Friday, January 9, 2015

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு





சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை







பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு

ஐயா அவர்கள் யாழ்பாணம் போயிருந்த காலத்தில் பதினெட்டாம் வயசில் சமய தீக்ஷையும், விசேச தீக்ஷையும் பெற்றுக்கொண்டு திருவாசக பூசைசெய்து வந்தார்கள். இரண்டாம் அதிகாரத்திற் சொல்லியபடி இருபத்து நான்காம் வயசில் நகரதன வைசியர் வழக்கப் பிரகாரம் திருப்புனவாசல் முதன்மையாராகிய பாதரக்குடி மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ வேங்கடாசல குருசுவாமிகளிடத்தில் தீக்ஷை பெற்றுக்கொண்டார்கள்.

பின்பு, யாத்திரையாக முத்துப்பேட்டைக்குப் போயிருந்த காலத்தில் திருவாசக பூசையேடு காணாமற் போய் விட்டமையின் ஒரு வாரம் உணவின்றியிருந்து எட்டாம்நாள் அத்திருவேடு கைவரப்பெற்று முறைப்படி பூசை பண்ணிப் போசனஞ்செய்துகொண்டார்கள்.

அதன் பின்பு, திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஆச்சாபுரத்தில் சிவதரும ஸ்தாபனங்கள் செய்வித்து வசித்துக்கொண்டிருந்த காலத்தில், திருஞானசம்பந்த சுவாமிகள் சந்நிதானத்தில், திருப்புகலூர்ச் சுப்பிரமணிய சிவாச்சாரியாரவர்கள்பால் ஆன்மார்த்த ஷணிக லிங்க பூசையும்,நிருவாண தீக்ஷையும் பெற்றுக்கொண்டார்கள். அத்தீக்ஷாகாலத்திற் பெற்றுக்கொண்ட தீக்ஷாநாமம், "தற்புருடதேவர்" என்பதாம்.

ஐயா அவர்களை யடுத்துச் சமய விசேட நிருவாண தீக்ஷை ஆசாரியாபிஷேகம் என்னும் இவைகளின் அருமை மகிமைகளைத் தெரிந்து தகுதிக்கு தக்கவாறு தீக்க்ஷை பெற்றுக்கொண்டு சைவா நுட்டாண சீலராய் விலங்குகின்றவர்கள் அநேகர்.    


பத்தாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
. 

19 comments:

  1. தங்களின் மூலம் நிறைய விடயங்கள் தெரிந்து கொள்கிறேன் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. சிறப்பான பணி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  4. சைவ சித்தாந்தம் படித்த எனக்கு தங்கள் பதிவு மிகவும் ஆர்வத்தை மேம்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  5. தமிழ்ப் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  6. நன்னெறி பதிவு
    நலம் தரும் பக்தி பதிவு
    பாராட்டுக்கள்.
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  7. தங்களின் தமிழ்த் தொண்டு தொடரட்டும்
    ந்ன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  8. தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  9. தொடர்கிறேன் சகோ...

    ReplyDelete
  10. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    முந்தய பதிவுகளை கண்டு வந்தேன்.

    ReplyDelete
  11. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  12. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete