கான்னு (அதிலும் ஒரு பதிவு, வீட்டு அம்மணியோடது!), நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது. என்னங்க பண்றது, இங்க நாங்க பொங்கல் திருவிழாவை ஜனவரி மாதம் 20ஆம் தேதி மிக விமர்சையா கொண்டாடினோம். அதுக்காக நிறைய வேலைகள் எல்லாம் செய்ய
வேண்டியிருந்தது. இவன் ஒருத்தன் தான் எல்லா வேலையும் செஞ்ச மாதிரி பேசுறானேன்னு
நினைக்காதீங்க. இங்கில்பர்ன்ல இருக்கிற தமிழ் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தான்
இந்த திருவிழாவை கொண்டாடினோம். நான் இதுல பெரியவங்க நாடகம் ("ஒரு காதல்
கதை") ஒண்ணும், சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்
ஒன்றும் ("அல்வா சாப்பிட்டால்") மேலும் மேடை சிரிப்பு நிகழ்ச்சி
("கண்ணம்மாப்பேட்டை") ஒன்றும் பண்னினேன். இது எல்லாத்துக்கும் கடைசி
நேரத்தில் தான் கதை மற்றும் நாடக வசனம் எல்லாம் எழுதி அதுல நடிக்கிறவங்களுக்கு
கொடுத்து மனப்பாடம் பண்ண சொல்லி அவர்களை எல்லாம் ஒரு வழி பண்ணி ஒரு வழியா அரங்கேற்றினோம். அதனால 20ஆம் தேதி வரைக்கும் என்னால வலைப்பூ
பக்கம் வர முடியலை. 21ஆம் தேதி, எங்க வீட்டு அம்மணி வலது கண்ணுல "GLAUCOMA" ஆபிரேஷன் செஞ்சுக்கிட்டாங்க. அதனால நான் ரெண்டு
வாரம் லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம்
செஞ்சுக்கிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்.
(இதெல்லாம் சூட்டோட சூட்டா சொல்லிடனும். அதற்கப்புறம் நான் காதல் கீதத்தோட முடிவு
பகுதியை பதியுறேன்) . இதற்கு நடுவுல போன வெள்ளிக்கிழமை இரவு என்னோட மிக மிக
நெருங்கிய நண்பரோட மகன் (அவர் இந்த வருடம் மருத்துவராகியிருப்பார்)தவறிவிட்டார்.
அந்த துக்கமும் சேர்ந்துக்கொண்டதால், என்னால் கணினி பக்கமே போக
முடியவில்லை.
இவையெல்லாம் தான் என்னோட தாமதத்துக்கு காரணங்கள். கண்டிப்பாக இனிமேல்
ஒழுங்காக பதிவுகளை பதிவேன் என்று நம்புகிறேன்.
நாங்களும் உங்களைதான் மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறோம் ... தாமதிக்காமல் பதிவுகள் போடவும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete