இந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன்!!!
இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே, இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக்கொண்டு
நண்பர்களின் கருத்தை அறியலாமா என்று எண்ணினேன். அந்த எண்ணத்திற்கு பக்கபலமாக இருந்தது
“எங்கள் பிளாக்” வலைத்தளம் தான். எங்கள் பிளாக்கின் நண்பர்கள்
எப்படித்தான் தேடித் தேடி வித்தியாசமான புகைப்படங்களை நம் பார்வைக்கு பகிர்கிறார்களோ
என்று தெரியவில்லை. ஞாயிறு 280. கனவு
அவர்களின் பாணியில் இந்த புகைப்படத்தை பகிர்ந்தேன்.
நீங்கள் எல்லோரும் ஆர்வமாக பின்னூட்டத்தில் உங்களுக்கு தோன்றியதை எழுதியமைக்கு முதலில்
என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய பேர் அது என் குழந்தையின்
நிழல் என்று சொல்லியிருந்தீர்கள். அது முற்றிலும் சரி. ஆனால் அந்தப் புகைப்படத்தை நாங்கள்
யாரும் எடுக்கவில்லை. அந்த குழந்தையே தன்னுடைய நிழழை படம் பிடித்திருக்கிறது. அவர்
எங்களின் இரண்டாவது மகாராணியான இனியா தான்.
சென்ற சனிக்கிழமை தான், எங்கள் தமிழ் பள்ளியின், இந்த ஆண்டுக்கான கடைசி வாரம். பொதுவாக நான் வகுப்பு எடுக்க போய்விடுவேன். ஓவியா அவருடைய வகுப்பிற்கு
சென்று விடுவார். இனியாவிற்கு மூன்று வயது சென்ற ஜூன் மாதத்தில் தான் முடிவடைந்திருப்பதால், அவரை அடுத்த வருடம் தமிழ் பள்ளியில் சேர்த்து விடலாம் என்றிருக்கிறோம். அதனால் அம்மணி இனியாவை வகுப்புக்கு வெளியில் வைத்துக்கொண்டிருப்பார்கள்.
அவர்களும் இடைவேளை நேரத்தில், படித்து களைத்து வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டிகளை (snacks, juices) வழங்குவதில் ஈடுபட்டிருப்பார்கள். சென்ற வாரம்
அம்மணிக்கு தலைவலி, முதலில் பள்ளிக்கு வரவில்லை என்று சொன்னவர்கள், பின் அது கடைசி வாரம் என்பதால் வந்தார்கள். இனியாவோ, அவர்களுக்கு ஓய்வை கொடுக்காமல் அவர்களின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தார்.
அதனால் நான் வேறு வழியில்லாமல் என்னுடைய அலைபேசியை இனியாவிடம் கொடுத்துவிட்டு அம்மாவை
தொந்தரவு செய்யாதே என்று சொல்லி வகுப்புக்குச் சென்று விட்டேன். என்னுடைய அலைபேசியில்
விளையாட்டுக்கள் அதிகம் இருக்காது. அவர்களுக்கு தேவையான ஆங்கிலம்,தமிழ் கற்றுக் கொள்வது,பெயிண்ட் செய்வது போன்றவைகள் தான்
அதிகம் இருக்கும். ஓவியாவிற்கு இவைகளே போதும், ஆனால் இனியாவிற்கு
இவைகள் சீக்கிரம் போரடித்து விடுவதால், அவர் காமிரா பக்கம் சென்று
சகட்டுமேனிக்கு படங்களாக சுட்டுத்தள்ளுவார். பிறகு ஒவ்வொரு முறையும் அவரிடமிருந்து
அலைபேசியை வாங்கியபின் தேவை இல்லாத படங்களை அழிப்பதே எனக்கு பெரிய வேலையாக இருக்கும்.
இந்த மாதிரித்தான் அன்றைக்கும் அவருடைய நிழழையே படம் பிடித்திருக்கிறார். நான் வீட்டிற்கு
வந்து என்னுடைய அலைபேசியில் தேவை இல்லாத படங்களை எல்லாம் நீக்கிக்கொண்டு வரும்போது, இந்த புகைப்படம் கண்ணில் பட்டது. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு
தான் தெரிந்தது, தன்னுடைய நிழழையே படம் பிடித்திருக்கிறார் என்று.
