Friday, January 10, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-1

இந்த ரோட்டிலேயே ஒரு ஏழுட்டு நிமிடம் நடந்தீங்கன்னா பீச் வந்துடும்னு சொன்னதை நம்பி, நாங்க நடக்க ஆரம்பிச்சோம். ஒரு வழியா 25 நிமிடங்கள் நடந்த பிறகு பீச் கண்ணில தென்பட்டுச்சு.அந்த பீச்ல போய் உட்கார்ந்தவுடனே, ஓவியாவும் இனியாவும் மண்ணில் விளையாட ஆரம்பிச்சாங்க.இவுங்க மண்ணில் விளையாடுறதை பார்த்தபோது, எனக்கு என் சிறுவயது நியாபகம் தான் வந்தது. அப்போது இவர்கள் விளையாடுகிற மாதிரி பிளாஸ்டிக் பாத்திரங்கள் எல்லாம் கிடையாது, கண்டனூரில் என் ஆயா வீட்டு முன்பு இருக்கும் ஈர மணலில் வெறும் கைகளைக்கொண்டு வீடுக்கட்டி, தண்டவாளம் அமைத்தெல்லாம் விளையாடுவோம். உம்... அதெல்லாம் அந்த காலம்!!!!.

ஒரு மணிநேரம் அங்கே இருந்துவிட்டு, திரும்பி நடந்து அறைக்கு இரவு ஒரு 8.15 மணியைப்போல் வந்து சேர்ந்தோம்.
அறைக்குள்ள வந்தவுடனே, பசின்னா பசி அப்படி ஒரு அகோர பசி. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்லியும் சட்னியும் சூடு பண்ணி (அறைல மைக்ரோவேவ் ஓவன் மற்றும் சில தட்டுமுட்டு சாமங்களும் இருந்துச்சு) சாப்பிட்டு முடிச்சோம். நாங்க இருந்த அறைல, ஒரு பெரிய குயின் சைஸ் பெட்டும், ஒரு சோபாவும் இருந்துச்சு. நான் அறையை முன்பதிவு செய்யும்போது சோபா கம் பெட் இருக்கும்னு சொன்னாங்க. சரி, இந்த சோபாவைத்தான் பெட்டாக மாத்தணும் போலன்னு நினைச்சுக்கிட்டு, அந்த சோபாக்கூட ரொம்ப நேரமா போராடி, ஒரு வழியா அதை பெட்டா மாத்தி படுத்து தூங்கி மறு நாள் காலைல 7,30 மணியைப் போல எந்திரிச்சோம்.


இது தான் அந்த சோபா


அப்படியிருந்த சோபா தான், இப்படி பெட்டாக மாறியிருக்கு

வீட்டு அம்மணி ஸ்ட்ராங்ககா ஒரு டீ போட்டுக்கொடுத்தாங்க. சரி, பரவாயில்லையே டீ போட்டுக்கொடுக்கிறாங்களேன்னு நினைச்சா, டீ கப்பை கைல கொடுத்துட்டு, பாருங்க நான் இங்க வந்தும் உங்களுக்கு டீ போட்டுக்கொடுக்கிறேன்னு, சொன்னாங்க. நான் ரொம்ப சமர்த்தா, அதை அப்படியே ஒரு காதுல வாங்கி, இன்னொரு காதுல வெளியில விட்டுட்டேன். அப்புறம் எல்லோரும் குளிச்சு, பிரட் சாப்பிட்டுவிட்டு(இதுவும் உபயம் வீட்டு அம்மணி தான்!!!!). ஒன்பது மணியைப்போல கிளம்பி, நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கிற “கியாமா (KIAMA)”  அப்படிங்கிற இடத்துக்கு போனோம். அந்த ஊர் “ப்லோ ஹோலுக்கு (BLOW HOLE)” மிகவும் பிரசத்திப்பெற்றது.

கடற்கரை ஓரத்துல பாறைகளுக்கு இடையில் ஒரு 25-30 அடி ஆழத்தில் ஒரு பெரிய ஓட்டை இருக்கும். காற்றானது தென்கிழக்கிலிருந்து (South east) விசும்போது, கடல் அலையானது அந்த ஓடையின் வாயிலுக்குள் நுழைந்து, காற்றை அமுக்கும். காற்று அந்த அமுக்கத்திலிருந்து விடுப்படும்போது, பெரிய சத்தத்துடன், வெளிப்படும், அப்போது தண்ணீரும் அடியிலிருந்து மேலே எழும்பும். இது தான் BLOW HOLE.

பாறைகளுக்கு இடையில் உள்ள ஒரு பெரிய ஓட்டை


இந்த ஓட்டையிலிருந்து தான் தண்ணீர் சத்தமாக மேலே எழும்பி வரும்
புகைப்பட உதவி: கூகிள் ஆண்டவர் (இந்த புகைப்படம் மட்டும்)


அங்கு நிறைய பாறைகள் இருந்தது. நான் அந்த பாறைகளுக்கிடையில் எல்லாம் சிறிது தூரம் சென்று புகைப்படங்களை எடுத்தேன்.


அப்புறம் திரும்பி காருக்கு வரும்வழியில், அம்மணி ஓவியாவிடமும், இனியாவிடமும் குளிர் கண்ணாடிகளை கொடுத்து போட்டுக்கச் சொன்னார்கள். ஆனால் அவர்களோ வேண்டுமென்றே, தலைகீழாக திருப்பி போட்டுக்கொண்டார்கள். உடனே அம்மணி அதை ஒரு கிளிக் பண்ணிக்கொண்டார்கள்.  
அன்று நாங்கள் புளியோதரையை அறையிலிருந்து செய்துக்கொண்டு வரவில்லை (புளியோதரை செய்வதற்கு, அரிசி, புளிக்காய்ச்சல் மற்றும் ரைஸ் குக்கர் எல்லாம் கொண்டு வந்திருந்தோம்). வெளியில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து வந்தது எவ்வளவு பெரிய பிசகாகி விட்டது என்று அப்பொழுது தான் புரிந்தது. அதனை அடுத்த பகுதியான  கடைசிப் பகுதியில் சொல்கிறேன் .

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3
 
- தொடரும்  14 comments:

 1. அருமையான படங்களுடன் இனிய பயணம்... வாழ்த்துக்கள்... புளியோதரை இல்லை என்றால் முடியாதே... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
   பின்ன வெளியூருக்கு போகும்போது நம்மளோட பாரம்பரிய உணவான "புளியோதரையை" எடுத்துக்கிட்டு போகலைன்னா எப்படி!!!

   Delete
 2. படங்களை இன்னும் கொஞ்சம் பெருசா போடலாமே! என் பொண்ணு பேரு இனியா. அவளோட பொம்மை பேரு ஓவியா. அதேப் பெயர்கள் உங்க வீட்டுலயும்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அருவுரைப்படி, படங்களையெல்லாம் பெரிதாக மாற்றிவிட்டேன்.
   தங்கள் மகளின் பெயரும் இனியா என்று தெரியும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

   Delete
 3. அழகான படங்களுடன் இனிமையான பகிர்வு.

  ஓவியா ! இனியா !! யா ..... சூப்பர் நேம்ஸ் !!!

  என் வீட்டருகே அன்று “ரம்யா + திவ்யா” என இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இப்போது இருவரும் பொறியியல் பட்டதாரி ஆகியுள்ளனர். மூத்தவளுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது. போய் வந்தேன். ஏனோ அந்த ஞாபகம் வந்தது. ;) பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   எங்களுக்கு முதல் குழந்தை 10 வருடங்கள் கழித்து ஓவியமாக பிறந்ததினால், அவளுக்கு ஓவியா என்று பெயர் சுட்டினோம்.

   இரண்டாவது குழந்தைக்கு அதே மாதிரியான ஒரு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி, இனியா என்று பெயர் சூட்டினோம்.

   Delete
 4. சுவையான பயண அனுபவ பகிர்வு! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 5. அழகான படங்கள்..அருமையான பயணப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 6. குட்டீஸ் ரெண்டும் பயங்கர சுட்டீஸ்... blow hole பற்றிய தகவல் புதிது.... வித்தியாசமான பயணப் பகிர்வு...

  ReplyDelete
 7. ஸ்பை - இளையவள் தான் மிகவும் சுட்டி. பெரியவளை வம்பிழுப்பது தான் அவளோட முக்கிய வேலையே.

  "blow holeலிருந்து" சத்தத்துடன் தண்ணீர் வெளிய வரும் அழகே தனி தான்.

  ReplyDelete
 8. ஓவியா - இனியா - பெயரே இனிமையா.....

  உங்களுடன் பயணிக்கிறேன். நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் என்னுடன் பயணிப்பதற்கு மிக்க நன்றி திரு.வெங்கட்.

   Delete