Monday, January 19, 2015

பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின் ஒரு கலந்துரையாடல்சனிக்கிழமை மாலை, சிட்னி தமிழ் மன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில், எங்கள் தமிழ் பள்ளிக் குழந்தைகள் “பொங்கலைப் பற்றி இளைய தலைமுறையினருக்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழங்கினார்கள். சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான், என்னைத் தொடர்பு கொண்டு, இந்த பொங்கல் விழாவிற்கு உங்கள் பள்ளியிலிருந்து 20நிமிடத்திற்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்க முடியுமா என்று கேட்டார்கள். பொதுவாக இம்மாதிரி கேட்பவர்களிடம் நான் முடியாது என்று உடனடியாக சொல்ல மாட்டேன். இப்படி தமிழ் மேடைகள் கிடைக்கும்போது நம்மளால் முடிந்த அளவில் குழந்தைகளுக்கு தமிழில் சொல்லிக்கொடுத்து மேடை ஏற்ற வேண்டும் என்று எண்ணுபவன். ஆனால் இம்முறை அதற்கு மிக பெரிய சோதனை ஏற்பட்டது. மிக முக்கியமாக எங்கள் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கு மேல் விடுமுறைக்காக இந்தியாவிற்கு போய்விட்டார்கள். இன்னும் ஒரு சிலரோ, நான் ஒரு வார அவகாசத்தில் கேட்டதால், வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இறுதியாக ஐந்து மாணவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பொங்கலைப் பற்றி ஒரு கலந்துரையாடல் ஸ்கிரிப்ட் தயார் செய்தேன். அதில் மூவர் தான் சற்று பெரிய மாணவர்கள். அதனால் அவர்களுக்கு மட்டும் சற்று நீண்ட வசனங்களை கொடுத்து மற்ற இருவரையும் வெறும் கேள்வி கேட்பவர்கள் மாதிரி அமைத்திருந்தேன். ஒரு வார அவகாசத்தில் அந்த பெரிய மாணவர்களுக்கு ஒரேடியாக வசனங்களை கொடுத்தால் அவர்கள் சிரமப்படுவார்கள் என்று, நான் சில வசனங்களை எடுத்துக்கொண்டேன். ஆனால் எனக்கு குழந்தைகளோடு மேடையில் உட்கார்ந்து பேசுவது பிடிக்காது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நான் அவர்களுடன் பங்குக்கொள்வதை விரும்ப மாட்டேன். அதனால் இதில் குழந்தைகள் எனக்கு போன் செய்து சந்தேகங்கள் கேட்பது மாதிரி அமைத்திருந்தேன். அந்த யுக்தி,ஒரு புதிய விஷயம் போல் நன்றாகவே வேலை செய்தது. மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, திரையில் அந்த விஷயங்கள் சம்பந்தமாக சில படங்கள் மற்றும் காணொளிகளையும் ஒளிபரப்பி பார்ப்பவர்களின் கவனத்தை சிதற விடாமல், நிகழ்ச்சியை நடத்தினோம்.

இதோ அந்த கலந்துரையாடல்:

பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க
பங்கு பெறுபவர்கள்:
சிரஞ்சீவி
ஸ்வேதா
மதுமித்தா
ப்ரீத்தி
ஓவியா
தயாரிப்பு – சொக்கன்

ஓவியா
வணக்கம். உங்க எல்லோருக்கும் பொங்கலைப் பத்தி தெரிஞ்சிருக்கும்.ஆனா என்னைப் போல இருப்பவர்களுக்கு தெரிஞ்சிருக்காது. அதனால இவுங்கக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.

சிரஞ்சீவி:
பொங்கலை உழவர் திருநாள் என்று சொல்லுவார்கள். அதாவது நல்லா நெல் விளைச்சலை  கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் திருநாள். இத்திருநாள் ஜனவரி 14 ஆம் தேதி  ஆரம்பித்து 4  நாள்களாக  கொண்டாடப்படும். 

ப்ரீத்தி:
4 நாளாமுதல் நாள் என்ன பண்ணுவாங்க ?


ஸ்வேதா:
முதல் நாள் போகி பண்டிகையாகும். இந்த நாள்ல தான் வீட்டை சுத்தப்படுத்தி இருக்கிற பழைய சாமான்களையும், குப்பைகளையும்   எரிப்பார்கள்.   அப்புறம் வீட்டையும்  வெள்ளை அடிப்பார்கள்.


