எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்தியாவில் இருந்த வரை, நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம்.
வெளிநாட்டிற்கு வந்த பிறகு, வழக்கப்படி கொண்டாடவில்லை என்றாலும், ஒரு வருடம் கூட கொண்டாடாமல் விட்டதில்லை. இங்கு கிடைக்கின்ற பொருட்களை
வைத்து பொங்கலை கொண்டாடி வருகிறோம். இங்கு பொங்கல் அன்று விடுமுறை இல்லாததால், நான் இதுவரை அன்றைக்கு விடுமுறை எடுத்ததில்லை. அதனால் வீட்டு
அம்மணி மட்டும் பொங்கல் எல்லாம் செய்து சாமி கும்பிட்டுவிடுவார்கள். நான் இரவு வீட்டிற்கு
சென்றவுடன், பொங்கல் உணவு என்னை வரவேற்கும். இப்படித்தான் இத்தனை வருடங்களாக
நடந்தது. இந்த ஆண்டு, மகாராணிகளுக்காக, நான் விடுமுறை எடுத்துவிட்டேன். இதற்கு ஒரு முக்கிய காரணம்
இருக்கிறது. கிறிஸ்துமஸ் சமயத்தில், ஓவியாவும், இனியாவும், நாமும் அந்த பண்டிகையை கொண்டாட வேண்டும், வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுக்
கொண்டிருந்தார்கள். நாங்களும் முதலில் நம்முடைய பண்டிகைகளை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
பிறகு நாமும் கிறிஸ்துமஸ் மரம் எல்லாம் வைத்து அந்த பண்டிகையையும் கொண்டாடுவோம் என்று
கூறியிருந்தோம்., அதனால் நம்முடைய தனித்துவமான பண்டிகையான பொங்கலை கொண்டாடி அவர்களுக்கும் சொல்லிக்கொடுப்போம் என்று எண்ணித்தான் இன்று விடுமுறை
எடுத்திருந்தேன்.
எங்களுடைய வழக்கமானது,முதல் நாள் இரவே பொங்கப்பானைக்கு கோலம் போட்டு
(பித்தளையால் ஆன இரண்டு பானைகள்), சாமி அறையில் நடு வீட்டுக் கோலம் போட்டு,பொங்கலன்று, கத்திரிக்காய் கொழம்பு, வாழைக்காய் கொழம்பு, பரங்கிக்காய் கொழம்பு, கருணைக்கிழங்கு கொழம்பு (4 கொழம்பு வகைகள்), பிளாக்காய் கூட்டு, சக்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்,அவரக்காய் பொரியல் (மூன்று காய் வகைகள்)எல்லாம் செய்து, இரண்டு இரும்பு அடுப்பில் விறகு மூட்டி சர்க்கரை பொங்கலும், சாதமும் செய்து, சாமிக்கு வைத்து கும்பிட வேண்டும்.
இங்கு பித்தளைப் பானை இல்லை அதனால் சில்வர் பானையைத்த்தான் பயன்படுத்கினோம்.
அப்புறம் விறகு அடுப்பு எல்லாம் கிடையாது,காஸ் அடுப்புத்தான். நாலு கொழம்புல கருணைக்கிழங்கு கிடைக்காது. அதனால் ஒரு கொழம்பு கட், அதற்கு பதில்,தட்டப்பத்தெங்க்காய் பொரியல். பானையை சுற்றி கட்டுவ்தற்கு மஞ்சக் கிழங்கு மிஸ்ஸிங்.
நேற்று இரவே, அம்மணி நடு வீட்டு கோலம் போட்டார்கள்.
ஓவியாவும்,இனியாவும் பொங்க பானைக்கு அவர்களுக்குத் தெரிந்த வகையில் கோலம்
போட்டார்கள்.
