Tuesday, January 6, 2015

பணமா, படிப்பா: சாதிக்க எது தேவை?





அன்பார்ந்த நண்பர்களே,

இந்த தலைப்பை பார்த்தவுடன், நான் எதோ ஒரு கட்டுரையை தான் எழுதியிருக்கிறேன் என்று தவறாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.  நாங்கள் இங்கிருக்கும் SBS வானொலியில் ஒரு நிகழ்ச்சிக்காக பங்குக்கொண்டு இந்த தலைப்பில் பேசியது  தான், இந்த பதிவே.

நவம்பர் மாதத்தில் SBS வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜீவன் அவர்கள் என்னிடம் 15வயதில் இருந்து 35வயதிற்குள் உங்களுக்குத் தெரிந்த மூன்று பெண்மணிகள் மூன்று நாட்களில் வானொலியில் பேசுவதற்கு தயாராக இருந்தால் சொல்லுங்கள். தலைப்பு இது தான் - "பணமா, படிப்பா: சாதிக்க எது தேவை?" இதற்காக அவர்கள் முன்னேற்பாடாக எதுவும் தயார் செய்ய வேண்டாம், இங்கு வானொலி நிலையத்திற்கு வந்தால் நான் அவர்களை பேச வைத்து விடுகிறேன், தயார் செய்து விட்டு வந்து பேசினால் நிகழ்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கூறினார் .

என்னுடைய நிலைமை சற்று சிரமமாகி விட்டது. பொதுவாக வானொலியில் பேசுவதற்கு எனக்குத் தெரிந்து நிறைய பெண்மணிகள் முன்வருவதில்லை. என்னதான் இந்த நிகழ்ச்சி ஒரு நேரடி நிகழ்ச்சி இல்லை என்றாலும் கூட முன்வரவில்லை. இப்படியிருக்க நான் எங்கிருந்து மூன்று பெண்மணிகளை அடையாளம் காண்பது. ஒருவர் பற்றி பிரச்சனையில்லை, என்னுடைய ஆபத்வானாக இருக்கும் வீட்டு அம்மணி, நான் கேட்டுக்கொண்டதற்காக பேசுவதற்கு ஒத்துக்கொண்டார்கள். மற்ற இருவர் -?

அப்பொழுது தான் நண்பர் அண்ணா சுந்தரம் அவர்களின் மகள் பற்றி நினைவு வந்தது. அவரின் பெயர் அழகு அண்ணாமலை ஆரஞ்சு(orange) என்னும் இடத்தில் (சிட்னியிலிருந்து ஒரு மூன்று மணி நேர கார் பயணம்) பல் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் விடுமுறைக்காக சிட்னி வந்திருந்தார். மேலும் அதிர்ஷ்டவசமாக நண்பரின் வீ ட்டுக்கு அவருடைய நண்பரின் மகள் ஆர்த்தி  , மெல்பர்ன் நகரில் கட்டிடக் கலை படித்துக்கொண்டிருப்பவர் வந்திருந்தார். உடனே நண்பருக்கு போன் செய்து அவர்கள் இருவரும் வருகின்ற சனிக்கிழமை காலை SBS வானொலி நிலையத்துக்கு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற முடியுமா என்று கேட்டேன். அவரும் அவர்களிடம் கேட்டு, அவர்களை நானே கூட்டிக்கொண்டு  வருகிறேன் என்று கூறினர்.

மறு நாள் மூவரைப் பற்றிய குறிப்புகளை மின்னஞ்சலில் கொடுத்து முடித்த கால் மணிநேரத்தில் எங்கள் தமிழ் பள்ளியிலிருந்து ஒரு மின்னஞ்சல். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பள்ளியின் ஆண்டு விழாவை இருக்கிற ஐந்து கிளைகளில் ஒரு கிளை எடுத்து நடத்தும். அந்த ஆண்டு (2014) எங்கள் பள்ளி  தான் ஆண்டு விழாவை வெற்றிக்கரமாக எடுத்து நடத்தியது. அதற்காக வேலை செய்த எல்லோரையும் ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு மதிய உணவு பார்ட்டிக்கு அந்த சனிக்கிழமை அன்று தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவும் 12 மணியிலிருந்து 4மணி வரை. சாப்பிட்டுவிட்டு ஆண்டு விழாவின் குறை நிறைகளைப் பற்றி பேசுவது தான் அந்த கூட்டம். நானும் சரி, நண்பர் அண்ணா சுந்தரமும் சரி கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு சூழல். வானொலி நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருகிறோம் என்று உறுதியளித்தாகி விட்டது. அந்த நிகழ்சியானது 11மணி முதல் மதியம் 2 மணி வரை. சரி, இவர்கள் முவரையும் வானொலி நிலையத்தில் இறக்கிவிட்டுட்டு முடியும் சமயம் வந்து கூட்டிக் கொள்ளலாம் என்றால், தேவையில்லாமல் ஒரு ஐம்பது, ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். அதுவும்  கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிட்டால், ஒன்றும் செய்ய இயலாது. கடைசியில், பள்ளியின் செயல் குழுவிடம், நிலைமையை சொல்லி, நாங்கள் எப்படியும் ஒரு முன்று மணிக்கெல்லாம் வந்து விடுகிறோம் என்று கூறினோம்.