 ஓவியா:
அப்ப முதல் நாள் பொங்கல் இல்லையா?   மது:
இல்லைஇரண்டாம் நாள் தான் பொங்கல் பண்டிகையாகும்அன்று தான் தமிழ் மாதம்மான தை மாதத்தின் முதல் நாளாகும். இந்த நாள்ல சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக வீடுகளில்லோ அல்லது கோவில்களில்லோ  பெரிய கோலம் போட்டு,  வாசலில் விறகு மூட்டி புது பானையில் சர்க்கரை பொங்கல் செய்து "பொங்கலோ பொங்கல்" என்று கூறி சூரிய பகவானுக்கு கரும்பையும்  சேர்த்து படைப்பார்கள்.

ஓவியா:
ஓ! இது தான் பொங்கலாஅப்ப மாட்டு பொங்கல்ன்னு சொல்றங்களே அது என்ன?

ஸ்வேதா:
மூன்றாம் நாள்விவசாயத்துக்கு பயன்படும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாளாக "மாட்டுப் பொங்கல்"  கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு மாட்டோட கொம்புகளுக்கு வர்ணம் பூசி,கழுத்தில் மணிகளை அணிவிச்சுதெருவில் அழைத்து செல்வர்கள். இதனை சிறுவர்கள் பூம் பூம் மாடு என்று வேடிக்கையாக கூறுவதும் உண்டு. அன்னைக்கு மதியம் சாப்பாடு செஞ்சு மாட்டுக்கு கொடுப்பாங்க.சிரஞ்சீவி:
மாட்டுப் பொங்கலை பத்தி எனக்கு ஒரு சந்தேகம். இப்ப எல்லாம் விவசாயம் செய்றதுக்கு machine எல்லாம் வந்துடுச்சே,  அப்புறம் நாம ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடனும் ?

 ஸ்வேதா:
சரியாகத்தான் கேட்டு இருக்க. இன்னும்  நம்மோட  கிராமங்களில் மாடுகள் தான் விவசாயத்திற்கு பயன்படுகிறது. அதனால  அவைகளுக்கு நன்றி செலுத்துவதை மறந்து விடக்கூடாது என்பதற்காக இன்னும் நாம் நம்முடைய பழக்கத்தை விடாமல் கடைப்பிடிக்கிறோம்.

ப்ரீத்தி:
அதான் பொங்கல்மாட்டுப்பொங்கல்ன்னு    கொண்டாடியாச்சேஅப்புறம் இன்னும் என்ன இருக்கு?


மது:
நான்காம் நாள் "காணும் பொங்கல்"ன்னு சொல்லுவாங்க அன்னைக்கு  சொந்தக்காரங்களையும், நண்பர்களையும் சந்திச்சு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர்கள். அப்புறம் சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி, அவர்கள் கொடுக்கும்
அன்பளிப்பை பெற்றுக்கொள்வர்கள். இந்த நாளை "திருவள்ளுவர் தினம்னு கூட சொல்லுவாங்க.

 ப்ரீத்தி:
சரி, தீபாவளி மாதிரி பொங்கலுக்கும் எதாவது புராணக்கதை இருக்குதா?

ஸ்வேதா
புராணக் கதையா, மது உனக்கு ஏதாவது தெரியுமா?

மது
எனக்கும் அந்த மாதிரி கதை இருக்குதான்னு தெரியலை. இரு, எதுக்கும் நம்ம தமிழ் ஸ்கூல் சொக்கன் அங்கிள் கிட்ட கேக்கலாம் .
(மது போன் செய்கிறார்)

மது
அங்கிள்,நான் மது பேசுறேன். இப்ப உங்ககிட்ட பேசலாமா?

சொக்கன்
சொல்லும்மா மது என்ன விஷயம்?

மது
பொங்கலைப் பத்தி நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். அதுல எங்களுக்கு கொஞ்சம் டவுட் அங்கிள். அதை கொஞ்சம் சொல்றீங்களா?

சொக்கன்
அட, பொங்கலைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்களா,ரொம்ப நல்ல விஷயம். ஆமா யார் எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?

மது
நானு, ஸ்வேதா,சிரஞ்சீவி,ப்ரீத்தி அப்புறம் ஓவியா. தீபாவளி மாதிரி பொங்கலுக்கும் எதாவது புராணக்கதை இருக்குதா அங்கிள்?

