ஹை பிரஷர், லோ பிரஷர் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கண்ணிற்குள் பிரஷர் இருப்பதை
நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அதற்கு ஆங்கிலத்தில் Glaucoma என்று சொல்லுவார்கள். அந்த வார்த்தையை தமிழ் படுத்தினால் – கண் நீர் அழுத்த
நோய் என்று வருகிறது. வீட்டு அம்மணிக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையையின் மூலம் எனக்கு
தெரிந்த விஷயங்களை இங்கு எச்சரிக்கை பதிவாக பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்த Glaucoma என்றால் என்ன என்று பார்ப்போம்.
Glaucoma என்றால் என்ன:
நம் கண்ணில் உள்ள முன் பகுதியில் இருக்கும் அறையில் சுரக்கும்
நீரின் அழுத்தம் அதிகரித்தால், அதற்கு Glaucoma என்று பெயர். சாதாரணமாக ஒரு மனிதனின்
கண்ணுக்குள் சுரக்கும் நீரின் அழுத்தம் 16mm HGயிலிருந்து 20
mm HGக்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த அழுத்தம்
கூடும்போது தான் இந்த Glaucoma பிரச்சனை உருவாகுகிறது.
Glaucoma வகைகள்:
இந்த நோய் நிறைய வகைகளை கொண்டு பிரிக்கலாம். ஆனால் குறிப்பாக
இரண்டு வகைகள் தான் முக்கியமாக கருதபப்டுகிறது. "திறந்த கோண கண் அழுத்த நோய் (Open-Angle Glaucoma)" மற்றும்
“மூடிய கோண கண் அழுத்த நோய் (Angle-Closure
Glaucoma)”.
Glaucomaவை கண்டறிதல்:
இந்த நோயை எவ்வாறு கண்டறியலாம் என்றால்,
முதலில் நாற்பது வயதை தாண்டிய அனைவரும் கண்டிப்பாக இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது
கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அப்போது கண் அழுத்தத்தையும் மருத்துவரிடம் சொல்லி
பார்க்க வேண்டும். ஒரு வேளை கண் அழுத்தம் தேவைக்கேற்ப அதிகமாக இருந்தால், மருத்துவர்களே “Field Test” என்று ஒரு டெஸ்ட் செய்து
அதில் பார்வை எந்த அளவிற்கு இழக்கப்பட்டிருக்கு என்று கண்டுப்பிடிப்பார்கள்.
(ஃபீல்ட் டெஸ்ட் செய்வது)
ஏற்படும் பதிப்புகள்:
இந்த நோய்க்கு “பதுங்கும் பார்வைத் திருடன்” (“The Sneak Thief of Sight”) எர்னு வேறு ஒரு புனைப் பெயரும் இருக்கிறது. அதாவது ஏறக்குறைய 40% சதவீத பார்வை
பறிபோகிற வரைக்கும் ஒருவரால் இந்த நோய் தனக்கு வந்திருக்கு என்று கண்டுப்பிடிக்கக முடியாதாம்.
இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், நீரழிவு நோய் மாதிரி, இந்த நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்பாட்டிற்குள்
வைத்துக்கொள்ளலாம். இந்த நோயினால் பார்வை இழப்பு ஏற்பட்டுவிட்டால், மீண்டும் இழந்த பார்வையை திரும்ப பெற முடியாது. அதற்கு காரணம், கண்ணில் சுரக்கும் நீரின் அழுத்தமானது கூடும்போது, அந்த
அழுத்தமானது, பார்வை நரம்பைத் (Optic Nerve) தான் பாதிக்கிறது. இதனால் முதலில் ஓரப்பார்வை (side vision) பாதிக்கப்பட்டு, பிறகு படிப்படியாக நேர் பார்வையும்
(tunnel vision) பாதிக்கப்பட்டு, கடைசியில்
கண்ணை குருடாக்கிவிடும். இந்த நோயினால் முதலில் ஓரப்பார்வை பாதிக்கப்படுவதால், நம்மால் அதனை எளிதாக உணர்ந்து கொள்ள இயலாது. இந்த நோய் வந்துவிட்டால், பிறகு கண்ணுக்கு வரக்கூடிய கண் புரை நோய் (Cataract) போன்ற நோய்கள் கண்டிப்பாக வந்தே தீருமாம்.
சிகிச்சை முறைகள்:
இந்த நோய் ஒருவருக்கு இருக்கிறது என்று கண்டுப்பித்து விட்டால், அதன் வீரியத்தைப் பொறுத்து
சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆரம்ப கட்ட நிலையில், கண்டுப்பிடிக்கப்பட்டால், கண் சொட்டு மருந்து(Eye Drops) பரிந்துரைக்கப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு
நாள் கூட தவறாமல் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரப்படி கண்ணுக்கு அந்த சொட்டு மருந்துகளை
போட்டுக்கொள்ள வேண்டும். சில சமயம் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுமாம். ஆனால் இங்குள்ள
மருத்துவர்கள், மாத்திரைகளை அதிகம் பரிந்துரைப்பதில்லையாம், ஏனென்றால், அந்த மாத்திரைகளினால் பக்க நிகழ்வுகள் (side
effects) அதிகம் ஏற்படுவதால் தானாம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு, லேசர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நோயின் தாக்கம் அட்வான்ஸ்
கட்டத்துக்கு போயிருந்தால் ‘டிராபேகுலெக்டமி அறுவை சிகிச்சை (Trabectome Surgery)” முறையை பயன்படுத்தி, அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவார்கள்.