அந்த சனிக்கிழமை காலை 11மணிக்கு வானொலி நிலையத்தில் இருக்க வேண்டும். நான் அம்மணி, நண்டு சிண்டு எல்லோரையும் ஒரு வழியாக விட்டிலிருந்து கிளம்பி 12 மணியைப்போல் போய் சேர்ந்தோம். நான்  எப்பொழுதும் சொன்ன நேரத்துக்கு போக வேண்டும் என்ற எண்ணம் உடையவன். அன்றைக்கு ஓவியா காலையில் பால் குடித்தவுடன் வாந்தி எடுத்தார். பிறகு காலை உணவு சாப்பிட்டவுடன் மறுபடியும் வாந்தி எடுத்துவிட்டார். எங்களுக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறோம் என்று ஒத்துக்கொண்ட பிறகு,கடைசி நேரத்தில் பின்வாங்கினால் எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். அதனால் நான் இருவரையும் வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிறேன், நீ நண்பர் வீட்டோடு சென்று வா என்று அம்மணியிடம் சொன்னேன், உடனே, இரண்டு மகாராணிகளும் ஒரே அழுகை, நாங்களும் போக வேண்டும் என்று. கடைசியில் எல்லோருமே போகலாம் என்று முடிவெடுத்து கிளம்பி அங்கு போய் சேந்தோம்.
இவர்கள் மூவரும், மேலும்  ஒரு பெண்மணியை மட்டும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சி செய்யலாம் என்று நினைத்திருந்த நிகழ்ச்சியாளர், என்னையும், நண்பரையும் பார்த்த பிறகு, நிங்களும் கலந்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். வீட்டு அம்மணி, அழகு,ஆர்த்தி  மற்றும் இன்னொரு சகோதரி கீதா   இவர்கள் என்ன தலைப்பை எடுத்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள், அதனால் எங்கள் இருவரையும் நீங்கள் எந்தத் தலைப்பில் பேசுகிறீர்கள் என்று கேட்டார். எந்த தலைப்பாக இருந்தாலும் சரி என்று சொன்னோம். கணவனும் மனைவியும் ஒரே அணியில் இருக்க வேண்டாம்   என்று எங்களை பிரித்து விட்டார். அதனால் நான் "வாழ்க்கையில் சாதிக்க பணம் தான் முக்கியம்" என்ற தலைப்பில் பேச வேண்டியதாகி விட்டது.  முன்று டேக்குகள் எடுத்து பதிவு செய்து கொண்டபின்,மூன்றிலிருந்து தேவையானவைகளை எடுத்து சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை இரவு ஒலிப்பரப்பினார்கள்


வாழ்க்கையில் சாதிக்க பணம் தான் முக்கியம் - சொக்கன்,சகோதரி கீதா, செல்வி அழகு அண்ணாமலை

வாழ்க்கையில் சாதிக்க கல்வி தான் முக்கியம் - அண்ணாமலை, செல்வி ஆர்த்தி மற்றும் வீட்டு அம்மணி (கீதா)


இந்த இணையத்தளத்தில் சென்று அந்த நிகழ்ச்சியை கேட்கலாம். 



அல்லது நம் பதிவுலக நண்பர் டிடி அவர்களின் உதவியால் (இந்த பதிவின் உதவியால் ) இங்கேயே கேட்கலாம்.



இதில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும், நண்பர் அண்ணாமலை அவர்கள் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர். அவர் இங்கு நிறைய மேடைகளில் பேசியிருக்கிறார்.
எனக்கும் மேடைப் பேச்சுக்கும் ரொம்ப தூரம். சில வருடங்களுக்கு முன்பு நானும் ஒரு 3 பட்டிமன்றங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் எழுதும்போது ஏற்படுகிற  சௌகரியம் , பேசுவதில் கிடைப்பதில்லை. அதனால், பேசுவதை விட்டுவிட்டு,எழுதுவதில் ஒருமுகப்படுத்த ஆரம்பித்தேன்.