சொக்கன்:
நான் ஒரு புராணக்கதையை கேள்விப்பட்டிருக்கேன். அதை சொல்றேன். இறைவன் சிவனுடைய வாகனம் மாடு. ஒரு நாள் சிவன் தன்னுடைய வாகனமான மாட்டை  கூப்பிட்டுபூலோகத்தில் உள்ள  எல்லா உயரினங்களிடமும் சென்றுதினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்  என்றும்மாதத்திற்கு ஒரு நாள் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லு என்று கூறி தன் மாட்டை அனுப்பினார். அந்த மாடோ எல்லோரிடமும் சென்று நீங்கள் தினமும் சாப்பிட வேண்டும் என்றும் மாதத்திற்கு ஒரு நாள் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்று மாற்றிக் கூறியது.    இதனால் கோபமடைந்த சிவபெருமான்,  அந்த மாட்டை பார்த்து, நீ இனிமேல் பூலோகத்தில் தான் வாழ வேண்டும்நிலத்தை உழுதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சாபமிட்டார். அதனாலத்தான், நாம விவசாயத்துக்கு உதவுகிற சூரியனுக்கும் ,  மாட்டுக்கும் பொங்கல் வச்சு கும்பிட்டு நன்றி செலுத்துகிறோம். ஆனா இந்த கதை எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்குத் தெரியாது.  


சிரஞ்சீவி:
அங்கிள்,அப்புறம் இந்த பொங்கல் பண்டிகையை ஆஸ்திரேலியாவிலும் மத்த நாடுகளிலும் கொண்டாடுகிறோம். இதனால் உலகுக்கு நாம் சொல்றது தான் என்ன?


 சொக்கன்:
தமிழர்களாகிய நாம் நிறைய விஷயங்களை உலகுக்கு உணர்த்தி இருக்கிறோம். இந்த பொங்கலின் மூலமும்  நம் பண்பாட்டை உலகுக்கு உணர்த்துகிறோம். அவைகள் என்னவென்றால்,

 1. பொங்கல் பண்டிகையும்அமெரிக்காவில் கொண்டாடப்படும்  Thanksgiving day  பண்டிகையும் ஒன்று தான்.
 2. நம் இந்திய நாடு ஒரு விவசாய நாடாகும். விவசாயத்துக்கு மிக முக்கியம் மழை, சூரியன் மற்றும் மாடு. இவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டடபடுவது  தான் பொங்கல் பண்டிகைஇதிலிருந்து தெரிவது என்னவென்றால் தமிழர்கள் நன்றி மறப்பது இல்லை .
 3. தை பிறந்தால் வழி பிறக்கும் “, என்று சொல்வது உண்டு.அர்த்தம் என்னவென்றால்தை மாதம் வந்தவுடன் எல்லோர் வாழ்விலும் சந்தோசமும், அமைதிமும்  நிறையும்.

 ஓவியா:
இருங்க, இருங்க புது வருசத்துக்கு தானே இப்படி சொல்லுவோம்.

  சொக்கன்:
மேற்கித்தியவர்கள்ஜனவரி மாதம் முதல் தேதியன்றுஇந்த வருடம் எல்லோருக்கும் எல்லா சந்தோசங்களும் உண்டாகட்டும் என்று வாழ்த்துவர். தமிழர்களாகிய நாமோ தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவோம். ஏனென்றால் தை மாதத்தில் தான்  அறுவடை செய்து அந்த வருடத்திற்கான விளைச்சலை நாம காண்போம்.

ப்ரீத்தி:
பொங்கல் திருவிழாக்களில், என்னமோ மாட்டை எல்லாம் பிடிப்பாங்கலாமேஆமா மாட்ட பிடிச்சு என்ன தான் பண்ணுவாங்க?

 ஸ்வேதா:
அங்கிள். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் லைன்லேயே இருக்கீங்களா. எங்களுக்கு எதுவும் தெரியலைன்னா கொஞ்சம் சொல்லுங்க.

சொக்கன்
சரிம்மா ஸ்வேதா, நான் லைன்லேயே இருந்து நீங்க பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.மது
ஐயோ! ப்ரீத்தி, மாட்ட பிடித்து ஒன்னும் பண்ண மாட்டாங்க. அது எல்லாம் பொங்கல் திருவிழாக்களில் விளையாடப்படும் வீர விளையாட்டுக்கள்.
அந்த விளயட்டுக்களைப்பற்றி நான் விரிவா சொல்றேன்.
 1. மாட்டுப் பொங்கல்ன்னு சொன்னாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான்அன்னைக்கு இந்த வீர விளையாட்டான மாடுகளை அடக்கும் விளையாட்டு நடக்கும். இணைக்கும் தமிழ்நாட்டில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. 