(ஓவியாவும் இனியாவும் பானைக்கு கோலம் போடும் காட்சி)
(ஓவியாவும் இனியாவும் பானைக்கு கோலம் போடும் காட்சி)
(அவர்களின் கைவண்ணத்தில்)
(அவர்களின் கைவண்ணத்தில் )
(இருவரும் தரையில் கோலம் போடுகிறார்கள்)
(இடது புறத்தில் இருப்பது இனிய வரைந்த படம். வலது புறத்தில் இருக்கும் பூ ஓவியா வரைந்த படம்)
இன்று காலை காஸ் அடுப்பில் பொங்கல் செய்து,
(காஸ் அடுப்பில் அம்மணி போட்ட கோலம் )
(சர்க்கரைப் பொங்கலுக்கு, இருவரும் முந்த்ரிப்பருப்பை உடைத்துக் கொடுக்கிறார்கள் )
மற்ற கொழம்பு காய்
வகைகளையும் செய்து சாமி கும்பிட்டு சாப்பிட்டு, பொங்கல் திருநாளை
நல்லபடியாக கொண்டாடி முடித்தோம்.
(நம்மூர் மாதிரி,இங்கு பிளக்காயை வங்கி நறுக்கி பிளாக்காய் கூட்டு செய்ய வேண்டாம். நறுக்கப்பட்ட பிளக்காயே ஒரு டிண்ணில் கிடைக்கிறது. அதனை வாங்கி சுலபமாக கூட்டு செய்துவிடலாம் )
நண்பர் வேலு அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து கரும்பும் வாழை இலையும் கிடைத்து.
சாப்பிடும்போது, அம்மணி டேஸ்ட் பார்க்காம
செஞ்சதுல பிளாக்காய் கூட்டில் உப்பு கம்மியாகி விட்டது என்றார். ஓவியா ஏன் டேஸ்ட் பார்க்காம செய்யணும் என்று
கேட்டார். அதற்கு அம்மணியும்,இந்த சாப்பாட்டையெல்லாம் சாமி தான் முதல்ல
சாப்பிடுவார், அதனால சமைக்கும்போது டேஸ்ட் பார்க்க கூடாது
என்று கூறினார். உடனே ஓவியா, சாமி எங்க சாப்பிட்டுச்சு, நாம தானே எல்லாத்தையும் சாபிடுறோம் என்று ஒரு கேள்வியை கேட்டார்.
இப்படி ஒரு கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று முதலில் புரியவில்லை.
நாம் எல்லாம் குழந்தைகளாக இருக்கும்போது, இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டதில்லை, அதனால உடனே பதில் சொல்ல முடியலை. ஒரு நிமிஷத்துக்கு அப்புறம் தான், நாங்களும் சாமி சாப்பிடுவது
நமக்குத் தெரியாதுன்னு சொல்லி ஒரு மாதிரி சமாளிச்சோம். இந்த கேள்விக்கான பதிலை வேறு
மாதிரி சொன்னால் இன்னும் சரியாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றினால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
இன்றைக்கு ரொம்ப வருடங்களுக்கு பிறகு, குடும்பத்தோடு பொங்கலை கொண்டாடியது ஒரு
நல்ல மனநிறைவை கொடுத்தது. அதனால் இனிமேல், ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்றைக்கு விடுமுறை
எடுத்து, வீட்டோடு பொங்கலை கொண்டாட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். பார்க்கலாம் எந்த
அளவிற்கு முடியும் என்று.
நண்பர்களே, நீங்களும் இந்த பொங்கல் திருநாளை நல்லபடியாக
கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
எல்லா விபரமும் பத்தி பத்தி எழுதியது சரி கடைசியிலே செய்த பொங்கலை காட்டவே இல்லையே இப்படியா கஞ்சத்தனம் செய்வது ? சகோதரிக்கும், ஓவியிவிற்க்கும். இனியாவிற்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களிடம் ஒரு கேள்வி ?
பால் பொங்கிடுச்சா ?
கால் வீங்கிடுச்சா ?
அட பொங்கலை காட்டவே இல்லையா,மன்னிச்சுக்குங்க நண்பரே, பொங்கல் எல்லாத்தையும் தான் சாப்பிட்டாசே, அப்புறம் எப்படி பொங்கலை காட்டுறது?