அதனால், என்னுடைய பேச்சு சற்று குழந்தைத்தனமாக இருக்கலாம். என்னுடைய இந்த பேச்சை நானே கேட்ட பிறகு, இனி வருங்காலங்களில் திருத்திக்கொண்டு, சிறந்த பேச்சாளராக மாறவில்லை என்றாலும் ,குறைந்தபட்சம், நன்றாக பேசினார்  என்ற பெயராவது எடுக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன் .



பின்குறிப்பு - எல்லோரும் அந்த இடத்தில் மனதில் தோன்றிய கருத்துக்களைத்தான் முன்வைத்தோம். யாரும் முன்கூட்டி தயார் செய்யவில்லை. மற்ற நால்வரும் தலைப்பைத்  தேர்வு செய்திருந்தாலும், யாரும் தயாரித்து பேச வில்லை.












49 comments:

  1. Replies
    1. சுடச்சுட வருகை தந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
    2. சுடச்சுட அப்படீனா ? கணினியை சுட வைக்கிறதா ?

      Delete
    3. கில்லர்ஜீ ஜெயக்குமார் சார் கிச்சனில் தோசை சுட்டுக் கொண்டே கருத்து போட்டது எப்படியோ சொக்கனுக்கு தெரிஞ்ச்சு போச்சு...

      Delete
    4. கில்லர்ஜி, மதுரைத் தமிழன் சரியாக அதற்கு அர்த்தம் சொல்லிவிட்டார்.
      மிக்க நன்றி நண்பர்களே.

      Delete
  2. நண்பரே... கேட்டுக்கொண்டே....... இருக்கிறேன்.... மீண்டும் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வாருங்கள்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  3. மொபைலிலிருந்து ஆபரேட் செய்கிறேன். ஒலி வடிவத்தைக் கேட்க முடியவில்லை. எனி வே, வாழ்த்துகள் ஸார்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  4. கடைசியில் சகோதரி கீதா சொக்கன் அவர்கள் பேசிய......
    //படிப்புதான் முக்கியம் அவுங்க வந்து எதற்க்கு படிக்கிறாங்க ? ஸ்ட்ரைட்டா பணம் சம்பாதிக்கவே போகலாமே //
    ஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர்

    உங்களுக்கு எதிராக கருத்து எழுதணும்னு நினைச்சேன் அதற்க்கு தகுந்த அணியில் பேசிய சகோதரி கீதா சொக்கன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பாவம் நீங்க அழுதுடக்கூடாது 80தற்காக.... கொஞ்சூண்டு வா....ழ்....த்....

    ஆஸ்திரேலிய மண்ணில் எனது தமிழன், தமிழச்சிகள் வள்ளுவனின் குறள்களோடு குரல்கள் ஒலிக்கச்செய்த அனைவருக்கும் அபுதாபித்தமிழன் கில்லர்ஜியின் வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துறது தான் வாழ்த்துறீங்க, அதை நிறைய வாழ்த்தினால் என்னவாம். எனக்கு தெரியும் நீங்க எனக்கு எதிராகத்தான் கருத்திடுவீங்கள் என்று. நான் கல்வியின் பக்கம் இருந்து பேசியிருந்தாலும்,எதிராகத்தான் கருத்து சொல்லுவீர்கள். ஏனென்றால் நமக்குள் அப்படி ஒரு ஒற்றுமை.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  5. கேட்டுக்கொண்டே....... இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கேட்டுக்கொண்டே இருங்கள்....

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  6. சொக்கன் நீங்க ரொம்ப அதிர்ஷ்டகாரர்ப்பா.....உங்க மனைவி பணம் கேட்கும் போது நீங்க அவங்களை உட்கார வைச்சு படிப்பு சொல்லி கொடுத்துவிட்டு தப்பிச்சிடலாம்

    ReplyDelete
    Replies
    1. இப்பவாவது தெரியுதா நான் அதிர்ஷ்டக்காரன் என்று. எப்பூடி. இதுக்குத்தான் விவரமா மனைவியை பணத்தின் பக்கம் இருந்து பேச சொன்னதாக்கும்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  7. 2வது படத்தில் கையை தூக்கி காண்பிக்கிறீங்களே அதைப் பார்க்கும் போது பீர் க்ளாஸை பிடிக்கிற மாதிரி இருக்கே ஆனா க்ளாஸை காணுமே இன்விஸிபல் க்ளாஸா கையில் வைச்சிருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழரே எனக்கென்னவோ தம்ஸ் அப் கம்பெனியிலே ஏதும் சீட்டிங் போட்டாரோணு தோ........