இங்கும் குழந்தைகள் முயல் தலைமுடி நாடா வைத்துக் கொள்கிறார்கள். நேற்று புகைப்படம் பார்க்கும் போது கைகள் மடங்கி இருந்ததால் குழந்தை தனக்கு தானே எடுத்தது போல் இருக்கிறதே எனவும் தோன்றியது. சரி குழந்தை கன்பார்மா..தெரிகிறது என அதை மட்டும் ...
ReplyDeleteகுழந்தைகள் குறும்பு என்றும் நம்மை ரசிக்கவே...தூண்டும்.
நான் நினைச்ச பதிலையே நீங்க சொல்லீட்டீங்க அப்ப நான் வரட்டா
ReplyDeleteநீங்கள் இப்படி தான் சொல்லுவீர்கள் என்று நான் நேற்றே சொல்லிவிட்டேனே
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
ஆகா ...அருமை..........
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteகுழந்தைகளின் குறும்பு என்றும் நமக்கு கரும்பு தான்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteஓகே! அப்ப நாங்க சொன்னதுல பாதி கரெக்ட்....அவரேதான் எடுப்பது போன்றும் படத்தில் இருந்ததும் தெரிந்தது.....தொடருங்கள்...ஆமாம் எங்கள் ப்ளாக் பல வித்தியாசமான புகைப்படங்கள் பகிர்வார்கள்....நன்றாக இருக்கும்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்
Deleteநீங்கள் வெளியிட்ட படம் இனியாவே தன்னுடைய நிழலை எடுத்த புகைப்படம் என அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்! எப்படியோ நானும் சரியாக யூகித்துவிட்டேன் போல.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteசின்ன இனியாவுக்குள் இருக்கும் திறமை அருமை!
ReplyDeleteஇப்பொழுதே இத்தனை துல்லியமாக படம் எடுத்திருக்கின்றாரே
நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான புகைப்பட நிபுணத்துவராகும்
சாத்தியம் உண்டு!
வாழ்த்துக்கள்!
தங்களின் வாக்கு பலிக்கட்டும் சகோ
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
இனியாவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteஹலோ நாந்தான் நேத்தே சொல்லவானு கேட்டேன்ல ஒண்ணும் சொல்லவே இல்லை.
ReplyDeleteகேட்டீங்க ஆனா ஒண்ணுமே சொல்லலையே.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
இனியாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே
Deleteவலைச்சர அறிமுகத்திற்கு வாத்துக்கள்.
ReplyDeleteஇன்று அறிமுகப்படுத்தி இருக்கிறார் கில்லர்ஜி.
தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ
Deleteநான் எதிர்பார்த்த பதில் தான் ஆனால் இனியாவே எடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. படுசுட்டி கெட்டிக்காரிதான் இனியா ..... ஹா ஹா இனியாவிற்கு வாழ்த்துக்கள் ,....!
ReplyDeleteதங்களின் பெயர் தானே அவளுக்கும், அதனால் கெட்டிக்காரியாகத்தான் இருப்பாள்.
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ
என் நேற்றைய கமெண்டைக் காணோமே....
ReplyDelete:))))
எங்களைக் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி .
தங்களுடைய கருத்து பதிவாகவில்லையே நண்பரே. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
Deleteமீண்டும் கருத்திட்டால் நன்றாக இருக்கும்
இனியாவிற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி டிடி
Deleteஇதனாலத்தான் நிழற்படம்னு சொல்றாங்களோ? இனியாவின் குறும்பு உங்களுக்குஒரு பதிவை தந்ததில் மகிழ்ச்சி!
ReplyDeleteஇனியாவால் ஒரு பதிவு...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்
அட! நான் ஏமாந்துட்டேன்!!
ReplyDeleteநீங்க தான் ரொம்ப யோசிச்சு இல்ல உங்கள் எண்ணத்தை சொல்லியிருந்தீங்க.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