Deleteபால் பொங்கிடுச்சு, ஆமா அது என்ன கால் வீங்கிடுச்சா. ஓ! உங்களுக்கு பொங்கல் அன்றைக்கு கால் வீங்கிடுமா என்ன?
நடு வீட்டுக்கோலம், விளக்கிடுகிற சட்டி....அருமை அருமை சகோதரி.
ReplyDeleteசெல்லங்கள் பொங்கப் பானைக்கு போட்ட கோலங்கள் சூப்பர்...!!!
பரவாயில்லை முந்திரி உடைப்பதென்னஎன அருமையாக உதவி இருக்கிறார்கள் அம்மாவுக்கு...
நாங்க கருணைக்கிழங்கு , கத்தரிக்காய், பரங்கிக்காய், இவை மூன்றையும் (மூன்று) குழம்பு வைப்போம். வாழைக்காய், அவரைக்காய்,பிளாக்காய், சக்கரை வள்ளிக்கிழங்கு (4) பொறியல் செய்வோம்.
இங்கு எல்லாம் கிடைக்காது. பரங்கிக்காய் , கத்தரிக்காய் குழம்பு சக்கரைவள்ளிக்கிழங்கு பொறியல்....அவ்வளவுத்து தான்.
உங்க ஊர்ல இவ்வாலவு தான் செய்யமுடியுமா? கஷ்டம் தான்.
Delete
ReplyDeleteதமிழர் திருநாளின் பெருமையை வெளிப் படுத்திய
"சிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்" பதிவு
சிறு பொன்மணிகளான "ஓவியா மற்றும் இனியா" இருவரின்
கைகளில் உள்ள கரும்பினைப் போல் இனித்தது.
பலாப் பழத்தை கண்ணில் காட்டிவிட்டு தராமல் விட்டது
ஏனய்யா?
நலம் தரும் நாகரிகப் பதிவு.
நட்புடன்,
புதுவை வேலு
பலாப் பழத்தை தங்களுக்கு அனுப்பிவிட்டால் போச்சு.
Deleteவெளிநாட்டில் வசித்தாலும் அருமையாக கொண்டாடி இருக்கிறீர்கள்! பாரம்பரியத்தை கைவிடாமல் கோலமெல்லாம் போட்டு கொண்டாடியதும் அதற்கு உதவியாக தங்கள் மகள்களும் இருந்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!. குழந்தை கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்லி இருக்கலாம். சாமி வந்து சாப்பாட்டை எல்லாம் சாப்பிட்டுடும் ஆனா நாம பசியோட இருப்போம் இல்லையா? அதனால மீண்டும் அதனோட சக்தியாலே சாப்பாட்டை திரும்ப கொண்டுவந்து நாம சாப்பிடறதுக்கு வைச்சிரும்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுழந்தையின் கேள்விக்கு தங்களின் பதில் சூப்பர். மிக்க நன்றி.
Deleteஇனிக்கிறது...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள.
Deleteதட்டப்பத்தெங்க்காய்?
ReplyDeleteஉப்பு கம்மியானால் போட்டுக் கொள்ளலாம். அதிகமானால்தான் ஒன்றும் செய்ய முடியாது. இப்படித்தான் எப்போதும் என் பாஸ் சமாளிப்பார்கள்!
குழந்தைகள் ஈடுபாட்டோடு எல்லாவற்றிலும் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
தட்டப்பத்தெங்க்காய் - இது கொத்தவரங்காய் மாதிரி இருக்கும். வேறொரு பதிவில் அதனுடைய படத்தை போடுகிறேன்.
Deleteபாஸ் சமாளிக்கலாம், நாம தான் அப்படி சமாளிக்க முடியாது.
சூப்பரான பொங்கல் .நன்றாக, இருக்கிறதைக்கொண்டு செய்திருக்கின்றீர்கள். அழகான கோலம்.அழகான குட்டிக்கைகள் உதவி செய்கின்றன. இனியா,ஓவியா இருவரும் அழகாக இருக்கிறார்கள்.