ஓவியா:
இந்த விளையாட்டினால் ஆபத்து இல்லையா ? மது:
ஆபத்து இருக்கத்தான் செய்யும். இதே விளையாட்டு ஸ்பெயின் போன்ற நாடுகளில் மிகவும் பாதுகாப்பாக நடக்கிறது. இதே மாதிரி பாதுகாப்பு முறைகளை நாமும் இப்பொழுது பின்பற்றுகிறோம் என்று கேள்வி பட்டேன் 
 1. அப்புறம் இளவட்ட கல் தூக்குதல்ன்னு இன்னொரு விளையாட்டு.

சிரஞ்சீவி:
அது என்ன கல்லு தூக்குறது, மண்ணு எடுக்குறதுன்னு, இதுல்லாம் ஒரு விளையாட்டா ?

மது:
உனக்கு தெரியாது. இந்த காலத்துல மாதிரி கல்யாணம் எல்லாம் அந்த காலத்துல ஈசி இல்ல. அதிலும் இந்த ஆண்கள்   நிலைமை தான் ரொம்ப கொடுமை. அந்த காலத்துல பெண்கள் எல்லாம் பெரிய வீரன் தான் தனக்கு கணவனாக வரணும்னு நினைப்பாங்களாம்  அதனால இந்த ஜல்லிக்கட்டு காளையை அடக்குறவுங்களோ இல்ல  ஊருக்கு நடுவில ஒரு சின்ன  குன்று போல இருக்கும்  ஒரு பெரிய கல்லை தூக்கபவர்களையோத் தான் அவுங்க திருமணம் செஞ்சு  கொள்ளுவாங்களாம்இந்த கல்லை தூக்குவதற்கு பெயர் தான் இளவட்ட கல் தூக்குதல் .


ஸ்வேதா:
அடடா இப்படியெல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்குதாஇப்ப அந்த மாதிரி இருந்த என்னவாகும்?

சொக்கன்:
ஏம்மா, உனக்கு இந்த விபரீத ஆசை? அந்த மாதிரி மட்டும் இப்ப இருந்திருந்தா, எனக்கு எல்லாம் கல்யாணம்னு ஒண்ணு நடந்திருக்கவே நடந்திருக்காது. நான்னு இல்ல, நிறைய ஆண்களுக்கு கல்யாணமே நடந்திருக்காது. பாவம் பெண்களுக்கு எல்லாம் கனவில தான் திருமணம் நடக்கும். அவுங்க இலவு காத்த கிளி போல எப்படா ஒரு வீரன் வருவான்னு காத்து இருக்க வேண்டியது தான். ஆனா ஒன்னு சொல்லணும் இந்த காலத்துல ஆண்கள் எல்லாம் தப்பிசிட்டாங்க.


சிரஞ்சீவி
இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்புலம் பெயர்ந்த தமிழர்களோட பங்கு என்ன?


 சொக்கன்  
தமிழர்களாகிய நாம் நம் தாய் மண்ணை விட்டு வேறு எந்த நாட்டுக்கு போனாலும், நம்முடைய  கலாச்சாரத்தை மறக்கவில்லை என்பதற்கு பொங்கல் பண்டிகை ஒரு சிறந்த உதாரணம் .

இங்கு ஆஸ்திரேலியாவில் பொங்கலன்றுதமிழர் அனைவரும் சர்க்கரை பொங்கல் மற்றும் வித விதமான உணவுகள் செய்துகடவுளுக்கு கரும்புடுன் படைக்கிறோம். கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கு பெறுகிறோம். இங்கு உள்ள எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் அளவிற்கு இங்கு நாம் கொண்டாடவில்லை என்றாலும், இருக்கின்ற இடத்தில் அந்த வசதிக்கேற்ப நாம் பொங்கலை கொண்டாடுகிறோம்.  சிங்கப்பூர்மலேசியா மற்றும் ஏனைய நாடுகளிலும் பொங்கல் மிகவும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.

ஸ்வேதா:
ஆஸ்திரேலியாவில் வாழும் நாம் யாரும் விவசாயிகள் இல்லை. அப்புறம் ஏன் நாம் பொங்கல் வைக்க வேண்டும்? "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு",  என்பது தெரியாமல் செய்கிறோமோ என்று நினைக்கிறேன்.