      Delete
    2. பாம்பின் கால் பாம்பு அறியும் என்று சொல்வது போல உங்களுக்கு மட்டும் இது தோன்றியிருக்கு பாருங்க. கரெக்ட்,அது இன்விசிபிள் கிளாஸ் தான். எல்லோருக்கும் தெரியுற மாதிரி கையில் வைத்திருந்தால், "இந்த பூனையும் பீர் குடிக்குமான்னு இல்ல கேக்க ஆரம்பிச்சுடுவாங்க".

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
    3. கில்லர்ஜி, மதுரைத் தமிழனுக்கு சொன்ன பதிலை கொஞ்சம் பாருங்க.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  8. .சிறந்த பேச்சாளர் ஆக வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிங் சார்

      Delete
  9. வாழ்த்துக்கள் சொக்காரே!
    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
    நல்ல பல்கலைக் கழகத்தை பதிவின் மூலம்
    அறியத் தந்தமைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  10. அருமையான கருத்து விவாதம். இதுலயும் வீட்டு அம்மணி உங்களுக்கு எதிர்கட்சியா! ரொம்ப நன்றாக இருந்தது நண்பரெ!

    ம்ம் கல்வி கற்றால் நம் காலில் நிற்க பணம் தானாக வருமே. சரிதானே?! இல்லையோ...

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து விவாதம் தான். என்ன, அந்த படிப்பு படிக்கிறதுக்கும் பணம் தேவையாக இருக்கிறதே என்பது தான் என் வாதமே. கணவனும் மனைவியும் எதிரும் புதிருமா இருந்தாத்தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

      Delete
  11. சூப்பர் குடும்பம் என்று சொல்கிறார்களே அது இதுதானா??!!!
    இப்போ ஓவியா எப்படி இருக்கிறார்?? உடல் நலம் தேறிவிட்டதா சகோ?

    ReplyDelete
    Replies
    1. ஓவியாவிற்கு இப்போது ஒன்றும் பிரச்சனையை இல்லை. மறு நாளே அவர் சரியாகி விட்டார். மிக்க நன்றி சகோ.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  12. முழு நிகழ்ச்சியையும் கேட்டேன். பங்கு பெற்ற அனைவருமே தங்களுடைய சொந்த கருத்து எதுவாயினும் பேச எடுத்துக்கொண்ட கருத்தை ஆதரித்து சிறப்பாகவே பேசினீர்கள். முன் கூட்டியே தயார் செய்யாமல் இவ்வளவு நன்றாக பேசமுடியுமானால் தயார் செய்திருந்தால் எபப்டி பேசியிருப்பீர்கள் என நினைத்துப் பார்க்கிறேன். தங்களுடைய பேச்சு குழந்தைத்தனமாக இல்லை. மிக நன்றாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முழு நிகழ்ச்சியையும் கேட்டதற்கு மிக்க நன்றி ஐயா . ஆஹா, நீங்கள், நான் நன்றாக பேசியிருக்கிறேன் என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  13. அதிர்ஷ்டவசமாக ரேடியோவில் பேசுவதற்கு ஆட்கள் கிடைத்துவிட்டார்கள் என்பதைவிட நீங்களும் நிகழ்ச்சியில் பங்கேடுத்தீர்கள் என்பது மேலும் மகிழ்ச்சி. ஆடியோ இன்னும் கேட்கவில்லை.... கேட்டுவிட்டுப் பகிர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா,சரியாக பாயிண்ட்டை பிடித்துவிட்டீர்கள் ஸ்பை . ஒலிவடிவத்தை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  14. கல்வி - செல்வம் - வீரம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டிடி.
      தங்களின் புண்ணியத்தால் தான் நான் வலைப்பூவில் ஒலி வடிவத்தை ஏற்ற முடிந்தது. அதற்கு தனியாக ஒரு நன்றி.

      Delete
  15. வணக்கம்
    தங்களின் முயற்சிக்கு முதலில் பாராட்டுகள்... இப்படியான சேவை தொடர எனது வாழ்த்துக்கள் நிகழ்ச்சி
    நன்றாக உள்ளது கேட்டேன்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  16. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  17. //யாரும் முன்கூட்டி தயார் செய்யவில்லை. மற்ற நால்வரும் தலைப்பைத் தேர்வு செய்திருந்தாலும், யாரும் தயாரித்து பேச வில்லை.// ஆஹா ..அருமை ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  18. வாழ்த்துக்கள் ..உங்க வீட்டம்மா நல்லா அழுத்தம் திருத்தமா பேசியிருக்காங்க :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      அப்ப, எங்க வீட்டம்மா நல்லா பேசியிருக்காங்க, நான் நல்லா பேசலைன்னு சொல்றீங்க.

      Delete
  19. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  20. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  21. வாழ்த்துக்கள்...........

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  22. சுவையாய் இருந்தது...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்

    ReplyDelete