ReplyDeleteஉங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteதித்திக்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.கோலம் போட்ட குட்டீசுக்கும் வாழ்த்துக்கள் .அந்த கரும்பு அங்கே விளைந்ததா !
ReplyDeleteமகள்களின் கேள்வி ::) நாமெல்லாம் ஏனிப்படி கேள்வி கேக்கலை :)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஆம், அவர் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது தான்.
வணக்கம்
ReplyDeleteசின்னச் சிட்டுக்களின் கைவண்ணத்தை இரசித்தேன் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாரம்பரிய கொண்டாட்டங்கள் பற்றி பிள்ளைகள் அறியாமல் வளர்வது வருத்தத்துக்குரிய விஷயம்தான். குட்டீஸ்களுக்காக நீங்கள் விடுமுறை எடுத்து கொண்டாட்டங்களில் அவர்களையும் ஈடுபடுத்தி மகிழ்வாக சிறப்பித்தது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசிட்னி பொங்கல் அருமை நண்பரே
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
வெளி நாட்டில் இருந்தாலும் நமது பொங்கல் திருநாளை பாரம்பரிய முறையில் குழந்தைகளையும் ஈடுபடவைத்து கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள்! இனியாவும் ஓவியாவும் வரைந்த பானைக் கோலமும் தரைக் கோலமும் அருமை. உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteவெளி நாட்டில் இருந்தாலும் இருப்பவை கொண்டு அழகான பொங்கல் கொண்டாடி இருக்கீங்க!
ReplyDeleteவாழ்த்துகள் சொக்கன் சுப்ரமணியன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteadengappa ponkal sema asathal than ponkal. ponkal kolam and every thing is supper rasithen ponkal valthukkal for every body. but ididnt see the ponkal ....m..m..m
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஅனைத்தும் அருமை. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்
Deleteநேரடிப் பகிர்வு நினைவில் நின்றது. அனைவருடனும் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஇந்த பொங்கலை இனியா, ஓவியாவோடு கொண்டாடிய திருப்தியை தருகிறது பதிவு!! அவர்களது மாக்கோலம் ஒரு ஹைக்கூ:) குட்டீஸ்க்கு என் வாழ்த்தை சொல்லுங்க சகோ:)
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஅத்தையின் வாழ்த்தை சொல்லிவிட்டேன் சகோ
மகிழ்வான பொங்கல்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஓவியா இனியாவின் கை வண்ணம் - ஓவியாவின் பட்டாம்பூச்சியும், பூவும், இனியாவின் கோலமும் மிக அருமை. நன்றாக கோலம் போட்டு இருக்கிறீர்கள். Good on you both Oviya and iniya. Super kolams.
ReplyDeleteஅவர்களையும் பொங்கல் பானைக்கு கோலம் போட செய்த தங்கள் மனைவிக்கு எனது பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவியுங்கள் சொக்கன்.
மிக அருமையாக தாங்கள் கொண்டாடிய பொங்கலை படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சொக்கன்
ஓவியா இனியாவின் கோலம் அருமை என் வாழ்த்துகள் நம் பாரம்பரியத்தை பாங்குடன் நிறைவேற்றியுள்ளீர், அனைத்தும் அருமை.
ReplyDeleteவெறகு அடுப்பெல்லாம் இனி சாத்தியமே இல்லைங்க ! அத்திப்பட்டில் கூட இப்போ கேஸ் அடுப்பதானுங்களே. கொழந்தங்க இப்பெல்லாம் அப்படி தான் கேட்கிறாங்க , “ஆங்...இருக்கு ஆனா இல்ல”ன்னு அ.ஆ எஸ்.ஜே சூர்யா வாய்சில் சொல்லி சாமளிக்கிறோம்.
ReplyDeleteநடுவீட்டுக் கோலம், தட்டப்பைத்தங்காய், பிலாக்கா போன்ற தரவுகளை அதாவது புவிசார் குறியீடுகளை வைத்து நோக்கும் போது அக்மார்க் செட்டிநாட்டு மன் மனம் வருகிறதே.