 சொக்கன்


மெய்பொருள் - அதாவது ஆஸ்திரேலியாவில் பொங்கல் கொண்டாடுவதின் மெய்பொருள்புலம் பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்கு பொங்கல் தெரிய வேண்டும் என்பதற்காக கொண்டாடுகிறோம். அதே சமயம் தமிழரின் பண்பாடுகளை பண்டிகை மூலம் ஒரு வேடிக்கையாக "fun  போல செய்து காண்பிக்க இது ஒரு வாய்ப்பு தானே.

மது -  பொங்கலைப் பத்தி எங்களுக்கு தெரியாத விஷயத்தை எல்லாம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அங்கிள்.

சொக்கன்
பொங்கலைப் பற்றி உங்க தலைமுறையினருக்கு நீங்க எடுத்துரைத்ததை கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சரி நான் போனை வைக்கிறேன்.நன்றி வணக்கம்

21 comments:

 1. அருமையான நிகழ்ச்சி தொகுப்பு நண்பரே....
  இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டியதை புதுமையான நிகழ்வாக அமைத்தது அருமையிலும் அருமை.
  புகைப்படங்கள் அனைத்தும் அழாகாக இருக்கிறது..
  அதிலும் மேலிருந்து கீழாக அந்த ஏழாவது புகைப்படத்தில் தாங்கள் மங்கலகரமான உடையணிந்து இருப்பது பதிவின் சிறப்பு.
  அதனினும் சிறப்பு பதிமூன்றாவது புகைப்படத்தில் நான் மாட்டை அடக்குவது புகைப்படமே எனக்கு தற்பெருமை பிடிக்காது என்று எத்தனை தடவை சொல்வது இதற்க்குத்தான் நான் புகைப்படங்களை யாருக்கும் அனுப்புவதில்லை

  பங்கு பெற்ற செல்வங்கள்.
  சிரஞ்சீவி
  ஸ்வேதா
  மதுமித்தா
  ப்ரீத்தி
  ஓவியா
  அனைவருக்கும் எமது வாழ்த்துகளை சொல்லவும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே.
   எனக்கு பின்னால் நீங்கள் தானே இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த பதிவு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

   அநியாயம், அநியாயம், நான் உங்களிடம் சொன்னதை அப்படியே காபியடித்து என்னிடமே திருப்பி சொல்லுகிறீர்களே, இது உங்களுக்கே தப்பாக தெரியலையா?

   Delete
 2. குறைந்த அவகாசத்தில் தயார் செய்ததாகக் கூறி இருக்கிறீர்கள். எனில், அதற்குள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். மாட்டுப் பொங்கல் அன்று கனுப்பொங்கல் என்றும் கொண்டாடி, சகோதரர்கள் (திருமணமாகிச் சென்றிருந்தாலும்) உடன் பிறந்த சகோதரிகளுக்கு 'சீர்' தருவதும் வழக்கம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   எனக்கு இந்த விஷயம் சட்டென்று ஞாபகத்துக்கு வரலை. எடுத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றி.

   Delete
 3. முன்பே சொல்லி இருந்தால் இளவட்டக் கல்லை நான் தூக்கிற படத்தை அனுப்பி இருப்பேனே :)

  ReplyDelete
  Replies
  1. கேள்விப்பட்டேன்,கேள்விப்பட்டேன், நீங்கள் இளவட்டக் கல்லை தூக்குறேன்னு சொல்லி ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்ததை.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி

   Delete
 4. இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி நண்பரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

   Delete
 5. குழந்தைகளுக்கே உரித்தான அழகான அருமையான உரையாடல்... ரசித்தேன்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டிடி.

   Delete
 6. குறைவான நேரத்தில் நிறைவாய் தயாரித்த பொங்கல் கலந்துரையாடல் அருமையிலும் அருமை.சகோ.
  அட எழுதிட்டு மேல பார்த்தா...கில்லர்ஜியும் அப்படியே எழுதி இருக்கிறாரே....!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   தேவகோட்டைக்காரர்கள் எல்லாம் ஒரேமாதிரியாகத்தான் சிந்திப்பார்கள் போல...

   Delete
 7. ஆமாம் நண்பரே! விருபட்டுவிட்டது இந்த இடுகை.....