பொதுவாக நாம் எல்லோரும் உடம்பிற்குத் தான் வருடத்திற்கு ஒரு
முறை பரிசோதனை செய்து கொள்கிறோம். ஆனால் கண்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து
பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மூக்கு கண்ணாடி அணிபவர்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது
கண்களை பரிசோதித்துக்கொள்வார். ஆனால் கண்ணாடி அணியாத பெரும்பாலானவர்கள், கண்களுக்கு முக்கியத்துவம்
கொடுப்பதே இல்லை. நான் ஆரம்பத்தில் சொன்னபடி இந்த நோய் ஒரு “பதுங்கும் பார்வைத் திருடன்”. அதனால் நாம் விழிப்புடன் நம் கண்களை பரிசோதித்துக்கொண்டு இந்த திருடனிடமிருந்து
நம் கண்களை பாதுக்காத்துக் கொள்வோம்.
பின் குறிப்பு: இந்த பதிவு என்னுடைய 200வது பதிவு. இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு என்ன எழுதப்போகிறோம் என்று தெரியாமல் இந்த வலைப்பூவை தொடங்கினேன். இன்று இந்த
200வது பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த பதிவை எழுதினேன்.
அனைவரும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பகிர்வுக்கு !!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா பகிர்விற்கு .தங்களின் இல்லதரசிக்கும் இந்நோயின் தாக்கம் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் .
தங்களின் கருத்துக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி சகோதரி
Delete200 வது பதிவு 1000 த்தை தொடவும், தங்களின் துணைவிக்கு விரைவில் குணமடையவும் இறைவனிடம் வேண்டுகிறேன்.
ReplyDeletewww.killergee.blogspot.com
தங்களின் கருத்துக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி நண்பரே
Delete200 வது பதிவுவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதங்கள் மனைவி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
தங்களின் வாழ்த்துக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Delete200வது பதிவு உண்மையிலேயே ஒரு வி ழி ப் பு ண ர் வு ப் பதிவாக அமைந்துள்ளது கேட்கவும் படிக்கவும் பயனுள்ளதாக உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteகண் போன்ற கண்ணை வரும்முன் காத்துப் பாதுகாத்துக்கொள்வது மிக மிக அவசியம் தான்.
தங்களின் கருத்துக்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஇருநூறாவது பதிவா? கலக்கல்...
ReplyDeleteகண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய எச்சரிக்கை பதிவு....
சகோதரி விரைவில் குணமாக ஆண்டவனை வேண்டுகிறேன்....
தங்களின் கருத்துக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி ஸ்பை
Delete2௦௦ பதிவுகளா சகோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஇல்லத்தரசியின் கண்கள் விரைவில் குணமாக ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
தங்களின் வாழ்த்துக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteதங்கள் வலைப்பூவில் “பதுங்கும் பார்வைத் திருடன்” பற்றி விளக்கமாக எழுதியதற்கு நன்றி திரு. சொக்கன். இது பற்றி தெரிந்ததால் கண் மருத்துவரிடம் போகும் பொழுது கண் நீர் அழுத்த நோய்க்கும் பரிசோதனை செய்ய சொல்லலாம்
ReplyDeleteமுதன் முறையாக கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
Deleteதங்களின் 200 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்.
Deleteதங்கள் வீட்டு அம்மணி மிக விரைவில் இந்த கண் நீர் அழுத்த நோயில் இருந்து இறைவன் அருளால் குணமடைய விரும்புகிறேன்
தங்களின் வாழ்த்துக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteஅனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு... தங்களின் துணைவியார் விரைவில் நலம் பெறுவார்கள்...
ReplyDeleteதங்களின் கருத்துக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி டிடி.
Delete200-வது பதிவாக ஒரு சிறந்த விழிப்புணர்வு பதிவினை எழுதிய உங்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.
Deleteஎன்னதான் மருத்துவத் துறை முன்னேற்றம் கண்டிருந்தாலும் இவை போன்ற நோய்களுக்கு தீர்வுகள் கண்டுபிடிப்பதில் தாமதம் இருப்பது வருத்ததிற்குரியது...
ReplyDeleteநல்ல பதிவு...
ஆண்டிற்கு ஒருமுறை அவசியம் அனைவருமே செய்துகொள்ள வேண்டிய பரிசோதனை இது..
உங்களின் மறுபாதி விரைவில் மீள பிரார்த்தனைகள்..
www.malartharu.org
தங்களின் வருகைக்கும் பிராத்தனைக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteதிரு. அண்ணா சுந்தரம் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:
ReplyDelete"//தங்களின் 200 வது பதிவுக்கு எமது வாழ்த்துக்கள். பதுங்கும் பார்வைத் திருடன் விழிப்புணர்வு பதிவு அருமை - இறை அருளால் உங்கள் இல்லாளுக்கு எல்லாம் நன்மையாகவே அமைய வேண்டுகிறோம்//"
தங்களின் வாழ்த்துக்கும் வேண்டுதளுக்கும் மிக்க நன்றி அண்ணன்.
Delete200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! குளுக்கோமா குறித்த தகவல்கள் அறிந்தேன்! நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
Deleteபதிவுகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். அருமையான விழிப்புணர்வு பகிற்விற்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிங் ராஜ் சார்.
Delete200வது பதிவுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா
Delete