  இப்போதுதான் உங்கள் சைவப் பதிவை வாசிக்க வந்த போது இது கொடுத்திருந்தீர்கள். நன்றி

  அருமை!! அழகாகத் தயாரித்துள்ளீர்கள். அந்தப் புராணக்கதை அருமை. இப்போதுதான் அறிந்தோம்...பரவாயில்லை பொங்கலைப் பற்றி வெளிநாடுகளில் வாழும் நீங்கள் எல்லோரும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகின்றீர்கள் அருமையாக, அவர்களையும் பங்கெடுக்க வைத்து. இங்குதான் ம்ம்ம்

  பங்கு பெற்றக் குழந்தைச் செல்லங்கள், ஸ்வேதா,மதுமிதா, ப்ரீத்தி , ஓவியா, சிரஞ்சீவி...ம்ம் ஒருவரை விட்டு விட்டோமே சொக்கன் உட்பட
  அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  எல்லாம் சரி நம்ம கில்லர்ஜி எப்ப அங்க வந்தாரு...வந்ததும் வராததுமா பாவம் புள்ளையப் போயி... இப்படிக் கல்ல எல்லாம் தூக்க வைச்சுட்டீங்களே...மாட்ட அடக்க வைச்சு......அவரு ஏற்கனவே அப்பாவி....அவரு எப்படிங்க இதெல்லாம் செஞ்சாரு....அவருக்குப் பெரிய மீசை இருந்தா அவரு வீரர்னு நினைச்சுட்டீங்களோ.....அவரு சின்னப் புள்ளைங்க....ஹ்ஹாஹ்ஹ் அதான் அவரு டயர்டாகிட்டாரு போல இங்க ஆள க் காணோம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோஸ்.
   என்னை குழந்தை என்று சொன்ன உங்கள் வாய்க்கு சர்க்கரையை அல்லவா நான் போட வேண்டும். பரவாயில்லை, அடுத்த முறை இந்தியா வரும்போது, ஆஸ்திரேலியா சாக்லேட்டை கொடுக்கிறேன்.
   அவருக்கு தான் ரொம்ப இளமையானவருன்னு நினைப்பு. வேற ஒண்ணும் இல்லை.

   Delete
 8. பொங்கலை பற்றி தற்போது உள்ள சிறார்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் நல்லதொரு கலந்துரையாடல். கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் திரு. சொக்கன்

  ReplyDelete
 9. பொங்கலை பற்றி தற்போது உள்ள சிறார்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் நல்லதொரு கலந்துரையாடல். கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் திரு. சொக்கன்

  ReplyDelete
 10. அருமையான உரையாடல் ..குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் அமைத்துள்ளீர்கள் ..

  ReplyDelete
 11. இந்த பதிவு இப்போ 13 நிமிடமுன் என்று டாஷ்போர்டில் காட்டுதே ! கூகிள் கண்ணாமூச்சி காட்டுது

  ReplyDelete
 12. நன்றாக ஒரு உரையாடலை ,எளிமையாக தயார் செய்து சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் கொடுத்திருக்கிறீங்க. இதையே என் மகனுக்கும் வாசித்து புரியவைத்திருக்கேன். பங்கு பற்றிய சிறுவர்களுக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 13. நல்ல விடயம் சகோ நன்றாகவே உள்ளது இப்படியேனும் எப்படியேனும் குழந்தைகளுக்கு புகுத்த வேண்டும் என்ற தங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது இன்னுமொரு முறை செய்யும் போது வில்லுப் பாட்டு மாதிரி முயற்சி செய்யுங்கள் அதுவும் ரசிக்கக் கூடியதே அதுவும் இன்றி இப்போதெல்லாம் அது பற்றி யாரும் பேசுவதும் இல்லையல்லவா. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் சகோ...... அனைவரும் அழகாக நடித்து விட்டார்கள் போனில் பேசும் யுக்தியும் சிறப்பே மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ இப்போதெல்லாம் அதிகம் வரமுடிவதில்லை வலைப்பக்கம் ஓரிரு நிமிடங்கள் எட்டிப் பார்த்து விட்டு ஓடிவிடுவேன் .... என்னை மறந்து விடுவீர்களோ என்று ஓரிரு பதிவுகளும் இடுவேன் ஹா ஹா ....வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
 14. இன்றைய இளைய தலைமுறையினர் நம் பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் பண்பாடு தெரியாமல் போய்விடுமோ என்று ஒரு கவலை உண்டு. எனவே தான் என் கல்லூரி மாணவிகளிடம் பாவாடை தவணி உடை, காலை எழுந்து கோலம் போடுவது இப்படி ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பேன், அருமை வாழ்த்துகள்.

  ReplyDelete